(மீண்டும் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் அனைவரையும் பதிவுலகில் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. நேற்று இரவு கொஞ்சிக் கொஞ்சி என்னோடு பேசிய சின்னச் சின்ன சிந்தனைகளை கொஞ்சும் கவிதைகளாக இன்றைய பதிவில் உங்களுக்காய் பதிவிடுகிறேன். கவிமழையில் நனைந்து விட்டு உங்களுடைய கருத்துக்களை தெரிவியுங்கள். )

உருகும் மெழுகாயினும்
உள்ளம் மகிழ்கிறேன்!...
உயிர் துறப்பதெல்லாம்
உனக்காக வேண்டி என்பதால்!.....
*********************************************

நேசம் கொண்டாய்
நேசிக்க மறுத்தேன்!........
நேர் கோடாய் நின்றாய்
நேரெதிரே நின்றேன்!......
நேற்றுத் தான் நேசம் என்பதை உணர்ந்தேன்
நேரம் பார்த்து வந்த உன் மரணச் செய்தி கேட்டு!......
***********************************************************************

அழகிய பூக்கள் அத்தனையும்
அசிங்கமாய் தோன்றுகிறது!......
அயலாரிடம் வினவினால்
அப்படி இல்லை என்கிறார்கள்!...
அடியேன் இன்னும் உணரவில்லை....
அனல் தெறித்த உன் பார்வை
அம்புகள் தான் என் கண்ணில் இன்னும்
அடாவடித் தனம் புரிகிறது என்பதை!........
********************************************************

வானவில்லின் வர்ணத்தை
வார்த்தெடுத்து வரைந்திட்ட
வான்மதியே!.......
வாழ்வியல் சோதனையில்
வாலிப கோளாறு
வாட்டி வதைக்கிறது
வாட்டசாட்டமான உன் உருவம் பார்த்து!.....
வாராயோ.. நீயும் என்னில் காதல் கொள்ள!......
****************************************************************

முந்தானையால் முடிச்சுப் போட்ட நீ
முகத்திரை கிழித்து - என்
முகம் பார்ப்பது எப்போது?....
முடியவில்லை!.....
முக்காடிட்ட உன்
முறுவல் காணாமல்
முக்கால் மணி நேரம் கூட இருக்க!......
முல் வேலிக்குள் அடை பட்டு
முடங்கிக் கிடக்கிறேன்!.....
முதுமை அடையுமுன்
முழு சம்மதத்தோடு - காதல்
முகவரி கொடு சிநேகிதியே!.......
********************************************
(சரி, கவி மழையில் நனைந்து விட்டீங்களா?...... எப்படி இருந்தது என்று உங்கள் கருத்தை கட்டாயம் சொல்லி விடுங்க. சில நாட்களாக என் பாடசாலை நண்பர்கள் ஏராளமானவர்களை முகப் புத்தகம் வாயிலாக சந்தித்து வருவதில் பெரிய சந்தோசம். ஏனெனில் என் கலைத் துறையின் வளர்ச்சிக்கு என் குடும்பத்திற்கு பின்னர் மூல காரணமாக இருந்தவர்கள் என் பள்ளித் தோழர்கள் தான். கோடான கோடி நண்பர்களே. ) -
(ஆசை FM ல் மறுபடியும் திரைப் படத்திலிருந்து "நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் " பாடல் கேட்டுக் கொண்டே இந்தபதிவு.......)மீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம் !.......
அது வரையில் நல்லதையே சிந்திப்போம்!.....
அப்போ நான் வரட்டா!...
உங்கள் நண்பன்
அபூ!.....