செவ்வாய், 1 செப்டம்பர், 2009

அகர வரிசையில் ஐயாவின் அலசல்கள்...

தொடர் பதிவுக்கு அழைத்த நண்பன் சீமாங்கனிக்கு நன்றிகள்....

அட்டகாசம் பண்ணியது : வசந்தம் வானொலியின் Fun Box நிகழ்ச்சியில் ஒரு அறிவிப்பாளராய்...

ஆள் மாறாட்டம் : இரண்டு காதல் புறாக்கள் காளை இவனை காவு கொள்ளத் துடித்த வேளை ( பெண்களிடம் ஆள் மாறாட்டம் பண்றது ரொம்ப கஷ்டமான வேலைங்க...)

இன்பமான செய்தி : இப்போதைக்கு காதல் எனும் கடலில் மூழ்கி தத்தளிக்க நான் தயாரில்லை. (இது வரை மூழ்கி சேர் பூசிக்கொண்டது போதும். லொள்...)

ஈயென பல்லிளித்து : வேற எப்போ?.. அப்பப்போ அழகான பெண்களைப் பார்த்து. (இதை செய்தால் தான் கையில் கடிகாரமே இல்லாத நான் அடிக்கடி நேரம் கேட்டு அறிந்து கொள்ளலாம். இது எப்புடி?....)

உணர்வுகள் அழுதது : உயர் தரப் பரீட்சை முடிவிலும், வசந்தம் வானொலியின் கடைசி நிகழ்ச்சியிலும் (21 / 11 / 2008 )

ஊணமாய் நின்றது : பழகிய ஒவ்வொரு நண்பனினதும் பிரிவின் போது....

என்ன கற்பனை : பெரிசா எதுவுமே இல்லீங்க.... ஒரு நல்ல அறிவிப்பாளராய் மிளிர்வதைத் தவிர.....

ஏழைகள் பற்றி : வெளியில் ஏழைகளாய் வாழ்ந்தாலும், கோழயாய் வாழ விரும்பாதவர்கள். நல்ல குணாதிசயம் கொண்டவர்கள். (என் பார்வையில்...)

ஐக்கியம் : அது நிச்சயம் என்னை விட நம் நாட்டுக்கு அவசியம்

ஒதுங்கி நின்றது : நண்பனின் காதலியின் குடைக்குள்..... (வேற எதுக்குமில்ல... நண்பனின் அனுமதியோடு மழைக்காக.... அதுவும் நண்பனோடு சேர்ந்து.... )

ஓலையின் கீற்றுக்கள் : பம்பரத்துக்கும், ஊதிக்கும் உயிரை விட்டது... என் கவிதைக்கு துணை நின்றது...

ஒளடதம் : (கொய்யாங்கோ !... கொய்யாங்கோ!.... Moxal Plus - இது அது இல்லீங்கோ!...)

கஃபா : இரண்டு மாதங்களுக்கு முன் தான் தரிசனம்....
(மன்னிக்கவும்... கடைசி ஃ எழுத்தை என்னால் Keyboard ல் தேட முடியவில்லை. தயவு செய்து தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் இடலாம். )

(வாழ்க்கையில நடக்காத, கற்பனையில உள்ள சில விசயங்களை அகர வரிசையில சொன்ன எனக்கு நீங்க என்ன சொல்லப் போறீங்க?... தாரளமா சொல்லுங்க....)

பதிவைத் தொடர நான் அழைக்கும் நல்லுங்கள்...

குறை ஒன்றும் இல்லை...


யோ வாய்ஸ்!..


ஹேமா

பிரபா

யாழினி

ஜலீலா

Mrs. Faizakader

அப்போ நான் வரட்டா!....

உங்கள் நண்பன்

அபூ....

34 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

அச்சோ...அபூ...தொடரா....!சரி இழுத்துக்கொண்டு போகத்தானே வேணும்.

பாருங்க உங்களுக்கு,விரதம் இருக்கிற நேரம் உங்கட மூளை எவ்வளவு விரிவடைஞ்சு இருக்கு.அப்பா.

அ - ஃ நல்லாத்தான் இருக்கு.

யோ வொய்ஸ் (யோகா) சொன்னது…

வந்துட்டேன் சப்ராஸ், இன்று கொஞ்சம் வேலை அதிகம். இன்று மாலை நான் இதை தொடர்கிறேன்.

நன்றி நண்பா என்னை அழைத்ததுக்கு

Jaleela Kamal சொன்னது…

//எல்லாம் நல்ல பதில்கள், கொஞ்சம் நகைச்சுவையும் கலந்து.//



என்னையும் அழைத்து இருக்கீங்க நன்றி , சுமஜ்லாவும் அழைத்து இருக்கிறார்கள் இரண்டு பேருக்கும் நேரம் கிடைக்கும்போது போடுகிறேன்.

வால்பையன் சொன்னது…

//ஒதுங்கி நின்றது : நண்பனின் காதலியின் குடைக்குள்..... (வேற எதுக்குமில்ல... நண்பனின் அனுமதியோடு மழைக்காக.... அதுவும் நண்பனோடு சேர்ந்து.... )//

இதெல்லாம் ஓவர் குசும்பு!

S.A. நவாஸுதீன் சொன்னது…

வால்பையன் கூறியது...

//ஒதுங்கி நின்றது : நண்பனின் காதலியின் குடைக்குள்..... (வேற எதுக்குமில்ல... நண்பனின் அனுமதியோடு மழைக்காக.... அதுவும் நண்பனோடு சேர்ந்து.... )//

இதெல்லாம் ஓவர் குசும்பு

நானும் இதத்தான் சொல்ல வந்தேன்

Unknown சொன்னது…

//ஒதுங்கி நின்றது : நண்பனின் காதலியின் குடைக்குள்..... (வேற எதுக்குமில்ல... நண்பனின் அனுமதியோடு மழைக்காக.... அதுவும் நண்பனோடு சேர்ந்து.... ) //

அடைப்புக்குறி காப்பாற்றி விட்டது உங்களை...
நல்ல பதில்கள்..

Prapa சொன்னது…

தம்பி ரெண்டுக்கு ரூட்டு போட்டது போல.....
ஓகே ஓகே நடக்கட்டும்,
நாமும் தொடரலாம்.

Unknown சொன்னது…

உங்களின் பதிலில் ஓவர் குசும்பு தெரியுது.. எதுக்கும் நான் கொஞ்சம் தள்ளியே இருக்கேன்.. :-}
தொடர் பதிவுக்கு அழைத்தமைக்கு நன்றி அபூபக்கர். கூடியவிரைவில் பதில் தருகிறேன்..

இர்ஷாத் சொன்னது…

விரைவில் ஹஜ் செய்யும் பாக்கியத்தை இறைவன் உங்களுக்கு தரட்டும்..

குறை ஒன்றும் இல்லை !!! சொன்னது…

நன்றி அபூ.. முயற்சிக்கிறேன்!!!

சுசி சொன்னது…

//ஊணமாய் நின்றது : பழகிய ஒவ்வொரு நண்பனினதும் பிரிவின் போது....//

அருமை.
ஆனால் ஊனமாய் னு வரணுமோ...

சீமான்கனி சொன்னது…

நல்ல இருக்கு ஆபூ சிரிப்பும் குறும்பும் சேர்ந்து இருக்கிறது உங்கள் எழுத்துகளில் ....வாழ்த்துகள்.....

க.பாலாசி சொன்னது…

//இரண்டு காதல் புறாக்கள் காளை இவனை காவு கொள்ளத் துடித்த வேளை ( பெண்களிடம் ஆள் மாறாட்டம் பண்றது ரொம்ப கஷ்டமான வேலைங்க...)//

ஆகா...இப்டில்லாம் நடக்குதா...

நன்றாக இருக்கிறது நண்பா...உங்களின் அகரவரிசைப் பகிர்வு.....

தாங்கள் keymen software use பண்ணினால் a.b.c.d. க்கு மேலே உள்ள எண்வரிசையில் 1ம் எண்ணுக்கு முன்னதாக உள்ள ~ இந்த கீயை உபயோகித்து பார்க்கவும்..அதில் ஃ வரும்..

நிலாமதி சொன்னது…

அகரவரியில் சிறு குறும்பு கதைகள் அழகாய் இருக்கிறது .
என் இ மடல் பார்க்கவும்.

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

ஹேமா கூறியது...

/// அச்சோ...அபூ...தொடரா....!சரி இழுத்துக்கொண்டு போகத்தானே வேணும்.

பாருங்க உங்களுக்கு,விரதம் இருக்கிற நேரம் உங்கட மூளை எவ்வளவு விரிவடைஞ்சு இருக்கு.அப்பா.

அ - ஃ நல்லாத்தான் இருக்கு.///

மற்றவர்களோடு புன்னகைப்பது ஒரு தர்மமே அக்கா.... நெருங்கி வந்து புன்னகை தர முடியாது. அதனால் தூரத்தே இருந்து புன்னகை கொடுத்துக் கொண்டிருக்கேன்....

விரைவில் தொடருங்கள் உங்கள் பதிவை....

வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிங்கோ......

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

யோ வாய்ஸ் கூறியது...

///வந்துட்டேன் சப்ராஸ், இன்று கொஞ்சம் வேலை அதிகம். இன்று மாலை நான் இதை தொடர்கிறேன்.

நன்றி நண்பா என்னை அழைத்ததுக்கு///

கட்டாயம் தொடருங்கள்.... கருத்து சொல்ல வருகிறேன்....

வருகைக்கு நன்றி யோ.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

Jaleela கூறியது...

//எல்லாம் நல்ல பதில்கள், கொஞ்சம் நகைச்சுவையும் கலந்து.//

அதானே நம்ம ரூட்டே..... லொள்.....



/// என்னையும் அழைத்து இருக்கீங்க நன்றி , சுமஜ்லாவும் அழைத்து இருக்கிறார்கள் இரண்டு பேருக்கும் நேரம் கிடைக்கும்போது போடுகிறேன்.///

கட்டாயம் தொடருங்கள், எதிர் பார்க்கிறோம்....

ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

வால்பையன் கூறியது...

//ஒதுங்கி நின்றது : நண்பனின் காதலியின் குடைக்குள்..... (வேற எதுக்குமில்ல... நண்பனின் அனுமதியோடு மழைக்காக.... அதுவும் நண்பனோடு சேர்ந்து.... )//

///இதெல்லாம் ஓவர் குசும்பு!///

ஐயோ வால்.... இது குசும்பு இல்லீங்க.... தற்பாதுகாப்பு....

ரொம்ப நன்றி வால் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

S.A. நவாஸுதீன் கூறியது...

வால்பையன் கூறியது...

//ஒதுங்கி நின்றது : நண்பனின் காதலியின் குடைக்குள்..... (வேற எதுக்குமில்ல... நண்பனின் அனுமதியோடு மழைக்காக.... அதுவும் நண்பனோடு சேர்ந்து.... )//

இதெல்லாம் ஓவர் குசும்பு

///நானும் இதத்தான் சொல்ல வந்தேன்////

அண்ணா.... நீங்களுமா?... உங்க தம்பி அப்படியெல்லாம் குசும்பு பண்ணுவானா என்ன?...

ரொம்ப நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்......

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

கனககோபி கூறியது...

//ஒதுங்கி நின்றது : நண்பனின் காதலியின் குடைக்குள்..... (வேற எதுக்குமில்ல... நண்பனின் அனுமதியோடு மழைக்காக.... அதுவும் நண்பனோடு சேர்ந்து.... ) //

///அடைப்புக்குறி காப்பாற்றி விட்டது உங்களை...
நல்ல பதில்கள்..////

அங்க தானே தோழா sixer அடிக்கிறது....

ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

Kanapathippillai Prapakaran கூறியது...

//// தம்பி ரெண்டுக்கு ரூட்டு போட்டது போல.....
ஓகே ஓகே நடக்கட்டும்,
நாமும் தொடரலாம்.///

அண்ணே.... என்ன சொல்றீங்க?...

அவசரமா பதிவைத் தொடருங்க....

ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

Mrs.Faizakader கூறியது...

///உங்களின் பதிலில் ஓவர் குசும்பு தெரியுது.. எதுக்கும் நான் கொஞ்சம் தள்ளியே இருக்கேன்.. :-}//

ஐயோ!.... ஐயோ!... ரொம்பத் தான் காமடி பண்றீங்க போங்க....

// தொடர் பதிவுக்கு அழைத்தமைக்கு நன்றி அபூபக்கர். கூடியவிரைவில் பதில் தருகிறேன்..////


கட்டாயம் தொடருங்கள்...

ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

இர்ஷாத் கூறியது...

///விரைவில் ஹஜ் செய்யும் பாக்கியத்தை இறைவன் உங்களுக்கு தரட்டும்..////

வாங்க இர்ஷாத், எங்க நீண்ட நாட்களா போய் இருந்தீங்க?. நோன்பெல்லாம் எப்படி போகுது? நான் அண்மையில் தான் உம்ராஹ் நிறைவேற்றி விட்டு வந்தேன். ஹஜ் நிறைவேற்றுவதற்கான எண்ணம் வைத்திருக்கிறேன். துஆ செய்து கொள்ளுங்கள் தோழரே...

உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைக் கொஞ்சம் முடியுமானால் எனக்கு அனுப்பி வையுங்கள் தோழரே....
sasi_sana2005@yahoo.com


ரொம்ப நன்றி நண்பா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

குறை ஒன்றும் இல்லை !!! கூறியது...

///நன்றி அபூ.. முயற்சிக்கிறேன்!!!///

முயற்சிக்கிறேன் அல்ல... முடிவு பண்ணி இறங்குங்க.. I mean எழுதுங்க....

ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

சுசி கூறியது...

//ஊணமாய் நின்றது : பழகிய ஒவ்வொரு நண்பனினதும் பிரிவின் போது....//



// அருமை.
ஆனால் ஊனமாய் னு வரணுமோ...//

வாங்க சுசி, நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தப் பக்கம்? இப்போதெல்லாம் உங்களை அடிக்கடி காண முடிவதில்லையே?...

தவறுக்கு வருந்துகிறேன். (நோன்பு காலம் என்பதால் அலுவலகத்தில் 3 மணித்தியாலம் தான் வேலை நடக்கும். அந்த 3 மணித்தியாலத்துக்குள் அலுவலக வேலையையும் செய்து கொண்டு அவசரமாக பதிவும் இடுவதில் தான் இவ்வாறான பிழைகள் இடம் பெறுகின்றது சுசி. )

ரொம்ப நன்றி தவறை சுட்டிக் காட்டியமைக்கு.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

seemangani கூறியது...

//நல்ல இருக்கு ஆபூ சிரிப்பும் குறும்பும் சேர்ந்து இருக்கிறது உங்கள் எழுத்துகளில் ....வாழ்த்துகள்.....///

ஒருத்தராவது சிரித்து விட்டாரே என்கிற சந்தோசம் பிறந்து விட்டது... (சந்தோசம் சந்தோசம் வாழ்க்கையின் பாதி பலம்.....)

ரொம்ப நன்றி நண்பா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

க.பாலாஜி கூறியது...

//இரண்டு காதல் புறாக்கள் காளை இவனை காவு கொள்ளத் துடித்த வேளை ( பெண்களிடம் ஆள் மாறாட்டம் பண்றது ரொம்ப கஷ்டமான வேலைங்க...)//

///ஆகா...இப்டில்லாம் நடக்குதா...

நன்றாக இருக்கிறது நண்பா...உங்களின் அகரவரிசைப் பகிர்வு.....//

அங்கங்க நடக்குதாம்னு அப்பப்போ சிலர் பேசிக் கொள்கிறாங்க... ஆனால் நண்பா எனக்கு இதெல்லாம் தெரியாதுன்னு என்னோட நண்பர் உங்க கிட்ட சொல்லிடச் சொன்னார்.

/// தாங்கள் keymen software use பண்ணினால் a.b.c.d. க்கு மேலே உள்ள எண்வரிசையில் 1ம் எண்ணுக்கு முன்னதாக உள்ள ~ இந்த கீயை உபயோகித்து பார்க்கவும்..அதில் ஃ வரும்..////

ரொம்ப நன்றி உங்கள் தகவலுக்கு, முயற்சி செய்கிறேன்.

கருத்துக்கும், வருகைக்கும் ரொம்ப நன்றிங்கோ.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

நிலாமதி கூறியது...

/// அகரவரியில் சிறு குறும்பு கதைகள் அழகாய் இருக்கிறது .///

ரொம்ப நன்றி அக்கா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்....

//என் இ மடல் பார்க்கவும்.//


மின்னஞ்சல் பார்த்தேன். தவறை சுட்டிக் காட்டியமைக்கு ரொம்ப நன்றி அக்கா... இனி கூடிய கவனம் எடுப்பேன்....

சுசி சொன்னது…

தப்பா எடுத்துக்காதீங்க அபூ... எனக்கும் எழுத ஒரு மாதிரியாத்தான் இருந்துது. ஆனா அருமையா நட்பை பத்தி எழுதினத பிழையோட படிக்க முடியலை.
கொஞ்சம் பிசி. பின்னூட்டம் போடலேன்னாலும் விட்ட பதிவை படிச்சிடுவேன்.

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

சுசி கூறியது...

///தப்பா எடுத்துக்காதீங்க அபூ... எனக்கும் எழுத ஒரு மாதிரியாத்தான் இருந்துது. ஆனா அருமையா நட்பை பத்தி எழுதினத பிழையோட படிக்க முடியலை.///



ஹே சுசி, இதெல்லாம் போய் தப்பா எடுப்பனா?.. கட்டாயம் நீங்கள் தவறை சுட்டிக் காட்டினால் தான் நாம் திருத்திக் கொள்ளலாம் இல்லையா?...


///கொஞ்சம் பிசி. பின்னூட்டம் போடலேன்னாலும் விட்ட பதிவை படிச்சிடுவேன்.///

ரொம்ப நன்றிங்கோ.....

Several tips சொன்னது…

நல்ல பதிவு

சத்ரியன் சொன்னது…

//ஏழைகள் பற்றி : வெளியில் ஏழைகளாய் வாழ்ந்தாலும், கோழயாய் வாழ விரும்பாதவர்கள். நல்ல குணாதிசயம் கொண்டவர்கள். (என் பார்வையில்...)//

அபூ,

அசத்தலான அதே நேரம் உண்மையான கருத்து, மேலே குறிப்பிட்டுள்ளது.

வாழ்க்கையில் நடக்காத...என்று வேறு கதை விடுகின்றீர்கள்.ஓடட்டும்...!

யாழினி சொன்னது…

ஆஹா வித்தியசமான கற்பனை அழகா இருக்கு நானும் தொடர முயற்ச்சிக்கின்றேன்!

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

:-)