அன்புள்ளங்களே!....
புனித ரமலான் மாதம் என்பதால் அதிகமாக வலைப் பக்கம் வந்து போவதில்லை. அதனால் எந்த வலைத் தளத்திற்கு செல்வதற்கான வாய்ப்பும் கிட்டவில்லை. அலுவலகத்தில் கூட 3 மணித்தியால வேலை என்பதால் அலுவலக வேலையை மாத்திரமே பண்ணிக் கொண்டிருக்கிறேன். மிகுதி நேரத்தில் தொழுகை, குரான், நல்லமல்கள் என இயலுமான அளவு புனித ரமலானின் பயனை அடைந்து கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.
நான் இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் உன்னதமான உம்ராக் கடமையை நிறைவு செய்து விட்டு வந்தேன். இன்ஷா அல்லாஹ் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றவும் எண்ணம் வைத்துள்ளேன். உங்களது பிரார்த்தனையில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
புனித ரமலானின் இரண்டாவது பத்தான மஹ்பிரத்துடய பத்தில் இருக்கிறோம். அதிகமாக பிழை பொறுக்கத் தேடுங்கள். கடைசிப் பத்தின் ஒற்றை இரவுகளில் ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த அந்த லைலதுல் கத்ர் இரவை எதிர் பாருங்கள். முடியுமான வரை இரவு முழுதும் நின்று வணங்குங்கள். ஸகாத், ஸதகா என முடியுமான வரை உதவி பண்ணுங்கள். நிச்சயம் அவைகள் எல்லாம் நிலையான தர்மங்களில் சேரும்.
இன்ஷா அல்லாஹ் ரமலான் முடிந்ததும் மீண்டும் பதிவுகளோடு உங்களை சந்திக்கிறேன். மீண்டும் சந்திப்போம்... அதுவரையில் நல்லதையே சிந்திப்போம்....
உயர்ந்த இறைவன் நம் அனைவரையும் பொருந்திக் கொள்வானாக!......
இன்றைய தினம் பிறந்த தினத்தைக் கொண்டாடும் அன்பு நண்பன் பிரபாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.... (விழியும் செவியும் = நானும் நீயும்....)
நான் பதிவு எழுத ஆரம்பித்ததும் முதன் முதலாய் பின்னூட்டல் இட்ட மகான் இவர் தானுங்கோ....
So நீடூழி காலம் 16 ம் பெற்று வாழ்க நண்பரே......
உங்கள் நண்பன்
அபூ.....
செவ்வாய், 8 செப்டம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
12 கருத்துகள்:
நோன்பு தவத்தால் சகல செல்வங்களும் அடைய வாழ்த்துக்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் என்றும் உங்களுடன்..
தவறாக வாழ்த்தியிருந்தால் மன்னித்து விடவும். எனக்கு இஸ்லாம் பற்றி அறிவு சற்று குறைவு...
யோகா, நோன்பைப் பொறுத்த வரை நோன்புக்கு எல்லையில்லா, வரையறையில்லா அளவு நன்மையை இறைவன் வழங்குகிறான். ஏனெனில் நோன்பு இறைவனுக்குரியது. அதற்கான கூலியை அவனே வழங்குவான்.
நோன்பு காலத்தில் செய்யும் அமல்களுக்கு ஏனைய காலங்களில் செய்யும் நல்ல விடயங்களுக்கு கிடைக்கும் நன்மைகளை விட அதிகமாக நன்மைகள் கிட்டும்.
(எல்லா செல்வங்களையும் என்பதை விட எல்லா நன்மைகளும் என வந்திருந்தால் இன்னும் பொருத்தமாய் இருந்திருக்கும். ஆனால் இதில் கூட தப்பு ஏதும் இல்லை நண்பா...)
ரொம்ப நன்றி உங்கள் வாழ்த்துக்கு......
//புனித ரமலான் மாதம் என்பதால் அதிகமாக வலைப் பக்கம் வந்து போவதில்லை. அதனால் எந்த வலைத் தளத்திற்கு செல்வதற்கான வாய்ப்பும் கிட்டவில்லை//
அதிகமாக நன்மைகள் தேடும் மாதம் இது. வீண்ணாக நேரத்தை செலவு செய்யாமல் அதிகமாக இறைவனை நினைக்கவும், தஸ்பீஹ் செய்யவும் நன்மைகள் செய்யவதிலும் நேரத்தினை செலவு செய்யனும்.
இன்ஷா அல்லாஹ் ரமலான் முடிந்த பின்பு சந்திப்போம்.
அதிகமாக நன்மைகள் தேடும் மாதம் இது. வீண்ணாக நேரத்தை செலவு செய்யாமல் அதிகமாக இறைவனை நினைக்கவும், தஸ்பீஹ் செய்யவும் நன்மைகள் செய்யவதிலும் நேரத்தினை செலவு செய்யனும்.
***********************
சரியாச் சொன்னீங்க அபூ. எல்லோரும் அதன் பயனை அடையட்டும்.
நண்பர் பிரபாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
புனித ரமலான் வாழ்த்துக்கள்...அன்பரே...
இன்று பிறந்தநாள் கொண்டாடும் நண்பர் பதிவர் பிரபாவுக்கும் வாழ்த்துக்கள்....
இனிய ரமழான் வாழ்த்துக்கள் அபூ.உங்கள் விரதம் அமைதியாக இருக்கட்டும்.பிரபா சுகமாய் சந்தோஷமாய் வாழ அதே இறைவன் அருள் தரட்டும்.
இதுக்கு எதுக்கு மன்னிப்பு?
சிறப்பா நோன்ப முடிச்சிட்டு வாங்க.
புனித ரமலான் வாழ்த்துக்கள்.
பிரபாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
உங்களை ஒரு தொடர் பதிவில் மாட்டி விட்டிருக்கிறேன்.
காதல் - அழகு - கடவுள் - பணம்
http://yovoice.blogspot.com/2009/09/blog-post_15.html
வந்து தொடருங்க
உங்கள் வலைப்பதிவு புலம்பெயர்ந்த இலங்கை வலைப்பதிவர்களைத் திரட்டும் சொந்தங்கள் வலைப்பதிவிலே இணைக்கப்பட்டுள்ளது.
www.sonthankal.blogspot.com
இனிய பெருநாள் வாழ்த்துக்கள் சப்ராஸ்.
நோன்பு காலத்தில் செய்கின்ற அமல்கள் உண்மையில் பெறுமதி மிக்கவைதான் ஒரு ஞாபக மூட்டளுக்கு நீங்கள் பதிந்திருப்பது பாராட்டத்தக்கது ...............
சப்ராஸ் அபூ பக்கர் தங்களை நான் ஒரு தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன்.
http://en-mana-vaanil.blogspot.com/2009/10/blog-post.html
வந்து தொடருங்கள்!
கருத்துரையிடுக