
இன்றைய தினம் சர்வதேச ரீதியில் ஆசிரியர் தினம் கொண்டாடப் படுகிறது. இந்த ஆசான்களை கெளரவிக்க, மரியாதை செய்ய, நினைவு படுத்த தனியாக ஒரு நாள் தேவை இல்லை. இருந்தாலும் அவர்களுக்காக ஒதுக்கிய நாள் என்பதால் ஆசான்களுக்காக வடித்த ஒரு கவிதையை இன்றைய பதிவில் பதிவிடுகிறேன்.
ஆனால் இன்றைய தினம் என் பாடசாலை வாழ்வில் கழித்த ஆசிரியர் தின நாட்களும், கடந்த வருடம் வசந்தம் வானொலியில் ஆசிரியர் தினத்தன்று செய்த நிகழ்ச்சியும் என்னோடு தனியாக கதை பேசிக் கொண்டிருக்கிறது.
சரி வாங்க கவிதையை பார்ப்போம்....

ஆறு வயதில் அறிவைத் தேடி
அனுமதி பெறுகையில்
ஒரு ஆசானாய்க் கண்டேன் உன்னை!...
அன்பால் அரவணைத்து
அகமகிழ வார்த்தைகள் சொல்லி
அனுதினமும் மகிழ வைத்தாய் என்னை!...
கேள்விகள் பல கேட்டு
கேடயங்கள் பல கொடுத்து
கேலிகூத்திலிரிந்து
விளக்கி வைத்தாய் என்னை!....
பரீட்சைகள் பலதில்
பார்போற்ற புள்ளிகள்
படைக்க வைத்தாய்!....
களைகள் என்னில் பிடுங்கி
கலைஞனாய் என்னை வளர வைத்த
கல்விமான் நீ!....
எட்டாத காய் பார்த்து
எண்ணங்கள் வளர்க்காதே
என்ற பொன்மொழி தந்தவன் நீ!...
விடியும் விடியல்களை
விருட்சங்களாய் மாற்றியன் நீ!....
என் கவி வரிகளுக்கு
என்றுமே கருப்பொருள் நீ!....
நான் விழுமியம் பெற
விழித்திருந்த ஆசானே!....
காலமெல்லாம் உன் சேவை
இறை ஆசியுடன் தொடர
காளை இவனின் வாழ்த்துக்கள்!.....
(2005 ஆம் ஆண்டு இதே நாள் என் பாடசாலை வாழ்வின் விடுகை வருட கடைசி ஆசிரியர் தின நிகழ்ச்சியை ரொம்ப விமர்சையாக நடத்தினோம். காலை 9 மணி தொடக்கம் 3 மணி வரை நிகழ்ச்சி சிறப்பாய் நடந்தேறியது. விசேடமாக எல்லா ஆசிரியர்களையும் மேடை ஏற வைத்தது, பாடல் பாட வைத்தது, நடனம் ஆட வைத்தது, அவர்களுடைய பழைய நாள் நினைவுகளை புரட்டிப் பார்க்க வைத்தது, முக்கியமா பாடசாலை அதிபரை மேடை ஏற்றி அவரை கேட்காத கேள்விகள் பல கேட்டு அவரை கொஞ்சம் வேருப்பூட்டினாலும், ரொம்ப சந்தோஷப் படுத்தியதுன்னு சொல்லி வித்தியாசமான ஒரு நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்கியதை இரவு என் பாடசாலை நண்பி ஒருத்தி தொலைபேசியினூடாக நினைவு படுத்தியிருந்தாள்.....)
அப்போ நான் வரட்டா!....
உங்கள் நண்பன்
அபூ.....