
இன்றைய தினம் சர்வதேச ரீதியில் ஆசிரியர் தினம் கொண்டாடப் படுகிறது. இந்த ஆசான்களை கெளரவிக்க, மரியாதை செய்ய, நினைவு படுத்த தனியாக ஒரு நாள் தேவை இல்லை. இருந்தாலும் அவர்களுக்காக ஒதுக்கிய நாள் என்பதால் ஆசான்களுக்காக வடித்த ஒரு கவிதையை இன்றைய பதிவில் பதிவிடுகிறேன்.
ஆனால் இன்றைய தினம் என் பாடசாலை வாழ்வில் கழித்த ஆசிரியர் தின நாட்களும், கடந்த வருடம் வசந்தம் வானொலியில் ஆசிரியர் தினத்தன்று செய்த நிகழ்ச்சியும் என்னோடு தனியாக கதை பேசிக் கொண்டிருக்கிறது.
சரி வாங்க கவிதையை பார்ப்போம்....

ஆறு வயதில் அறிவைத் தேடி
அனுமதி பெறுகையில்
ஒரு ஆசானாய்க் கண்டேன் உன்னை!...
அன்பால் அரவணைத்து
அகமகிழ வார்த்தைகள் சொல்லி
அனுதினமும் மகிழ வைத்தாய் என்னை!...
கேள்விகள் பல கேட்டு
கேடயங்கள் பல கொடுத்து
கேலிகூத்திலிரிந்து
விளக்கி வைத்தாய் என்னை!....
பரீட்சைகள் பலதில்
பார்போற்ற புள்ளிகள்
படைக்க வைத்தாய்!....
களைகள் என்னில் பிடுங்கி
கலைஞனாய் என்னை வளர வைத்த
கல்விமான் நீ!....
எட்டாத காய் பார்த்து
எண்ணங்கள் வளர்க்காதே
என்ற பொன்மொழி தந்தவன் நீ!...
விடியும் விடியல்களை
விருட்சங்களாய் மாற்றியன் நீ!....
என் கவி வரிகளுக்கு
என்றுமே கருப்பொருள் நீ!....
நான் விழுமியம் பெற
விழித்திருந்த ஆசானே!....
காலமெல்லாம் உன் சேவை
இறை ஆசியுடன் தொடர
காளை இவனின் வாழ்த்துக்கள்!.....
(2005 ஆம் ஆண்டு இதே நாள் என் பாடசாலை வாழ்வின் விடுகை வருட கடைசி ஆசிரியர் தின நிகழ்ச்சியை ரொம்ப விமர்சையாக நடத்தினோம். காலை 9 மணி தொடக்கம் 3 மணி வரை நிகழ்ச்சி சிறப்பாய் நடந்தேறியது. விசேடமாக எல்லா ஆசிரியர்களையும் மேடை ஏற வைத்தது, பாடல் பாட வைத்தது, நடனம் ஆட வைத்தது, அவர்களுடைய பழைய நாள் நினைவுகளை புரட்டிப் பார்க்க வைத்தது, முக்கியமா பாடசாலை அதிபரை மேடை ஏற்றி அவரை கேட்காத கேள்விகள் பல கேட்டு அவரை கொஞ்சம் வேருப்பூட்டினாலும், ரொம்ப சந்தோஷப் படுத்தியதுன்னு சொல்லி வித்தியாசமான ஒரு நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்கியதை இரவு என் பாடசாலை நண்பி ஒருத்தி தொலைபேசியினூடாக நினைவு படுத்தியிருந்தாள்.....)
அப்போ நான் வரட்டா!....
உங்கள் நண்பன்
அபூ.....
22 கருத்துகள்:
ஆசான்களுக்காக அருமையான பதிவு அபூ. ரொம்ப சந்தோசம்.
அருமையான பதிவு,
ஆசான்களை என்றும் மறக்க முடியாது.
//நான் விழுமியம் பெற
விழித்திருந்த ஆசானே!....
காலமெல்லாம் உன் சேவை
இறை ஆசியுடன் தொடர
காளை இவனின் வாழ்த்துக்கள்!.....//
ஆசிரியர்களைக் கனம் பண்ணும் மாணவர்கள் குறைவு.. நல்ல கவிதை.. நல்ல மாணவன்...
//நான் விழுமியம் பெற
விழித்திருந்த ஆசானே!....
காலமெல்லாம் உன் சேவை
இறை ஆசியுடன் தொடர
காளை இவனின் வாழ்த்துக்கள்!.....//
கல்வி பாடங்களை போதித்த ஆசான்களுக்கு நன்றியுடன் வணக்கம் செலுத்துவோம்.
நல்லாசான்களின் மாணவராய் திகழும் சப்ராஸுக்கு வாழ்த்துக்கள். ஆசான்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் நண்பா..
அருமை அபூ,மூத்தோரை நாம் நினைவில் வைத்துக்கொள்ளும்வரை எம் வாழ்வு வளமாய் இருக்கும்.வாழ்த்துகள்.
ஆசிரியர்களுக்கான பதிவு அருமை அபூ!!
S.A. நவாஸுதீன் கூறியது...
/// ஆசான்களுக்காக அருமையான பதிவு அபூ. ரொம்ப சந்தோசம்.///
என் ஒவ்வொரு வெற்றிப் படிக்கட்டுக்கும் காரணமானவர்கள் ஆசான்களே!....
ரொம்ப நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.....
Jaleela கூறியது...
அருமையான பதிவு,
///ஆசான்களை என்றும் மறக்க முடியாது.///
நிச்சயமாக!.....
ரொம்ப நன்றி அக்கா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.....
மன்னார் அமுதன் கூறியது...
//நான் விழுமியம் பெற
விழித்திருந்த ஆசானே!....
காலமெல்லாம் உன் சேவை
இறை ஆசியுடன் தொடர
காளை இவனின் வாழ்த்துக்கள்!.....//
/
/// ஆசிரியர்களைக் கனம் பண்ணும் மாணவர்கள் குறைவு.. நல்ல கவிதை.. நல்ல மாணவன்...///
நிச்சயமாக அமுதன். இன்றைய கால கட்டத்தில் ஆசிரியர்களை மதிப்பவர்கள் குறைந்து கொண்டு செல்ல, புகை பிடித்தலுக்கான ஆசை அதிகரித்துக் கொண்டு செல்கிறது.
ரொம்ப நன்றி அமுதன் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்!.....
க.பாலாஜி கூறியது...
//நான் விழுமியம் பெற
விழித்திருந்த ஆசானே!....
காலமெல்லாம் உன் சேவை
இறை ஆசியுடன் தொடர
காளை இவனின் வாழ்த்துக்கள்!.....//
///கல்வி பாடங்களை போதித்த ஆசான்களுக்கு நன்றியுடன் வணக்கம் செலுத்துவோம்.///
எல்லோரும் இணைந்து கொள்ளுவோம்!...
ரொம்ப நன்றி பாலாஜி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்!.....
யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
/// நல்லாசான்களின் மாணவராய் திகழும் சப்ராஸுக்கு வாழ்த்துக்கள். ஆசான்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் நண்பா..///
கடைசி வரைக்கும் நன்றியுடையவனாக இருக்க நான் ஆசை கொள்கிறேன்.
ரொம்ப நன்றி யோ உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்!.....
ஹேமா கூறியது...
////அருமை அபூ,மூத்தோரை நாம் நினைவில் வைத்துக்கொள்ளும்வரை எம் வாழ்வு வளமாய் இருக்கும்.வாழ்த்துகள்.///
நீங்களும் மூத்தவங்க தானே!...(லொள் ) உங்களுடைய சில கவிதைகள் என்னை ரொம்ப சிந்திக்க வைத்தது.
ரொம்ப நன்றி அக்கா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்!.....
Mrs.Menagasathia கூறியது...
///ஆசிரியர்களுக்கான பதிவு அருமை அபூ!!///
ரொம்ப நன்றி அக்கா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்!.....
அருமையான கவிதை அபூ... அனைத்து ஆசிரியர்களுக்கும் சமர்ப்பணம் ஆகட்டும் இந்த கவிதை...
நினைவகலாத இனிய நாட்களை மனதில் கொண்டு வந்தது உங்கள் பதிவு.பாராடுக்கள்
Hi Aboooooo. hw r u ?
Hey........... My dear friends....
Now Im in Srilanka. Now I'm very happy here. How r u all?....
I'll back to soom my page.
Take care all.
http://allinalljaleela.blogspot.com/2009/11/blog-post_09.html
ரொம்ப பிஸியா சப்ராஸ் அபூ பக்கர், எப்ப நேரம் கிடைக்குதோ அப்ப வந்து நான் உங்களுக்கு கொடுத்திருக்கும் அவார்டை வாங்கிக்கொள்ளுங்கள்.
சப்ராஸ் புது பதிவு எதையும் காணோம்.
நல்லாயிருக்கீங்களா.
அண்ணா.... நான் ரொம்ப நல்லா இருக்கேன். வருட இறுதி என்பதால் காரியாலயத்தில் வேலைப் பழு அதிகமாக இருக்கிறது அண்ணா.... வெகு விரைவில் பதிவுகளோடு சந்திக்கிறேன்..... அண்ணா நானும் சவூதி - Dammam மில் தான் இருக்கிறேன். முடியுமானால் தொடர்பு கொள்ளுங்கள்.....
sasi_sana2005@yahoo.com
மிக அருமையான தளம். உண்மையில் உங்கள் கவி வரிகள் ஒவ்வொன்றும் அருமையிலும் அருமை. எல்லாம் வல்ல அல்லாஹ் உங்கள் திறமைகளை மென் மேலும் பெருகச்செய்வானாக....
கருத்துரையிடுக