சனி, 12 டிசம்பர், 2009

வானொலிக் கலை....




நீண்ட நாட்களுக்குப் பின்பு மீண்டும் பதிவுலகில் உங்களோடு இணைவதில் மிகுந்த மகிழ்ச்சி.... தொடரும் மகிழ்ச்சியோடு தலைப்புக்கு வருகிறேன்.

அன்றாட தொழில் எதுவோ அது வீணாக்கப் படாமல் ஒரு துணையாக, தொழிலுக்கு ஊக்கம் அளித்துக் கொண்டிருப்பது வானொலி எனும் ஊடகமே ஆகும். உலகின் எந்த நாட்டுக்கும், எது வித அனுமதியுமின்றி, யாவருடைய இல்லங்களுக்கும் தங்கு தடையின்றி நுழைந்து கதிரை போட்டு அமர்ந்து கொள்வது இந்த வானொலி என்கிற ஊடகமாகும். நவநாகரீக கணணி யுகத்தில் தன்னிலை குன்றாது தலை நிமிர்ந்து இந்தளவுக்கு உயிரோட்டம் பெறுகிறதென்றால் அந்த ஊடக அறிவிப்பாளர்கள் நிகழ்ச்சிகளில் புகுத்தும் புதுமைகள் தான் காரணம் எனலாம். (உதாரணத்துக்கு இன்றைய காலத்தில் நம்ம பதிவுலக ஜாம்பவன்களின் நிகழ்ச்சிகளே போதும்... லோஷன் அண்ணாவின் விடியல், ஹிஷாமின் கற்றது கையளவு, சந்துருவின் எங்கேயும் எப்போதும்......... அப்படியே நீள்கிறது பட்டியல்.......)

வானொலி ஒலிபரப்பு என்பது அறிவியலின் அடிப்படையில் தோன்றிய ஒப்பற்ற கலையாகும். அது சரி, ஏன் இவன் இன்னக்கி வானொலி பற்றியே பேசிட்டு போறான்? இவனுக்கு ஏதாவது நடந்து விட்டதோ என நீங்கள் எனக்காக ஏங்குவதும் எனக்கு விளங்காமலில்லை. என்ன செய்ய? சொல்ல வேண்டிய நிற்பந்த நிலை. சொல்லித் தான் ஆக வேண்டும். அதனால் சொல்கிறேன்.

ஒலிபரப்புக் கலை குறித்து பல ஆண்டுகளுக்கு முன் சோ. சிவபாத சுந்தரம் எழுதிய நூல் பற்றி நான் சில தகவல்கள் கேள்விப் பட்டிருக்கிறேன். (அந்த நூலை தேடி படிக்க வேண்டும் என ஆசைப் பட்டேன். ஆனால் அது இதுவரையில் என் பார்வைக்கு அந்த நூல் எட்டவில்லை.) அதன் பின்னால் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் "வானொலிக் கலை " என்கிற அறிவிப்பாளர்களுக்கு மிகவும் பிரயோசனம் மிக்க ஒரு நூலை வெளியிட்டிருக்கின்றார் இலங்கை வானொலியின் பயிற்ச்சிப் பட்டறையில் உருவான விமல் சொக்கநாதன் அவர்கள். (அதை எல்லாம் ஏன் இங்க எழுதுராய்னு நீங்க கேட்பது விளங்குது. )2007 ம் ஆண்டு காலப் பகுதியிலே தான் இந்த நூல் பற்றி நான் அறிந்தேன். அன்றிலிருந்து இன்று வரை அந்தப் புத்தகத்தை பல புத்தகசாலை சென்று தேடி இருக்கிறேன். இது வரையில் என் கைக்கு அந்த நூல் கிட்டவில்லை. (இனி நாங்க என்ன பண்ணவான்னு நீங்க முறைக்கிறீங்க......) அப்படி இருக்கையில் இன்றைய பதிவாய் இந்த விடயத்தை நான் பதிவிடுகிறேன் என்றால் ஒரு காரணமும் இல்லாமல்இல்லை.

வானொலி அறிவிப்புத் துறையை காதல் கொள்ளும் நான் (சில காலங்கள் அந்தக் காதலிக்கு காதலனாய் இருந்ததில் அளவில்லா ஆனந்தம் ஒரு பக்கம் இருக்கத் தான் செய்கிறது.....) எப்படியாவது இந்த நூலைப் பெற வேண்டும் என ஆசை கொண்டு இலங்கையின் பல புத்தக சாலையில் இந்தப் புத்தகத்தை நான் கடல் கடந்து வருவதற்கு முதல் தேடி அலைந்தேன். ஆனால் கடைசி வரை அது என் கண்ணுக்குத் தெரியவுமில்லை. கைக்கு கிட்டவுமில்லை. (கைக்கு கிட்டலன்னா கிட்டியதக் கொண்டு வேலையைப் பாருன்னு யாரோ சொல்றாங்க போல....)

அந்த நூல் பற்றி இன்றைய தினம் பதிவிட முக்கிய காரணம் "வானொலிக் கலை " என்கிற இந்த நூலை இந்தியாவில் மிக இலகுவாகப் பெற்றுக் கொள்ளலாம் என நான் கேள்விப் பட்டிருக்கிறேன். எனவே தான் இன்றைய பதிவில் இது பற்றி பதிவிடுகிறேன். என் பதிவுக்கு ஏராளமான இந்திய சொந்தங்கள் வந்து செல்கின்றனர். அவர்கள் நிச்சயம் இந்த உதவியைப் பண்ணுவார்கள் எனும் நம்பிக்கையில் தான் இந்தப் பதிவை இடுகிறேன். (எந்த நாட்டில் கிடைத்தாலும் பரவா இல்லை...)

நூல் : வானொலிக் கலை
ஆசிரியர் : விமல் சொக்கநாதன்
விலை : 125 இந்தியா ரூபா..

என் வலையுலக நண்பர்கள் (குறிப்பாக இந்திய சொந்தங்கள் ) எப்படியாவது இந்த நூலை தேடித் பெற்று என் கரம் சேர்க்க முயற்சி பண்ணுவீர்களா? அந்த முயற்சி வெற்றி அடையும் பட்சத்தில் அந்த நூலுக்கான பெறுமதியினை நான் உங்களுக்காக வழங்கக் காத்திருக்கிறேன். (அட, இப்படியுமா??? என நீங்கள் யோசிக்க வேண்டாம். இந்த நூலைத் தேடி நான் அலையாத இடமில்லை. ஆனால் எப்படியாவது இந்த நூலைப் படிக்க வேண்டும் என்கிற ஓர் ஆர்வம் என்னிடம் இருக்கிறது.) அதனால் தான் என் நண்பர்கள் உங்களிடம் சொல்லி இருக்கிறேன். முடியுமானால் முயற்சி பண்ணிப் பாருங்கள்...... புத்தகம் கிடைத்தால் பின்னூட்டத்தில் எழுதுங்கள். அதற்கான வெகுமதியைத் தந்து விட்டு உங்களிடமிருந்து நான் அந்த நூலைப் பெற்றுக் கொள்கிறேன்.

எதிர் பார்ப்போடு................................

மற்றுமொரு பதிவில் சந்திப்போம் .... அதுவரையில் நல்லதையே சிந்திப்போம்....

அப்போ நான் வரட்டா....

உங்கள் நண்பன்

அபூ.......

16 கருத்துகள்:

சிநேகிதன் அக்பர் சொன்னது…

//அன்றாட தொழில் எதுவோ அது வீணாக்கப் படாமல் ஒரு துணையாக, தொழிலுக்கு ஊக்கம் அழித்துக் கொண்டிருப்பது வானொலி எனும் ஊடகமே ஆகும். //

ஊக்கம் அளித்து என்று இருக்கவேண்டும். திருத்திகொள்ளவும்.

உங்களுக்கு அந்த நூல் கிடைக்க வாழ்த்துகள்.

நிலாமதி சொன்னது…

நல்ல பதிவு.........மிக நீண்ட காலத்துக்கு பின் உங்கள் பதிவு .
நலமாய் இருகிறீர்களா?

சீமான்கனி சொன்னது…

வணக்கம் அபூ நலமா???வெகு நாட்களுக்கு பிறகு உங்களை வாசிப்பதில் மகிழ்ச்சி...உங்கள் கனவு மெய்பட வாழ்த்துகள்...இன்ஷா அல்லா விரைவில் புத்தகம் கிடைக்க துவாக்கள்...நன்றி...

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

நல்லா இருக்கீங்களா அபுபக்கர்

S.A. நவாஸுதீன் சொன்னது…

வாங்க தம்பி. ரொம்ப லாங் லீவுல போயிட்டு வந்திருக்கீங்க. நலமா?

S.A. நவாஸுதீன் சொன்னது…

இந்தியாவில் இருக்கும் நண்பர்கள் நிச்சயம் முயற்சி செய்வார்கள் அபூ. இன்ஷா அல்லாஹ் புத்தகம் விரைவில் கிடைக்கும்.

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

அக்பர் கூறியது...

//அன்றாட தொழில் எதுவோ அது வீணாக்கப் படாமல் ஒரு துணையாக, தொழிலுக்கு ஊக்கம் அழித்துக் கொண்டிருப்பது வானொலி எனும் ஊடகமே ஆகும். //

/// ஊக்கம் அளித்து என்று இருக்கவேண்டும். திருத்திகொள்ளவும்.

உங்களுக்கு அந்த நூல் கிடைக்க வாழ்த்துகள்.//


வாங்க அக்பர் அண்ணா... எப்படி இருக்குறீங்க? தவறை சுட்டிக் காட்டியமைக்கு ரொம்ப நன்றி (திருத்தி விட்டேன் )

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

நிலாமதி கூறியது...

////நல்ல பதிவு.........மிக நீண்ட காலத்துக்கு பின் உங்கள் பதிவு .
நலமாய் இருகிறீர்களா?////

வாங்க அக்கா.... நான் ரொம்ப நல்லா, சந்தோஷமா இருக்கேன் அக்கா. உங்கள் நலம் எப்படி? இனி அடிக்கடி வலையுலகப் பக்கம் வருவதாக உத்தேசம் எடுத்திருக்கிறேன்....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

seemangani கூறியது...

///வணக்கம் அபூ நலமா???வெகு நாட்களுக்கு பிறகு உங்களை வாசிப்பதில் மகிழ்ச்சி...உங்கள் கனவு மெய்பட வாழ்த்துகள்...இன்ஷா அல்லா விரைவில் புத்தகம் கிடைக்க துவாக்கள்...நன்றி...///

வாங்க சீமாங்கனி, கிட்டத்தட்ட 2 மாதங்களுக்குப் பிறகு பதிவு இட்டிருக்கேன். அலுவலகத்தில் ஏராளமான வேலைகள் (வருட இறுதி என்பதால் ஏராளமான கலெண்டர் design பண்ண வேண்டி இருக்கிறது. ) நான் ரொம்ப சந்தோஷமாகவும் உடல் ஆரோக்கியத்தோடும் இருக்கேன். தாங்கள் நலம் எப்படி?

இறைவன் நாடினால் நிச்சயம் அந்தப் புத்தகம் கிடைக்கும் என நினைக்கிறேன்..... ரொம்ப நன்றி சீமாங்கனி...

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...

//// நல்லா இருக்கீங்களா அபுபக்கர்////

வாங்க ஸ்டார்ஜன், நான் ரொம்ப நல்லா இருக்கேன். தாங்கள் சுகம் எப்படி?

ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கு......

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

S.A. நவாஸுதீன் கூறியது...

////வாங்க தம்பி. ரொம்ப லாங் லீவுல போயிட்டு வந்திருக்கீங்க. நலமா?///

வாங்க அண்ணா..... ஒரு நீண்ட விடுமுறை என்று தான் சொல்ல வேண்டும். அலுவலகத்தில் ஏராளமான வேலைகள்.. குறிப்பாக வலையுலகத்தை எட்டிப் பார்க்கக் கூட நேரம் கிடைப்பது குறைவு. இருப்பினும் அப்பப்போ முகப் புத்தகத்தை மட்டும் எட்டிப் பார்த்து சின்னச் சின்ன கவி வரிகளை சுவரில் கிறுக்கி விடுவதுண்டு. ஆனால் இப்போது கொஞ்சம் வேலைப் பழு குறைந்திருக்கிறது. இனி அடிக்கடி சந்திக்கலாம் போலும்.....


S.A. நவாஸுதீன் கூறியது...

//// இந்தியாவில் இருக்கும் நண்பர்கள் நிச்சயம் முயற்சி செய்வார்கள் அபூ. இன்ஷா அல்லாஹ் புத்தகம் விரைவில் கிடைக்கும்.///


நிச்சயமாக வலையுலகில் ஏராளமான இந்திய சொந்தங்கள் வெற்றி நடை போடுகின்றார்கள். அவர்களில் யாராவது என் இடுகையை பார்த்து விட்டு அந்த நூலை த்திப் பார்க்கலாம் இல்லையா அண்ணா.... அதனால் தான் இந்தப் பதிவை இட்டேன்.

ரொம்ப நன்றி அண்ணா உங்கள் வருகைக்கு....

ஹேமா சொன்னது…

அபூ சுகம்தானே நீங்களும் எங்களூர்க் காத்தும்.நல்லதொரு தேடல்.வாழ்த்துக்கள் அபூ.

பெயரில்லா சொன்னது…

நல்ல பதிவு.

மயில்வாகனம் செந்தூரன். சொன்னது…

அந்தப் புத்தகம் விரைவில் கிடைக்க வாழ்த்துக்கள்...

SUFFIX சொன்னது…

நல்ல தகவல்கள் அபூ.

நினைவுகளுடன் -நிகே- சொன்னது…

நல்ல பதிவு.
இலங்கை அறிவிப்பாளர் ஒருவரை
கண்டு கொண்டதில் மகிழ்ச்சி