
இனி தொடர்கிறேன் அந்த இனிய நினைவுகளை....
இருள் சூழ்ந்த
இராப் பொழுதில்
இதயங்களோடு கதை பேசினேன்!..
இசையும் கூடவே கை கோர்த்தது!.......
இதயத்தில் பூத்த
இன்பமான சில வரிகள்
இவன் கவியாய் உருப் பெற்று
இதயங்கள் பல தொட்டது!......
இல்லாதது பல சொல்லி கவி சொல்ல
இஷ்டமில்லை எனக்கு!.....

தூரத்து நிலாக்காட்டி
தூங்க வைக்கிறாள் அன்னை!....
தூறலாய் சிந்தும் சில வரிகளில்
தூது சொல்வதாய் மாற்றினேன் என்னை!......
வசீகரா பாடலின் இடையிசை
வஞ்சமில்லாது பின்னணி இசை கொடுக்க
வந்திட்ட வார்த்தைகளோடு
வலம் வந்தேன் 97 .6 (FM) ல்.......

ஜீவராகம்
ஜீரணிக்கப் பட்டது
ஜீவன்கள் பலரால்!......
கிழமைக்கு ஒரு நிகழ்ச்சி!....
கிடைத்தது பலகோடி மகிழ்ச்சி!.....
இருளுக்கு ஒளி வட்டமாய் ஒரு பால் நிலா!....
இதயங்களுக்கு இன்பகரமாய் இவன் உலா!.....
தேன் நிலவும்,
தேடிய இசையும்,
தேவதையாய் துணை நிற்க.......
தேன் சிந்திய சிதறல்களால்
தேகம் நனைத்தேன்!.....

இருட்டி விட்ட இராப்பொழுது!......
இளமை கொஞ்சும் வெண்ணிலா!....
இருளகன்ற வசந்தம் கலையகம்!.....
இத்தனைக்குள் இளையவன் இவனும் ஒருவனாய்!.....
விண்மீன்கள் கண்சிமிட்டும் நேரம்....
நிறைநிலா நெழிந்து கொண்டு
கொட்டாவி விடுகையில்....
இனிதான அந்த ஜீவராகத்தில்
இவனோடு இதயங்கள் பலகோடி!......

இசை கொண்டு,
இதயம் சென்று
இன்பம் கொடுத்ததில்
இரட்டிப்பு மகிழ்ச்சி
இன்றும் எனக்கு!.........
நன்றி ஜீவராகம்.........
உங்கள் நண்பன்
அபூ.......
14 கருத்துகள்:
கிழமைக்கு ஒரு நிகழ்ச்சி!....
கிடைத்தது பலகோடி மகிழ்ச்சி!.....]]
அற்புதம்.
------------------------
எப்படிங்க எழுத்துகளை முதன்மை படுத்தி இவ்வளவு எழுதுறீங்க.
:)
ஜீவராகம் அருமை.
இனிய நினைவுகளை மீட்டும் உங்கள் மகிழ்வில் நானும் மகிழ்கிறேன். நலமாய் மகிழ்வாய் இருகிறீங்களா?
நட்புடன் ஜமால் கூறியது...
கிழமைக்கு ஒரு நிகழ்ச்சி!....
கிடைத்தது பலகோடி மகிழ்ச்சி!.....]]
அற்புதம்.
------------------------
/////எப்படிங்க எழுத்துகளை முதன்மை படுத்தி இவ்வளவு எழுதுறீங்க./////
என்னாலும் முடியுமா என்ற கேள்வியோடு முயற்சி செய்கின்ற பொழுதுகள் தான் அண்ணா இவைகள்.........
ரொம்ப நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.......
யோ வொய்ஸ் (யோகா) கூறியது...
//:)//
ரொம்ப நன்றி யோ உங்கள் கால் தடத்திற்கு.......... அடிக்கடி வந்து போங்க......
Jaleela கூறியது...
/// ஜீவராகம் அருமை.///
ரொம்ப நன்றி அக்கா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்......
நிலாமதி கூறியது...
////இனிய நினைவுகளை மீட்டும் உங்கள் மகிழ்வில் நானும் மகிழ்கிறேன். நலமாய் மகிழ்வாய் இருகிறீங்களா?///
ரொம்ப நன்றி அக்கா.... நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். உங்கள் சுகம்? உங்கள் குடும்பத்தார் சுகம்? எப்படி?.... எல்லோரையும் நினைவு படுத்தியதாகச் சொல்லுங்கள்!.....
ஆஹா...உங்கள் கவிதைகளில் வார்த்தை ஜாலங்கள் வரிவரியாய் வழிகிறது...வாழ்த்துகள்...
.. அருமை.. அபூ...
seemangani கூறியது...
////ஆஹா...உங்கள் கவிதைகளில் வார்த்தை ஜாலங்கள் வரிவரியாய் வழிகிறது...வாழ்த்துகள்...////
சந்தோஷமாக இருக்கிறது சீமாங்கனி உங்கள் பின்னூட்டல் பார்த்ததின் பின்னால்......
ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்........
இலங்கன் கூறியது...
////. அருமை.. அபூ...///
ரொம்ப நன்றி இலங்கன் உங்கள் முதல் வருகைக்கும், பின்னூட்டலுக்கும்.....
அடிக்கடி வந்து போங்க.......
மிகவும் ரசிக்கும் வகையில் இருந்தது வாழ்த்துக்கள் !
மீண்டும் வருவான் பனித்துளி
அருமையான பதிவு.
மிகவும் நன்று ...
Tamil News
Latest Tamil News
Tamil Newspaper
Kollywood News
Tamil News Live
Online Tamil News
Tamil Cinema News
Tamil Film News
Tamil Movie News
Latest Tamil Movie News
கருத்துரையிடுக