வியாழன், 20 ஆகஸ்ட், 2009

வா.... ரமழானே வா!......அலைகளாய் வீசிய உணர்வுகள்
அப்படியே அடைக்கலம் பெறட்டும்
அமைதியான அந்தி பொழுதில்
அழகான தலைப் பிறை பார்த்து!.....

ஏழையின் பசியை
ஏறெடுத்துப் பார்க்காதவர்கள்
ஏக்கத்தோடு உணர
ஏகனால் பரிசளிக்கப் பட்ட நோன்பே வா!....

பதினொரு மாதங்கள்
பருத்தியாய் பறந்தனர்
பகுத்தறிவு இருந்தும், இல்லாதவர்களாய்...
பதில் சொல்ல வரும் ரமழானே நீ வா!.....

இஸ்லாத்தின் கடமைகள் ஐந்து
இனிய நோன்பு அதில் நான்கு
இன்சுவை பெற வேண்டும் நாம் நோற்று
இருள் நோக்கும் ரமழானே வா!....

ஆயிரம் மாதங்களை விடச்
சிறந்த ஓர் இரவு....
ஆசையோடு எதிர் பார்க்க வைக்கும்
ஓர் ஒற்றை நாள் இரவு.....
இனிய ரமழானே உன்னிடம்!.....
அதனால் நீ வா!......

பகல் முழுதும் நோன்பு நோற்று
இரவு முழுதும் நின்று வணங்கி,
இறைவனிடம் கெஞ்ச வேண்டும்
விஞ்சி நின்ற எம் பாவங்களை
போக்க வேண்டி!.....
வா.... ரமழானே வா!.....

தவறுக்கும், மறதிக்கும்
மத்தியில் படைக்கப் பட்ட
மனித இனம் மன்றாட வேண்டும்
மகத்தான இறைவனிடம் !......
வா...... ரமழானே வா.....

நரக வாயில்கள் பூட்டிடப்பட்டு
சுவன வாயில்கள் சுகந்தம் பெரும்
நாட்களைக் கொண்ட ரமழானே!....
நீ வா!......

செல்வந்தர்கள் சுக போகம் வாழ
செல்வச் செழிப்புக்கள்
விகிதாசார அடிப்படையில்
சென்றடைகிறது -
சொல்லொனாத் துயரடையும்
ஏழைகள் கரங்களில்
"ஸகாத்" எனும் பெயரில்!....
எனவே நீ வா ரமழானே!......

முப்பது நோன்பு
முகம் மலர்ந்து நோற்று
முறுவல் பூத்து
"முஸாபஹா" செய்யும்
ஈகைத் திருநாளைக் கொண்டு வரும்
ரமழானே நீ வா!.....

உன் வருகையை
இன் முகத்தோடு எதிர் பார்க்கிறோம்!...
வா..... ரமழானே வா......

37 கருத்துகள்:

யோ வாய்ஸ் சொன்னது…

வாழ்த்துக்கள் சகோதரா! நான் இருக்கும் அக்குறனை நகரில் இஸ்லாமிய சகோதரர்கள் ரமழானுக்கு தயாராகிறார்கள்.

S.A. நவாஸுதீன் சொன்னது…

அழகான கவிதை அபூ. இனிய ரமளான் வாழ்த்துக்கள்

SUMAZLA/சுமஜ்லா சொன்னது…

அழகான ரமலானை ஆவலோடு எதிர்பார்க்கும் ஆயிரம் கோடி பேரில் நாமும் ஒருவராய்,

//பகல் முழுதும் நோன்பு நோற்று
இரவு முழுதும் நின்று வணங்கி,
இறைவனிடம் கெஞ்ச வேண்டும்
விஞ்சி நின்ற எம் பாவங்களை
போக்க வேண்டி!.....//

சொல்வோம் ஆமீன்!

அதிரை அபூபக்கர் சொன்னது…

நல்ல கவிதை...அபூபக்கர்..

ரமழானில் நல்ல அமல்கள் அதிகம் செய்வோமாக! ஆமின்

தேவன் மாயம் சொன்னது…

பதினொரு மாதங்கள்
பருத்தியாய் பறந்தனர்
பகுத்தறிவு இருந்தும், இல்லாதவர்களாய்...
பதில் சொல்ல வரும் ரமழானே நீ வா!...//

Best Wishes My friend!!

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

யோ வாய்ஸ் கூறியது...

//வாழ்த்துக்கள் சகோதரா! நான் இருக்கும் அக்குறனை நகரில் இஸ்லாமிய சகோதரர்கள் ரமழானுக்கு தயாராகிறார்கள்.///

ரொம்ப நன்றி யோ வாய்ஸ்.....

உங்களுடைய இஸ்லாமிய நண்பர்களுக்கு இனிய ரமலான் முபாரக் வாழ்த்துக்களைத் தெரிவித்து விடுங்கள்.....

அடிக்கடி வந்து போங்க தோழா!.... அது சரி, அக்குரனையில் நீங்கள் எந்த இடம்?... ஒரு காலம் அக்குரனையில் சில இடங்களில் தொடர் விருந்து சாப்பிட்டுருக்கிறேன்.... ஹி.... ஹி.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

S.A. நவாஸுதீன் கூறியது...

/// அழகான கவிதை அபூ. இனிய ரமளான் வாழ்த்துக்கள்///

ரொம்ப நன்றி S.A. நவாஸுதீன் அண்ணா உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்.....

உங்களுக்கும், ஏனைய இஸ்லாமிய சகோதரர்களுக்கும் இனிய ரமலான் முபாரக்.....

Jaleela சொன்னது…

வாழ்த்துக்கள்,

அனைவருக்கும் ரமலான் முபாரக்

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

SUMAZLA/சுமஜ்லா கூறியது...

அழகான ரமலானை ஆவலோடு எதிர்பார்க்கும் ஆயிரம் கோடி பேரில் நாமும் ஒருவராய்,

//பகல் முழுதும் நோன்பு நோற்று
இரவு முழுதும் நின்று வணங்கி,
இறைவனிடம் கெஞ்ச வேண்டும்
விஞ்சி நின்ற எம் பாவங்களை
போக்க வேண்டி!.....//

// சொல்வோம் ஆமீன்!///

ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும், பிரார்த்தனைக்கும்....

உங்களுக்கும், ஏனைய இஸ்லாமிய உள்ளங்களுக்கும் இனிய ரமலான் முபாரக்....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

அதிரை அபூபக்கர் கூறியது...

/// நல்ல கவிதை...அபூபக்கர்..

ரமழானில் நல்ல அமல்கள் அதிகம் செய்வோமாக! ஆமின்///

ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்....

உங்களுக்கும், ஏனைய இஸ்லாமிய உள்ளங்களுக்கும் இனிய ரமலான் முபாரக்.... உயர்ந்த அல்லாஹ் நம் அனைவரையும் பொருந்திக் கொள்ளட்டும்.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

தேவன் மாயம் கூறியது...

பதினொரு மாதங்கள்
பருத்தியாய் பறந்தனர்
பகுத்தறிவு இருந்தும், இல்லாதவர்களாய்...
பதில் சொல்ல வரும் ரமழானே நீ வா!...//

//Best Wishes My friend!!////

ரொம்ப நன்றி தேவன் மாயன் உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

Jaleela கூறியது...

வாழ்த்துக்கள்,

//அனைவருக்கும் ரமலான் முபாரக்///

ரொம்ப நன்றி ஜலீலா உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்....

அனைவருக்கும் இனிய ரமலான் முபாரக்..... உயர்ந்த அல்லாஹ் நம் அனைவரையும் பொருந்திக் கொள்ளட்டும்....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

யோ வாய்ஸ் உங்களோட தளத்தில் பின்னூட்டல் இட முடியாமல் இருக்குது... உடனே அதை சரி செய்து விடுங்கள் .......

யோ வாய்ஸ்.... டாபின் பண்ணினாலும் சூப்பரா டப்பிங் பண்றீங்க வாய்ஸ்....

வாழ்த்துக்கள்.... அப்பா மகன் சாட்டிங் சூபருங்கோ.....

Mrs.Faizakader சொன்னது…

ஆவலோடு எதிர்பார்க்கும் ரமலானே விரைந்து வா.. மிகவும் அழகான கவிதை.
அனைவருக்கும் ரமலான் நோன்பு வாழ்த்துக்கள்...

க. பாலாஜி சொன்னது…

//பகல் முழுதும் நோன்பு நோற்று
இரவு முழுதும் நின்று வணங்கி,
இறைவனிடம் கெஞ்ச வேண்டும்
விஞ்சி நின்ற எம் பாவங்களை
போக்க வேண்டி!.....
வா.... ரமழானே வா!.....//

அழகான கவிதை நண்பரே. ரமலான் வாழ்த்துக்கள்.

Mrs.Menagasathia சொன்னது…

ரமலான் கவிதை மிக அழகாக,நன்றாக இருக்கு.

ரமலான் நோன்பு வாழ்த்துக்கள்!!

யோ வாய்ஸ் சொன்னது…

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

யோ வாய்ஸ் உங்களோட தளத்தில் பின்னூட்டல் இட முடியாமல் இருக்குது... உடனே அதை சரி செய்து விடுங்கள் .......

யோ வாய்ஸ்.... டாபின் பண்ணினாலும் சூப்பரா டப்பிங் பண்றீங்க வாய்ஸ்....

வாழ்த்துக்கள்.... அப்பா மகன் சாட்டிங் சூபருங்கோ.....//

நன்றி சப்ராஸ் நான் டெம்ப்ளேட் மாத்தி விட்டு ஏன் பின்னூட்டம் வரலைனு பார்த்த்து கிட்டுருந்தேன். நீங்க சொன்னதுக்கு அப்புறம் தான் அதை கண்டு பிடிச்சேன், ரொம்ப நன்றி. இப்ப சரி பண்ணிட்டேன்

கலை - இராகலை சொன்னது…

//முப்பது நோன்பு
முகம் மலர்ந்து நோற்று
முறுவல் பூத்து
"முஸாபஹா" செய்யும்
ஈகைத் திருநாளைக் கொண்டு வரும்
ரமழானே நீ வா!..///

அருமை

SUMAZLA/சுமஜ்லா சொன்னது…

ரமலான் முபாரக்!

என் ப்ளாகிலும் ஒரு கவிதை இனிய ரமலானை வரவேற்று!

குறை ஒன்றும் இல்லை !!! சொன்னது…

உங்கள ஜக்கம்மா தேடுராங்க... அதனால கீழே உள்ள முகவரிக்கு வாங்க உடனே..

http://yellorumyellamum.blogspot.com/2009/08/blog-post_21.html

யாழினி சொன்னது…

ரம்ழான் மாதம் சிறக்க என் வாழ்த்துக்கள் அபூ!

ஹேமா சொன்னது…

அபூ நல்ல கவிதையோடு உங்கள் விரதத்தைக் தொடங்கியிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.

இர்ஷாத் சொன்னது…

ரமழானின் முழுப்பயனையும் பெற வாழ்த்துக்கள்.

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

Mrs.Faizakader கூறியது...

////ஆவலோடு எதிர்பார்க்கும் ரமலானே விரைந்து வா.. மிகவும் அழகான கவிதை.
அனைவருக்கும் ரமலான் நோன்பு வாழ்த்துக்கள்...///

ரொம்ப நன்றி Mrs.Faizakader உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்....

அனைவருக்கும் ரமலான் முபாரக்.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

க. பாலாஜி கூறியது...

//பகல் முழுதும் நோன்பு நோற்று
இரவு முழுதும் நின்று வணங்கி,
இறைவனிடம் கெஞ்ச வேண்டும்
விஞ்சி நின்ற எம் பாவங்களை
போக்க வேண்டி!.....
வா.... ரமழானே வா!.....//

//அழகான கவிதை நண்பரே. ரமலான் வாழ்த்துக்கள்.///

ரொம்ப நன்றி க. பாலாஜி உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்....

அனைவருக்கும் ரமலான் முபாரக்.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

Mrs.Menagasathia கூறியது...

ரமலான் கவிதை மிக அழகாக,நன்றாக இருக்கு.

///ரமலான் நோன்பு வாழ்த்துக்கள்!!///

ரொம்ப நன்றி உங்கள் Mrs.Menagasathia வருகைக்கும், வாழ்த்துக்கும்....

அனைவருக்கும் ரமலான் முபாரக்.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

கலை - இராகலை கூறியது...

//முப்பது நோன்பு
முகம் மலர்ந்து நோற்று
முறுவல் பூத்து
"முஸாபஹா" செய்யும்
ஈகைத் திருநாளைக் கொண்டு வரும்
ரமழானே நீ வா!..///

/// அருமை///

ரொம்ப நன்றி நண்பா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

SUMAZLA/சுமஜ்லா கூறியது...

/// ரமலான் முபாரக்!

என் ப்ளாகிலும் ஒரு கவிதை இனிய ரமலானை வரவேற்று!///

ஓடோடி வந்து கொண்டே இருக்கேன்.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

குறை ஒன்றும் இல்லை !!! கூறியது...

உங்கள ஜக்கம்மா தேடுராங்க... அதனால கீழே உள்ள முகவரிக்கு வாங்க உடனே..

http://yellorumyellamum.blogspot.com/2009/08/blog-post_21.html//

வந்துட்டேன், வந்துட்டேன்.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

யாழினி கூறியது...

/// ரம்ழான் மாதம் சிறக்க என் வாழ்த்துக்கள் அபூ!///

ரொம்ப நன்றி யாழினி உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்......

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

ஹேமா கூறியது...

//// அபூ நல்ல கவிதையோடு உங்கள் விரதத்தைக் தொடங்கியிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்./////

ரொம்ப நன்றி ஹேமா உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்......

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

இர்ஷாத் கூறியது...

///// ரமழானின் முழுப்பயனையும் பெற வாழ்த்துக்கள்../////

வாங்க இர்ஷாத்.... எங்க ரொம்ப நாளா போயிருந்தீங்க?

உங்களுக்கும், ஏனைய இஸ்லாமிய உள்ளங்களுக்கும் இனிய ரமலான் முபாரக்....

உயர்ந்த அல்லாஹ் நம் அனைவரையும் பொருந்திக் கொள்ளட்டும்.....

சத்ரியன் சொன்னது…

//தவறுக்கும், மறதிக்கும்
மத்தியில் படைக்கப் பட்ட
மனித இனம் மன்றாட வேண்டும்
மகத்தான இறைவனிடம் !......
வா...... ரமழானே வா.....//

அபூ,

எல்லாம் அவனுடையது.

கவிதையில் அவனது கவனக் குறைவையும் (தவறுக்கும், மறதிக்கும்
மத்தியில் படைக்கப் பட்ட மனித இனம்) சுட்டிக்காட்டி இருக்கின்றீர்கள்.
செறிவானச் சிந்தனை.

எல்லாம் வல்ல இறைவன் நல்லதை மட்டும் அருளட்டும் உங்களுக்கும், உலகுக்கும்...!

seemangani சொன்னது…

//பதினொரு மாதங்கள்
பருத்தியாய் பறந்தனர்
பகுத்தறிவு இருந்தும், இல்லாதவர்களாய்...//

நல்லக்கு அபூ ...
ரமலான் முபாரக்

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

சத்ரியன் கூறியது...

//தவறுக்கும், மறதிக்கும்
மத்தியில் படைக்கப் பட்ட
மனித இனம் மன்றாட வேண்டும்
மகத்தான இறைவனிடம் !......
வா...... ரமழானே வா.....//

அபூ,

எல்லாம் அவனுடையது.

///கவிதையில் அவனது கவனக் குறைவையும் (தவறுக்கும், மறதிக்கும்
மத்தியில் படைக்கப் பட்ட மனித இனம்) சுட்டிக்காட்டி இருக்கின்றீர்கள்.
செறிவானச் சிந்தனை.////

மன்னிக்க வேண்டும், நான் அறிந்த வரை அது இறைவனுடைய கவனக் குறைவு அல்ல. அவனது படைப்பை அவன் எப்படி வேண்டுமானாலும் படைக்கலாம். இறைவனே தான் சொல்கிறான் "மனிதர்கள் தவறுக்கும், மறதிக்கும் மத்தியில் படைக்கப் பட்டவன் என்று..". நீங்கள் தவறோ, மறதியோ விட்டால் இறைவனிடம் பாவ மன்னிப்பு தேடிக் கொள்ளுங்கள். "ஆதமுடைய மக்கள் செய்யும் அனைத்துப் பாவங்களையும் அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான், எனினும் ஷிர்க் எனும் இணைவைத்தலைத் தவிர...."

/// எல்லாம் வல்ல இறைவன் நல்லதை மட்டும் அருளட்டும் உங்களுக்கும், உலகுக்கும்...!///

ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்......

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

seemangani கூறியது...

//பதினொரு மாதங்கள்
பருத்தியாய் பறந்தனர்
பகுத்தறிவு இருந்தும், இல்லாதவர்களாய்...//

/// நல்லக்கு அபூ ...
ரமலான் முபாரக்////

ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்......

உங்களுக்கும், ஏனைய அனைத்து இஸ்லாமிய உள்ளங்களுக்கும் இனிய ரமலான் முபாரக்......

abulbazar சொன்னது…

அஸ்ஸலாமு அழைக்கும்,
சப்ராஸ் அபூ அவர்களே தங்களின் வா ரமலானே வா கவிதை மிக அழகாக
இருந்தது. உங்களின் பணி தொடர என் வாழ்த்துக்கள்.

அன்புடன்
அபுல் பசர்