வெள்ளி, 29 மே, 2009

ரொம்ப நன்றி!!!!!!

நேற்றைய தினம் ( மே 28) என்னோட பதிவுக்குள் வருபவர்களுக்காக ஒரு கேக் வைத்திருந்தேன். பதிவுக்குள் வந்து சாப்பிட்டு சென்றவர்களுக்கும், விடயம் அறியாமல் சாப்பிட மாட்டோம் என்று அடம் பிடித்தவர்களுக்கும் என்னோட இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சரி, மேட்டருக்கு வருவோமா?

ஏன் கேக் வைத்திருந்தீங்கன்னு சொல்லி நிறைய பேர் கேட்டாங்க. இது தான் விஷயம். நேற்றைய தினம் என்னோட பிறந்த நாள். (எத்தனயாவதா? ஏன்?............ ஏதாவது மேலதிக ஏற்பாடுகள் பண்ணப் போறிங்களோ? வேணாம்................ அது எல்லாம் கைவசம் இருக்குதுன்னு சொல்லி பின்னாடி இருந்து யாரோ சொல்வது போன்ற ஒரு எண்ணம்... சத்தம்...திரும்பி பார்தேனா!!! காதல் தோட்டத்தில் கனவு தேவதை. )

பிறந்த நாளுக்காக வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்ட நண்பர்கள், புதிதாக அறிமுகமாகிய வலையுலக நண்பர்கள், குடும்பத்தினர், என்னோட நேயர்கள் அனைவருக்கும் இன்றைய பதிவில் நன்றி சொல்கிறேன். (அட நன்றி சொல்வதற்கு தானே இன்றைய பதிவே............) SMS, E-mail , calls னு சொல்லி நிறைய வாழ்த்துக்கள். ரொம்ப சந்தோஷமாக இருந்தது. சென்ற வருடம் இதே நாள் தான் (மே 28 ) எனக்கு vasantham FM ல் முதலாவது நேர் முகத் தேர்வு இடம் பெற்றது. நேரடி ஒலிபரப்பில் தான் எனக்கு தேர்வு. அப்பொழுது நான் முதலாவது சொல்லிய வார்த்தை நேரம் 5 மணி 31 நிமிடம். கடந்த வருட பிறந்த நாள் பரிசாய் இறைவன் எனக்கு அளித்த அந்த பரிசை நினைத்து இன்று சில கனம் சந்தோசம் கொண்டேன். வந்த வாழ்த்துக்களை திரும்ப திரும்ப வாசித்தேன். (வேற வேல இல்லையா? ஹே..... அப்படியெல்லாம் கேட்கக் கூடாது......நான் என்ன வேல வெட்டி இல்லாதவனா? ஹி......ஹி............)

என்னோட நேயர்கள் நிறைய பேர் SMS மூலம் வாழ்த்துக்களை அனுப்பி இருந்தார்கள். அதில் இருந்த சந்தோசம் என்ன தெரியுமா? நான் நேயர்களோட மனசில இடம் பிடித்தேனோ? இல்லையோ? என்னோட நிகழ்ச்சி அவர்களுக்கு பெரிய திருப்பு முனையைக் கொடுத்திருந்தது. ஏன் தெரியுமா? "Fun Box நாயகனுக்கு இனிய பிறந்த்த நாள் வாழ்த்துக்கள் ", "சந்தோஷ Safras கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். " இது தான் அதிகமாக வந்திருந்த SMS. நான் கூடுதலாக பண்ணிய நிகழ்ச்சி "Fun Box ", "சந்தோஷச் சாரல் ". இரண்டு நிகழ்ச்சிகளையும் நேயர்களின் ரசனைக்கு அமைவாக கொடுத்திருக்கிறேன் என்கிற சந்தோசம் என்னில் அதிகமாகவே இன்று இருந்தது.

இனி இன்னக்கி கொஞ்சம் வித்தியாசமா என்னோட பக்கம் இருக்குதேன்னு சொல்லி நீங்க வித்தியாசமா பார்க்கிறது எனக்கு விளங்குது. என்னோட பிறந்த நாள் பரிசாய் எனக்கு கிடைத்த Design தான் அது. என்னோட Accomadation இருக்கும் றிஸ்மி, அரபாத் இருவருமே நேற்று விழித்திருந்து எனக்கு Surprise கொடுக்கிறதுக்கு அவங்க கொடுத்த நினைவுப் பரிசு தான் அது. (அப்போ .... நான் என்ன Treat கொடுத்தேனா? இப்போ சொல்ல மாட்டேனே.....!!!! ) ரொம்ப நன்றி நண்பர்களே......

மீண்டும் மீண்டும் சொல்றதுன்னா வாழ்த்துக்களைப் பரிமாறிய அத்தனை உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றிகள்....(நாங்க இனி தானே வாழ்த்து சொல்லப் போறோம். எங்களுக்கு?????....... உங்களுக்கு தானே முன்னைய பதிவில் கேக் வெச்சிருக்கேன். கேக்க சாப்பிட்டோமா......தண்ணியக் குடித்தொமானு சொல்லி அச்சா புள்ள........ஒரு சின்ன கடி தான்... வேற ஒன்னும் இல்லவே இல்லீங்கோ....) அனைவருக்குமே இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றிகள்....

மற்றுமொரு பதிவில் சந்திப்போம்......
அதுவரையில் நல்லதையே சிந்திப்போம்.....

வரட்டா.............

உங்கள் வார்த்தைக்குள் சிக்கும் இள ரத்தம்

அபூ.....வியாழன், 28 மே, 2009

இதற்கு அர்த்தம் இருக்கு

பதிவுக்குள் வந்தவர்களுக்கு முக்கியமான அறிவித்தல்.

பதிவுக்குள் வந்ததும் தான் வந்தீங்க, மேல வெச்சிருக்கிற கேக் உங்களுக்காக வேண்டித் தான். (ஏன்? எதற்கு? என்கிற கேள்வியெல்லாம் வேண்டாம்.. ) பெரிய துண்டா வெட்டி சாப்பிட்டுட்டு போங்க . அப்புறமா..................... I mean அடுத்த பதிவில் அலசி விட்றேன் என்ன சங்கதி என்று.

பி. குறிப்பு:

கேக் சாப்பிட்டா கட்டாயம் தண்ணி குடிங்க..................

வரட்டா..............

உங்கள் வார்த்தைக்குள் சிக்கும் இள ரத்தம்

அபூ.............


திங்கள், 25 மே, 2009

நான் காதல் கொண்ட அறிவிப்பாளர்கள்

பகுதி 3

சிவானுஜா சிவநாதன் (இப்போ.....?????????)

சூரியன் FM ன் ஆரம்ப கால அறிவிப்பாளரான இவரது குரல் ஒரு மழலைக் குரல். சூரியனின் "பட்டு வண்ணச் சிட்டுக்கள் " சிறுவர் நிகழ்ச்சியை இவர் தான் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தார். இப்போ வெளிநாட்டில் இருப்பதாகத் தகவல்.
எங்கிருந்தாலும் நலமாக வாழ வாழ்த்துக்கள் அக்கா.

ரிகாசா ஜமால் ( இப்போ..... ரிகாசா வசீமாம்.....)

இவரும் சூரியனின் ஆரம்ப கால அறிவிப்பாளர். இவர் சூரியனில் அறிமுகமாவதற்கு முதல் "சுவர்ண ஒலி " வானொலியிலும் அறிவிப்பாளராக கடமை புரிந்தவர். சூரியனில் இவருக்கான தனி நிகழ்ச்சியாக இடம் பிடித்திருந்தது "சூரியனின் மங்கையர் மாளிகை". இவர் வந்தாலே மங்கையர் மாளிகை கலை கட்டும். (ஏங்க? இப்படியெல்லாம் திட்டுறீங்க? மங்கையர் மாளிகை மங்கைகள் மாத்திரம் தான் கேட்க முடியும்னு யாரு சொன்னது? இருந்தாலும் நான் அப்போ ரொம்ப சின்ன பய்யனுக.....அதனால எல்லா நிகழ்ச்சிகளையும் கேட்கிற வழக்கமிருந்தது. இப்ப தான் தெளிவு வந்தது. மங்கையர் மாளிகை மங்கைகளுக்கு மாத்திரம் என்பது...... )
அக்கா.................... வாழ்த்துக்கள் உங்களுக்கு......

S. நவநீதன் (புன்னகை மன்னன்னு நிறையப் பேர் சொல்லுவாங்க....)

சூரியனின் அறிவிப்பாளராக இருந்த இவர் இப்போது பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றிருக்கிறார். இவரது உயர்வுக்கு உறுதுனையாய் இருந்த அத்தனை பேருக்கும் நவா சார்பில் என்னோட வாழ்த்துக்கள். (குறிப்பாக சூரியனின் நேயர்களுக்கு ) சூரியனில் இவர் இப்பொழுது தொகுக்கும் நிகழ்ச்சி "என்றென்றும் புன்னகை " படு intresting ஆன நிகழ்ச்சி. இவருடைய புனைப் பெயருக்கு ஏற்ற நிகழ்ச்சி இல்லையா? இனி என்ன? கலக்குறது தான் இவரோட வேலையே....... வாழ்த்துக்கள் நவா அண்ணா.... உங்களது பணியும் சேவையும் தொடர.....


ஹிஷாம் முஹம்மத் (பதிவுலகத்துல வலம் வர்ற ஒருவர் )

நான் ரசித்த சின்ன வயது அறிவிப்பாலர்னா அது ஹிஷாம் தான். (அப்போ.. மத்தவங்க எல்லாம்? .............. அவங்க எல்லாம் ஒரு காலத்துல சின்ன வயது அறிவிப்பாளரா இருந்தவங்க....... இத எல்லாம் போய் கேட்டுட்டு இருக்கீங்க? சரி..சரி....... மாட்டெருக்கு வாங்க.....). ஆரம்ப கால தென்றல் வானொலியின் அறிவிப்பாளரான இவர் தென்றலில் நிறைய நிகழ்ச்சிகள் படைத்திருந்தாலும் அறிவிப்பாளினி "நிரோஷா பாருக் " உடன் இணைந்து சிறுவர்களுக்கான சிறுவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கலந்து கொண்டு உரையாடும் சிறுவர்களினுடைய முயற்சிகளையும் விட இவர்கள் இருவரும் கலக்கும் விதமே போதுமாக இருந்தது அந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு. பின்னாளில் நேத்ரா டிவியில் "இனிமை இதோ " என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முற்று முழுதாக எம்மவரின் படைப்புக்கு களம் அமைக்கக் கூடியதாக அந்நிகழ்ச்சி இருந்தது. பின்னர் சூரியன் FM ல் ஒலிபரப்பாகிய "அரங்கம் " நிகழ்ச்சியில் இவர் குரல் கொடுத்திருந்தார். குறிப்பாக M. C. ரஸ்மிநுடய்ய நாடகங்களுக்கு சிறப்பாக குரல் கொடுத்திருந்தார். பின்னர் அப்படியே இவரது பிரவேசம் ITN தொலைக் காட்சி நோக்கி நகர்ந்தது. மாலை இடம் பெரும் பிரதான செய்தியில் இவர் ஒளிபரப்பாளராக (செய்தி வாசிப்பாளராக ) இன்னும் கடமையாற்றிக் கொண்டிருக்கிறார். மறு புறத்தில் வெற்றி FM ல் "ஹிஷாமுடன் கற்றது கையளவு " என்கிற நிகழ்ச்சியை சிறப்பாகத் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.

(இவர் தென்றல் வானொலியில் இல்லா விட்டாலும் இவரது குரலில் இடம் பெற்ற சில நிலையக் குரியிசைகள் இன்னும் அந்த வானொலியில் ஒலிபரப்பாகிக் கொண்டிருப்பது எம் போன்ற இவரது நேயர்களுக்கு மிக்க மகிழ்ச்சி. குறிப்பாக தென்றல் வானொலியின் பிரதான செய்தியில் "வெளி நாட்டுச் செய்திகள் " என்கிற Jingle இவரது குரலில் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.) வாழ்த்துக்கள் ஹிஷாம் வெற்றியோடு உங்கள் வெற்றிப் பயணமும் தொடர.........

(ஒரு சந்தோஷமான செய்தி என்னதுன்னா நான் முதன் முதலில் . . கூ. தாபன முஸ்லீம் நிகழ்ச்சியின் கவிதைக் களம் நிகழ்ச்சிக்கு குரல் கொடுக்க சென்றிருந்த போது ஹிஷாமும் அன்றைய அந்நிகழ்ச்சியில் குரல் கொடுத்தார். சின்ன வயதில் பிரபல்யம் வாய்ந்த அறிவிப்பாளராகியும் தலைக்கனம் இல்லாமல் அவர் நடந்து கொள்கிற விதம் தான் எனக்கு அவரில் ஈர்ப்பு வரக் காரணம். நிதானம், பொறுமை என்கிற 2 சொல்லையும் ஹிஷாமிடம் தான் கற்றுக் கொண்டது போல் ஒரு பெருமிதம் இன்னும் என்னில் இருக்கிறது )

இவர்கள் தான் நான் நேசித்த அறிவிப்பாளர்களும், நான் அறிவிப்பாளர் துறை பற்றிக் கற்றுக் கொண்ட ஆசான்களும்.

அறிவிப்பாளர்கள் பற்றிய பதிவை இன்றோடு முடித்துக் கொள்கிறேன். ஏனெனில் நிறைய விடயங்களைத் தேடலாம்னு புறப்பட்டாச்சு. "தேடல் என்பது உள்ள வரை வாழ்வில் ருசி இருக்கும் ". அதனால தேடப் போறேன். ஆனா....... தேடப் போற விசயத்தக் கொட்டப் போறது எங்க தெரியுமா? உங்க கிட்ட தான்....(ஹி........ஹி...............ஹி................)

மற்றுமொரு பதிவில் சந்திப்போம்.....
அதுவரையில் நல்லதய்யே சிந்திப்போம்!........

உங்கள் வார்த்தைக்குள் சிக்கும் இள ரத்தம்
அபூ.........

வரட்டா........

(கட்டாயம் கருத்த கொட்டிட்டு போங்க........... நான் சொன்னது கேட்டிச்சா?.... பார்க்கலாம்......பார்க்கலாம்....... எத்தன பேரு கருத்து சொல்லப் போறிங்கன்னு சொல்லி.......)


வியாழன், 21 மே, 2009

Sun டிவிக்கு ஒரு சபாஷ்!!!


வழமைக்கு மாறாக நேற்று கொஞ்சம் டிவிக்கு முன்னாள் உட்கார வேண்டி நேர்ந்தது. கொஞ்சம் வீட்டு சிந்தனை, நண்பர்கள் பற்றிய சிந்தனை, 28 ம் திகதி பிறந்த நாள் வேறு, ...... இப்படி பல சிந்தனைகள் என்னில் ஆட்டம் போட இரவு 9.30 க்கு வேறு வழியின்றி Sun டிவிய பார்க்கலாம்னு உட்கார்ந்தேன். என்னை அறியாமலே எனக்குள் சின்ன சந்தோசம். ஏன் தெரியுமா? அப்பொழுது தான் ஆரம்பமாகிறது "திரைத் தென்றல் " என்கிற ஒரு நிகழ்ச்சி. முதல் பாடலே "உள்ளம் கேட்குமே....." திரையிலிருந்து " மனமே..... " என்கிற பாடல். அடுத்தடுத்து ஒளிபரப்பாகியதே பாடல்.... அத ஏன் கேட்குறீங்க? படு சூபெருங்க.

********************************************************************
கவிதைகள் சொல்லவா?................. நீ இல்லை நிலவு இல்லை....... என்னைக் காணவில்லையே நேற்றோடு..... சொல்லத் தான் நினைக்கிறேன்........ காதலா.... காதலால் தவிக்கிறேன்........ சொல்லாயோ சோலைக்கிளி......... மெல்லினமே..... மெல்லினமே...... சந்தனத் தென்றலை........ மின்னலே......... நீ வந்து போனதேனடி..... கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை..... காதல் மழையே....... காதல் வந்தால் சொல்லியனுப்பு..... (நிகழ்ச்சித் தயாரிப்பாளருக்கு ஒரு ..... போடு......)

*********************************************

இப்படியே தொடர்ந்த பாடல் தெரிவுகள் இரவு 11.57 ஐத் தாண்டும் போது "முதலாம் சந்திப்பில் நான் அறிமுகமானேனே......." என்ற பாடல் வரிகளைக் கொண்டு ஆரம்பிக்கத் தொடங்கிற்று. ஆஹா................கிளம்பிட்டான்யா!!!!!......

நம்மளோட flash back . .........

மறக்காலாம்னு நினைத்திருந்த நினைவுகள் மனதில கதிரை போட்டு அமர்ந்து கொண்டது. (என்னங்க இந்த காதல்.... கத்தரிக்கா..... புடலங்கா.....இதுவெல்லாம் எனக்கு தெரியாதுன்னு சொல்ற காலம் மலையேறி போயிடுச்சாம். இனி என்ன..........) ரொம்ப சின்ன புள்ள தனமாவே இருந்தது பழைய நினைவுகள். நான், அவள், அது, இதுன்னு சொல்லி நிறைய நினைவுகள்........அது எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். அது நமக்குள் மாத்திரம். (அதுக்காக யாரு அது? அவள்? இது? என்றெல்லாம் கேட்கக் கூடாது. ஐயோ ரொம்ப வெட்கமா இருக்கு!.... OK)

இனித் தாங்க ஒரு பெரிய matter நடந்தது. எங்களோட Accommodation ல இருக்கிற நான்கு பேரும் சேர்ந்து தான் டிவி பார்த்தோம். அப்போ கொஞ்சம் ஜாலியா இருக்கிற நேரம் இல்லையா? அதனால ஒரு சின்ன விருந்து. அது என்னதுன்னா வாழ்க்கையில சமையலே தெரியாத நான் தெரிந்த மாதிரி ஆப்பிள் ஜூஸ் போட்டது தாங்க. 5 ஆப்பிள் பழத்துக்கு ஒரு கிலோ சீனி வீதம் போட்டு ஒரு ஆப்பிள் ஜூஸ். இத நான் பண்ணியது கொடும இல்லீங்க!.. இந்த ஜூஸ்ஸ சீனி வருத்தம் உள்ள ஒருத்தருக்கு சுவை பார்க்க கொடுத்தது தான் மிகப் பெரிய விஷயம். அவர் அதக் குடிக்க....... பின்ன தலையில கைய அடிக்க,..... நாம் விழுந்து விழுந்து சிரிக்க........ இப்படின்னு இருக்க எல்லாம் தனக்கு தெரியும்னு நினைத்து மற்றைய நண்பர் Egg Coffee (முட்டைக் கோப்பி...) போடலாம்னு எழுந்து போயிட்டு அவர் போட்டாரே Coffee..... (என்னோட ஆப்பிள் ஜூஸ் ரொம்ப பிரமாதம்.) இத மட்டும் தான் இப்போதைக்கு என்னால சொல்ல முடியும். அப்போ Coffee..... அது சுத்த வேஸ்ட்....... (இது என்னோட நண்பனுக்கு தெரியாதே...... ஹி.....ஹி.........ஹி.......)

என்னதான் இருந்தாலும் எல்லா விஷயத்துலயும் நம்ம பெண்களோட போட்டி போடலாம். ஆனா இந்த சமையல், சமையலறை பெண்களே................ மணிகளே...... உங்களோட ரொம்ப கஷ்டம்க இந்த விசயத்துல போட்டி போட்றது. வாழ்த்துக்கள் தாய்க்குலமே..... உங்கள் சேவை எம்போன்ற ஆண் மக்களுக்கு தொடர.......

எல்லாம் பேசி ஜாலியா இருந்துட்டு தூங்கப் போற நேரம் பார்த்து நண்பர்கள் தூக்கிப் போட்டாங்களே பெரிய பாறான்கல்ல தலையில........(என்ன கொடுமையா...? சொல்றேங்க ....... கேளுங்க.....) 28 ம் திகதி பிறந்த நாளன்னக்கி MC or KFC கூட்டி போய் party போடணுமாம்..நாடு இருக்கிற.....................(உஷ்..... அம்மாடி.... நான் எதுவுமே சொல்லல்லீங்க....) பார்ப்போம்.... இன்னும் 7 நாட்கள் இருக்குதில்லையா? ஆனா நான் பதில் எதுவுமே சொல்ல இல்ல. ஏன்னா "நான் எல்லாம் யோசிக்காம பேச மாட்டோம். பேசின பிறகு யோசிக்க மாட்டோம். " அது....... தெரிஞ்சிக்கோங்க...... (சு...சு.....சும்மா.........)

(அப்பா........ ஒரு மாதிரி ஒரு சின்ன மொக்கைப் பதிவு போட்டுட்டேனே...... ஹி.... ஹி....)

மற்றுமொரு பதிவில் சந்த்திப்போம். .... அதுவரையில் நல்லதையே சிந்திப்போம்......

(வந்தவங்க கொஞ்சம் கொட்டிட்டு போங்க ..... சமயல இல்லீங்க கருத்துக்கள.... ஆன்னா.... ஊன்னா எலாம் நினைவுக்கு வர்றது இந்த சமையல் தாங்க !... பரவைள்ள. உங்க கருத்த கொட்டிட்டு போங்க ....)

வரட்டா......

வித்தியாசத்துடன்
அபூ.......

சனி, 16 மே, 2009

நபி வழி!!!! ஒரு படிப்பினை.

"நிச்சயமாக நாம் உங்களை ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்து தான் படைத்திருக்கிறோம். நீங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும், அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் உங்களை கிளைகளாகவும் , கோத்திரங்களாகவும் ஆக்கினோம்." " நிச்சயமாக உங்களில் மிக கண்ணியவான் உங்களில் அதிகம் பயபக்தி உடையவரே. " (அல்குரான் )

ஏதோ எல்லோரும் எழுதுகிறார்களே....... நானும் எழுதலாமே........ என்றெல்லாம் போட்டி போட்டு என் பதிவை எழுதவில்லை. அப்படி எழுத வேண்டும் என்கிற தேவையும் எனக்கில்லை. ஏதோ ஒரு ஊடகவியலாளன் எனும் வகையில் தான் அறிந்ததையும், தேடித் படித்ததையும் (அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் மாத்திரம் ) மற்றவர்களுக்குத் தெரியப் படுத்துவது கடமை. பொதுவாக எத்தனை மதம் இருந்தாலும் அத்தனை மதங்களின் அடிப்படையையும் எல்லோரும் அறிந்திருக்க வேண்டும், (அது ஒரு கடவுளே இல்லை, மார்க்கமே இல்லை என்கிறவரும் கூட )

ஆனால் மறுமை என்பது உண்மை. இதை எல்லா மதமும் சொல்கிறது. (ஆனால் சில அறிவு மிக்க முட்டாள்கள் இதை ஏற்றுக் கொள்வதில்லை. இது தான் அவர்களினுடைய தலை விதி. எம்மால் எதுவும் பண்ண முடியாது. இறைவன் தான் அவர்களுக்கு ஹிதாயத் (நேர்வழி ) காட்ட வேண்டும் )

பொதுவாக இஸ்லாத்தினுடைய அடிப்படையை எல்லோரும் அறிந்திருக்கிறார்கள். ஒரே இறைவன் (ஏகத்துவம் ), என்கிற ஏகத்துவக் கொள்கை. இதனை அல்குரான், அல்-ஹதீஸ் மூலம் தெளிவு படுத்தியிருக்கிறான். அல்குரான் என்பது இறைவனுடைய வேத வாக்கு. இதனையே அல்குரானில் " சங்கை மிக்கதும், நேர் வழி காட்டக் கூடியதுமான அல்குரானை நாம் புனித ராமலானிலே இறக்கி வைத்தோம். " என சொல்லப் படுகிறது.

அதை செயல் ரூபமாகக் காட்ட இறைவன் மூலம் இறுதித் தூதராக அனுப்பப் பட்டவர் தான் நபிகள் நாயகம் (ஸல் ) அவர்கள். இதையே அல்குரானில் " நபியே! அகிலத்தாற்கு அருட்கொடையாகவே அன்றி நாம் உம்மை அனுப்பி வைக்கவில்லை " என இறைவன் சொல்கிறான். அல் ஹதீஸ் (சுன்னா ) என்பது நபியவர்கள் சொல்லியதும், நபியவர்கள் சொல்லியதாக சஹாபாக்கள் (நபித் தோழர்கள் ) சொல்லியதும். இதனையே அல்குரானில் "அவர் (நபி ) தன் மனோ இச்சைப் படி எதையும் பேச வில்லை. அவர் பேசியவை (சொல்லியவை ) அத்தனையும் அவருக்கு வஹியாக (இறைவனால் வானவர் மூலம் )" அருளப் பட்டவையே....."

எனவே! பொதுவாக இஸ்லாமியர்களுக்கு அல்குரானும், நபிவழியும் போதுமானது வாழ்கையை வெற்றி பாதையில் இட்டுச்செல்வதற்கு. மூதாதயறினுடைய பழக்கங்களைப் பார்த்து இப்படித் தான் இஸ்லாம் சொல்கிறது என்கிற மூட நம்பிக்கை கொண்டுள்ள மூடர்களுக்காக இந்தப் பதிவை தேடி பதிவிடுகிறேன். (எந்த மதமாக இருந்தாலும் நாம் அத்தனை பேரும் சகோதரர்கள். எனவே ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிப் பிடித்துக் கொள்வோமாக. )

நன்றி - Read Islam

அல்லாஹ்வின்மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. (அல்குர்ஆன் 33:21)

உங்களிடத்தில் இரண்டை விட்டுச் செல்கிறேன். அதை பின்பற்றும் காலமெல்லாம் நீங்கள் வழி தவறமாட்டீர்கள்! ஒன்று அல்லாஹ்வின் வேதம். மற்றொன்று எனது வழிமுறை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: ஹாகிம்

நபி(ஸல்) அவர்கள் ஒரு நேரான கோடு கிழித்து இதுவே இறைவனின் நேரான ஒரே வழியாகும் என்றார்கள். பின்பு அக்கோட்டின் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் பல கோடுகள் கிழித்துவிட்டு "இவை பல வழிகளாகும். இவ்வனைத்து வழிகளிலும் ஷைத்தான் (இருந்து கொண்டு மக்களைத்) தன்பால் அழைப்பான்" என்று கூறிவிட்டு "நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும்" ஆகவே இதனையே பின்பற்றுங்கள். இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம். அவை உங்களை அவனுடைய வழியை விட்டுப் பிரித்துவிடும். நீங்கள் நேர்வழியைப் பின்பற்றி பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்குப் போதிக்கிறான் என்று கூறி (6:153) என்ற வசனத்தையும் ஓதினார்கள்.


ஒருவன் நெருப்பு மூட்டுகிறான். அது சுற்றுப் புறங்களில் பிரகாசத்தை ஏற்படுத்துகிறது. ஈசல்களும் வண்டுகளும் அந்நெருப்பில் விழ முனைகின்றன. இவனோ அவற்றை (நெருப்பில் விழாமல்) தடுத்துக் கொண்டிருக்கின்றான். எனினும் அவை அவனையும் மீறி நெருப்பில் விழுகின்றன. இம்மனிதன் எனக்கு உவமையாவான். நான் உங்களின் மடியைப் பிடித்து உங்களை நரகிற்குச் செல்ல விடாமல் தடுக்கிறேன். எனினும் நீங்கள் (எனது கட்டளைகளை மீறி) அதன் பக்கம் விழப்பார்க்கிறீர்கள்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி

ஒரு நாள் நடுப்பகலில் நபி(ஸல்) அவர்களிடம் சென்றிருந்தேன். அப்போது இரு நபர்கள் ஓர் இறைவசனத்தின் கருத்து வேறுபாடு பற்றி மிகவும் சப்தமாகப் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கோபமுகத்தோடு வெளிப்பட்ட நபி(ஸல்) அவர்கள், "உங்களுக்கு முன்னர் வாழ்ந்த சமுதாயத்தினர் இறைவேதத்தில் கருத்து வேறுபாடு கொண்டதனால் தான் அழிக்கப்பட்டார்கள்" என்றார்கள். அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) நூல்: முஸ்லிம்

நபி(ஸல்) அவர்கள் ஒரு செயலைச் செய்து விட்டு அதைச் செய்யாமல் விட்டு விடவும் செய்யலாம் என அனுமதியும் அளித்தார்கள். ஒரு கூட்டத்தினர் அச்செயலை முழுமையாகவே விட்டு விட்டனர் என்ற செய்தி நபி(ஸல்) அவர்களுக்குக் கிடைத்ததும் பிரசங்கம் செய்யலானார்கள். அதில் இறைவனைப் புகழ்ந்து விட்டு "இந்தக் கூட்டத்தினருக்கு என்ன நிகழ்ந்து விட்டது! நான் செய்த செயலை விட்டும் முழுமையாகவே நீங்கி விட்டார்களே? அல்லாஹ்வின் மீது சத்தியமாக நிச்சயமாக அவர்களைவிட நானே இறைவனைப் பற்றி அதிகம் அறிந்தவனும் அவனுக்கு மிகவும் பயப்படுபவனுமாவேன்" என்று கூறினார்கள். ஆயிஷா(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்

அல்லாஹ் என்னை நேர்வழி மற்றும் ஞானத்துடன் அனுப்பியதற்கு உவமையாவது நிலத்தில் விழுந்த பெரும் மழை போன்றதாகும். அவற்றில் சில நிலங்கள் நீரை ஏற்றுக் கொண்டு ஏராளமான புற்களையும் செடி, கொடிகளையும் முளைக்கச் செய்தன. வேறு சில தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் தரிசு நிலங்களாகும். அதனை இறைவன் மக்களுக்குப் பயன்படச் செய்தான். அதனை மக்கள் அருந்தினர். (தமது கால் நடைகளுக்கும்) புகட்டினர். விவசாயம் செய்தனர்.

அந்த பெருமழை இன்னொரு வகை நிலத்தில் விழுந்தது. அது(ஒன்றுக்கும் உதவாத) வெறும் கட்டாந்தரை. அது தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளவும் இல்லை. புற்பூண்டுகள் முளைக்கவிடவுமில்லை. இதுதான் அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளக்கம் பெற்று, நான் கொண்டு வந்த தூதினால் பயனடைந்து, கற்றுத் தெரிந்து பிறருக்கும் கற்றுக் கொடுத்தவருக்கும், நான் கொண்டு வந்த தூதரை ஏறிட்டுப் பார்க்காமலும், நான் கொண்டு வந்த அல்லாஹ்வின் நேர் வழியை ஏற்றுக் கொள்ளாமலும் வாழ்கிறவருக்கும் உவமையாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூமூஸா(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்

நிச்சயமாக பேச்சுகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். நோவழியில் சிறந்தது முஹம்மது(ஸல்) அவர்களின் நேர்வழியாகும். நிச்சயமாக மார்க்க விஷயங்களில் தீமையானது அவற்றில் புதிது புதிதாக உண்டாக்கப்பட்ட நவீன அனுஷ்டானங்களாகும். ஒவ்வொரு நவீன அனுஷ்டானங்களும் "வழிகேடாகும்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஜாபிர்(ரலி) நூல்: முஸ்லிம், நஸயீ


நன்றி - Read Islam

மற்றுமொரு பதிவில் சந்திப்போம்!!!, அது வரையில் நல்லதய்யே சிந்திப்போம்!!!!.........

உங்கள் சகோதரன்

அபூ........


வரட்டா!.......

வியாழன், 14 மே, 2009

மார்க்கம் வழங்கப்பட்டது ஏன்?

ஏதோ எழுத வேண்டும் என்பதற்காக எழுத வில்லை. லோஷன் அண்ணா எழுதிய "மதமும் மண்ணாங் கட்டியும் " ஏதோ மதக் கலவரத்தை தூண்டிவிட்டது போல்பல பதிவாளர்களும் மதத்தை பற்றி தெரியாத பின்னூட்டங்களை எல்லாம்இட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதில் பெரிய கொடுமை "வாப்பா தாத்தா " பற்றி ஒரு பதிவாளர் பதிந்திருந்த பதிவு தான்.

நீங்கள் அறிந்த அளவு கூட அவர் ( வாப்பா தாத்தா )அறிந்திராதது தான் மிகப்பெரிய வேதனை. இவர்கள் தான் மதம் என்ற பெயரில் மதத்தேயே கேவலப்படுத்துபவர்கள். இஸ்லாம்
சூரியனை வணங்கு என்றெல்லாம்சொல்லவில்லை. ஒரே இறைவன் , ஒரே மார்க்கம் என்று தான் சொல்கிறது. வாப்பா தாத்தாவை எல்லாம் மொன்னோடியாக சொல்லவில்லை. அல்குரான், ஹதீஸ் (நபி வாக்கு ) இவைகள் தான் முஸ்லிம்களுக்கு வழிகாட்டி, நேர்வழி.........

தயவு செய்து பதிவு எழுதுபவர்களும், பின்னூட்டல் இடுபவர்களும் மதம்சம்பத்தந்தமான விடயங்களில் மதம் பற்றி நன்றாகத் தெரிந்திருந்தால் மட்டுமேஅது பற்றி எழுதுங்கள். (அது எம்மதமாக இருந்தாலும் செறியே.....)

பின்னூட்டங்களைப் பார்த்து மதத்தைப் பற்றி நீங்கள் அறியாததால்உங்களுக்காக தேடி இந்தப் பதிவை இடுகிறேன்.

(நன்றி - Read Islam)

படைக்கப்பட்ட கணம் முதல் ஒவ்வொரு மனிதனும் இறைவன் ஒருவன் இருக்கிறான் எனும் உண்மையை, அவனது மனச்சான்று மற்றும் அறிவுமூலம் உணரும் ஆற்றல் அருளப்பட்டுள்ளான். இந்தப் பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொன்றும், மிகச் சிறிய நுட்பமான கூறு வரை இறைவனின் படைப்பே என்பது தெளிவு. இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதற்கு நம்மைச் சுற்றிக் காணப்பெறும் ஒவ்வொன்றும் உறுதியான சான்று ஆகும். வான வீதியில் பறக்கும் பறவை, ஆழ்கடலில் நீந்தும் மீன்கள், பாலைவனங்களில் திரியும் ஒட்டகைகள், தென்துருவத்தில் வசிக்கும் பறக்கவியலாத ஆனால் நீந்தக்கூடிய கடற்பறவைகள், பென்குயின்கள், மனித உடலில் உள்ள கண்ணுக்குப் புலப்படாத நுண்கிருமிகள், பழங்கள், செடிகள், மேகங்கள், கோளங்கள், முழுமையாக நிறைவான நிலையில் சஞ்சரிக்கும் விண்மீன்கள், பால்மண்டலங்கள், ஆகிய யாவற்றையும் மிக நுண்ணிய அமைப்புகளோடும் மிகச் சிறந்த இயல்புகளோடும் இறைவன் படைத்தான்.

இதுபோலவே இந்தப் புவியில் உயிரினங்கள் வாழ்வதற்கு உறுதுணையாக அமைந்த எல்லா அமைப்புகளும் மிக நுணுக்கமான சமநிலை பேணும் வகையில் படைக்கப்பட்டுள்ளன. இந்த சமநிலையில் மில்லிமீட்டர் அளவு மாற்றம் அல்லது பிறழ்வு ஏற்பட்டாலும் புவியில் வாழ்வது சாத்தியமில்லாமல் ஆகிவிடும். அந்தச் சமநிலை பற்றிச் சிறிது உற்று நோக்கினால் மிகச் சிறந்த முறையில் அவை கணிக்கப் பெற்றிருப்பதும் அவை மிக நுணுக்கமாக வடிவமைக்கப் பெற்றிருப்பதும் புலனாகும். எடுத்துக்காட்டாக பூமி சற்றே குறைந்த வேகத்தில் சூரியனைச் சுற்றி சுழன்றால் பகலுக்கும் இரவுக்கும் இடையில் மிக அதிகமான அளவில் வெட்பநிலை வேறுபாடு உண்டாகும்; வேகமாகச் சுழன்றால் சூறாவளியும் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டு புவி வாழ்க்கையே பாதிக்கப்பட்டு விடும்

இதுபோல, இந்தப் புவியை உயிர்வாழ்வதற்கு ஏற்ற ஒரு கோளாக அமைய உதவும் பல நுண்ணிய சமநிலை பேணும் படைப்பினங்கள் உள்ளன. இவையாவும் எதேச்சையாக எழுந்தவை என்று கூறவியலாது. இத்தகைய நேர்த்தியான திட்டங்களும் சமநிலைகளும் எல்லாம் குருட்டாம் போக்கில் உண்டானவை என்று எந்த அறிவுடைய மனிதனும் கூறமாட்டான். ஒரு காரோ, கேமராவே – படம் பிடிக்கும் கருவியோ - அதை வடிவமைத்த விழிப்புடைய ஒருவரை நினைவூட்டுகிறது. இதுபோலவே, ஒன்றை ஒன்று சார்ந்துள்ள பல இணைப்பு முறைகள் நிறைந்த இந்தப் பிரபஞ்சம், தானாகவே உருவான தன்னைத்தானே நிர்வகித்துக் கொள்ளக் கூடிய ஒரு பருப்பொருள் என யாரும் முடிவு கட்ட முடியாது. இறைவன், இவையாவும் அவனால் படைக்கப்பட்டவை எனும் உண்மையை நமக்கு குர்ஆனில் அடிக்கடி நினைவுறுத்திக் கொண்டி ருக்கிறான்.

மேகத்திலிருந்து உங்களுக்கு மழையை பொழியச் செய்பவன் அவன் (இறைவன்)தான். அதிலிருந்து தான் நீங்கள் நீர் அருந்து கிறீர்கள்; நீங்கள் உங்கள் கால் நடைகளை மேய்க்கும் புற்பூண்டுகளுக்கு நீரும் அதிலிருந்தே பெறுகிறீர்கள். அதிலிருந்தே உங்க ளுக்காக பயிர்பச்சைகளையும், ஆலிவ் பழங்களையும் காய்க்கச் செய்கின்றான். சிந்தித்து அறியக் கூடிய மக்களுக்கு இதில் நிச்சயமாக அத்தாட்சி உள்ளது. இரவையும் பகலையும் உங்களுக்குப் பயன்படும் வகையில் படைத்துள்ளான். சூரியனையும் சந்திரனையும் விண்மீன்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் இணங்கிச் செயல்படும்படி படைத்திருக்கிறான். சிந்திக்கக்கூடிய மக்களுக்கு இதில் நிச்சயமாக அத்தாட்சி இருக்கின்றது. மேலும் விதவிதமான வண்ணங்கள், அவன் உங்களுக்காக படைத்தவை யாவற்றையும் கவனிப் பவர்களுக்கு அத்தாட்சி இருக்கின்றது. (அந்நஹ்ல் 16:10-13)

இவையாவைற்றையும் படைத்தவன் படைக்கும் ஆற்றல் இல்லாதவனுக்கு ஒத்தவனாவானா? நீங்கள் இதைக் கவனிக்க வேண்டாமா? (அந்நஹ்ல் 16 :17)

மேலே கூறப்பட்டவற்றை ஆழ்ந்து சிந்தித்தால், மார்க்க(மத) அறிவு அறவே இல்லாதவரையும் கூட இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை உணரச் செய்து அவனுடைய வல்லமையையும் ஆற்றலையும் பாராட்டத்தூண்டும்; தன்னுடைய உடலைப் பற்றி சிந்தித்தால் ஒன்றோடு ஒன்று இணைந்து இயங்கும் மிகச் சிறந்த படைப்பை உணரத் தூண்டும்.

அகில உலகங்களையும் காத்தருளும் இறைவனே இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் இயற்கையையும், மனிதனையும் படைத்தவன் ஆவான். உயிரினங்கள், மனிதன் உட்பட யாவற்றுடையவும் தேவைகளை நன்கறிந்தவனும் அவனே ஆவான். அதனால் தான் மனிதனுக்கு மிகவும் பொருத்தமான வாழ்க்கை முறையாக இறைவன் வழங்கிய மார்க்கம் விளங்குகிறது. இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றிப் பிடித்தாலே மக்கள் அமைதியாக மகிழ்ச்சியுடன் வாழ முடியும்.

இறைவன் வழங்கி அருளிய நெறி நூலைப் பற்றி அறியாத மனிதன் கூடத் தன்னைச் சூழ்ந்துள்ளவற்றை, உற்று நோக்கிச் சிந்தித்தால், இறைவனை உணர்ந்து கொள்ள முடியும். புரிந்துகொள்ள கூடிய மக்களுக்கு உலகில் ஏராளமான சான்றுகள் உள்ளன. ( 3:191,192)

வானங்கள் மற்றும் பூமியின் படைப்பிலும் இரவு பகலின் மாற்றத்திலும் அறிவுடையோருக்கு நிச்சயமாக அத்தாட்சிகள் இருக்கின்றன. இத்தகையோர் நின்ற நிலையிலும் அமர்ந்திருக்கும் போதும், படுத்திருக்கும்போதும் அல்லாஹ்வை நினைந்து வானங்கள் மற்றும் பூமியின் படைப்பைப் பற்றிச் சிந்தித்தவர்களாக, “எங்கள் இறைவா! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை. நீ மிகத் தூயவன்; நரக நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக” என்று பிரார்த்திப்பார்கள். (3:191,192)

இந்தச் சந்தர்ப்பத்தில் மார்க்கத்தின் தேவை வெளிப்படுகிறது. இதற்குக் காரணம், படைத்தவன் ஒருவன் இருக்கிறான் என்பதை உணர்ந்த மனிதன் நிச்சயமாக அவனை நெருங்கவே விரும்புவான். அவனைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள விழைவான். அவனுடைய நேசத்தையும் கருணையையும் பெறுவதற்குரிய வழிகளைக் காண நாடுவான்; இதற்குரிய ஒரே வழி குர்ஆன் வலியுறுத்தும் பண்பாடுகளை நன்றாக அறிந்து கொள்வதுதான். குர்ஆன் அல்லாஹ்வின் வாக்கு, மாற்றம் ஏதும் இல்லாதது; இஸ்லாமின் வழிகாட்டும் நூல்; இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம்.

(நன்றி - Read Islam)

(இந்தப் பதிவு யாரையும் புன்படுத்துவதர்க்காக அல்ல. வாப்பா தாத்தாவைப் பார்த்து இஸ்லாம் மார்க்கத்தைப் படிக்கும் சில நல்ல நண்பர்களுக்கு.........)

செவ்வாய், 12 மே, 2009

நான் காதல் கொண்ட அறிவிப்பாளர்கள்

பகுதி 2


நேற்றைய பதிவில் என்னைக் கவர்ந்த, நான் நேசிக்கின்ற அறிவிப்பாளர்களைப் பற்றி பதிந்திருந்தேன். அங்கே விட்ட இடத்திலிருந்து இங்கே தொட்டுச் செல்கிறேன்.

R. P. அபர்ணா சுதன்.

நான் இவர் குரலை முதலில் கேட்டதும் ரசித்ததும் முதல்வன் சூரியனில் தான். நல்ல குரல் வலம் மிக்க ஒரு அறிவிப்பாளன். இவர் கடந்து வந்த பாதைகளை அடியேன் அறியேன். ஆனால் இவர் நடந்த பாதைகளில் அடியேனும் நடந்ததுண்டு. மேடை நிகழ்ச்சிகளுக்கு பொருத்தமான குரல் வளம். இவர் மேடை ஏறி ஒலிவாங்கியை கையில் பிடிக்கும் போது கிடைக்கும் கரகோசமே இவர் சேர்த்துக்கொண்ட சொந்தங்களுக்கு உதாரணம். ஒரு 31st night ல் கொழும்பு Town Hall ல் இடம் பெற்ற மேடை நிகழ்வொன்றில் நம் தென்னிந்திய பாடகர்களான அனுராதா ஸ்ரீராம், திப்பு இவரைப் புகழ்ந்து பேசிய போதெல்லாம் இவரை விட நான் அதிகமாக சந்தோசப் பட்டேன். மேடையில் "எங்கே உங்களுடைய கரகோஷம்" அந்த சொல்லுக்கு இவர் தான் உரித்துடையவர் போல என்னுடைய கற்பனை. ( என்னோட கற்பனை மட்டும் தான் ) சூரியன் FM, சக்தி FM னு சொல்லி இவர் பணி புரிந்தாலும் இவர் நிகழ்ச்சிகளை கேட்க நான் தவறியதில்லை. சக்தியில் " வணக்கம் தாயகம் " பண்ணிட்டு இருந்தார். ஆனால் இப்போது வெளிநாட்டில் இருப்பாதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறது. அண்ணா எங்கிருந்தாலும் உங்கள் அறிவிப்பாளர் பணி தொடர வாழ்த்துக்கள்.

கஜமுகன்

தென்றல் வானொலியின் ஆரம்ப கால அறிவிப்பாளர். இப்போது சக்தி FM ல் பணி புரிகிறார். உண்மையில் நான் விரும்பும் எல்லா அறிவிப்பாளர்களிலும் எதோ ஒரு ஈர்ப்பு இருக்கிறது. கஜாவைப் பொறுத்த வரையில் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தக் கூடிய குரல் வளம் இவரிடம் இருக்கிறது. SMS Show, இசை இளவரசர்கள், Good Morning Sri Lanka, னு சொல்லி ரொம்பவே பொருத்தமான குரல். வாழ்த்துக்கள் கஜா அண்ணா.....

R. தர்ஷன்

தாளம் FM பணிப்பாளரான இவரது குரலிலும் ஏராளம் ஈர்ப்பு. "கேளுங்கள் தாளம் , குதூகலம் ஏராளம் " சொல்லும் போதே ஒரு மழலைக் குரல் கேட்பது போன்ற உணர்வு. "இதய தாளம் " நிகழ்ச்சி மூலம் நேயர்கள் சேர்த்துக் கொண்டதில் இவருக்கு நிகர் இவர் தான். நேத்ரா டிவியில் M 9.30 நிகழ்ச்சி பண்ணுவார். நிகழ்ச்சிக்காய் இவர் கொண்டு வரும் கடிக் கேள்விகள் ரொம்பப் பிரமாதம். அருமையான படைப்புக்களுக்கு நிச்சயம் இலங்கை மண்ணில் களம் இருக்கிறது. வாழ்த்துக்கள் தர்ஷன் அண்ணா.


(யப்பாடி!........எப்படியோ இன்னக்கி ஒரு பதிவு போட்டாச்சு... ஹி......ஹி.......ஹி....)

அடுத்த அறிவிப்பாளர்கள் பற்றி அடுத்த பதிவில் எதிர் பாருங்கோவன்........

ஆபீஸ்ல உட்கார்ந்துகிட்டு வேல பண்றதுன்னா ரொம்ப boring. அதான் வேலைப் பலுக்கலுக்கு மத்தியிலும் அடிக்கடி பதிவுக்குள் வந்து போகிறேன். எப்படியோ முடிந்ததைப் பண்றோம். முடியாதத தேடுறோம்....உங்க கருத்துக்களில் தான் நான் தொடர்ந்து எழுதுவேனா ? இல்லையா ? என்பது இருக்கு.

(வந்ததும் தான் வந்தீங்க....... கருத்த கொட்டிட்டு போங்க......)

உங்கள் வார்த்தைக்குள் சிக்கும் இள ரத்தம்
அபூ..........


வரட்டா...............