திங்கள், 8 மார்ச், 2010

ஜீவராகம்!......

அது ஒரு காலம். வசந்தம் வானொலியில் என் குரலும் ஒலியலையில் சங்கமித்த நேரம் சந்தோஷத்தில் மூழ்கிய பொழுதுகள் அவை. ஈர இரவுகளில் இதயங்களோடு கதை பேச ஜீவராகம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க என்னுடைய சக அறிவிப்பாளர்கள் என்னை வேண்டிக் கொண்ட பொழுதுகள். ஜீவராகம் தயாரிப்பாளர் Suhail Ismail , நண்பன் Affa ..... , நண்பன் Askar , ATM Fasly முகாமையாளர் ஜீவா. இயன்ற அளவு முயன்று வாரத்தில் ஒரு நிகழ்ச்சியை இதமாய் இதயங்களுக்குக் கொடுத்த பொழுதுகளின் நினைவாய்த் தான் இன்றைய இந்தக் கவிதை. (நன்றி Suhail , Affa , Asker , ATM Fasly & Jeewa Sir - இவங்க எல்லாம் வசந்தம் வானொலியின் அறிவிப்பாளர்கள் )



இனி தொடர்கிறேன் அந்த இனிய நினைவுகளை....

இருள் சூழ்ந்த
இராப் பொழுதில்
இதயங்களோடு கதை பேசினேன்!..
இசையும் கூடவே கை கோர்த்தது!.......




இதயத்தில் பூத்த
இன்பமான சில வரிகள்
இவன் கவியாய் உருப் பெற்று
இதயங்கள் பல தொட்டது!......

இல்லாதது பல சொல்லி கவி சொல்ல
இஷ்டமில்லை எனக்கு!.....




தூரத்து நிலாக்காட்டி
தூங்க வைக்கிறாள் அன்னை!....
தூறலாய் சிந்தும் சில வரிகளில்
தூது சொல்வதாய் மாற்றினேன் என்னை!......

வசீகரா பாடலின் இடையிசை
வஞ்சமில்லாது பின்னணி இசை கொடுக்க
வந்திட்ட வார்த்தைகளோடு
வலம் வந்தேன் 97 .6 (FM) ல்.......





ஜீவராகம்
ஜீரணிக்கப் பட்டது
ஜீவன்கள் பலரால்!......

கிழமைக்கு ஒரு நிகழ்ச்சி!....
கிடைத்தது பலகோடி மகிழ்ச்சி!.....

இருளுக்கு ஒளி வட்டமாய் ஒரு பால் நிலா!....
இதயங்களுக்கு இன்பகரமாய் இவன் உலா!.....

தேன் நிலவும்,
தேடிய இசையும்,
தேவதையாய் துணை நிற்க.......
தேன் சிந்திய சிதறல்களால்
தேகம் நனைத்தேன்!.....




இருட்டி விட்ட இராப்பொழுது!......
இளமை கொஞ்சும் வெண்ணிலா!....
இருளகன்ற வசந்தம் கலையகம்!.....
இத்தனைக்குள் இளையவன் இவனும் ஒருவனாய்!.....

விண்மீன்கள் கண்சிமிட்டும் நேரம்....
நிறைநிலா நெழிந்து கொண்டு
கொட்டாவி விடுகையில்....
இனிதான அந்த ஜீவராகத்தில்
இவனோடு இதயங்கள் பலகோடி!......





இசை கொண்டு,
இதயம் சென்று
இன்பம் கொடுத்ததில்
இரட்டிப்பு மகிழ்ச்சி
இன்றும் எனக்கு!.........

நன்றி ஜீவராகம்.........


உங்கள் நண்பன்

அபூ.......