திங்கள், 8 மார்ச், 2010

ஜீவராகம்!......

அது ஒரு காலம். வசந்தம் வானொலியில் என் குரலும் ஒலியலையில் சங்கமித்த நேரம் சந்தோஷத்தில் மூழ்கிய பொழுதுகள் அவை. ஈர இரவுகளில் இதயங்களோடு கதை பேச ஜீவராகம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க என்னுடைய சக அறிவிப்பாளர்கள் என்னை வேண்டிக் கொண்ட பொழுதுகள். ஜீவராகம் தயாரிப்பாளர் Suhail Ismail , நண்பன் Affa ..... , நண்பன் Askar , ATM Fasly முகாமையாளர் ஜீவா. இயன்ற அளவு முயன்று வாரத்தில் ஒரு நிகழ்ச்சியை இதமாய் இதயங்களுக்குக் கொடுத்த பொழுதுகளின் நினைவாய்த் தான் இன்றைய இந்தக் கவிதை. (நன்றி Suhail , Affa , Asker , ATM Fasly & Jeewa Sir - இவங்க எல்லாம் வசந்தம் வானொலியின் அறிவிப்பாளர்கள் )இனி தொடர்கிறேன் அந்த இனிய நினைவுகளை....

இருள் சூழ்ந்த
இராப் பொழுதில்
இதயங்களோடு கதை பேசினேன்!..
இசையும் கூடவே கை கோர்த்தது!.......
இதயத்தில் பூத்த
இன்பமான சில வரிகள்
இவன் கவியாய் உருப் பெற்று
இதயங்கள் பல தொட்டது!......

இல்லாதது பல சொல்லி கவி சொல்ல
இஷ்டமில்லை எனக்கு!.....
தூரத்து நிலாக்காட்டி
தூங்க வைக்கிறாள் அன்னை!....
தூறலாய் சிந்தும் சில வரிகளில்
தூது சொல்வதாய் மாற்றினேன் என்னை!......

வசீகரா பாடலின் இடையிசை
வஞ்சமில்லாது பின்னணி இசை கொடுக்க
வந்திட்ட வார்த்தைகளோடு
வலம் வந்தேன் 97 .6 (FM) ல்.......

ஜீவராகம்
ஜீரணிக்கப் பட்டது
ஜீவன்கள் பலரால்!......

கிழமைக்கு ஒரு நிகழ்ச்சி!....
கிடைத்தது பலகோடி மகிழ்ச்சி!.....

இருளுக்கு ஒளி வட்டமாய் ஒரு பால் நிலா!....
இதயங்களுக்கு இன்பகரமாய் இவன் உலா!.....

தேன் நிலவும்,
தேடிய இசையும்,
தேவதையாய் துணை நிற்க.......
தேன் சிந்திய சிதறல்களால்
தேகம் நனைத்தேன்!.....
இருட்டி விட்ட இராப்பொழுது!......
இளமை கொஞ்சும் வெண்ணிலா!....
இருளகன்ற வசந்தம் கலையகம்!.....
இத்தனைக்குள் இளையவன் இவனும் ஒருவனாய்!.....

விண்மீன்கள் கண்சிமிட்டும் நேரம்....
நிறைநிலா நெழிந்து கொண்டு
கொட்டாவி விடுகையில்....
இனிதான அந்த ஜீவராகத்தில்
இவனோடு இதயங்கள் பலகோடி!......

இசை கொண்டு,
இதயம் சென்று
இன்பம் கொடுத்ததில்
இரட்டிப்பு மகிழ்ச்சி
இன்றும் எனக்கு!.........

நன்றி ஜீவராகம்.........


உங்கள் நண்பன்

அபூ.......

சனி, 27 பிப்ரவரி, 2010

நேசம் மறக்கவில்லை நெஞ்சம்!.......
சிந்தும் மழைத் துளியில்
சிறுகனம் வியந்தேன்!....
சிரித்த உன் முகத்தின்
சிதறல்களாய் தான் ஒவ்வொரு துளியும்!.......
எட்டு வயது எனக்கு......
எழுதத் தெரிந்தது
எழுத்துக்கள் பலது!.....
எண்ணங்கள் சிலது
எடை போட்டது மனது!.........

பள்ளிக் காலமது!.....
பகற் பொழுதென்ன?....
பசிப் பொழுதென்ன?...
பக்கத்தில் இருந்து
பகிர்ந்து கொண்டாய் பாசப் பிணைப்பை!......

எனக்கான தோழி
என்று நீ இருக்க
எதுவாயினும் உனக்கு
எத்தி வைப்பதில் சலனமில்லை எனக்கு!......

குடும்பமென்ன?..
குறை நிறையென்ன?..
குட்டிக் கதையாய் - உன்னிடம்
கொட்டி வைப்பதில் கோடி இன்பமடி எனக்கு!.....

உயர்தரம் முடித்த பிறகு
உறவுகளில் ஒரு விரிசல்!....
உயிர்கள் எம் முகவரி
உணர்வுகள் அற்று
உயிரிழந்து கிடக்கிறது!.......பிரிவு பிரிக்கப் படவில்லை....
பி (ப் )ரியப் படுத்துகிறது!.........
பிரிந்த பின் தான் உணரப் படுகிறது
பிரிவில் எங்கோ நேசம் இருக்கிறது என்பதை!......பி(ப்)ரியத்துடன்

உங்கள் நண்பன்

அபூ!........

புதன், 17 பிப்ரவரி, 2010

கொஞ்சும் கவிதைகள்!...

(மீண்டும் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் அனைவரையும் பதிவுலகில் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. நேற்று இரவு கொஞ்சிக் கொஞ்சி என்னோடு பேசிய சின்னச் சின்ன சிந்தனைகளை கொஞ்சும் கவிதைகளாக இன்றைய பதிவில் உங்களுக்காய் பதிவிடுகிறேன். கவிமழையில் நனைந்து விட்டு உங்களுடைய கருத்துக்களை தெரிவியுங்கள். )


உருகும் மெழுகாயினும்
உள்ளம் மகிழ்கிறேன்!...
உயிர் துறப்பதெல்லாம்
உனக்காக வேண்டி என்பதால்!.....

*********************************************நேசம் கொண்டாய்
நேசிக்க மறுத்தேன்!........
நேர் கோடாய் நின்றாய்
நேரெதிரே நின்றேன்!......
நேற்றுத் தான் நேசம் என்பதை உணர்ந்தேன்
நேரம் பார்த்து வந்த உன் மரணச் செய்தி கேட்டு!......


***********************************************************************அழகிய பூக்கள் அத்தனையும்
அசிங்கமாய் தோன்றுகிறது!......
அயலாரிடம் வினவினால்
அப்படி இல்லை என்கிறார்கள்!...
அடியேன் இன்னும் உணரவில்லை....
அனல் தெறித்த உன் பார்வை
அம்புகள் தான் என் கண்ணில் இன்னும்
அடாவடித் தனம் புரிகிறது என்பதை!........


********************************************************

வானவில்லின் வர்ணத்தை
வார்த்தெடுத்து வரைந்திட்ட
வான்மதியே!.......
வாழ்வியல் சோதனையில்
வாலிப கோளாறு
வாட்டி வதைக்கிறது
வாட்டசாட்டமான உன் உருவம் பார்த்து!.....
வாராயோ.. நீயும் என்னில் காதல் கொள்ள!......


****************************************************************
முந்தானையால் முடிச்சுப் போட்ட நீ
முகத்திரை கிழித்து - என்
முகம் பார்ப்பது எப்போது?....
முடியவில்லை!.....
முக்காடிட்ட உன்
முறுவல் காணாமல்
முக்கால் மணி நேரம் கூட இருக்க!......
முல் வேலிக்குள் அடை பட்டு
முடங்கிக் கிடக்கிறேன்!.....
முதுமை அடையுமுன்
முழு சம்மதத்தோடு - காதல்
முகவரி கொடு சிநேகிதியே!.......

********************************************

(சரி, கவி மழையில் நனைந்து விட்டீங்களா?...... எப்படி இருந்தது என்று உங்கள் கருத்தை கட்டாயம் சொல்லி விடுங்க. சில நாட்களாக என் பாடசாலை நண்பர்கள் ஏராளமானவர்களை முகப் புத்தகம் வாயிலாக சந்தித்து வருவதில் பெரிய சந்தோசம். ஏனெனில் என் கலைத் துறையின் வளர்ச்சிக்கு என் குடும்பத்திற்கு பின்னர் மூல காரணமாக இருந்தவர்கள் என் பள்ளித் தோழர்கள் தான். கோடான கோடி நண்பர்களே. ) - (ஆசை FM ல் மறுபடியும் திரைப் படத்திலிருந்து "நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் " பாடல் கேட்டுக் கொண்டே இந்தபதிவு.......)

மீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம் !.......
அது வரையில் நல்லதையே சிந்திப்போம்!.....

அப்போ நான் வரட்டா!...

உங்கள் நண்பன்

அபூ!.....