
சிந்தும் மழைத் துளியில்
சிறுகனம் வியந்தேன்!....
சிரித்த உன் முகத்தின்
சிதறல்களாய் தான் ஒவ்வொரு துளியும்!.......
எட்டு வயது எனக்கு......
எழுதத் தெரிந்தது
எழுத்துக்கள் பலது!.....
எண்ணங்கள் சிலது
எடை போட்டது மனது!.........
பள்ளிக் காலமது!.....
பகற் பொழுதென்ன?....
பசிப் பொழுதென்ன?...
பக்கத்தில் இருந்து
பகிர்ந்து கொண்டாய் பாசப் பிணைப்பை!......

எனக்கான தோழி
என்று நீ இருக்க
எதுவாயினும் உனக்கு
எத்தி வைப்பதில் சலனமில்லை எனக்கு!......
குடும்பமென்ன?..
குறை நிறையென்ன?..
குட்டிக் கதையாய் - உன்னிடம்
கொட்டி வைப்பதில் கோடி இன்பமடி எனக்கு!.....
உயர்தரம் முடித்த பிறகு
உறவுகளில் ஒரு விரிசல்!....
உயிர்கள் எம் முகவரி
உணர்வுகள் அற்று
உயிரிழந்து கிடக்கிறது!.......

பிரிவு பிரிக்கப் படவில்லை....
பி (ப் )ரியப் படுத்துகிறது!.........
பிரிந்த பின் தான் உணரப் படுகிறது
பிரிவில் எங்கோ நேசம் இருக்கிறது என்பதை!......

பி(ப்)ரியத்துடன்
உங்கள் நண்பன்
அபூ!........
15 கருத்துகள்:
பிரிய மனமில்லாமல் இருக்கிறது....
உங்கள் கவி வரிகள் அழகாய் இருகின்றன. , பிரிவில் தான் புரியும் ,
அவர்களின் அருமை.... நேசம் ....கொண்ட பாசம்.
//பிரிவில் தான் புரியும் ,
அவர்களின் அருமை.... //மிகச்சரியே
மிக அருமையான பகிர்வு
அனைத்து கவிதைகளும் அருமை.
"பிரிந்த பின் தான் உணரப் படுகிறது
பிரிவில் எங்கோ நேசம் இருக்கிறது என்பதை!......"
உண்மை உணர்வுகள் வெளிப்படும் வரிகள்.
பிரபா கூறியது...
///பிரிய மனமில்லாமல் இருக்கிறது....///
ரொம்ப நன்றி பிரபா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்!,,,,,,,
நிலாமதி கூறியது...
////உங்கள் கவி வரிகள் அழகாய் இருகின்றன. , பிரிவில் தான் புரியும் ,
அவர்களின் அருமை.... நேசம் ....கொண்ட பாசம்.////
ஆமாம் அக்கா பிரிவிலும் சின்னதாய் ஒரு சுகம் இருக்கிறது. (அனுபவப் பட்டவர்கள் நிறையப் பேர் பேசிக்கிறாங்க... ஹி....ஹி.....)
ரொம்ப நன்றி அக்கா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.......
Jaleela கூறியது...
//பிரிவில் தான் புரியும் ,
அவர்களின் அருமை.... //மிகச்சரியே
////மிக அருமையான பகிர்வு////
ஆமாம் அக்கா.... நிஜம் தான்.....
ரொம்ப நன்றி அக்கா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்........
அக்பர் கூறியது...
///அனைத்து கவிதைகளும் அருமை.///
உங்களைப் போன்ற நண்பர்கள் கொடுக்கின்ற ஆதரவு தான் அண்ணா இந்தளவிற்கு முயற்சி செய்ய வைக்கிறது அண்ணா......
ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்........
Dr.எம்.கே.முருகானந்தன் கூறியது...
"பிரிந்த பின் தான் உணரப் படுகிறது
பிரிவில் எங்கோ நேசம் இருக்கிறது என்பதை!......"
//// உண்மை உணர்வுகள் வெளிப்படும் வரிகள்.///
பிரிவென்பது ஒரு சுவரல்ல, வெறும் புகை மாத்திரம் தானே டாக்டர்...... (அதனால் தான் இந்த வரிகள் )
ரொம்ப நன்றி டாக்டர் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்!.....
//குடும்பமென்ன?..
குறை நிறையென்ன?..
குட்டிக் கதையாய் - உன்னிடம்
கொட்டி வைப்பதில் கோடி இன்பமடி எனக்கு!.....//
//பிரிவு பிரிக்கப் படவில்லை....
பி (ப் )ரியப் படுத்துகிறது!.........
பிரிந்த பின் தான் உணரப் படுகிறது
பிரிவில் எங்கோ நேசம் இருக்கிறது என்பதை!......//
இதுக்கு மேல நான்வேற என்ன தனியா சொல்ல.....அழகோ அழகு...
seemangani கூறியது...
//குடும்பமென்ன?..
குறை நிறையென்ன?..
குட்டிக் கதையாய் - உன்னிடம்
கொட்டி வைப்பதில் கோடி இன்பமடி எனக்கு!.....//
//பிரிவு பிரிக்கப் படவில்லை....
பி (ப் )ரியப் படுத்துகிறது!.........
பிரிந்த பின் தான் உணரப் படுகிறது
பிரிவில் எங்கோ நேசம் இருக்கிறது என்பதை!......//
[[[[[இதுக்கு மேல நான்வேற என்ன தனியா சொல்ல.....அழகோ அழகு...}]]]]]]
ரொம்ப நன்றி சீமாங்கனி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்......
எனக்கான தோழி
என்று நீ இருக்க
எதுவாயினும் உனக்கு
எத்தி வைப்பதில் சலனமில்லை எனக்கு!...]]
எத்தி வச்சாச்சா ஈமானை ...
-------------
வரிகள் அழகுப்பா
///சிந்தும் மழைத் துளியில்
சிறுகனம் வியந்தேன்!....
சிரித்த உன் முகத்தின்
சிதறல்களாய் தான் ஒவ்வொரு துளியும்!///
ஆரம்பம் தொடக்கம் முடிவு வரை ஒவ்வொன்றும் அசத்தல். வாழ்த்துக்கள் நண்பா
I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Tamil News
Latest Tamil News
Tamil Newspaper
Kollywood News
Tamil News Live
Online Tamil News
Tamil Cinema News
Tamil Film News
Tamil Movie News
Latest Tamil Movie News
கருத்துரையிடுக