புதன், 22 ஏப்ரல், 2009

நேற்றைய நிகழ்வின் இன்றைய பதிவு..


(கட்டளை : கொஞ்சசுவாரஷ்யமான பதிவாக அமையலாம்.)


நேற்று என்னோட காதலி தன்னோட பிறந்த நாளை கொண்டாடியதா சொல்லி இருந்தேன் இல்லையா? சரி. எப்படி கொண்டாடி இருப்பாங்க? யாரெல்லாம் வந்திருப்பாங்க? என்று நான் யோசிச்சிட்டு இருக்கிற நேரம் நண்பன் அப்பாஸ் அனுப்பிய மின்னஞ்சல் எதோ மனதிற்கு திருப்தியாய் இருந்தது. அந்த திருப்தியை இன்றைய பதிவில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

முதல் வருடம் முடிந்து இரண்டாவது வருடத்தில் கால் பதிவது என்பது இலகுவான விசயமா? அதுவும் நிறைய தடைகள் தாண்டிய பாதையல்லவா?

எனவே அந்த நிகழ்வின் நிழல்கள் இன்றைய பதிவில் உங்களுக்காக......


இறைவன் ஆசியோடும் மத குருமார்களின் வாழ்த்துக்களோடும் நிகழ்வுகள் ஆரம்பமாகியது. (இரண்டாவது வருடத்தின் முதல் நாள் )


வருகை தந்த பிரமுகர்கள் மங்கள விளக்கேற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைக்கின்றனர்.

சம்பிரதாயங்களுக்கு ஏற்ப சில சமய நிகழ்வுகள் நடை பெறுகின்றது. ( இந்த புகைப் படத்த கொஞ்சம் உற்றுப் பாருங்க. அதில் சிவப்பு குர்தா அணிந்து இருக்கிறது யாரு தெரியுமா? யாருடையும் சொல்லிராதீங்க. அவருதான் நம்ம முகாமையாளர் ஜீவகுமார். )

வருகை தந்த சில பிரமுகர்கள் தான் உட்கார்ந்து கொன்டிருக்கிறாங்க. இதுல தான் வசந்ததினுடைய ஆணி வேறும் .... புரவலர் உமர் ஹாஷிமும் உட்கார்ந்துட்டு இருக்கிறார். அதோ... நீல சேர்ட் அணிந்து.

(சரி , இப்படியெல்லாம் நடந்த நேரம் கலையகத்தில் எப்படியெல்லாம் கலாட்டா பண்ணியிருப்பாங்க நம்ம அட்டகாச நண்பர்கள். கொஞ்சம் பாருங்களேன்......)இப்படியெல்லாம் அங்கே நிகழ்வுகள் நடை பெறுகிற நேரம் நானும் இங்க இருந்து (வெளி நாட்டிலிருந்து) அங்க போகலாம்னு முயற்சி பண்ணி ரொம்ப கலக்கலா வெளிக்கட்டு வந்தேன்னா.............. ஏன் அந்த கொடுமையக் கேட்கிறீங்க?

வந்தேன்னா..........


வந்தேன்னா.........


சரி... மேலும் உங்கள் யோசிக்க வைக்கல்ல. மாட்டருக்கு வரேன். நான் வர ரொம்ப லேட்னு சொல்லி flight பரந்துட்டுது. என்ன பண்ண? தலை விதி அவ்வளவு தான்னு சொல்லி அப்படியே பதிவு எழுத உட்கார்ந்துட்டேன்.

(இது எல்லாத்தையும் விட மிகப் பெரிய கொடும என்ன தெரியுமா ? எனக்கு இலங்கை போக டிக்கெட் கிடைக்காதது தான். )

உங்க பின்னூட்ட எதிர் பார்க்கும் இவன்,

உங்கள் இல்லத்து வானொலியின் உள்ளத்து நண்பன்

சப்ராஸ் அபூ பக்கர்.

மற்றுமொரு பதிவில் சந்திப்போம். அது வரையில் நல்லதய்யே சிந்திப்போம்.......

வரட்டா!!!!!!!!!
கருத்துகள் இல்லை: