சனி, 20 ஜூன், 2009

இசை எனும் மூச்சு...

இன்று என்னுடைய நண்பன் திடீர் என அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் போது, தன்னுடைய மனதை ஏதோ சஞ்சலப் படுத்திக் கொண்டிருப்பதாக சொன்னான். (அங்கயுமா?? உண்மையான நட்பு இங்க தான் இருக்கு.....), ஆனா நீங்க ( என்னைத் தான் சொல்றாரு....) Facebook ல் எழுதும் கவிதைகள் (அது கவிதை இல்லடா.... சொற்கள் கொண்டு அமைந்த கட்டுரைடா.........) மனதை கொஞ்சம் திருப்திப் படுத்துவதாக சொல்லி இருந்தார்.அவருக்காக திடீர்னு சொல்லி ஒரு கவிதை சொல்லச் சொன்னார். (முடியல... ரொம்ப ஓவரா இருக்கு இல்லையா??? ) - முடிந்த அளவு try பண்ணினேன்.... இவ்வளவு தான் வந்தது... இதற்கு மேல் வரல்ல...(என் கை கூட இவ்வளவு கஞ்சத்தனம் இல்லீங்க...ஆனா என்னோட கற்பன ரொம்ப கன்ஜூஸ் - இது நம்மோட மொழி...),

எப்படி இருக்குதுன்னு கட்டாயம் சொல்லுங்க?..
இசையே உன் மூச்சு....
இனி என்ன பேச்சு...
இப்போ என்ன ஆச்சு???
இசையில் இணைந்த
இதயம் கொள்ளக் கூடாது சலனம்...
இசை இளவரசர்கள் உன் நாமம்...
இனி என்ன???
இதயச் சுமையை
இறக்கி வை....
இசையால் இணைந்த எம்மிடம்...
இப்போதிலிருந்து தொடரட்டும்
இனிப்பான உன் இசைப் பயணம்.....என் நண்பனுக்கு இந்த வரிகள் திருப்தியைக் கொடுக்குமா?(எது எப்படியோ??) உங்க பதில் கட்டாயம் எனக்கு திருப்தியைக் கொடுக்கும்க....

வந்ததும் தான் வந்தீங்க.... அப்படியே கருத்த சொல்லிட்டு போறது....

வரட்டா!!!!

உங்கள் நண்பன்

அபூ.......

9 கருத்துகள்:

sakthi சொன்னது…

இசையே உன் மூச்சு....
இனி என்ன பேச்சு...
இப்போ என்ன ஆச்சு???
இசையில் இணைந்த
இதயம் கொள்ளக் கூடாது சலனம்...


கலக்கல் கவிதை

sakthi சொன்னது…

இதயச் சுமையை
இறக்கி வை....
இசையால் இணைந்த எம்மிடம்...
இப்போதிலிருந்து தொடரட்டும்
இனிப்பான உன் இசைப் பயணம்.....

எதுகை மோனை அசத்தல் நண்பரே...

sakthi சொன்னது…

ஆனா என்னோட கற்பன ரொம்ப கன்ஜூஸ் - இது நம்மோட மொழி...),


கற்பனை
எழுத்து பிழையை சரி செய்து விடுங்கள்

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

ரொம்ப நன்றி Sakthi,

நீங்கள் கொடுக்கும் உற்சாகத்தில் இன்னும் இன்னும் நிறைய எழுதனும்னு தோன்றுது....

எதிர் பாருங்கள் இனி அடிக்கடி கவி வரிகள் தான்.......(ஆனா கட்டாயம் கருத்து சொல்லுங்க....ஓகேவா????)

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

sakthi சொன்னது…

///கற்பனை
எழுத்து பிழையை சரி செய்து விடுங்கள்/////

தவறுக்கு வருந்துகிறேன்....

ரொம்ப நன்றி Sakthi,

G3 சொன்னது…

//இசையே உன் மூச்சு....
இனி என்ன பேச்சு...
இப்போ என்ன ஆச்சு???//

உங்க குரு டி.ஆர்-ஆ?? :P

ஆனாலும் நீங்க வெவமுங்க. அடுத்தவங்க உங்கள் கலாய்க்கறதுக்கு முன்னாடி நீங்களே அவசரப்பட்டு உங்கள கலாய்ச்சிக்கறீங்களே.. (நடு நடுவுல நீங்க அடிச்சிருக்கற டயலாக்ஸ தான் சொல்றேன் :P )

G3 சொன்னது…

வெவரமுங்க னு சொல்ல வந்து வெவமுங்கனு தப்பா அடிச்சிட்டேன்... போன கமெண்ட்ல :)

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

////ஆனாலும் நீங்க வெவமுங்க. அடுத்தவங்க உங்கள் கலாய்க்கறதுக்கு முன்னாடி நீங்களே அவசரப்பட்டு உங்கள கலாய்ச்சிக்கறீங்களே..////

மத்தவங்க கலாய்க்கிறதுக்கு முதல்ல நானே என்னை கலாய்த்துக் கொண்டா கருத்து சொல்றவங்க அத விட்டுட்டு வேற கருத்து சொல்லுவாங்க இல்லையா!! (எப்படி ரொம்ப நல்லா யோசிக்கிறேன் போல......ஹி.....ஹி..... ரொம்ப சின்ன பையன் தானே..)

நன்றி G3

அடிக்கடி வந்து போங்க....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

////வெவரமுங்க னு சொல்ல வந்து வெவமுங்கனு தப்பா அடிச்சிட்டேன்... போன கமெண்ட்ல :)/////

முடிந்தது முடிஞ்சு போச்சு???
அப்போ மன்னிச்சிட்டாப் போச்சு......

அடிக்கடி வாங்க G3 (G4 ன்னு சொன்னா அதுக்கு என்ன அர்த்தம்??)

நன்றி G3