செவ்வாய், 23 ஜூன், 2009

காகிதக் கிறுக்கல்கள்....

இப்போதெல்லாம் என்னுடைய கிறுக்கல்கள் அதிகரித்து விட்டது. (ஐயய்யோ.... காதல் கிறுக்கு இல்லீங்க....கவிதைக் கிறுக்கு. நானென்ன அவ்வளவு பெரியவனா? ஹி.....ஹி.....)இன்றைய பதிவிலும் என் கிறுக்கல்கள் சிலவற்றை கிறுக்கி வைக்கிறேன். அதை சித்திரமாக மாற்றித் தருவது உங்க கையில் தான் இருக்குது. (அதாங்க, நீங்க கொடுக்கிற பின்னூட்டலில் தான் இருக்குதுன்னு சொன்னேன்......)

************************************காற்றின் மொழியாய்
உன் பெயர்......
கற்பனைகளின் நிஜங்களாய்
உன் நிழல்......
கவிதையின் கருப்பொருளாய்
உன் உருவம்......
மொத்தத்தில் கவிஞன் இவன்
கருத்தரித்த கன்னியவள் நீ.........

(இவரு பெரிய கவிஞர் என்றெல்லாம் நீங்க சொல்லக் கூடாது....ஹி.....ஹி..... முடியுமானத எழுதுறோம்...ஆனால் காதல் அனுபவம்????..... அது சத்தியமா இல்லீங்க....)

**********************************************இரவுகளின் நிசப்தங்கள்
என்னோடு மட்டும் கதை பேசுகிறது.....
காலைச் சூரியன்
என்னை மட்டும் சுட்டெரிக்கிறது.....
பகல் பந்தி
என்னை மட்டும் ஒதுக்கி வைக்கிறது......
மாலை மந்திரம்
என் செவிகளில் மட்டும் ஓங்கி ஒலிக்கிறது.....
இத்தனைக்கும் நீ என்னருகில்
இல்லாதது தான் காரணம்........

(ரொம்பத் தான் தனிமையில் வாடிக் கொண்டிருப்பதாக நீங்க யோசிக்கிறீங்க. அட இல்லீங்க......ரொம்ப ஜாலியாத் தான் இருக்கிறேன். ஆனால் இந்த வரிகள் தானா வருதுங்க..... என்ன தான் பண்ணலாம் இல்லையா???)

உலவு வந்தவர்களே.....
உள்ளத்தில் உள்ளதை
உளறி விட்டுப் போங்க....
உரு மாறும் என் கற்பனைகள்.....

அப்போ நான் வரட்டா !!!!

உங்கள் நண்பன்

அபூ.......


4 கருத்துகள்:

என்ன கொடும சார் சொன்னது…

கந்துல - இராணுவ யானையின் கதை

http://eksaar.blogspot.com/2009/06/blog-post_24.html

ivingobi சொன்னது…

காதல் அனுபவம்????..... அது சத்தியமா இல்லீங்க.... Dear aboooooooo.... kavingnargal ellam poiyargal endru solvaanga atha naan nambi thaan aaganumho... ?

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

என்ன கொடும சார் சொன்னது…

///கந்துல - இராணுவ யானையின் கதை///

நன்றி கொடும சார்.....

இதோ அங்க தான் ஓடி வரேன்.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

ivingobi சொன்னது…

////காதல் அனுபவம்????..... அது சத்தியமா இல்லீங்க.... Dear aboooooooo.... kavingnargal ellam poiyargal endru solvaanga atha naan nambi thaan aaganumho... ?////


ஆஹா...... கோபி.....

சுத்தி மாட்டருக்கு வந்துட்டீங்க....(இதத் தான் போட்டு வாங்குறதுன்னு சொல்லுவாங்களோ????)

அப்போ எனக்கு காதல் அனுபவம்னு சொல்றீங்க...(நண்பன் நீங்க சொல்றீங்க... அனுபவப் பட்டுத் தான் பார்ப்போமே.....நான் இறங்கிட்டேன் நண்பா..... கட்டிலில் இருந்து.....ஹி......ஹி.......) - காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம் நரக சுகமல்லவா......(நேரம் பார்த்து FM ல பாடல் ஒலிபரப்பாகுது.....)

நன்றி ivingobi.... அடிக்கடி வந்து போங்க....