செவ்வாய், 4 ஆகஸ்ட், 2009

திருவிளையாடல் ஆரம்பம்....




ரொம்ப சந்தோஷத்தோடு இன்றைய பதிவை எழுத ஆரம்பிக்கிறேன். ஏனெனில் எழுத்துத் துறையில் நான் கால் எட்டி வைக்கும் முதல் ஏணிப் படி இது. சிறு வயதிலிருந்தே வாசிப்பு, பேச்சு, கவிதை, விவாதம், அறிவிப்பு, பாஓதல் என எல்லா நிகழ்ச்சிகளிலும் ஆர்வத்தோடு கலந்து கொள்ளும் நான் வலையுலகிற்கு கொஞ்சம் புதியவன். ஆரம்பத்தில் எழுத்துப் பிழைகளோடு தட்டுத் தடுமாறிக் கொண்டிருந்த போது பின்னூட்டல் மூலம் கரம் கொடுத்து கரை சேர்த்தீர்கள். அதன் பலன் தான் இன்று என்னை அரைச் சதம் அடிக்க வைத்திருக்கிறது. ரொம்ப நன்றி அன்புள்ளங்களே.

ஒரு கலைஞன் வளர்கிறான் என்றால் ஆயிரம் சிறைச் சாலைகள் மூடப் படுவதற்கு ஒப்பாகும் என என் ஆசிரியர் அடிக்கடி என்னைப் பார்த்து சொல்லுவார். உண்மையில் சிலருக்கு திறமை இருக்கும். ஆனால் எழுத வராது. ஆனால் சிலருக்கு எழுத முடியும். அதை கற்பனை பண்ணி எழுத முடியாமல் தவிப்பார்கள். (இது நான் நிறைய பேரில் கண்ட உண்மை.) இப்படி போராடுபவர்களுக்கு மத்தியில் நான் கடுகு மணி அளவு பெறுமதியில் வலையுலகில் அரைச் சதம் அடிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. இந்த அளவுக்கு சிறிய திறமையை தந்த அந்த இறைவனுக்கு என்றும் நன்றியுடையவன் நான். மற்றப் படி என் நன்றிகளுக்கு உரித்தானவர்கள் தினம் தினம் என் வலைப் பூ வந்து நட்பைப் பரிமாறும் நட்புள்ளங்கள் நீங்கள் தான்.

இன்றைய தினம் நான் ஒரு உண்மையை கட்டாயம் உங்களிடம் சொல்லியே ஆக வேண்டும். நான் இப்போது கடல் கடந்து வெளிநாட்டில் Graphic Designer ஆக பணி புரிந்து கொண்டிருக்கிறேன் ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில். வலைப் பூ ஆரம்பித்த காலத்தில் எல்லா வலைப் பூவையும் நான் பார்ப்பதுண்டு. குறிப்பாக அவர்களுடைய எழுத்தாற்றலை. ஆரம்பத்தில் பின்னூட்டல் இடுவதற்கு தயங்கினாலும், பிற்காலத்தில் பின்னூட்டங்களும் இட்டு வந்தேன். ஆனால் இப்போது சிறிது காலத்திற்கு நான் பின்னூட்டல் இட வேண்டுமானால் சிறிது போராட வேண்டி இருக்கிறது. காரணம் நான் இருக்கும் நாட்டில் இப்போது பாடசாலை விடுமுறை கொடுக்கப் பட்டிருக்கிறது. எனவே உயர் பதவிகள் வகிக்கும் சிலர் தன் குடும்பத்தோடு தாய் நாட்டுக்கு சென்று விட்டனர். அதனால் எனக்கு அவர்களில் ஒருவருடைய இடத்தை நிரப்ப வேண்டிய சூழ் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே பாடசாலைக் காலங்களில் 1+1 கட்டாயம் 11 தான் வர வேண்டும் என அடம் பிடித்தவனை இப்போது கணக்கியல் வாட்டி வதைக்கிறது. இருந்தாலும் தன் நம்பிக்கையோடு எந்நாளும் முடியும் என தைரியம் எடுத்துக் கொண்டு அந்தப் பொறுப்பை செய்து வருகிறேன். எனவே அதில் பிழைகள் ஏற்படக் கூடாது என்பதற்காகத் தான் இப்போது கொஞ்சம் வலைப் பூ மேய்வதைக் குறைத்துள்ளேன். ஆனால் சின்ன ஒரு இடை வேலை கிடைத்தால் போதும். அப்படியே சுற்றி அடித்து வந்து கொண்டே இருப்பேன். ஆனால் இன்னும் கொஞ்சம் இடை வேலைக்குப் பிறகு மீண்டும் ஆரம்பிப்பேன் என் மேய்தலை. அதுவரையில் நான் கட்டாயம் உங்கள் வலைப்பூ வருகிறேன். முடியுமான சந்தர்ப்பத்தில் பின்னூட்டலும் இடுகிறேன்.


இனி வலைப் பூவில் என்னை தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார்கள். விருதும் கொடுத்திருந்தார்கள். அத்தனை பேருக்கும் கோடான கோடி நன்றிகள். நீங்கள் அத்தனை பேரும் நல்ல நண்பர்களாக என்னில் இடம் பிடித்து விட்டீர்கள். மீண்டும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

நானும் இன்று ஒரு விருதினை என் தளத்திற்கு வந்த உங்களுக்காக வழங்கி வைக்கிறேன். இது உங்கள் அனைவருக்கும் சமர்ப்பணம். சந்தோஷமாய் ஏற்றுக் கொள்ளுங்கள்.




இனி என்ன அரைச் சதம் அடிச்சாச்சு. நேரம் கிடைக்கும் போதெல்லாம் திருவிளையாடலை ஆரம்பிப்பது தான் என் வேலை. நிச்சயம் கரம் கொடுத்து நிற்பீர்கள் எனும் நம்பிக்கையில் என்னுடைய ஐம்பதாவது பதிவை முடித்துக் கொள்கிறேன்.

நான் இந்த அளவு தூரத்துக்கு வெற்றி நடை போட்டு வருவதற்கு காரணமாய் இருந்த அந்த இறைவனுக்கும், அன்புள்ளங்கள் உங்களுக்கும் கோடான கோடி நன்றிகள் உரித்தாகட்டும்.

அப்போ நான் வரட்டா.....

உங்கள் நண்பன்

அபூ.......

(மீண்டும் சந்திப்போமா?.....)


22 கருத்துகள்:

ARV Loshan சொன்னது…

வாழ்த்துக்கள் சகோதரா.. மேலும் மேலும் சாதனை படைக்க வாழ்த்துக்கள்..

sunramanan சொன்னது…

பதிவுலகில் அரைச் சதமடித்த உங்களுக்கு வாழ்த்துக்கள் விரைவில் சதம் பெறுவீர்கள் என்ற நம்பிக்கை உண்டு.

நட்புடன்
ரமணன்

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

LOSHAN கூறியது...

//வாழ்த்துக்கள் சகோதரா.. மேலும் மேலும் சாதனை படைக்க வாழ்த்துக்கள்..////

என் நீண்ட நாள் ஆசை நீங்கள் என் பதிவுக்கு ஒரு பின்னூட்டமாவது இட வேண்டும் என்பது. ஆனால் அது நான் அரைச் சதம் அடிக்கும் போது நிறைவேறியதில் அளவில்லா ஆனந்தம். அதுவும் முதல் பின்னூட்டம். நன்றி அண்ணா வாழ்த்துக்கும், கருத்துக்கும்....

அடிக்கடி வந்து போங்க அண்ணா......

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

sunramanan கூறியது...

// பதிவுலகில் அரைச் சதமடித்த உங்களுக்கு வாழ்த்துக்கள் விரைவில் சதம் பெறுவீர்கள் என்ற நம்பிக்கை உண்டு.///

ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்..... கரம் கோர்ப்பீர்கள் எனும் நம்பிக்கையில் ஆரம்பித்து விட்டேன்....

இனி என்ன?... அடிக்கடி வந்து போங்க.......

அமுதன் சொன்னது…

அருமையான பதிவு. மேலும் மேலும் எழுதுங்கள். நான் தவறாமல் வந்து படித்துப் பயன் பெறுகிறேன்.

ஒரு கவிஞனின் கவிதைகளுள் மனமகிழ்ச்சியுடன் இறங்கித் தேடுபவன் தான் ஓர் சிறந்த கவிஞனாக வளர முடியும் என்பது எனது கருத்து. அத்தேடல் உங்களிடம் நிறையவே இருக்கிறது.

இரசிகை சொன்னது…

vazhththukkal.....:)

gayathri சொன்னது…

50vathu pathivukku vazthukkal pa

thodarnthu ezluthaen vazthukkal

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

அமுதன் கூறியது...

//// அருமையான பதிவு. மேலும் மேலும் எழுதுங்கள். நான் தவறாமல் வந்து படித்துப் பயன் பெறுகிறேன்.

ஒரு கவிஞனின் கவிதைகளுள் மனமகிழ்ச்சியுடன் இறங்கித் தேடுபவன் தான் ஓர் சிறந்த கவிஞனாக வளர முடியும் என்பது எனது கருத்து. அத்தேடல் உங்களிடம் நிறையவே இருக்கிறது.////

ரொம்ப நன்றி அமுதன்.... அடிக்கடி வந்து போங்க...

நான் கவிதைப் பிரியன். யார் கவிதையாக இருந்தாலும் ரசனையோடு படிப்பேன்... அது சுட்ட கவிதையாக இருந்தாலும் சரியே..... (லொள்.....)

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

இரசிகை கூறியது...

// vazhththukkal.....:)///

ரொம்ப நன்றி இரசிகை.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

gayathri கூறியது...

////50vathu pathivukku vazthukkal pa

thodarnthu ezluthaen vazthukkal///

வாங்க தோழி, எங்க நீண்ட நாளா காணவில்லை?...

ரொம்ப நன்றி உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும்... ஆதரவு நல்குவீர்கள் எனும் நம்பிக்கையில் தொடர்கிறேன்......

அடிக்கடி வந்து போங்க............

நிலாமதி சொன்னது…

வணக்கம்........நண்பா நீங்கள் மேலும் பல பதிவுகள் படைக்க வாழ்த்துக்கள். நேரமுள்ள போதெலாம் வாருங்கள். உங்கள் படைப்புக்கள மேய்வதற்காக (வாசிப்பதற்காக ) காத்திருப்போம் .நட்புடன் நிலாமதி

Muruganandan M.K. சொன்னது…

வாழ்த்துக்கள் சப்ராஸ் அபூ பக்கர். தொடர்ந்து எழுதுங்கள். மேலும் மேலும் சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்.

Admin சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பா... பல சாதனைகளை சந்திக்க வாழ்த்துக்கள்...

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

நிலாமதி கூறியது...

///வணக்கம்........நண்பா நீங்கள் மேலும் பல பதிவுகள் படைக்க வாழ்த்துக்கள். நேரமுள்ள போதெலாம் வாருங்கள். உங்கள் படைப்புக்கள மேய்வதற்காக (வாசிப்பதற்காக ) காத்திருப்போம் .நட்புடன் நிலாமதி////

ரொம்ப நன்றி நிலாமதி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும். இப்போதுதான் மனதில் இனம் தெரியாத ஒரு பயம் ஏற்படுகிறது. அதாவது ஒரு சிலராவது என்னுடைய பதிவை படிக்கிறார்கள். எனவே ரொம்பக் கவனத்தோடு எழுத வேண்டும் என்கிற உணர்வு பூர்வமான பயமே அது......

அடிக்கடி வந்து போங்க நிலாமதி......

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

Dr.எம்.கே.முருகானந்தன் கூறியது...

///வாழ்த்துக்கள் சப்ராஸ் அபூ பக்கர். தொடர்ந்து எழுதுங்கள். மேலும் மேலும் சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்.///

ரொம்ப நன்றி டாக்டர்.... உங்களைப் போன்ற பெரியவர்களெல்லாம் ஆதரவு தரும் போது நிச்சயம் எங்களுக்கும் வெற்றி தான்.....

அடிக்கடி வந்து போங்க டாக்டர்......

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

சந்ரு கூறியது...

///வாழ்த்துக்கள் நண்பா... பல சாதனைகளை சந்திக்க வாழ்த்துக்கள்...///

ரொம்ப நன்றி நண்பா.... சாதனைகளின் போதெல்லாம் கரம் கோர்ப்பீர்கள் எனும் நம்பிக்கை இருக்குது சந்ரு......

அடிக்கடி வந்து போங்க......

SUHAILMADHAN சொன்னது…

CONGRATS............... GO AHEAD.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

SUHAILMADHAN கூறியது...

///CONGRATS............... GO AHEAD.....////

ரொம்ப நன்றி நண்பா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.....

அடிக்கடி வந்து போங்க.......

Unknown சொன்னது…

வாழ்த்துக்கள் சப்ராஸ் அபூ பக்கர். சாரி தாமதமாக வாழ்த்தியதற்கு.. தொடர்ந்து நிறைய பதிவுகள் போட வாழ்த்துக்கள்

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

Mrs.Faizakader கூறியது...

/// வாழ்த்துக்கள் சப்ராஸ் அபூ பக்கர். சாரி தாமதமாக வாழ்த்தியதற்கு.. தொடர்ந்து நிறைய பதிவுகள் போட வாழ்த்துக்கள்////

ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்.....

அடிக்கடி வந்து போங்க.....

முனைவர் கல்பனாசேக்கிழார் சொன்னது…

வாழ்த்துக்கள் அபூ..........

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

முனைவர் சே.கல்பனா கூறியது...

///வாழ்த்துக்கள் அபூ..........////

ரொம்ப நன்றி, லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் இல்லையா?.... லொள்....

ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்.......