திங்கள், 10 ஆகஸ்ட், 2009

கண்டு பிடிச்சிட்டாங்கய்யா....

நாளுக்கு நாள் பெருகிவரும் கையடக்கத் தொலைபேசி பயன்பாட்டை அடுத்து அதை தயாரித்து தரும் நிறுவனங்களுக்கிடையில் பலத்த போட்டி நிலவுகிறது.

இதனால் தாங்கள் தயாரிக்கும் தொலைபேசிகளில் புதிய புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி பயனாளர்களை கவர வேண்டிய கட்டாயத்துக்கு தயாரிப்பு நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. இப்படி புதிய புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் தென்கொரிய நிறுவனங்கள் தான் முதலிடத்தில் இருக்கின்றன.

அந்த வகையில் அண்மையில் தென்கொரிய நாட்டை சார்ந்த Samsung நிறுவனம் தண்ணீரிலிருந்து பாதுகாக்கும் வகையில் ஒரு Mobile Phone ஐ சந்தைக்கு அறிமுகப்படுத்தியது.

அதே போல் சூரிய ஒளியில் charge செய்யும் தொழில்நுட்பத்தை புகுத்தி ஒரு தொலைபேசியையும் அறிமுகப்படுத்தியது.அதே போல் இப்போது இருக்கும் TFT-LCD திரையின் அடுத்த கட்டமாக உள்ள AMOLED என்ற தொழில்நுட்பத்தை புகுத்தி Samsung Jet என்ற போனை சந்தைக்கு அறிமுகப்படுத்தியது.

இப்போது தென்கொரிய நாட்டை சேர்ந்த மற்றொரு நிறுவனமான LG நிறுவனம் மொபைல் திரையில் மிக உயர் ரக தொழில்நுட்பமாக முதல் முறையாக HD (HighDefinition) தொழில்நுட்பத்தை புகுத்தி "Chocolate BL40" என்ற பெயரில் ஒரு போனை சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.



கிட்டதட்ட LCD டிவிக்களில் பயன்படுத்தப்படும் இந்த HD தொழில்நுட்பம் முதமுறையாக மொபைல் போனில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இதன் மூலம் நாம் நமது மொபைல் போனில் LCD டிவியில் காட்சிகளை பார்ப்பது போன்ற ஒரு புதிய அனுபவத்தை பெறலாம்.

இன்னும் இந்திய சந்தையில் வராத இந்த போனின் விலை 38000/- என்ற குறியீட்டு விலைக்கு விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(இனி என்ன?... வளரும் தொழிநுட்பத்திற்கேட்ப நாமும் மாறிக் கொள்ள வேண்டியது தான். இருந்தாலும் விலை ரொம்ப ஓவராத் தான் இருக்குது இல்லையா?...)

(இன்றைய என் தேடலில் சிக்கிய ஒரு தொழிநுட்ப பதிவு இது......)

அப்போ நான் வரட்டா

உங்கள் நண்பன்....

அபூ.....

7 கருத்துகள்:

கார்த்திக் சொன்னது…

அதிலும் பின்புறம் ஆறு முதல் எட்டு ஸ்பீக்கர்கள் வேறு.. ஏதோ திருவிழாவில் மைக் செட் போடுவதுபோல.. நல்லா பகிர்வு..

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

கார்த்திக் கூறியது...

// அதிலும் பின்புறம் ஆறு முதல் எட்டு ஸ்பீக்கர்கள் வேறு.. ஏதோ திருவிழாவில் மைக் செட் போடுவதுபோல.. நல்லா பகிர்வு..////

ரொம்ப நன்றி கார்த்திக் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்......

Admin சொன்னது…

நல்லா பகிர்வு..வாழ்த்துக்கள் தொடருங்கள்....

சுசி சொன்னது…

அப்டியே எங்களுக்கும் வாங்கி குடுக்கிறது...

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

சந்ரு கூறியது...

//நல்லா பகிர்வு..வாழ்த்துக்கள் தொடருங்கள்...////

ரொம்ப நன்றி சந்ரு உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

சுசி கூறியது...

// அப்டியே எங்களுக்கும் வாங்கி குடுக்கிறது...////

போக்கட்ட காலி பண்ற ஐடியாவிலே இருக்குறீங்க இல்லையா?... சரி, பார்ப்போம்.... வரட்டுமே போன்....

ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்......