செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009

ஆறாத வடுக்கள்


நிசப்த இரவுகளில்
ஏன் நான் மட்டும் அழ வேண்டும்?.
எல்லோரையும் போல் தானே
எனக்கும் எல்லாம் இருக்கிறது!..
பிறகு ஏன் ஒதுக்கி வைத்தார்கள்?....

குடும்பம் குதூகலம் இல்லாமல்
ஒதுக்கி வைத்தது சில காலம்!.....
நண்பர்கள் நட்பு வேண்டாமென
தள்ளி வைத்ததும் சில காலம்!.....
அப்போதெல்லாம் நான் யோசிக்கவில்லை.!
ஏன் இவர்கள் இப்படி
தள்ளி வைக்கிறார்கள் என்று?...

வேண்டாமென அவர்கள் கெஞ்சியும்
வேண்டுமென அடம் பிடித்தேன்
அன்புக்கு இலக்கணம் அறிந்து
அடைக்கலம் பெறுவதற்கு!....

அன்பை விலை கொடுத்தாவது
வாங்க முடியுமா?...
தினம் தினம் காணும்
இதயங்களிடமெல்லாம்
விலை பேசினேன்!....
காட்சிப் படுத்தப் பட்ட
பொருட்களுக்கு நிரம்பல் இல்லை
என்பதை அறியாமல்!.....

"ஏழையாய் வாழ்ந்தாலும்
கோழையாய் வாழாதே"
எங்கோ கேட்ட ஞாபகம்
பிறகு ஏன் கோழையாகி
அன்பை விலை பேச வேண்டும்?....

அழகு, அறிவு, அந்தஸ்து
இதைப் பார்த்துத் தானா அன்பு வரும்?
மன்னிக்க வேண்டும்.....
அழகு என்பது என் அகமதைத் தவிர
புறமெங்கும் இல்லை.....
அறிவு ஏதோ இறைவன் புண்ணியம்....
அந்தஸ்து என்பது அடுத்த வீட்டுக் காரன்
அடுக்கு மாடி கூட
வர்த்தக மையம் தான்!,,,,

மூங்கிலில்லா காட்டில்
முருங்கையைக் கொண்டா
புல்லாங்குழல் செய்வது?
முடியாத காரியம்
என்பதால் தானே
வாழ்க்கைக்கு புதிய
முகவரி கொடுக்க
கடல் கடந்தேன்!.....

நேசக் காற்று இல்லாததினால்
இப்போதெல்லாம் சோகக் காற்று தான்
வெற்றிடமான இதயத்தில்
இளைப்பாற வருகிறது!....

என்ன செய்ய?....
வாயால் வாதாடித் தான்
அன்பைப் பெற வேண்டும்
என்கிற அகராதியிலிருந்து
மாற்றப் பட்டு விட்டேன்!....

இருந்தாலும் மனதின்
ஆறாத வடுக்களுக்கு
யார் பதில் சொல்வது?....

(என் வாழ்க்கையில் நடந்த சில கசப்பான சம்பவங்கள் தான் கவிதையாய் உறுப் பெற்றிருக்கிறது. மன்னித்துக் கொள்ளுங்கள்....)

உங்கள் நண்பன்

அபூ.....

32 கருத்துகள்:

ஆ.ஞானசேகரன் சொன்னது…

//(என் வாழ்க்கையில் நடந்த சில கசப்பான சம்பவங்கள் தான் கவிதையாய் உறுப் பெற்றிருக்கிறது. மன்னித்துக் கொள்ளுங்கள்....)//

கவிதை நல்ல வந்திருக்கு... கவலை விடுங்கள் கசப்பான சம்பவங்கள்தான் வாழ்க்கையில் வெற்றிப்படிகள்.. நாளைய தினம் நல்லவையாக இருக்க வாழ்த்துகள் நண்பரே

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

ஆ.ஞானசேகரன் கூறியது...

//(என் வாழ்க்கையில் நடந்த சில கசப்பான சம்பவங்கள் தான் கவிதையாய் உறுப் பெற்றிருக்கிறது. மன்னித்துக் கொள்ளுங்கள்....)//

////கவிதை நல்ல வந்திருக்கு... கவலை விடுங்கள் கசப்பான சம்பவங்கள்தான் வாழ்க்கையில் வெற்றிப்படிகள்.. நாளைய தினம் நல்லவையாக இருக்க வாழ்த்துகள் நண்பரே///

ரொம்ப ஆறுதலான பின்னூட்டல்....

வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி.....

வால்பையன் சொன்னது…

உங்கள் வேதணை புரிகிறது நண்பரே!

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

வால்பையன் கூறியது...

//உங்கள் வேதணை புரிகிறது நண்பரே!///

ரொம்ப நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும், புரிந்துணர்விற்கும்....

Unknown சொன்னது…

எல்லோரும் அப்படித்தான்.. அபு.
நெருப்பாற்றை கடக்கவேண்டும். best of luck

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

D.R.Ashok கூறியது...

//எல்லோரும் அப்படித்தான்.. அபு.
நெருப்பாற்றை கடக்கவேண்டும். best of luck///

ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும், ஆறுதல் வார்த்தைக்கும்.....

S.A. நவாஸுதீன் சொன்னது…

கவலை வேண்டாம். கண்ணீரில் முத்தெடுக்கப் பழகுங்கள் அபு. அப்போதுதான் வாழ்க்கையின் அர்த்தம் புரிய ஆரம்பிக்கும்.

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

S.A. நவாஸுதீன் கூறியது...

/// கவலை வேண்டாம். கண்ணீரில் முத்தெடுக்கப் பழகுங்கள் அபு. அப்போதுதான் வாழ்க்கையின் அர்த்தம் புரிய ஆரம்பிக்கும்.////

ரொம்ப நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும், ஆறுதல் வார்த்தைக்கும்.....

அடிக்கடி வந்து போங்க.....

குறை ஒன்றும் இல்லை !!! சொன்னது…

கவலை வேணாம்.. கண்டீப்பாக நடக்கப்போவது எல்லாம் நன்மைக்கே..

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

குறை ஒன்றும் இல்லை !!! கூறியது...

//கவலை வேணாம்.. கண்டீப்பாக நடக்கப்போவது எல்லாம் நன்மைக்கே..///

அப்போ நடந்தவைகள்?..... லொள்....

ரொம்ப நன்றி நண்பா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.....

sakthi சொன்னது…

நேசக் காற்று இல்லாததினால்
இப்போதெல்லாம் சோகக் காற்று தான்
வெற்றிடமான இதயத்தில்
இளைப்பாற வருகிறது!....


வார்த்தைகளில் தெரிகின்றது உங்கள் வலி

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

sakthi கூறியது...

நேசக் காற்று இல்லாததினால்
இப்போதெல்லாம் சோகக் காற்று தான்
வெற்றிடமான இதயத்தில்
இளைப்பாற வருகிறது!....


///வார்த்தைகளில் தெரிகின்றது உங்கள் வலி///

ரொம்ப நன்றி sakthi உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.....

சிநேகிதன் அக்பர் சொன்னது…

உங்கள் வேதனை புரிகிறது. கவலை வேண்டாம் நல்லதே நடக்கும்.

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

அக்பர் கூறியது...

/// உங்கள் வேதனை புரிகிறது. கவலை வேண்டாம் நல்லதே நடக்கும்.////

ரொம்ப நன்றி அக்பர் உங்கள் வருகைக்கும், ஆறுதல் வார்த்தைக்கும்.....

ஹேமா சொன்னது…

//மூங்கிலில்லா காட்டில்
முருங்கையைக் கொண்டா
புல்லாங்குழல் செய்வது?
முடியாத காரியம்
என்பதால் தானே
வாழ்க்கைக்கு புதிய
முகவரி கொடுக்க
கடல் கடந்தேன்!.....//

அபூ,அருமை.வெளிநாடு தனிமை தந்த வலியான வரிகள்.
தொடருங்கள்.கவிதை என்பதே அனுபவ வலிகள்தானே.

நிலாமதி சொன்னது…

தனிமையில் இருந்து சிந்திக்கும்போது வாழ்கை அழகான் பாடத்தை கற்று தரும் .அனுபவங்களில் இருந்து புரிந்து கொள்ளுங்கள். வாழ்வு வளமாகும் . சிந்தித்து தெளிவு பெற வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும் நம்புங்கள். நட்புடன் நிலாமதி

Unknown சொன்னது…

//(என் வாழ்க்கையில் நடந்த சில கசப்பான சம்பவங்கள் தான் கவிதையாய் உறுப் பெற்றிருக்கிறது. மன்னித்துக் கொள்ளுங்கள்....)//


இந்த ஏக்கத்தை விடுங்கள் வரும்போது எவரும் எதையும் கொண்டு வந்தவரில்லை. நமக்குக்கீள் இருப்பவர்களைப் பற்றி யோசியுங்கள். நம் வாழ்க்கை மீள் என்பது புரியும்.


உங்கள் வாழ்க்கைக்கும் மாடுமல்ல என் வாழ்க்கைக்கும் பொருந்தும்.

என் பழைய நினைவுகளை மீட்டு சிறிது நேரம் கண் கலங்க வைத்துவிட்டீர்கள்

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

ஹேமா கூறியது...

//மூங்கிலில்லா காட்டில்
முருங்கையைக் கொண்டா
புல்லாங்குழல் செய்வது?
முடியாத காரியம்
என்பதால் தானே
வாழ்க்கைக்கு புதிய
முகவரி கொடுக்க
கடல் கடந்தேன்!.....//
/// அபூ,அருமை.வெளிநாடு தனிமை தந்த வலியான வரிகள்.
தொடருங்கள்.கவிதை என்பதே அனுபவ வலிகள்தானே.///

ரொம்ப நன்றி ஹேமா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.....

அடிக்கடி வந்து போங்க.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

நிலாமதி கூறியது...

//தனிமையில் இருந்து சிந்திக்கும்போது வாழ்கை அழகான் பாடத்தை கற்று தரும் .அனுபவங்களில் இருந்து புரிந்து கொள்ளுங்கள். வாழ்வு வளமாகும் . சிந்தித்து தெளிவு பெற வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும் நம்புங்கள். நட்புடன் நிலாமதி///

ரொம்ப நன்றி நிலாமதி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

சந்ரு கூறியது...

//(என் வாழ்க்கையில் நடந்த சில கசப்பான சம்பவங்கள் தான் கவிதையாய் உறுப் பெற்றிருக்கிறது. மன்னித்துக் கொள்ளுங்கள்....)//


இந்த ஏக்கத்தை விடுங்கள் வரும்போது எவரும் எதையும் கொண்டு வந்தவரில்லை. நமக்குக்கீள் இருப்பவர்களைப் பற்றி யோசியுங்கள். நம் வாழ்க்கை மீள் என்பது புரியும்.


உங்கள் வாழ்க்கைக்கும் மாடுமல்ல என் வாழ்க்கைக்கும் பொருந்தும்.

////என் பழைய நினைவுகளை மீட்டு சிறிது நேரம் கண் கலங்க வைத்துவிட்டீர்கள்///

அன்றாடம் சில கசப்பான சம்பவங்களை சந்திப்பதால் தான் இப்படியான சில ஏக்கங்கள் சந்ரு.....

ரொம்ப நன்றி சந்ரு உங்கள் வருகைக்கும், ஆறுதலான கருத்துக்கும்......

Unknown சொன்னது…

1st time...

சுசி சொன்னது…

உங்க வலி புரியுது அபூ. பழசை எல்லாம் விட்டு தள்ளுங்க. நாங்க இருக்கோம்ல புது நண்பர்கள். எல்லாருக்கும் எதோ ஒரு வலி எப்பவும் இருக்கத்தான் செய்யும். அதுவும் புலம் பெயரும்போது கடுகு கூட மலை மாதிரிதான் தெரியும்.

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

Asfer கூறியது...

///1st time...////

ரொம்ப நன்றி அஸ்பெர் உங்கள் முதல் வருகைக்கு.....

இனி அடிக்கடி வந்து போங்க.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

சுசி கூறியது...

/// உங்க வலி புரியுது அபூ. பழசை எல்லாம் விட்டு தள்ளுங்க. நாங்க இருக்கோம்ல புது நண்பர்கள். எல்லாருக்கும் எதோ ஒரு வலி எப்பவும் இருக்கத்தான் செய்யும். அதுவும் புலம் பெயரும்போது கடுகு கூட மலை மாதிரிதான் தெரியும்.///

தினம் இணையத்தில் சந்திக்கும் நண்பர்களால் தான் கொஞ்சமாவது வெளியில் சிரித்துக் கொண்டிருக்கிறேன் சுசி, பழைய சூல்நிலயிளிரிந்து இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாய் மாறிக் கொண்டு வருகிறேன். சீக்கிரம் மாறிடலாம்.... இல்ல.. இல்ல... மாறிடுவேன்....

ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்......

Unknown சொன்னது…

"கவிழ்த்துவிடு கவலைகளை..
ஏனெனில் அது உன்னை கடுப்பாக்கும் வடுக்கள் தான்...
ஆறுதல் சொல்ல நான் சின்னவன்....
இருந்தும் - கேட்கவில்லை மனம்..."

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

UsaMa கூறியது...

//// "கவிழ்த்துவிடு கவலைகளை..
ஏனெனில் அது உன்னை கடுப்பாக்கும் வடுக்கள் தான்...
ஆறுதல் சொல்ல நான் சின்னவன்....
இருந்தும் - கேட்கவில்லை மனம்..."///

ரொம்ப நன்றி உஸாமா.... முதல் முறையாக பின்னூட்டல் இட்டிருக்கீங்க.

அடிக்கடி வந்து போங்க.... உங்க ஆறுதல் வார்த்தைக்கு ரொம்ப நன்றிங்க.....

kuma36 சொன்னது…

//////////////////
அழகு, அறிவு, அந்தஸ்து
இதைப் பார்த்துத் தானா அன்பு வரும்?
மன்னிக்க வேண்டும்.....
அழகு என்பது என் அகமதைத் தவிர
புறமெங்கும் இல்லை.....
அறிவு ஏதோ இறைவன் புண்ணியம்....
அந்தஸ்து என்பது அடுத்த வீட்டுக் காரன்
அடுக்கு மாடி கூட
வர்த்தக மையம் தான்!,
/////////////

அருமையான் வரிகள் நண்பா! இது உண்மையும் யதார்த்தமும் கூட

யாழினி சொன்னது…

அபூ பக்கர் த‌ங்க‌ளுக்கு சுவராஷ்ய பதிவர் விருது கொடுத்துள்ளேன்

www.nilavil-oru-thesam.blogspot.com


ஏற்றுக்கொள்ள‌வும்.

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

கலை - இராகலை கூறியது...

//////////////////
அழகு, அறிவு, அந்தஸ்து
இதைப் பார்த்துத் தானா அன்பு வரும்?
மன்னிக்க வேண்டும்.....
அழகு என்பது என் அகமதைத் தவிர
புறமெங்கும் இல்லை.....
அறிவு ஏதோ இறைவன் புண்ணியம்....
அந்தஸ்து என்பது அடுத்த வீட்டுக் காரன்
அடுக்கு மாடி கூட
வர்த்தக மையம் தான்!,
/////////////

////அருமையான் வரிகள் நண்பா! இது உண்மையும் யதார்த்தமும் கூட///

ரொம்ப நன்றி உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும்.....

அடிக்கடி வந்து போங்க.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

யாழினி கூறியது...

அபூ பக்கர் த‌ங்க‌ளுக்கு சுவராஷ்ய பதிவர் விருது கொடுத்துள்ளேன்

www.nilavil-oru-thesam.blogspot.com


//ஏற்றுக்கொள்ள‌வும்.////

ஓகே..... ஆனந்தத்தோடு ஏற்றுக் கொண்டேன்....

ரொம்ப நன்றி.....

Muruganandan M.K. சொன்னது…

"நேசக் காற்று இல்லாததினால்
இப்போதெல்லாம் சோகக் காற்று தான்
வெற்றிடமான இதயத்தில்.." உள்ளத்தை அழுத்தும் வரிகள். ரசித்தேன்.

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

Dr.எம்.கே.முருகானந்தன் கூறியது...

/// "நேசக் காற்று இல்லாததினால்
இப்போதெல்லாம் சோகக் காற்று தான்
வெற்றிடமான இதயத்தில்.." உள்ளத்தை அழுத்தும் வரிகள். ரசித்தேன்.////

ரொம்ப நன்றி டாக்டர் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.....