ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2009

தனிமை எனும் விதி....
தனிமை தான் வாழ்க்கையின்
அர்த்தங்களை உணர்த்திச் செல்கின்றன!...

உன்னைப் போல் தான் நானும்
உற்றம் இழந்து இன்று
தனிமைப் பட்டிருக்கிறேன்!....

என்றோ ஓர் நாள்
நானும் ஒரு ரோஜாவாய்
கண்ணில் தென் பட்டால்
தலையில் ஏறி உட்கார்ந்திருப்பேன்!...
மறுகனம் வாடிவிட்டால்
பலர் கால்களால்
பதம் பார்க்கப் படுவேன்!....

இது தான் உற்றம் இழந்து
தனிமைப் பட்டிருக்கும்
உனதும், எனதும் விதி!.......

12 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

அபூ,தனிமை-உறவுகளின் பிரிவு-தனித்த இயக்கம் அத்தனையும் உங்களைப் புடம் போடும்.மிக மிக கவனமாகச் செயல்படுங்கள்.எத்தனை வருடங்கள் ஆனாலும் மனிதர்களின் மனங்களைக் கண்டே பிடிக்க முடியாது.அதுவும் தனித்து அன்புக்காக ஏங்கும் உள்ளங்களைச் சுலபமாக ஏமாற்றிவிடலாம்.அனுபவப் படுங்கள்.அகப்பட்டுக் கொள்ளாதீர்கள்.

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

ஹேமா கூறியது...

/// அபூ,தனிமை-உறவுகளின் பிரிவு-தனித்த இயக்கம் அத்தனையும் உங்களைப் புடம் போடும்.மிக மிக கவனமாகச் செயல்படுங்கள்.எத்தனை வருடங்கள் ஆனாலும் மனிதர்களின் மனங்களைக் கண்டே பிடிக்க முடியாது.அதுவும் தனித்து அன்புக்காக ஏங்கும் உள்ளங்களைச் சுலபமாக ஏமாற்றிவிடலாம்.அனுபவப் படுங்கள்.அகப்பட்டுக் கொள்ளாதீர்கள்.///

ரொம்ப நன்றி ஹேமா உங்களுடைய ஆறுதலான பின்னூட்டலுக்கும் , நீங்கள் கொடுத்த ஒரு தன்னம்பிக்கைக்கும்..... அனுபவப் படுகிறேன்.... ஒரு போதும் அகப் பட மாட்டேன்....

ரொம்ப நன்றி ஹேமா.......

நிலாமதி சொன்னது…

தனிமை கொடிது . ஆனால் உங்களை உயர்ந் நிலையில் வைக்கும் .உலகத்தை , உறவுகளை பற்றி சிந்திக்க தூண்டும் நன்மை தீமை எடை போடவைக்கும் . ஆனால் உங்கள் திறமைகள் ரோஜாவின் மணம் போல உறவுகளை சேர்ந்திருக்கும் . தனிமைக்காலம் முடிந்து இனிமையான் எதிகாலத்துக்கு வாழ்த்துக்கள். நிலாமதி அக்கா

குறை ஒன்றும் இல்லை !!! சொன்னது…

:(

S.A. நவாஸுதீன் சொன்னது…

தனிமை பற்றி கவலை வேண்டாம் அபூ. தனிமையிலேதான் நம் தனித்துவம் நமக்கு புரியும்

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

நிலாமதி கூறியது...

//தனிமை கொடிது . ஆனால் உங்களை உயர்ந் நிலையில் வைக்கும் .உலகத்தை , உறவுகளை பற்றி சிந்திக்க தூண்டும் நன்மை தீமை எடை போடவைக்கும் . ஆனால் உங்கள் திறமைகள் ரோஜாவின் மணம் போல உறவுகளை சேர்ந்திருக்கும் . தனிமைக்காலம் முடிந்து இனிமையான் எதிகாலத்துக்கு வாழ்த்துக்கள். நிலாமதி அக்கா///

ரொம்ப நன்றி நிலாமதி அக்கா உங்கள் வருகைக்கும், ஆறுதலான கருத்துக்கும்.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

குறை ஒன்றும் இல்லை !!! கூறியது...

// :(///

என்ன சார்?... எதுவுமே சொல்லாம போய்ட்டீங்க?.... முடியலையா?...

உங்கள் வருகைக்கு ரொம்ப நன்றி....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

S.A. நவாஸுதீன் கூறியது...

/// தனிமை பற்றி கவலை வேண்டாம் அபூ. தனிமையிலேதான் நம் தனித்துவம் நமக்கு புரியும்////

ரொம்ப நன்றி அண்ணா.....

என் கவலைகள் எல்லாம் பறந்தோடி விட்டன சில ஆறுதலான பின்னூட்டங்கள் மூலம். இனி என் சந்தோஷங்கள் நிச்சயம் கவிதையாய் வரக் காத்திருக்கிறது அண்ணா....

ரொம்ப நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்....

சுசி சொன்னது…

கவலைப்படாதீங்க அபூ. தனிமையில்தான் உறவுகள் இன்னும் நெருக்கமாகும் என்பது என் சொந்த அனுபவம்.
நிழலின் அருமை வெயிலில்தானே தெரிகிறது....

வால்பையன் சொன்னது…

இதற்கு நான் வைக்கும் தலைப்பு!

”ரோஜாவும் அதன் ராஜாவும்!”

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

சுசி கூறியது...

///கவலைப்படாதீங்க அபூ. தனிமையில்தான் உறவுகள் இன்னும் நெருக்கமாகும் என்பது என் சொந்த அனுபவம்.
நிழலின் அருமை வெயிலில்தானே தெரிகிறது...///

ரொம்ப நன்றி சுசி உங்கள் ஆறுதலான பின்னூட்டத்திற்கும், வருகைக்கும்.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

வால்பையன் கூறியது...

இதற்கு நான் வைக்கும் தலைப்பு!

//”ரோஜாவும் அதன் ராஜாவும்!”///

ஓஹோ.... நான் முந்திக் கொண்டேனோ?...... ஓகே.... உங்களுடைய ஆசையும் நிறைவேரட்டுமே....

ரொம்ப நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.......