செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

அவன் ஒரு அறிவிப்பாளன்







பூப் பூக்கையில் அதற்கு
பல அர்த்தம் சொல்கிறான்....
அதை மலர்களும் உணர்கிறது,
மனிதனும் உணர்கிறான்!....
ஏனெனில் அவன் ஒரு அறிவிப்பாளன்!....

ராகம் இசைக்கும்
காலைப் பொழுதில்
ராகம் இன்றி ராகம் இசைக்கிறான்
வாய் திறந்து வெறும் வார்த்தைகளால்!...
ஏனெனில் அவன் ஒரு அறிவிப்பாளன்!...



வினோதமாய் வியூகிக்க
சில விடயங்களை விரித்து வைக்கிறான்!..
கிடைக்கும் சில விடயங்களை
சிறப்பாய் விமர்சனம் செய்கிறான்!....
ஏனெனில் அவன் ஒரு அறிவிப்பாளன்!....

பகற் பொழுதில்
பட்டினியால் வாடுவோர் கூட
உள் உணர்வுகளால் வாடக் கூடாது
என்பதற்காக பகற் பந்தி வைக்கிறான்!..
ஏனெனில் அவன் ஒரு அறிவிப்பாளன்!....



தேடல் என்பதை தேடித் தேடியே
கற்றதையும், அறிந்ததையும்
செவிப் புலன் வரை கொண்டு சேர்கிறான்!
ஏனெனில் அவன் ஒரு அறிவிப்பாளன்!....

எங்கேயும், எப்போதும்
என்றென்றுமே வேண்டும்
புன்னகை என்பதற்காய்
புன்னகையையும், சந்தோசத்தையும்
தனிமையிலே கொடுக்கிறான்!...
ஏனெனில் அவன் ஒரு அறிவிப்பாளன்!...

நேற்றைய காற்றில்
இன்றைய நினைவுகள்
சிறகு விரித்து நிலாச்சோறு
உண்ண ஆசைப் பட்டால்????....
ஊட்டி விடுகிறானே அவன்!...
ஏனெனில் அவன் ஒரு அறிவிப்பாளன்!....



விடிய விடிய விழித்திருந்தாலும்
விருட்சம் கொடுத்து
விடியும் வரை விழியோடு
கதை பேசி....
விடியலுக்கு வெற்றி கொடுக்கிறான்!...
ஏனெனில் அவன் ஒரு அறிவிப்பாளன்!....

உருவாகும் கற்பனைகளுக்கு
அவனது உமிழ்நீரும் உரமாகும்!...
ஏனெனில் அவன் ஒரு அறிவிப்பாளன்!....

கனவோடு வாழ்ந்தவன்
கதை பேசுகிறான்
கவிதையும் பாடுகிறான்!..
அத்தனையும் மற்றவர்கள்
சந்தோசத்துக்காக வேண்டி!....
ஏனெனில் அவன் ஒரு அறிவிப்பாளன்!....

அப்போ நான் வரட்டா!....

உங்கள் நண்பன்

அபூ....

54 கருத்துகள்:

Ramanan சொன்னது…

வாழ்த்துக்கள் சப்ராஸ்

எல்லா வானொலி நிகழ்ச்சிகளையும் திறமையாய் கவிதையில் வடித்திருக்கின்றீர்கள்.உங்களை போலவே அறிவிப்புத்துறையின் மீத அடங்காத ஆசை கொண்ட ஏராளமானவர்கள் இன்னும் அந்த தாகத்தோடும் தவிப்போடும் இருக்கின்றார்கள்.அவர்கள் இட்டு நிரப்ப வேண்டிய இடங்களில் குறுக்கு வழியில் நுழைந்த சிலர் நிரந்தரமாய் தங்கிவிட்டதும் அவர்களால் தமிழ் அறிவிப்புலகம் வெந்து போவதும் சாபம்.என்ன செய்வது மீண்டும் ஒரு நாள் வரும் வானொலிக் காதலர்களின் கைகளில் தமிழ் வானொலிகள் சென்று சேரும் என்ற ஏக்கங்களுடன் ...

Ramanan சொன்னது…

வாழ்த்துக்கள் சப்ராஸ்

எல்லா வானொலி நிகழ்ச்சிகளையும் திறமையாய் கவிதையில் வடித்திருக்கின்றீர்கள்.உங்களை போலவே அறிவிப்புத்துறையின் மீத அடங்காத ஆசை கொண்ட ஏராளமானவர்கள் இன்னும் அந்த தாகத்தோடும் தவிப்போடும் இருக்கின்றார்கள்.அவர்கள் இட்டு நிரப்ப வேண்டிய இடங்களில் குறுக்கு வழியில் நுழைந்த சிலர் நிரந்தரமாய் தங்கிவிட்டதும் அவர்களால் தமிழ் அறிவிப்புலகம் வெந்து போவதும் சாபம்.என்ன செய்வது மீண்டும் ஒரு நாள் வரும் வானொலிக் காதலர்களின் கைகளில் தமிழ் வானொலிகள் சென்று சேரும் என்ற ஏக்கங்களுடன் ...

S.A. நவாஸுதீன் சொன்னது…

தாளம் வானொலியிலும் , வசந்தம் வானொலியிலும் அறிவிப்பாளராய் பணிபுரிந்த உங்களின் திறமை தெரிகிறது அபூ. வாழ்த்துக்கள்.

குறை ஒன்றும் இல்லை !!! சொன்னது…

நல்லா இருக்கும் போல இருக்கு.. ஆனா வானொலி கேட்கிறது இல்லாததால எனக்கு தான் ஒண்ணுமே புரியல :)

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

ரமணன் கூறியது...

///வாழ்த்துக்கள் சப்ராஸ்

எல்லா வானொலி நிகழ்ச்சிகளையும் திறமையாய் கவிதையில் வடித்திருக்கின்றீர்கள்.உங்களை போலவே அறிவிப்புத்துறையின் மீத அடங்காத ஆசை கொண்ட ஏராளமானவர்கள் இன்னும் அந்த தாகத்தோடும் தவிப்போடும் இருக்கின்றார்கள்.அவர்கள் இட்டு நிரப்ப வேண்டிய இடங்களில் குறுக்கு வழியில் நுழைந்த சிலர் நிரந்தரமாய் தங்கிவிட்டதும் அவர்களால் தமிழ் அறிவிப்புலகம் வெந்து போவதும் சாபம்.என்ன செய்வது மீண்டும் ஒரு நாள் வரும் வானொலிக் காதலர்களின் கைகளில் தமிழ் வானொலிகள் சென்று சேரும் என்ற ஏக்கங்களுடன் ////

ரொம்ப நன்றி ரமணன் அண்ணா உங்கள் முதல் பின்னூட்டத்திற்கு....

சிறு வயதிலிருந்தே அறிவிப்பாளராய் வர வேண்டும் எனக் கனாக் கண்டு வாழ்ந்தவன் உங்களைப் போல மூத்த அறிவிப்பாளர்களது திறமைகளால் என்னை நான் வளர்த்துக் கொண்ட பல சந்தர்ப்பங்கள் இருக்கிறது. நீங்கள் ஒலி அலையில் காணாமற் போன பொழுதுகளில் ஒலிப் பேழையில் பதிவு செய்து பயிற்சி பண்ணிய காலங்களும் இருக்கிறது அண்ணா.... தமிழை தமிழால் வளர்ப்பவர்கள் எங்கேயும் தலை சாய்க்கப் பட மாட்டார்கள் என்ற நம்பிக்கையோடு போராடும் அண்ணா.....

ரொம்ப நன்றி அண்ணா மீண்டும் உங்களுக்கு....அடிக்கடி வந்து போங்க.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

S.A. நவாஸுதீன் கூறியது...

//// தாளம் வானொலியிலும் , வசந்தம் வானொலியிலும் அறிவிப்பாளராய் பணிபுரிந்த உங்களின் திறமை தெரிகிறது அபூ. வாழ்த்துக்கள்.////

ரொம்ப நன்றி S.A. நவாஸுதீன் அண்ணா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

குறை ஒன்றும் இல்லை !!! கூறியது...

//நல்லா இருக்கும் போல இருக்கு.. ஆனா வானொலி கேட்கிறது இல்லாததால எனக்கு தான் ஒண்ணுமே புரியல :)////

இனியாவது கேட்க முயற்சி பண்ணுக அண்ணா.... நல்ல நல்ல பாடல் எல்லாம் தருவாங்க.... ரொம்ப ஜாலியா பேசுவாங்க..... நல்ல கருத்துக்கள் சொல்லுவாங்க... (லொள்....)

ரொம்ப நன்றி குறை ஒன்றும் இல்லை உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.......

நிலாமதி சொன்னது…

மல்லிகை மொட்டு விரிந்ததை அறிவிப்பது காற்று அதே போல செவிக்கு இன்பத்தியும் உள்ளத்துக்கு மகிழ்வையும், அறிவிப்பது அறிவிப்பாளனின் திறமையும் குரல் வளமும் ,அதன் பாங்கும் . அவன் ஒரு கலைஞ்ன் ஒலியோடு ஒன்றிக்கும்போது உலகையே மறக்கிறான். பதிவுக்கு நன்றியும் பாராடுக்களும்.

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

நிலாமதி கூறியது...

/// மல்லிகை மொட்டு விரிந்ததை அறிவிப்பது காற்று அதே போல செவிக்கு இன்பத்தியும் உள்ளத்துக்கு மகிழ்வையும், அறிவிப்பது அறிவிப்பாளனின் திறமையும் குரல் வளமும் ,அதன் பாங்கும் . அவன் ஒரு கலைஞ்ன் ஒலியோடு ஒன்றிக்கும்போது உலகையே மறக்கிறான். பதிவுக்கு நன்றியும் பாராடுக்களும்.////

ரொம்ப நன்றி நிலாமதி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்......

வேந்தன் சொன்னது…

ரமணன் அண்ணா சொன்னதை வழிமொழிகின்றேன்.
கவிதை நல்லா இருக்கு, வாழ்த்துக்கள்.

சத்ரியன் சொன்னது…

//கனவோடு வாழ்ந்தவன்
கதை பேசுகிறான்
கவிதையும் பாடுகிறான்!..
அத்தனையும் மற்றவர்கள்
சந்தோசத்துக்காக வேண்டி!....
ஏனெனில் அவன் ஒரு அறிவிப்பாளன்!....//

அபூ,

அசத்துறீங்களே! கவிதையே இத்தனை இனிமையாய் எழுதும் நீங்கள், வானொலி நிகழ்ச்சியை எவ்வளவு இனிமையாய் படைப்பாய்! என் செவிகளுக்குத்தான், உங்கள் குரல் கேட்க கொடுத்து வைக்கவில்லையென நினைக்கிறேன்.

கலைஞனும், கவிஞனும் நீ!

வால்பையன் சொன்னது…

நல்ல அறிவிப்பாளன்!

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

வேந்தன் கூறியது...

///ரமணன் அண்ணா சொன்னதை வழிமொழிகின்றேன்.
கவிதை நல்லா இருக்கு, வாழ்த்துக்கள்.////

ரொம்ப நன்றி வேந்தன் உங்கள் முதல் வருகைக்கும்.... கருத்துக்கும்....

இனி அடிக்கடி வந்து போங்க....

சுசி சொன்னது…

//பூப் பூக்கையில் அதற்கு
பல அர்த்தம் சொல்கிறான்....
அதை மலர்களும் உணர்கிறது,
மனிதனும் உணர்கிறான்!....
ஏனெனில் அவன் ஒரு அறிவிப்பாளன்!....//
//நேற்றைய காற்றில்
இன்றைய நினைவுகள்
சிறகு விரித்து நிலாச்சோறு
உண்ண ஆசைப் பட்டால்????....
ஊட்டி விடுகிறானே அவன்!...
ஏனெனில் அவன் ஒரு அறிவிப்பாளன்!....//

நல்லாருக்கு அபூ..

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

சத்ரியன் கூறியது...

//கனவோடு வாழ்ந்தவன்
கதை பேசுகிறான்
கவிதையும் பாடுகிறான்!..
அத்தனையும் மற்றவர்கள்
சந்தோசத்துக்காக வேண்டி!....
ஏனெனில் அவன் ஒரு அறிவிப்பாளன்!....//

அபூ,

/// அசத்துறீங்களே! கவிதையே இத்தனை இனிமையாய் எழுதும் நீங்கள், வானொலி நிகழ்ச்சியை எவ்வளவு இனிமையாய் படைப்பாய்! என் செவிகளுக்குத்தான், உங்கள் குரல் கேட்க கொடுத்து வைக்கவில்லையென நினைக்கிறேன்.

கலைஞனும், கவிஞனும் நீ!///

உண்மையில் ஒரு கலைஞனின் வெற்றிக்கு முதல் காரணி அடுத்தவர்கள் கொடுக்கும் ஆதரவும், உற்சாகமும் தான்......

நிச்சயம் மீண்டும் ஒரு நாள் அறிவிப்பாளனாய் உங்கள் அனைவரையும் சந்திப்பேன் என்கிற நம்பிக்கையில் காத்திருக்கிறேன்.... பிரார்த்தித்துக் கொள்ளுங்கள்....

ரொம்ப நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும்... கருத்துக்கும்.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

வால்பையன் கூறியது...

/// நல்ல அறிவிப்பாளன்!///

யாரு?... கவிதைல வந்த அறிவிப்பாளர சொன்னீங்களா?... இல்லன்னா என்ன சொன்னீங்களா?... லொள்.....

ரொம்ப நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்......

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

சுசி கூறியது...

//பூப் பூக்கையில் அதற்கு
பல அர்த்தம் சொல்கிறான்....
அதை மலர்களும் உணர்கிறது,
மனிதனும் உணர்கிறான்!....
ஏனெனில் அவன் ஒரு அறிவிப்பாளன்!....//
//நேற்றைய காற்றில்
இன்றைய நினைவுகள்
சிறகு விரித்து நிலாச்சோறு
உண்ண ஆசைப் பட்டால்????....
ஊட்டி விடுகிறானே அவன்!...
ஏனெனில் அவன் ஒரு அறிவிப்பாளன்!....//

///நல்லாருக்கு அபூ..///

உம் போன்ற என் நண்பர்கள் தரும் ஆதரவு தான் என்னை இப்படியெல்லாம் எழுத வைக்கிறது. தொடர்ந்தும் ஆதரவு நல்குவீர்கள் என நினைக்கிறேன்...

ரொம்ப நன்றி சுசி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்......

க.பாலாசி சொன்னது…

//எங்கேயும், எப்போதும்
என்றென்றுமே வேண்டும்
புன்னகை என்பதற்காய்
புன்னகையையும், சந்தோசத்தையும்
தனிமையிலே கொடுக்கிறான்!...
ஏனெனில் அவன் ஒரு அறிவிப்பாளன்!...//


//விடிய விடிய விழித்திருந்தாலும்
விருட்சம் கொடுத்து
விடியும் வரை விழியோடு
கதை பேசி....
விடியலுக்கு வெற்றி கொடுக்கிறான்!...
ஏனெனில் அவன் ஒரு அறிவிப்பாளன்!....//

//கனவோடு வாழ்ந்தவன்
கதை பேசுகிறான்
கவிதையும் பாடுகிறான்!..
அத்தனையும் மற்றவர்கள்
சந்தோசத்துக்காக வேண்டி!....
ஏனெனில் அவன் ஒரு அறிவிப்பாளன்!....//

மேற்கண்ட வரிகளை மிகவும் ரசித்தேன் நண்பா. அருமையாக வடித்துள்ளீர்கள். தாங்கள் அறிப்பாளரா?

மொத்த கவிதையும் அருமை... படித்தேன் ரசித்தேன்.

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

ரஹ்மான் கூறியது...

////உங்கள் வலைப் பக்கத்திற்காக ஒரு பதிவு,
http://tamilbazaar.blogspot.com/2009/08/blog-post_676.html///

ரொம்ப நன்றி உங்கள் பதிவிற்கு.... நானும் முயற்சி பண்ணினேன்.... ஓரளவு வெற்றி கண்டேன்... கொஞ்சம் பாருங்கள் அண்ணா......

Vidhoosh சொன்னது…

/./நேற்றைய காற்றில்
இன்றைய நினைவுகள்
சிறகு விரித்து நிலாச்சோறு
உண்ண ஆசைப் பட்டால்????....
ஊட்டி விடுகிறானே அவன்!...//

i enjoyed these lines.

vidhya

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

க. பாலாஜி கூறியது...

//எங்கேயும், எப்போதும்
என்றென்றுமே வேண்டும்
புன்னகை என்பதற்காய்
புன்னகையையும், சந்தோசத்தையும்
தனிமையிலே கொடுக்கிறான்!...
ஏனெனில் அவன் ஒரு அறிவிப்பாளன்!...//


//விடிய விடிய விழித்திருந்தாலும்
விருட்சம் கொடுத்து
விடியும் வரை விழியோடு
கதை பேசி....
விடியலுக்கு வெற்றி கொடுக்கிறான்!...
ஏனெனில் அவன் ஒரு அறிவிப்பாளன்!....//

//கனவோடு வாழ்ந்தவன்
கதை பேசுகிறான்
கவிதையும் பாடுகிறான்!..
அத்தனையும் மற்றவர்கள்
சந்தோசத்துக்காக வேண்டி!....
ஏனெனில் அவன் ஒரு அறிவிப்பாளன்!....//
////
மேற்கண்ட வரிகளை மிகவும் ரசித்தேன் நண்பா. அருமையாக வடித்துள்ளீர்கள். தாங்கள் அறிப்பாளரா?

மொத்த கவிதையும் அருமை... படித்தேன் ரசித்தேன்.////

2 வருடங்கள் அறிவிப்பாளராய் பனி புரிந்தவன்.... இப்போது வெளிநாட்டில் பணி புரிகிறேன்... மீண்டும் அறிவிப்பாளராய் சந்திக்கும் வரையில் பதிவுகளோடு தான் இனி அடிக்கடி சந்திக்கலாம்.....

ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்...

அடிக்கடி வந்து போங்க.....

Btc Guider சொன்னது…

பார்த்தாச்சு நண்பரே.

Hisham Mohamed - هشام சொன்னது…

பராட்டுக்கள் சப்ராஸ் அபூ பக்கர் நல்ல கவிதை...............

//குறுக்கு வழியில் நுழைந்த சிலர் நிரந்தரமாய் தங்கிவிட்டதும் அவர்களால் தமிழ் அறிவிப்புலகம் வெந்து போவதும் சாபம்.//உண்மைதான் ரமணன்.....

யோ வொய்ஸ் (யோகா) சொன்னது…

அருமையாக இருக்கிறது உங்கள் கவிதை எல்லா வித வானொலி நிகழ்ச்சிகளையும் கலந்து ஒரு கலக்கல் பதிவு. வாழ்த்துக்கள் நண்பரே.

பின்னூட்ட தளபதி வால்பையன் என்றால் பின்னூட்ட தல நீங்கள் தான்

என்ன கொடும சார் சொன்னது…

அழாகாக இருக்கிறது.. அலுவலகத்தில் திருடன் போல் blogகளை எட்டி பார்ப்பதால் கவிதைகளை வாசிக்கும் free யான மன நிலை ரொம்ப கஷ்டம். இருந்தாலும் தொடர்ந்து உங்களை வாசிக்கிறேன்..

RAMYA சொன்னது…

வானொலி நிகழ்ச்சி கலக்கல் கலந்த
கவிதை வரிகளின் கலக்கல்கள்!!

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

Vidhoosh கூறியது...

/./நேற்றைய காற்றில்
இன்றைய நினைவுகள்
சிறகு விரித்து நிலாச்சோறு
உண்ண ஆசைப் பட்டால்????....
ஊட்டி விடுகிறானே அவன்!...//

//// i enjoyed these lines.

vidhya/////

ரொம்ப நன்றி வித்யா உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும்.....

அடிக்கடி வந்து போங்க......

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

Hisham Mohamed - هشام கூறியது...

/// பராட்டுக்கள் சப்ராஸ் அபூ பக்கர் நல்ல கவிதை...............

ரொம்ப நன்றி ஹிஷாம் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்....

அடிக்கடி வந்து போங்க......


//குறுக்கு வழியில் நுழைந்த சிலர் நிரந்தரமாய் தங்கிவிட்டதும் அவர்களால் தமிழ் அறிவிப்புலகம் வெந்து போவதும் சாபம்.//உண்மைதான் ரமணன்.....///


அதை நானும் வழிமொழிகிறேன்....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

யோ (Yoga) கூறியது...

////அருமையாக இருக்கிறது உங்கள் கவிதை எல்லா வித வானொலி நிகழ்ச்சிகளையும் கலந்து ஒரு கலக்கல் பதிவு. வாழ்த்துக்கள் நண்பரே.////

ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.....

///பின்னூட்ட தளபதி வால்பையன் என்றால் பின்னூட்ட தல நீங்கள் தான்///


என்னக இது?..... வால்?? தல?.... ஒண்ணுமே புரியாம இருக்க முடியாது இல்லையா?... அதனால புரிஞ்சுட்டேன்....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

என்ன கொடும சார் கூறியது...

////அழாகாக இருக்கிறது.. அலுவலகத்தில் திருடன் போல் blogகளை எட்டி பார்ப்பதால் கவிதைகளை வாசிக்கும் free யான மன நிலை ரொம்ப கஷ்டம். இருந்தாலும் தொடர்ந்து உங்களை வாசிக்கிறேன்..///

அட.... அங்கயுமா?.... நாங்களும் இங்க அதைத் தானே பண்றோம்..... என்ன செய்ய? ஒரு வலைப் பதிவையாவது மேயா விட்டால் அன்றைய நாளே வேண்டாம் என்று போய் விடும்....

ரொம்ப நன்றி சார் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

RAMYA கூறியது...

///வானொலி நிகழ்ச்சி கலக்கல் கலந்த
கவிதை வரிகளின் கலக்கல்கள்!!///

ரொம்ப நன்றி ரம்யா உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும்......

அடிக்கடி வந்து போங்க.....

யோ வொய்ஸ் (யோகா) சொன்னது…

அப்ப ரம்யா மட்டும் தான் அடிக்கடி வந்து போகனுமா? நாங்கெல்லாம் வேண்டாமா சப்ராஸ்?

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

யோ வாய்ஸ் கூறியது...

//அப்ப ரம்யா மட்டும் தான் அடிக்கடி வந்து போகனுமா? நாங்கெல்லாம் வேண்டாமா சப்ராஸ்?///


பார்த்தீங்களா?.... பார்த்தீங்களா?.... எல்லோருக்கும் சேர்த்து தான் அப்பப்போ அங்கங்க அப்படி எழுதி விடுகிறேன். எல்லோருக்கும் அப்படி எழுதினால்... ??.... சாரிங்க.... மன்னிச்சுக்குவீங்களா?....

யோ!..... இனி அடிக்கடி வந்து போங்க......

யோ வொய்ஸ் (யோகா) சொன்னது…

சும்மா சொன்னேங்க கட்டாயம் முதல் ஆளா உங்க தளத்துக்கு வருவேன்.

தல உங்க பதிவுக்கு ரசிகன் நான்

ARV Loshan சொன்னது…

ஆகா.. ஒரு கவிதையுனுள்ளே இத்தனை நிகழ்ச்சிகளா?

அபாரம்.. உங்கள் ரசனை, கவிதையுள்ளம் ஆகியன கண்டேன்..

வாழ்த்துக்கள் காரணம் நானும் நீரும் ஒலிபரப்பாளர்கள் தான்.. :)

திறமைக்கு எப்போதும் எங்கேயும் இடமுண்டு..எத்தனை இடர் வரினும் உண்மைத்திறமை எப்போதும் வெளிவந்து மிளிரும்..

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

LOSHAN கூறியது...

ஆகா.. ஒரு கவிதையுனுள்ளே இத்தனை நிகழ்ச்சிகளா?

////அபாரம்.. உங்கள் ரசனை, கவிதையுள்ளம் ஆகியன கண்டேன்..

வாழ்த்துக்கள் காரணம் நானும் நீரும் ஒலிபரப்பாளர்கள் தான்.. :)

திறமைக்கு எப்போதும் எங்கேயும் இடமுண்டு..எத்தனை இடர் வரினும் உண்மைத்திறமை எப்போதும் வெளிவந்து மிளிரும்..////

ரொம்ப நன்றி லோஷன் அண்ணா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்......

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

யோ வாய்ஸ் கூறியது...

/// சும்மா சொன்னேங்க கட்டாயம் முதல் ஆளா உங்க தளத்துக்கு வருவேன்.

தல உங்க பதிவுக்கு ரசிகன் நான்///

அப்போ அடிக்கடி வந்து போங்க.... (இது எப்புடி?..... லொள்......)

Eswari சொன்னது…

மிகவும் அழகா எழுதி இருக்கீங்க
உங்க தொழிலை ரசிச்சு இருக்கீங்க
பிறரையும் ரசிக்கவச்சு இருக்குங்க.
௱ சபாஷ்கள்

Eswari சொன்னது…

மிகவும் அழகா எழுதி இருக்கீங்க
உங்க தொழிலை ரசிச்சு இருக்கீங்க
பிறரையும் ரசிக்கவச்சு இருக்குங்க.
100 சபாஷ்கள்

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

Eswari கூறியது...

/// மிகவும் அழகா எழுதி இருக்கீங்க
உங்க தொழிலை ரசிச்சு இருக்கீங்க
பிறரையும் ரசிக்கவச்சு இருக்குங்க.
100 சபாஷ்கள்///

ரொம்ப நன்றி, நன்றி... Eswari (2 முறை பின்னூட்டல் இட்டிருக்கீங்க இல்லையா?.. ஹி...ஹி...) உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.....

RAMYA சொன்னது…

என்ன நடக்குது இங்கே :))

அஹா ஒரே ரணகளமாயிடுச்சோ :))

யோ வொய்ஸ் (யோகா) சொன்னது…

ரணகளம் எல்லாம் இல்ல..

நாங்க செத்து செத்து விளையாண்டோம்.

RAMYA சொன்னது…

ஓ அப்படியா சூப்பர் விளையாட்டு போங்க :))

நல்லா விளையாடுங்க

இடுகையும் நல்லா இருக்கு, விளையாட்டும் நல்லா இருக்கு :))

ஹேமா சொன்னது…

அருமை அபூ.சொர்க்கமான வாழ்வை விட்டிவிட்டு வந்திருக்கிறீர்கள்.என்ன செய்வது.எம் விதி.

எனக்குத் தெரிந்த அறிவிப்பாளர் முன்பு சூரியன் FM ல் வேலை பார்த்த தீபசுதன் எனக்கு அறிமுகமானவர்.
அவர்போல ரமணன்,இந்திரஜித்தும் எனக்குத் தெரிந்தவர்கள்.

உங்களுக்கு நன்றி அபூ.ரமணன் தளம் சுதன் அறிமுகப்படுத்தினார்.அது பிழையாக இருந்தது.உங்கள் இந்தப் பதிவின் மூலமாக எடுத்துக்கொண்டேன்.

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

RAMYA கூறியது...

என்ன நடக்குது இங்கே :))

/// அஹா ஒரே ரணகளமாயிடுச்சோ :))//

இல்லையே..... எங்க ரம்யா?.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

யோ வாய்ஸ் கூறியது...

////ரணகளம் எல்லாம் இல்ல..

நாங்க செத்து செத்து விளையாண்டோம்.////

அப்படி என்ன தான் சொல்றீங்க?... வேணாம்..... நான் ரொம்ப சின்னப் பையன்.... பின்ன அழுதுருவேன்...... யோ..... வேணாம்....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

RAMYA கூறியது...

ஓ அப்படியா சூப்பர் விளையாட்டு போங்க :))

/// நல்லா விளையாடுங்க

இடுகையும் நல்லா இருக்கு, விளையாட்டும் நல்லா இருக்கு :))//

மேல ஏறி வாரோம்... நீ இறங்கி நில்லு.... (என்ன யோசிக்கிறீங்க?... radio ல நல்ல பாடல் ஒலிபரப்பி இருக்காங்க.... அதத்தான் நான் சொன்னனே.... ஹி... ஹி.... )

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

ஹேமா கூறியது...

/// அருமை அபூ.சொர்க்கமான வாழ்வை விட்டிவிட்டு வந்திருக்கிறீர்கள்.என்ன செய்வது.எம் விதி.///

குடும்பமும், நண்பர்களும் சந்தோசமாய் இருந்தால் நம் சாதனையை எப்போதும் நிலை நாட்டிக் கொள்ள முடியும் இல்லையா?.. அவர்கள் சந்தோசம் பெறுவதற்காய்த் தான் நான் கடல் கடந்தேன்... நீங்கள் சொல்வது போல அது என் விதி என்றே சொல்லலாம்......

//எனக்குத் தெரிந்த அறிவிப்பாளர் முன்பு சூரியன் FM ல் வேலை பார்த்த தீபசுதன் எனக்கு அறிமுகமானவர்.
அவர்போல ரமணன்,இந்திரஜித்தும் எனக்குத் தெரிந்தவர்கள்.////

சூரியன் ஆரம்பித்து 3 மாதத்திலிருந்தே சூரியனின் தீவிர ரசிகனாக இருந்தவன் நான். நான் அறிவிப்பாளர் துறைக்கு வருவதற்கு காரணமாய் இருந்தவர்கள் அதிகமானவர்கள் சூரியன் அறிவிப்பாளர்கள் தான். குறிப்பாக வியாசா அண்ணா... ரமணன் அண்ணா... லோஷன் அண்ணா.. கஜன் அண்ணா.... பிரேம் அண்ணா.... இப்படியே நீள்கிறது அந்தப் பட்டியல்.....

///உங்களுக்கு நன்றி அபூ.ரமணன் தளம் சுதன் அறிமுகப்படுத்தினார்.அது பிழையாக இருந்தது.உங்கள் இந்தப் பதிவின் மூலமாக எடுத்துக்கொண்டேன்.///

ரொம்ப நன்றி ஹேமா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்......

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

/ஒரு இருபத்தைந்து, முப்பது வருடங்களுக்கு முன்னால், தமிழனுக்குப் பொழுதுபோக்கக் குறிப்பிட்ட சில விஷயங்கள் தான் இருந்தன. முதலிடம், சிலோன் வானொலி, அதில் அப்பப்பா, அம்மம்மா, சித்தப்பா, பெத்தப்பா, முத்தப்பா என்று ஒருமுன்னூறு பேர்களை மூச்சு விடாமல் வாசித்து விட்டு, இவர்கள் விரும்பிக் கேட்ட பாடல என்று ஒரு திரைப்படப் பாடல் ஒலிபரப்பாகும். இட்லி மாவையே, தோசை, ஊத்தப்பம் என்று விதவிதமாகச் சுடுவது போல, காதல் பாட்டுக்கள், காதலில் தோல்விப்பாட்டுக்கள், தத்துவப் பாட்டுக்கள் என்று வித விதமாக லேபில் வைத்து, அரைத்த மாவையே அரைப்பதற்கு, சிலோன் வானொலி தான் இன்றைக்கும் முன்னோடி என்றால் நம்ப முடிகிறதா? அதுதான் உண்மை!/

இப்படி முந்தைய பதிவொன்றில் எழுதியிருந்தேன். நிறைய அறிவிப்பாளர்கள், குரல் வழியாக இதயம் தொட்டதையும் கடந்த காலத்து நினைவுகள், இலங்கை வானொலியோடு இன்னமும் பசுமையாக இருக்கின்றன.

SShathiesh-சதீஷ். சொன்னது…

எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து கொடுத்து விட்டீர்கள். நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்.
மிக விரைவில் பிரபல அறிவிப்பாளராக வந்து கலக்க வாத்துக்கள். நீங்கள் வானொலி மீது கொண்ட காதல் சந்தோசமாக இருக்கின்றது. கவிதையில் எந்த வரியை விட எதை சொல்ல அத்தனையும் அருமை.

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

கிருஷ்ணமூர்த்தி கூறியது...

/ஒரு இருபத்தைந்து, முப்பது வருடங்களுக்கு முன்னால், தமிழனுக்குப் பொழுதுபோக்கக் குறிப்பிட்ட சில விஷயங்கள் தான் இருந்தன. முதலிடம், சிலோன் வானொலி, அதில் அப்பப்பா, அம்மம்மா, சித்தப்பா, பெத்தப்பா, முத்தப்பா என்று ஒருமுன்னூறு பேர்களை மூச்சு விடாமல் வாசித்து விட்டு, இவர்கள் விரும்பிக் கேட்ட பாடல என்று ஒரு திரைப்படப் பாடல் ஒலிபரப்பாகும். இட்லி மாவையே, தோசை, ஊத்தப்பம் என்று விதவிதமாகச் சுடுவது போல, காதல் பாட்டுக்கள், காதலில் தோல்விப்பாட்டுக்கள், தத்துவப் பாட்டுக்கள் என்று வித விதமாக லேபில் வைத்து, அரைத்த மாவையே அரைப்பதற்கு, சிலோன் வானொலி தான் இன்றைக்கும் முன்னோடி என்றால் நம்ப முடிகிறதா? அதுதான் உண்மை!/

இப்படி முந்தைய பதிவொன்றில் எழுதியிருந்தேன். நிறைய அறிவிப்பாளர்கள், குரல் வழியாக இதயம் தொட்டதையும் கடந்த காலத்து நினைவுகள், இலங்கை வானொலியோடு இன்னமும் பசுமையாக இருக்கின்றன.//

உண்மையில் இலங்கையைப் பொறுத்த வரை அனைத்து வானொலிகளுக்கும் தாய் வானொலி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம். அதன் பின்னால் தான் சூரியன், சக்தி, தாளம், வசந்தம், பிறை, வெளிச்சம், வெற்றி, அக்னி என வானொலிகளின் பெருக்கம் அதிகரித்து விட்டன இலங்கையில். இவ்வனைத்து வானொலிகளிலும் கடமை புரியும் அறிவிப்பாலர்களுக்கெல்லாம் முன் மாதிரியாக இருந்த சிலர் அங்கே தான் உறுப் பெற்றார்கள்.

ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்......

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

சத்தியமூர்த்தி சதீஷன். கூறியது...

///எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து கொடுத்து விட்டீர்கள். நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்.
மிக விரைவில் பிரபல அறிவிப்பாளராக வந்து கலக்க வாத்துக்கள். நீங்கள் வானொலி மீது கொண்ட காதல் சந்தோசமாக இருக்கின்றது. கவிதையில் எந்த வரியை விட எதை சொல்ல அத்தனையும் அருமை.////

ரொம்ப நன்றி சதீஷன் உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும்....

அடிக்கடி வந்து போங்க.....

SUMAZLA/சுமஜ்லா சொன்னது…

கனவென்னும் விதை தூவி, உங்கள் சிந்தனை வயலில், ஆழ உழுதிருக்கிறீர்கள்.

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

SUMAZLA/சுமஜ்லா கூறியது...

// கனவென்னும் விதை தூவி, உங்கள் சிந்தனை வயலில், ஆழ உழுதிருக்கிறீர்கள்.////

ரொம்ப நன்றி சுமஜ்லா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.....