திங்கள், 24 ஆகஸ்ட், 2009

காத்திருப்பு



காற்று மரணித்த பொழுதுகளில்
மறவாமல் வழி மேல்
விழி வைத்தேன்!....

மெளனமான வீணையின்
மொழி அறியாமல்
ராகம் இசைத்தேன்!....

பாலைவனத்து
கள்ளி இலையை
கிள்ளி எடுத்து
வாசனை நுகர்ந்தேன்!.....

நீ நடக்கும் தெருவோர
மருங்குகளில் ரோஜா இதழ் கொண்டு
கம்பளம் விரித்தேன்!....

குயிலின் குரலை விட
இனிதாய் என் குரலை
விழுமியப் படுத்தினேன்!...

உன் பாதச் சுவடுகள் வரைய
அந்த "லியானோ " வின்
முகவரி தேடினேன்!....

என் கவிதை வரிகளை
விஞ்சி நின்ற வைர முத்து
வரிகளைத் தான்
நீ ரசிக்கிறாய் என்றால்
அதற்காகவே வைரமுத்துவின்
பக்கங்களைப் புரட்டினேன்!.....

அமர்தலில் கூட உனக்கு
தனி சுகம் இருப்பதால்
எனக்கும், உனக்குமாய்
தனித் தனி இருக்கைகளை
தயார் செய்தேன்!..

இத்தனையும் ஆன பின்னால்
இதழோரப் புன்னகையை
இரவல் எடுத்துக் கொண்டு
எங்கே நீ சென்றாய்?

வேண்டாம் பெண்ணே!.....
காதலில் காயப் பட்ட
ஆண் மனது உன்னை
ஆண்டுகள் சென்றாலும்
ஆட்டிப் படைக்கும்!....

ஆதலால் கண்ணே!....
ஆசையோடு எதிர் பார்க்கும்
ஆண்மையை நாடி
அன்போடு வந்து விடு!...
ஆவலோடு காத்திருக்கிறேன்!...

எதிர் பார்ப்புக்களுடன்....

உங்கள் நண்பன்

அபூ.......

24 கருத்துகள்:

Unknown சொன்னது…

வரிகள் எல்லாமே நல்லாயிருக்கு //இத்தனையும் ஆன பின்னால்
இதழோரப் புன்னகையை
இரவல் எடுத்துக் கொண்டு
எங்கே நீ சென்றாய்?// அண்ணன் காத்துக்கொண்டுயிருக்காங்க சீக்கரம் வாங்க..

அதிரை அபூபக்கர் சொன்னது…

இதழோரப் புன்னகையை
இரவல் எடுத்துக் கொண்டு
எங்கே நீ சென்றாய்?//
அருமையான வரிகள்..

யோ வொய்ஸ் (யோகா) சொன்னது…

உன் பாதச் சுவடுகள் வரைய
அந்த "லியானோ " வின்
முகவரி தேடினேன்!....

ரசித்து எழுதியிருக்கீங்க வாழ்த்துக்கள் தோழா..

கவிதை நல்லா தான் இருக்கு. உள் கருத்து ஏதும் இருக்கோ? யாரயாவது குறி வச்சி ஏதும் சொல்லலியே?

க.பாலாசி சொன்னது…

//இத்தனையும் ஆன பின்னால்
இதழோரப் புன்னகையை
இரவல் எடுத்துக் கொண்டு
எங்கே நீ சென்றாய்?//

மிகவும் ரசிக்கத்தக்க வரிகள் நண்பா...

கவிதை முழுதும் எதிர்பார்ப்புகள் இரைந்து கிடைக்கின்றனவே...ஏதாவது காரணங்கள்..

S.A. நவாஸுதீன் சொன்னது…

இத்தனையும் ஆன பின்னால்
இதழோரப் புன்னகையை
இரவல் எடுத்துக் கொண்டு
எங்கே நீ சென்றாய்?

முத்திரை பதிக்கும் வரிகள். நல்லா இருக்கு அபூ

நிலாமதி சொன்னது…

நிச்சயம் வருவாள் உங்க எதிர்கால காதலி. உங்க உண்மையான அன்பை உணர்ந்திருந்தால் . எங்கிருந்தாலும் காதல் வாழ்க.

Admin சொன்னது…

அத்தனை வரிகளுக்கு அருமை வாழ்த்துக்கள்...

//வேண்டாம் பெண்ணே!.....
காதலில் காயப் பட்ட
ஆண் மனது உன்னை
ஆண்டுகள் சென்றாலும்
ஆட்டிப் படைக்கும்!....//

அனுபவம் இல்லையே....

சீமான்கனி சொன்னது…

//அமர்தலில் கூட உனக்கு
தனி சுகம் இருப்பதால்
எனக்கும், உனக்குமாய்
தனித் தனி இருக்கைகளை
தயார் செய்தேன்!..//

அருமை வாழ்த்துக்கள்...

சீக்கிரம் ... வாமா....மின்னல்

வால்பையன் சொன்னது…

புரியுது!

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

Mrs.Faizakader கூறியது...

வரிகள் எல்லாமே நல்லாயிருக்கு //இத்தனையும் ஆன பின்னால்
இதழோரப் புன்னகையை
இரவல் எடுத்துக் கொண்டு
எங்கே நீ சென்றாய்?//


//அண்ணன் காத்துக்கொண்டுயிருக்காங்க சீக்கரம் வாங்க..///

எண்ணக நீங்க சொல்றீங்க?. யாருக்காகவும் காத்துக் கொண்டிருக்கல்ல.... ஆனா கவிதை ஏனோ தெரியல.... தானா வருதுங்க..... லொள்......

ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்......

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

அதிரை அபூபக்கர் கூறியது...

இதழோரப் புன்னகையை
இரவல் எடுத்துக் கொண்டு
எங்கே நீ சென்றாய்?//


///அருமையான வரிகள்..////

ரொம்ப நன்றி அபூபக்கர் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

யோ வாய்ஸ் கூறியது...

உன் பாதச் சுவடுகள் வரைய
அந்த "லியானோ " வின்
முகவரி தேடினேன்!....

ரசித்து எழுதியிருக்கீங்க வாழ்த்துக்கள் தோழா..

////கவிதை நல்லா தான் இருக்கு. உள் கருத்து ஏதும் இருக்கோ? யாரயாவது குறி வச்சி ஏதும் சொல்லலியே?////

பின்ன..... அப்படி சொல்லுவோமா நாங்க.... சத்தியமா உள் நோக்கம் எதுவுமே இல்லீங்க. ஆனா ஒன்றுங்க... எல்லாமே நோக்கமாத் தான்....

ரொம்ப நன்றி யோ உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்......

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

க. பாலாஜி கூறியது...

//இத்தனையும் ஆன பின்னால்
இதழோரப் புன்னகையை
இரவல் எடுத்துக் கொண்டு
எங்கே நீ சென்றாய்?//

மிகவும் ரசிக்கத்தக்க வரிகள் நண்பா...

///கவிதை முழுதும் எதிர்பார்ப்புகள் இரைந்து கிடைக்கின்றனவே...ஏதாவது காரணங்கள்..////

சத்தியமா இல்லீங்க.... காலாற நடக்கும் போதெல்லாம் கற்பனைகள் கவிதைகளாகத் தான் கட்டித் தழுவுகின்றன. வேறு காரணம் இல்லவே இல்லீங்க.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

S.A. நவாஸுதீன் கூறியது...

இத்தனையும் ஆன பின்னால்
இதழோரப் புன்னகையை
இரவல் எடுத்துக் கொண்டு
எங்கே நீ சென்றாய்?

///முத்திரை பதிக்கும் வரிகள். நல்லா இருக்கு அபூ////

ரொம்ப நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்......

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

நிலாமதி கூறியது...

////நிச்சயம் வருவாள் உங்க எதிர்கால காதலி. உங்க உண்மையான அன்பை உணர்ந்திருந்தால் . எங்கிருந்தாலும் காதல் வாழ்க.////

நிலாமதி அக்கா, காதலியே இல்லாத போது எப்படி இது சாத்தியமாகும்? ஒரு வேளை கவிதையைப் பார்த்து புதிதா வருவாங்களோ? (லொள்.....)

நன்றி நிலாமதி அக்கா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

சந்ரு கூறியது...

அத்தனை வரிகளுக்கு அருமை வாழ்த்துக்கள்...

//வேண்டாம் பெண்ணே!.....
காதலில் காயப் பட்ட
ஆண் மனது உன்னை
ஆண்டுகள் சென்றாலும்
ஆட்டிப் படைக்கும்!....//

///அனுபவம் இல்லையே....////

உண்மையில சந்ரு அண்ணா உங்களையும் விட இந்த தம்பிக்கு அனுபவம் ரொம்பவே குறைவு.... லொள்.....

ரொம்ப நன்றி சந்ரு உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

seemangani கூறியது...

//அமர்தலில் கூட உனக்கு
தனி சுகம் இருப்பதால்
எனக்கும், உனக்குமாய்
தனித் தனி இருக்கைகளை
தயார் செய்தேன்!..//

அருமை வாழ்த்துக்கள்...

///சீக்கிரம் ... வாமா....மின்னல்///

இது எங்கேயோ கேட்டது போல் இல்ல?.... அட இது அது இல்ல?....

ரொம்ப நன்றி seemangani உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

வால்பையன் கூறியது...

//// புரியுது!////

அண்ணா!... ஒரு வேளை தப்பா புரிஞ்சிட்டீன்களோ?... சத்தியமா இல்லீங்க அண்ணோ.... (லொள்.....)

ரொம்ப நன்றி வால்பையன் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.....

Ashok D சொன்னது…

//எங்கே நீ சென்றாய்?//
இதோடு கவிதை முடிந்துவிட்டது.

நல்லாயிருக்கு அபூ.

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

D.R.Ashok கூறியது...

//எங்கே நீ சென்றாய்?//
இதோடு கவிதை முடிந்துவிட்டது.

நல்லாயிருக்கு அபூ.

அப்போ அதற்கு மேல படிக்கலையா?.... அதற்கு மேல தானே கிக்கே இருக்குது போல....(லொள்....)

ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.....

ஹேமா சொன்னது…

அழகாய் சந்தோஷமாய்த் தொடங்கிய கவிதையின் புன்னகையை இரவல் கொடுத்துவிட்டு நிற்கிறீர்களே அபூ.சீக்கிரம் தேடிப்பிடியுங்கள்.

அபூ"கில்லி"என்று வராதே.
கிள்ளி என்றுதானே!

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

ஹேமா கூறியது...

////அழகாய் சந்தோஷமாய்த் தொடங்கிய கவிதையின் புன்னகையை இரவல் கொடுத்துவிட்டு நிற்கிறீர்களே அபூ.சீக்கிரம் தேடிப்பிடியுங்கள்.///ஓகே.... தேடியாவது வருவாங்களான்னு சொல்லிப் பார்ப்போம் இல்லையா?..

நன்றி ஹேமா அக்கா உங்களுடைய வருகைக்கும், கருத்துக்கும்....

////அபூ"கில்லி"என்று வராதே.
கிள்ளி என்றுதானே!////


ஆமாம், கிள்ளி என்று தான் வர வேண்டும். நன்றி ஹேமா அக்கா, மற்றும் நிலாமதி அக்கா (நிலாமதி அக்காவும் E-mail மூலமாக தெரியப் படுத்தி இருந்தார்.)

தவறுக்கு வருந்துகிறேன்.....

சத்ரியன் சொன்னது…

//இத்தனையும் ஆன பின்னால்
இதழோரப் புன்னகையை
இரவல் எடுத்துக் கொண்டு
எங்கே நீ சென்றாய்?//

அபூ,

இரவல் தானே, கொடுத்துருவாங்க.அதுவரைக்கும் கூட பொறுத்திருக்காம,புகார் கவிதையா?

அதிருக்கட்டும்.யார் அந்த தேவதை?

இன்னும் ஒரு மாதத்துக்கு பொருத்திருங்கள். நோன்பு முடியட்டும்.சரியா?

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

சத்ரியன் கூறியது...

//இத்தனையும் ஆன பின்னால்
இதழோரப் புன்னகையை
இரவல் எடுத்துக் கொண்டு
எங்கே நீ சென்றாய்?//

///// அபூ,

///இரவல் தானே, கொடுத்துருவாங்க.அதுவரைக்கும் கூட பொறுத்திருக்காம,புகார் கவிதையா?///

அண்ணே!......

"காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம் நரக சுகமல்லவான்னு எங்கேயோ கேட்ட ஞபகம் "

/// அதிருக்கட்டும்.யார் அந்த தேவதை?/////

தெரியல அண்ணே.... அடிக்கடி காதல் தோட்டத்தில் கனவு தேவதை வருவதென்னமோ உண்மை தான்.....

இன்னும் ஒரு மாதத்துக்கு பொருத்திருங்கள். நோன்பு முடியட்டும்.சரியா?////

"பெண்களின் உள்ளம் படு குழி என்பேன்...." யாரோ சொல்றாங்க பக்கத்துல இருந்து....

ரொம்ப நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்......