புதன், 26 ஆகஸ்ட், 2009

நினைவுகள்!....(காதலில் காயம் கண்ட ஒரு கன்னி பெண்ணினது பாழாய் போன நினைவுகள் என் கற்பனையில்.... )

காதலில் தோல்வி இல்லை
காதலிக்க ஆளும் இல்லை!...
காத்திருந்தேன்....
காதல் தேடும் ஒரு காளைக்காய்!....

காலங்கள் செல்ல - என்
கானகத்திலும் காற்றோட்டம்
காவு கொண்டது
காதல் எனும் பெயரால்!....

கார்த்திகை மாதம்,
காலைப் பொழுது,
காதல் தூது - அந்தோ...
காகிதத்தில்!.....

காதலியே!....
கால் கடுக்க காத்திருந்து
காவியம் படைக்க - உன்னை
கரம் பற்றப் போகிறேன்!...
கன்னியே!...
கவிதையாய் பதில் வந்தாலும் சரி,
கண்ணீராய் பதில் வந்தாலும் சரி,
சம்மதம் என்கிற
ஒரு சொல் மட்டும் எனக்கு
சமர்ப்பணமாய் இருக்க வேண்டும்!...
காதலன் வரிகள் அது!....

வெறுமையாய் வெறிச்சோடிய
என் உள்ளம் வெற்றியான பதில்
கொடுத்தது - காதலில்
வெளிச்சம் கிடைக்கும்
எனும் நம்பிக்கையில்!....

காதல் மலர்ந்ததேன்னவோ
சில நாட்கள் தான்!...
கன்னி இவளுக்கோ
ஓராயிரம் வருடங்கள்
காதல் பிறந்தது போல
உள் மனதில் இனம் புரியாத சந்தோசம்!....

ஒன்றுக்குள் ஒன்றான காதல்,
ஒற்றுமையான இரு உள்ளம்,
ஊரே போற்றி நின்றது...
காலம் மாற்றி வைத்தது!....

காதலர் நம் விதியோ?...
கால தேவதன் சதியோ?...
காரமற்றுப் போனது
காத்திரமான காதல் உள்ளம் இரண்டு!....

காதல் என்ற பெயரால்
காயப் பட்டு காலம்
கழிக்கிறேன்!.....
சொந்தமென்று சொல்லிக் கொள்ள
இப்போதெல்லாம் உள்ளதேன்னவோ
பாழாய்ப் போன அந்த
காதல் நினைவுகள் தான்!.....

அப்போ நான் வரட்டா!...

உங்கள் நண்பன்

அபூ......

26 கருத்துகள்:

பிரபா சொன்னது…

தம்பி நிறைய பட்டுடீங்க போல ...
சுப்பர் தொடருங்கள்.

யோ வாய்ஸ் சொன்னது…

காதல் என்ற பெயரால்
காயப் பட்டு காலம்
கழிக்கிறேன்!.....
சொந்தமென்று சொல்லிக் கொள்ள
இப்போதெல்லாம் உள்ளதேன்னவோ
பாழாய்ப் போன அந்த
காதல் நினைவுகள் தான்!.

எனக்கும் இது பொருந்தும் போல தெரிகிறது. நன்றாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்

S.A. நவாஸுதீன் சொன்னது…

பாவம் அந்த கன்னி. யாரவள் அபூ?

க. பாலாஜி சொன்னது…

//கார்த்திகை மாதம்,
காலைப் பொழுது,
காதல் தூது - அந்தோ...
காகிதத்தில்!.....//

நல்ல அழகான வரிகள் அன்பரே...

கவிதை முழுதும் அழகான வார்த்தைகள்...

எங்களுக்கும் சொல்லுங்க அவங்க யாருன்னு...

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

பிரபா கூறியது...

//// தம்பி நிறைய பட்டுடீங்க போல ...
சுப்பர் தொடருங்கள்.////

அண்ணா.... இப்புடி சொல்லி புட்டீங்களே?..... தம்பி இன்னும் ரொம்பச் சின்னப் பையன்... (லொள்....)

ரொம்ப நன்றி பிரபா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்......

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

யோ வாய்ஸ் கூறியது...

காதல் என்ற பெயரால்
காயப் பட்டு காலம்
கழிக்கிறேன்!.....
சொந்தமென்று சொல்லிக் கொள்ள
இப்போதெல்லாம் உள்ளதேன்னவோ
பாழாய்ப் போன அந்த
காதல் நினைவுகள் தான்!.

///எனக்கும் இது பொருந்தும் போல தெரிகிறது. நன்றாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்///

ஓஹோ ... அப்போ அண்ணனுக்கு ஏற்கனவே டாடா காட்டிடாங்கன்னு சொல்லுங்க.....

ரொம்ப நன்றி யோகா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

S.A. நவாஸுதீன் கூறியது...

///பாவம் அந்த கன்னி. யாரவள் அபூ?////

கற்பனை மட்டும் தான் அண்ணா.....

ரொம்ப நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்......

வால்பையன் சொன்னது…

பெண்ணின் எண்ணங்கள் இன்னும் மெல்லிய குணம் கொண்டவை!
ஆனால் பார்க்காமலேயே காதல் கொள்ளும் வீரியம் மிக்கவை!

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

க. பாலாஜி கூறியது...

//கார்த்திகை மாதம்,
காலைப் பொழுது,
காதல் தூது - அந்தோ...
காகிதத்தில்!.....//

/// நல்ல அழகான வரிகள் அன்பரே...

கவிதை முழுதும் அழகான வார்த்தைகள்...

எங்களுக்கும் சொல்லுங்க அவங்க யாருன்னு...////

இப்படித்தான் 1948 ம் ஆண்டுன்னு சொல்லி ஆரம்பிக்க விரும்பல்லீங்க.... சும்மா கற்பனையில வந்த ஒரு பெண்.....

ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்......

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

வால்பையன் கூறியது...

//// பெண்ணின் எண்ணங்கள் இன்னும் மெல்லிய குணம் கொண்டவை!
ஆனால் பார்க்காமலேயே காதல் கொள்ளும் வீரியம் மிக்கவை!///

அண்ணா.... முன்ன பின்ன அனுபவங்கள்?... (லொள்....)

ரொம்ப நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.....

நிலாமதி சொன்னது…

காதல் ஏன் காரம்அற்று போனது...இருவரில் ஒருவராவது அதைக் காப்பாற்ற வேண்டாமா? காலமெல்லாம் காதல் வாழ்க..நல்ல கவி வரிகள். பாராட்டுக்கள்.

மயில்வாகனம் செந்தூரன். சொன்னது…

நல்ல கற்பனை அபூ....

/////காலங்கள் செல்ல - என்
கானகத்திலும் காற்றோட்டம்
காவு கொண்டது
காதல் எனும் பெயரால்!....//////

இவை ரொம்ப வித்தியாசமான வரிகள்....

வாழ்த்துக்கள் அபூ.... உங்கள் பணி தொடரட்டும்.....

seemangani சொன்னது…

//காதலியே!....
கால் கடுக்க காத்திருந்து
காவியம் படைக்க - உன்னை
கரம் பற்றப் போகிறேன்!...
கன்னியே!...
கவிதையாய் பதில் வந்தாலும் சரி,
கண்ணீராய் பதில் வந்தாலும் சரி,
சம்மதம் என்கிற
ஒரு சொல் மட்டும் எனக்கு
சமர்ப்பணமாய் இருக்க வேண்டும்!...
காதலன் வரிகள் அது!....//

நல்ல அழகான வரிகள் அபூ...
அவங்க யாருன்னு...???

குறை ஒன்றும் இல்லை !!! சொன்னது…

//(காதலில் காயம் கண்ட ஒரு கன்னி பெண்ணினது பாழாய் போன நினைவுகள் என் கற்பனையில்.... )//

இந்த கவிதைய பாத்தா கன்னி பொண்ணோடது மாதிறி தெரியல.. கன்னிப்போன பையனுது மாதிறி இருக்கு..
எப்படிபோ நல்லா இருந்தா சரி!!

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

நிலாமதி கூறியது...

//// காதல் ஏன் காரம்அற்று போனது...இருவரில் ஒருவராவது அதைக் காப்பாற்ற வேண்டாமா? காலமெல்லாம் காதல் வாழ்க..நல்ல கவி வரிகள். பாராட்டுக்கள்.////

அவன் வேண்டும் அவளுக்கு... அவனால் அவளை இப்போது ஏற்க முடியாத நிலை.... அதனால் தான் போலும் அந்தக் காதல் கை நழுவிப் போனது.....

ரொம்ப நன்றி நிலாமதி அக்கா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்......

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

மயில்வாகனம் செந்தூரன். கூறியது...

நல்ல கற்பனை அபூ....

/////காலங்கள் செல்ல - என்
கானகத்திலும் காற்றோட்டம்
காவு கொண்டது
காதல் எனும் பெயரால்!....//////

/// இவை ரொம்ப வித்தியாசமான வரிகள்....

வாழ்த்துக்கள் அபூ.... உங்கள் பணி தொடரட்டும்.....///


ரொம்ப நன்றி செந்தூ உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்......

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

seemangani கூறியது...

//காதலியே!....
கால் கடுக்க காத்திருந்து
காவியம் படைக்க - உன்னை
கரம் பற்றப் போகிறேன்!...
கன்னியே!...
கவிதையாய் பதில் வந்தாலும் சரி,
கண்ணீராய் பதில் வந்தாலும் சரி,
சம்மதம் என்கிற
ஒரு சொல் மட்டும் எனக்கு
சமர்ப்பணமாய் இருக்க வேண்டும்!...
காதலன் வரிகள் அது!....//

///நல்ல அழகான வரிகள் அபூ...
அவங்க யாருன்னு...???///

அவங்களா?.... கற்பனைல வந்த ஒரு கன்னிப் பெண்ணுங்கோ.....

ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்......

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

குறை ஒன்றும் இல்லை !!! கூறியது...

//(காதலில் காயம் கண்ட ஒரு கன்னி பெண்ணினது பாழாய் போன நினைவுகள் என் கற்பனையில்.... )//

//// இந்த கவிதைய பாத்தா கன்னி பொண்ணோடது மாதிறி தெரியல.. கன்னிப்போன பையனுது மாதிறி இருக்கு..
எப்படிபோ நல்லா இருந்தா சரி!!///

ஆஹா..... விட்டா?..... நான் எதுவுமே சொல்லல்ல....

ரொம்ப நன்றி சார் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.....

சந்ரு சொன்னது…

வரிகள் மிகவும் அருமை நண்பா.

ilangan சொன்னது…

எப்பிடி உங்களால் மட்டும் முடியுது.

Mrs.Faizakader சொன்னது…

see this link http://eniniyaillam.blogspot.com/2009/08/tag.html

ஹேமா சொன்னது…

அபூ ஏன் இப்பிடி ஒரு கற்பனை.
காதலின் வலியோடு கவிதை அழகாயிருக்கு.கற்பனையில் ஒரு பெண்ணைச் சந்தோஷப்படுத்திப் பாருங்களேன்.எப்பவும் காதலில் தோற்பவளை ஏன் கற்பனையிலும் தோற்க வைக்கிறீங்கள்.

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

சந்ரு கூறியது...

///வரிகள் மிகவும் அருமை நண்பா.///

ரொம்ப நன்றி சந்ரு உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

ilangan கூறியது...

///எப்பிடி உங்களால் மட்டும் முடியுது.///

அப்படியே தான் ... (லொள்....)

ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்......

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

Mrs.Faizakader கூறியது...

///see this link http://eniniyaillam.blogspot.com/2009/08/tag.html///

ஓகே.... ஏற்றுக் கொண்டாச்சு.... விரைவில் தொடரும்கோ.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

ஹேமா கூறியது...

////அபூ ஏன் இப்பிடி ஒரு கற்பனை.
காதலின் வலியோடு கவிதை அழகாயிருக்கு.கற்பனையில் ஒரு பெண்ணைச் சந்தோஷப்படுத்திப் பாருங்களேன்.எப்பவும் காதலில் தோற்பவளை ஏன் கற்பனையிலும் தோற்க வைக்கிறீங்கள்.////

நிச்சயம் இன்னுமொரு கவிதை காதலின் சந்தோஷத்தில் மிதக்கும் பெண்ணின் கற்பனை கவிதையாக வரும் ஹேமா அக்கா....

ரொம்ப நன்றி அக்கா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்......