ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2009

தேவை தானா எனக்கு?....

(நீண்ட நாளா ஒரு ஆசை. என்ன தெரியுமா? ஒரு மொக்கை கவிதை எழுத வேண்டும் என்று.... அதனால இன்று முடிவு பண்ணி ஒரு மொக்கை கவிதை எழுதி இருக்கேன். ஆனால் ஒரு வேண்டுகோள். வந்து வாசிக்கும் எல்லோரும் இது மொக்கை கவிதை என்று சொல்லக் கூடாது. ஓரிரண்டு பேராவது கொஞ்சம் நல்லா இருந்ததுன்னு சொன்னீங்க என்றால் தான் எனக்கு கொஞ்சம் மனதுக்குத் திருப்தியா இருக்கும். லொள்.... அப்போ வாங்க வாசிப்போம்....)

விழி மூடி யோசித்தேன்!..
அங்கே சிறகு முளைத்த
சிட்டு அவள்!.....

பேரழகி என்று நான்
அவளைச் சொன்னாள்
நான் என்ன - பெண்கள்
நெஞ்சை கொள்ளை கொள்ளும்
வெள்ளை மாதவனோ?...

வெண்ணிலவு ஜன்னலில் சிரிக்க,
சுடிதார் அணிந்த சொர்க்கமாய்
வெளியே அவள் வந்தால்
என் கண்ணை பிடுங்கிக் கொள்வேனோ நான்?...

நீ முன்னாள் போனால்
நான் பின்னல் வந்து
ஏ! பெண்ணே திரும்பிப் பாரு
என்று சொல்லின்
போடா போடா புண்ணாக்கு
என்று சொல்ல வார்த்தையில்லாமல்
வாடப் போகுது உன் நெஞ்சம்!....

மே மாதத்தில் மேஜரான நீ
ஜூன், ஜூலை மாதத்தில்
ரோஜாப் பூவின் வாசத்தில்
கண்ணாடி பார்க்காமல்
என் முன்னாள் வந்து நின்றால்
ஐயோ அம்மா! என்ற அலறல்
என்னை அறியாமலே
வெளியில் வருமோ?....

நாக்கா, மூக்கா...
கேட்டுக் கேட்டே
நானொரு சிந்து என்று
சொல்லப் போகும் நீ
என்னைப் பார்த்து
போனால் வருவீரோ
என்று கேட்க எத்தனை
நிமிடங்கள் தான் செல்லும்?....

சஹானா சாரலில் நின்று
உன் தலை முடி உதிர்வதை கூட
தாங்க முடியாது தோழா
என்றால் - எந்த தேசத்தில்
நீ பிறந்தாய் என்று
வாய் பிளப்பேனோ நான்?...

அக்கம், பக்கம் யாருமில்லாத
பூலோகம் வேண்டுமென்று
என்னை நீ அழைத்துச் சென்றால்
என் மறு மொழி எல்லாம்
யார் யாரோ நான் பார்த்தேன்
யாரும் எனக்கில்லை
என்பதாய் தான் இருக்கும்!...

இதெல்லாம் தேவை தானா எனக்கு?

(இப்படி ஒரு டூயட்டா? தயவு செய்து திட்டாதீங்க. பின்னூட்டல் மட்டும் இட்டுட்டுப் போங்க....)

பிறந்த நாள் வாழ்த்து

(இன்றைய தினம் இலங்கையின் ஆரம்ப கால சூரியன் அறிவிப்பாளரும், எம் போன்ற இளைய தலை முறைக்கு ஒரு முன்மாதிரியுமான, வலையுலகிலும் அறிவிப்பாளர்களுக்கு மிகவும் பிரயோசனமான அவரது அனுபவங்களை பதிவாய் இடும் மூத்த அறிவிப்பாளர் ரமணன் அண்ணா பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறார். அவருக்கு இதயம் திறந்து இன்ப வாழ்த்துக்களை வலையுலக நண்பர்கள் சார்பாகத் தெரிவித்துக் கொள்வோம். தமிழ் பற்றும், கனீரென்ற குரல் வளமும் மிக்க அவர் நிச்சயம் ஒரு நல்ல அறிவிப்பாளருக்கான சின்னம். அண்ணா.... வாழ்த்துக்கள்.... )

அப்போ நான் வரட்டா!....

உங்கள் நண்பன்

அபூ.....

33 கருத்துகள்:

குறை ஒன்றும் இல்லை !!! சொன்னது…

வழக்கம் போல நல்லா இருக்குங்க!!!!

எப்புடி!!

மயில்வாகனம் செந்தூரன். சொன்னது…

ம்ம்ம்ம்... பாடல்களை எல்லாம் புகுத்தி ஒரு கவிதை....

நீங்க மொக்கையாய் நம்ம இலங்கைத் தமிழில சொல்லிறதென்றால் பம்பலாய் பதிஞ்சது நமக்கு நல்ல கவிதையாய் தெரியுதுங்கோ....

சில எழுத்துப் பிழைகள் உள்ளன... திருத்தவும்... அவசரம் புரிகிறது....

பேரழகி என்று நான்
அவளைச் ///சொன்னாள்////

நீ ////முன்னாள்//// போனால்

கண்ணாடி பார்க்காமல்
என் ////முன்னாள்//// வந்து நின்றால்

////கனீரென்ற//// குரல் வளமும்

//////மூத்த அறிவிப்பாளர் ரமணன் அண்ணா பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறார். அவருக்கு இதயம் திறந்து இன்ப வாழ்த்துக்களை வலையுலக நண்பர்கள் சார்பாகத் தெரிவித்துக் கொள்வோம்./////
நிச்சயமாக நண்பா.... ரமணன் அண்ணாவுக்கு இதயத்தால் இனிய வாழ்த்துக்கள்....

அபூ பதிவுகள் தொடரட்டும்... வாழ்த்துக்கள்....

S.A. நவாஸுதீன் சொன்னது…

சூப்பரான மொக்கை.

ரமணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Mrs.Faizakader சொன்னது…

//தேவை தானா எனக்கு?.... // அனைத்துபாடல் வரிகளையும் ஒன்றாய் இணைத்த அழகான மொக்கை..
ரமணன் அவர்களுக்கு எனது பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

Jaleela சொன்னது…

எல்லா பாடல் வரிகளையும் சேர்த்து ரொம்ப அருமையான கவிதை, மொக்கை சூப்பர் , ஹிஹி ஏன்னா எனக்கு கவிதை எழுத தெரியாது. படிக்க ரசிக்க மட்டும் தான்..
ரமணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

யாழினி சொன்னது…

வாவ் கவிதை சூப்பரோ சூப்பர்! அதிலும் நீங்கள் இடையிடையே அந்த பாடல் வரிகள் சேர்த்து எழுதியது அடடா அற்புதம் அற்புதம்! பின்னீட்டிங்க போங்க!(LOL)

ரமணன் அண்ணாவிற்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்!

குறை ஒன்றும் இல்லை !!! சொன்னது…

//தேவை தானா எனக்கு?....//
இது எங்களுக்கும் பொருந்தும் தானே???

பிரபா சொன்னது…

தேவைதானா எனக்கு .... வாழ்த்துக்கள்.
அப்படியே ரமணன் அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள்.
சபிராஸ் , "செப்டம்பர் 8" என்ன ஸ்பெசல் சொல்லுங்க???

seemangani சொன்னது…

மொக்கையா இது???? முடியல அபூ...
அவ்வ்வ்வ்வ்வ்வ்.....
நல்லக்கு அபூ ....வாழ்த்துக்கள்.
அப்படியே ரமணன் அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள்.

seemangani சொன்னது…

இங்கே பாருங்க அபூ...
http://ganifriends.blogspot.com/2009/08/blog-post_30.html

நிலாமதி சொன்னது…

அபூவுக்குபாடல் வரிகள் அனைத்தும் அத்துபடியா ? விபரிப்பு நன்றாக இருக்கு பாராடுக்கள். கனவுகாணும் காலம். காணுங்க. என்ஜாய்

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

குறை ஒன்றும் இல்லை !!! கூறியது...

///// வழக்கம் போல நல்லா இருக்குங்க!!!!

எப்புடி!!///

வழக்கம் போல வந்து வாழ்த்து சொல்லிட்டீங்க.....

ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்......

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

மயில்வாகனம் செந்தூரன். கூறியது...

ம்ம்ம்ம்... பாடல்களை எல்லாம் புகுத்தி ஒரு கவிதை....

நீங்க மொக்கையாய் நம்ம இலங்கைத் தமிழில சொல்லிறதென்றால் பம்பலாய் பதிஞ்சது நமக்கு நல்ல கவிதையாய் தெரியுதுங்கோ....

சில எழுத்துப் பிழைகள் உள்ளன... திருத்தவும்... அவசரம் புரிகிறது....

பேரழகி என்று நான்
அவளைச் ///சொன்னாள்////

நீ ////முன்னாள்//// போனால்

கண்ணாடி பார்க்காமல்
என் ////முன்னாள்//// வந்து நின்றால்

////கனீரென்ற//// குரல் வளமும்

//////மூத்த அறிவிப்பாளர் ரமணன் அண்ணா பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறார். அவருக்கு இதயம் திறந்து இன்ப வாழ்த்துக்களை வலையுலக நண்பர்கள் சார்பாகத் தெரிவித்துக் கொள்வோம்./////
நிச்சயமாக நண்பா.... ரமணன் அண்ணாவுக்கு இதயத்தால் இனிய வாழ்த்துக்கள்....

///அபூ பதிவுகள் தொடரட்டும்... வாழ்த்துக்கள்....///

ரொம்ப நன்றி செந்தூ உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.......

தவறுக்கு வருந்துகிறேன்... அவசரத்தில் ஏற்பட்ட பிழைகள் தான் அவைகள். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

S.A. நவாஸுதீன் கூறியது...

//// சூப்பரான மொக்கை.

ரமணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்///

ரொம்ப நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

Mrs.Faizakader கூறியது...

//தேவை தானா எனக்கு?.... // அனைத்துபாடல் வரிகளையும் ஒன்றாய் இணைத்த அழகான மொக்கை..
//// ரமணன் அவர்களுக்கு எனது பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்////

ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

Jaleela கூறியது...

////எல்லா பாடல் வரிகளையும் சேர்த்து ரொம்ப அருமையான கவிதை, மொக்கை சூப்பர் , ஹிஹி ஏன்னா எனக்கு கவிதை எழுத தெரியாது. படிக்க ரசிக்க மட்டும் தான்..
ரமணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.///

இது போல மொக்கைகளைப் பார்த்து நீங்களும் அவசரமாக கவிதை எழுதப் படித்து விடுவீர்கள்....

ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

யாழினி கூறியது...

//வாவ் கவிதை சூப்பரோ சூப்பர்! அதிலும் நீங்கள் இடையிடையே அந்த பாடல் வரிகள் சேர்த்து எழுதியது அடடா அற்புதம் அற்புதம்! பின்னீட்டிங்க போங்க!(LOL)////
அடிக்கடி அம்மாவின் தலை முடி பிண்ணும் பழக்கம் இருக்குது போங்க.... லொள்....

ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.......

ரமணன் அண்ணாவிற்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்!///

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

குறை ஒன்றும் இல்லை !!! கூறியது...

//தேவை தானா எனக்கு?....//


////இது எங்களுக்கும் பொருந்தும் தானே???///

அடப் பாவி, யாரு சொன்னது?.... மாட்டாது... லொள்...

ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்......

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

பிரபா கூறியது...

தேவைதானா எனக்கு .... ////வாழ்த்துக்கள்.///


ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்......


அப்படியே ரமணன் அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள்.
சபிராஸ் , "செப்டம்பர் 8" என்ன ஸ்பெசல் சொல்லுங்க???

செப்டமர் 8 என்னோட காதலியோட 3 வது பிறந்த தினம்.... இது போதுமா நண்பரே.... ஆ... இன்னொரு மாட்டரு. என்னோட நண்பர் ஒருத்தர் பிரபான்னு சொல்லி அவருக்கு அன்னக்கி வீட்டுல விசேஷமாம். எதற்கும் 8 ம் திகதி என்னோட தளத்திற்கு வந்து பாருங்க.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

seemangani கூறியது...

///மொக்கையா இது???? முடியல அபூ...
அவ்வ்வ்வ்வ்வ்வ்.....
நல்லக்கு அபூ ....வாழ்த்துக்கள்.
அப்படியே ரமணன் அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள்.///

ரொம்ப நன்றி சீமான்கனி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

seemangani கூறியது...

/// இங்கே பாருங்க அபூ...
http://ganifriends.blogspot.com/2009/08/blog-post_30.html///

ஓகே..... தொடர் பதிவு தானே.... தொடருவோம்.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

நிலாமதி கூறியது...

///அபூவுக்குபாடல் வரிகள் அனைத்தும் அத்துபடியா ? விபரிப்பு நன்றாக இருக்கு பாராடுக்கள். கனவுகாணும் காலம். காணுங்க. என்ஜாய்////

ரொம்ப நன்றி நிலாமதி அக்கா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

ரமணன் அண்ணாவிற்கு வாழ்த்து சொன்ன அத்தனை உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள் நிச்சயம் ரமணன் அண்ணாவை சென்றடையும்.....

யோ வாய்ஸ் சொன்னது…

இது மொக்கை கவிதை இல்லை. ரீமிக்ஸ் கவிதை அல்லது மசாலா கவிதை.

வாழ்த்துக்கள் நண்பா

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

யோ வாய்ஸ் கூறியது...

////இது மொக்கை கவிதை இல்லை. ரீமிக்ஸ் கவிதை அல்லது மசாலா கவிதை.

வாழ்த்துக்கள் நண்பா////

பெயர் வச்சுட்டாங்க அய்யா.... பெயர் வச்சுட்டாங்க..... (அவங்கவங்க எல்லாம் பழைய பாடல்களை Remake பண்ணும் பொது இதெல்லாம் ஜுஜுபி கண்ணா.... லொள்.....)

யோ... வாய்ஸ்.... இது உங்களுக்கே நல்லா இருக்கு போல....

ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.....

கனககோபி சொன்னது…

மொக்கைக் கவிதை என்று சொல்லி உங்கள நீங்களே தாழ்த்திக் கொண்டீங்க சகோதரா.
உண்மையாகவே நன்றாக இருந்தது.

வால்பையன் சொன்னது…

இது மொக்க கவிதைன்னா!
நாங்க எழுதுறதெல்லாம் என்ன!?

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

கனககோபி கூறியது...

///மொக்கைக் கவிதை என்று சொல்லி உங்கள நீங்களே தாழ்த்திக் கொண்டீங்க சகோதரா.
உண்மையாகவே நன்றாக இருந்தது.///

ஏதோ என் பார்வைக்கு இது பம்பல் போல் தான் தெரிந்தது தோழா....

ரொம்ப நன்றி நண்பா உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும்......

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

வால்பையன் கூறியது...

//// இது மொக்க கவிதைன்னா!
நாங்க எழுதுறதெல்லாம் என்ன!?///

அதெல்லாம் சூப்பெர் ஹிட் பதிவுங்க.... லொள்....

ரொம்ப நன்றி வால் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்....

SUMAZLA/சுமஜ்லா சொன்னது…

ம்...காதலில் விழுந்து விட்டீர்கள் போலிருக்கிறது...(அவர்கள் தான் பிதற்றுவார்கள் :))

ஹேமா சொன்னது…

அபூ,ஏன் கவிதை நல்லாத்தானே இருக்கு.ஏன் மொக்கைஎன்று சொல்றீங்க.காதல் ....!

ரமணனுக்கு என் இனிய வாழ்த்துக்கள்.

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

SUMAZLA/சுமஜ்லா கூறியது...

/// ம்...காதலில் விழுந்து விட்டீர்கள் போலிருக்கிறது...(அவர்கள் தான் பிதற்றுவார்கள் :))///

அத எப்படீங்க அக்கா correct ஆ சொல்றீங்க?... லொள்....

ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

ஹேமா கூறியது...

/// அபூ,ஏன் கவிதை நல்லாத்தானே இருக்கு.ஏன் மொக்கைஎன்று சொல்றீங்க.காதல் ....!///


பாடல் வரிகளை copy பண்ணி இருக்கேன் இல்லையா?... அதனால தான் பம்பல் கவிதை என்றேன்... அப்போ copy பண்ணினாலும் நல்லா பண்ணி இருக்கேன் இல்லையா?

//// ரமணனுக்கு என் இனிய வாழ்த்துக்கள்.//


உங்களுடைய வாழ்த்து ரமணன் அண்ணாவை சென்றடையும்....

ரொம்ப நன்றி ஹேமா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.....