புதன், 23 டிசம்பர், 2009

கலைஞர் டிவியும், கிக்கான அரிசிக் கஞ்சியும்.....

இப்போதெல்லாம் அதிகமாக இணையத்தில் உலா வரக் கிடைப்பதில்லை. அலுவலகத்தில் இருக்கின்ற அதிகமான வேலைகள் தான் இதற்கு காரணம் எனச் சொன்னால் கூட தப்பில்லை. அந்த அளவு தலைக்கு மேல் வேலை. என்ன செய்ய? கிடைக்கின்ற சின்ன இடை வெளியில் எங்காவது ஒரு சில பக்கங்களை நுனிப்புல் மேய்வது, அப்படியே அடிக்கடி முகப் புத்தகம் சென்று நண்பர்களின் முகங்களைப் பார்த்துக் கொள்வது என்று காலம் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வேலைப் பளுவெல்லாம் இந்த December முடியும் வரை தான். அதன் பிறகு ஐயா இணையத்திலே தான் இருப்பார். (அப்போ வேலை வெட்டி இல்லாதவன் தான் என்று யாரோ பேசிக்கிறாங்க............. இருக்கலாம்.....)

அலுவலகத்தில் வேலை முடித்து room போனால் ஒரு சின்ன மகிழ்ச்சி கிட்டுவதற்காய் தொலைக் காட்சி பார்ப்பது எனக்கு மட்டுமல்ல, எம் எல்லோருக்குமே பழக்கமாய் மாறி விட்டது. ஆனால் அதே தொலைக் காட்சிகள் தொல்லைக் காட்சிகளாக மாறியிருப்பது தான் மிகப் பெரிய கவலையாக இருக்கின்றது. நேற்று கொஞ்சம் ஓய்வாக இருந்ததாலும், உடலுக்கு கொஞ்சம் சோர்வாக இருந்ததாலும் கூடுதலான நேரம் தொலைக் காட்சியில் பொழுதை போக்க வேண்டி நேர்ந்தது. (யார் செய்த கொடுமையோ?....) அதுவும் கலைஞர், இசைஅருவி, கலைஞர் சிரிப்பொலி என ஐயாவுக்கு சொந்தமான (அதாங்க நம்ம அண்ணன் ) channelகளையே மாற்றி மாற்றி பார்க்க வேண்டி நேர்ந்தது. (இவைகள் தான் இலவச ஒளிபரப்பை வழங்குவதாலோ?.... ஹி....ஹி....) என்ன கொடும சரவணா?....... சினிமாவில் பாடலுக்கா பஞ்சம்?... அதுவும் சினிமாவுக்கே (குறிப்பா கலைக்கே ) பெயர் பெற்ற இந்தியாவிலா? ஒளிபரப்பாக்கப் பட்ட பாடல்கையே திரும்பத் திரும்ப ஒளிபரப்பாக்குவதில் அப்படி என்ன திருப்தி அவர்களுக்கு?...






கலைஞர் TV பக்கம் சென்றால் அவர்களுக்கே உரித்தானது போல் சில பாடல்கள். (பாடலைப் பட்டயடிப்பது தான் இவர்களது நோக்கமோ?...ஆதவன் பாடலையும், கந்தக் கோட்டை, யோகி, ரேணிகுண்டா பாடல்கள் இப்போது களத்தில்.....) அந்தப் பாடல்களையே திரும்பத் திரும்ப ஒளிபரப்பாக்கி இரத்த அழுத்தத்தை கூட்டுவதில் இவர்களுக்கு நிகர் இவர்களே. (என்ன மாதிரி tension கொடுக்குறாங்க தெரியுமா?.... ) சரி பார்த்துப் பார்த்து பழகிப் போனதால் பெரிசாக அலட்டிக் கொள்ளாமல் சிரிப்பொலி போனால் அங்கேயும் அதே விளையாட்டு..... (ஒரே காமடியாவே இருக்கு.... வெவ்வேறு படங்களிலிருந்து காட்சிகள் ஒளிபரப்பினால் ஒரே சபாஷாக இருக்கும்.......) பின்னால் இசையருவி போனால் அங்கேயும் அதே திருவிளையாடல். (இவர்கள் தான் கலைஞர்கள்..... நான் சொல்லலீங்க.....) எத்தனையோ கலைஞர்கள் இந்தியாவிலே இருக்கிறார்கள். அவர்களுக்கு நிறைய்யவே சந்தர்ப்பம் கொடுக்கலாம் இந்த தொலைக் காட்சிகளிலே. ஆனால் ஒரு சிலருக்குத் தான் அதில் நிறையவே சந்தர்ப்பம் இருக்கிறது. நல்ல உதாரணம் தான் கலைஞர் டிவி, சிரிப்பொலி மற்றும் இசையருவி அத்தனை அலைகளிலும் ஒளிபரப்பாக்கப் படும் விளம்பரங்களிலும் குரல் கொடுக்கும் அந்த மன்மதக் குரலாளன். தனக்கே சொந்தமான தாய் மொழியை எவ்வளவு கஷ்டப்பட்டு உச்சரிக்கிறார் என்பதை பார்க்கும் பொது தான் அந்த குரல் மீது அளவு கடந்த பரிதாபம் ஏற்படுகிறது. (ஒவ்வொரு விளம்பரத்துக்கும் பின்னால் நிச்சயம் அவர் ஒரு முட்டையாவது குடிக்க வேண்டும். ...... அப்படி கஷ்டப் பட்ராருங்க தமிழ் உச்சரிப்புக்கு......பாவம் சாமி....) ஏன் அவரை மட்டும் வைத்துக் கொண்டு ஒலிப்பதிவு செய்கிறது இந்த கலைஞர் குடும்பம் (ஒரு வேளை சொந்தக் காரராக இருப்பாரோ?....) பாவம்....... அந்த குரலுக்குரியவர். (அவருடைய பெயர் தான் தெரியல....... தெரிந்தும் என்ன தான் செய்ய?.... என்னைப் பொறுத்த வரை அவர் அவ்வளவு பெரிய கலைஞன் அல்ல...)

அதே நேரம் சில நல்ல நிகழ்ச்சிகளையும் கலைஞர் டிவி ஒளிபரப்பாக்குகின்றது. மானாட மயிலாட... (நிறையப் பொண்ணுக ஆடுரதால.....), விசாரணை, வானம் பாடி, இப்படி ஒரு சில நிகழ்ச்சிகள் பார்க்கக் கூடிய முறையில் ஒளிபரப்பாகப் படுகின்றது. அதற்கு சின்னதா ஒரு சபாஷ் போடலாம். அவ்வளவு தான். இன்னுமொரு முக்கியமான விடயத்தை குறிப்பிட்டாக வேண்டும். SS Music எதேர்ச்சையாக நேற்று கூடுதலான நேரம் பார்வையிட நேர்ந்தது. ஒரு பெண் தொகுப்பாளறது Just Connect என்கிற நிகழ்ச்சியை கிட்டத் தட்ட ஒரு மணித்தியாலம் வரை பார்க்க கிடைத்தது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. எனக்குப் பிடித்த ஒரு விடயத்தை பற்றி நேற்றைய நிகழ்ச்சியில் அந்த தொகுப்பாளினி ரொம்ப நன்றாகப் பேசியிருந்தார். அதாவது வாசிப்புத் தான் கருப்பொருள். பிடித்த எழுத்தாளர், வாசித்த புத்தகம் என்று சொல்லி நிறையவே ரசிகர்களோடு பேசினார். (இனி அதில் என்ன? எல்லோருக்கும் தெரிந்த விடயம் தானே அது?.... ன்னு யாரோ சொல்றாங்க.....) இதில் முக்கியமான விடயம் அந்த தொகுப்பாளினி அழகான முறையில், சரளமாக ஆங்கில மொழியில் தொகுப்பை செய்தது தான். நிகழ்ச்சி முழுக்க ஆங்கில மொழியிலே தான் இடம் பெற்றது. ஆனால் ஒளிபரப்பாக்கப் பட்ட பாடல்கள் அத்தனையும் தமிழ் பாடல்கள். (தொகுப்பாளினிக்கு நிச்சயம் எல்லோரும் சேர்ந்து ஒரு பெரிய சபாஷ் கொடுக்கத் தான் வேண்டும்....) சிறப்பாக இருந்தது அந்த நிகழ்ச்சி. நிச்சயமாக அந்த நிகழ்ச்சி எனக்கு ஒரு பெரிய திருப்பம் கொடுத்தது. (ஆங்கிலமா? உனக்கு ஆங்கிலம் தெரியாம எப்படி ஆங்கில நிகழ்ச்சின்னு என் நண்பர் ஒருவர் பக்கத்துல இருந்து அலட்டிக் கொல்றாரு.... நான் இப்போ சரளமாக ஆங்கிலம் பேசுவதை அறியாமல்..... ஒரே காமடியாகவே இருக்குது இல்லையா?....)





சரி, என்ன தலைப்புக் கேற்ற விடயம் இன்னும் வரவில்லைன்னு யாரோ பேசிக்கிறாங்க. இதோ வந்துட்டேங்க.. கலைஞர் TV கொடுத்த சோர்வு, சவூதியின் குளிர் கொடுத்த கொடுமை அந்த மாலைப் பொழுதில் ஒரு கஞ்சி குடித்தால் நல்ல ஒரு உற்சாகத்தை உடம்புக்குக் கொடுக்கும் என தோன்றியது. எழும்பி ஒரு கஞ்சி கோப்பை தான் குடித்தேங்க.... (சத்தியமா ஒரு கோப்பை தாங்க.....) என்னமா உற்சாகம்.?...... அந்த உற்சாம் தான் இன்று காலை 8 மணியில் இருந்து இது வரை இந்த ஆக்கத்தை type பண்ண உதவியது. (அப்போ எவ்வளவு உற்சாகம் இந்த அரிசிக் கஞ்சி கொடுத்திருக்கும்னு பாருங்க......... ) அப்ப பாருங்களே இவர் கலைஞர் டிவி பார்த்துட்டு கஞ்சி குடித்திருக்கிறார். ஹி..... ஹி....... (யாருமே பண்ணாத ஒரு வேலையைப் பண்ணிருக்கிறார்.....) - கொஞ்சம் சிரிப்பீங்க என்ற நம்பிக்கைல தான் இந்தப் பந்தி.... அப்போ சிரிங்க..... நன் போயிட்டு வாறன்...

மற்றுமொரு பதிவில் சந்திப்போம்...... அதுவரையில் நல்லதையே சிந்திப்போம்.....

அப்போ நான் வரட்டா

உங்கள் நண்பன்

அபூ......

15 கருத்துகள்:

EKSAAR சொன்னது…

இது Sri Lankan style கஞ்சி இல்லையே? Download பண்ணின கஞ்சியா?

S.A. நவாஸுதீன் சொன்னது…

வாங்க தம்பி.

சவூதி குளிரா - எங்கே இருக்கீங்க நீங்க

S.A. நவாஸுதீன் சொன்னது…

டிவி நிகழ்ச்சிகள் இப்பெல்லாம் ரொம்ப போரிங்.

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

என்ன கொடும சார் கூறியது...

//// இது Sri Lankan style கஞ்சி இல்லையே? Download பண்ணின கஞ்சியா?////

வாங்க சார், எப்படி இருக்கீங்க?. பார்த்தீங்களா Srilanaka கஞ்சி பற்றி எல்லோர் மனதுலையும் நல்ல இடம் இருக்குற நேரம் புட்டுன்னு கஞ்சைப் பற்றி போட்டுக் கொடுத்துட்டீங்களே சார்..........

ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும்......

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

S.A. நவாஸுதீன் கூறியது...

வாங்க தம்பி.

///சவூதி குளிரா - எங்கே இருக்கீங்க நீங்க///

வாங்க அண்ணா..... சவூதியில குளிர் ஆரம்பிச்சுட்டுதில்லையா?... நான் Dammam ல இருக்கேன் அண்ணா.......

///டிவி நிகழ்ச்சிகள் இப்பெல்லாம் ரொம்ப போரிங்./////

குறிப்பாக சில சேவைகளைத் தான் சொல்ல முடியும் அண்ணா....... (அவர்கள் செய்வது போன்ற கொடுமை அப்பா............................ சொல்லவே தேவை இல்ல......)

ரொம்ப நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.......

Jaleela Kamal சொன்னது…

இது வெள்ளைகஞ்சி மாதிரி இருக்கு, அப்ப கலைஞர் டீ வி பார்த்துட்டு ஒரு கப் கஞ்சி குடிச்சா நிறைய பதிவு போடலாமா?


வாங்க தம்பி வாங்க வெகு நாட்கள் ஆச்சு உங்கள் பதிவு வந்து, தொடருங்கள்.

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

Jaleela கூறியது...

///இது வெள்ளைகஞ்சி மாதிரி இருக்கு, அப்ப கலைஞர் டீ வி பார்த்துட்டு ஒரு கப் கஞ்சி குடிச்சா நிறைய பதிவு போடலாமா?///

ஐயோ போங்க அக்கா ஒரே காமடி பண்றீங்க!..... ஹி.... லொள்.....


//வாங்க தம்பி வாங்க வெகு நாட்கள் ஆச்சு உங்கள் பதிவு வந்து, தொடருங்கள்.////

இனி அடிக்கடி எதிர் பாருங்கள்...... வித்தியாசத்தோடு என் பதிவுகள் தொடர இருக்கின்றது...

வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி அக்கா.....

Jaleela Kamal சொன்னது…

கொத்து பரோட்டா கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

புரூட் சாலட் ஏற்கனவே செப்டம்பர் நோன்பு சமயத்தில் கொடுத்துளேன். அதுவும் பாலூதாவும், ஈசியாக தான் இருக்கும் பாருஙக்ள்.

சீமான்கனி சொன்னது…

சலாம் அபூ ....
டி.வி யா நான் கொஞ்சம்.. தள்ளியே நிக்குறேன்...

இங்கு ஜித்தாவில் ஒரே மழை அபூ...


//இனி அடிக்கடி எதிர் பாருங்கள்...... வித்தியாசத்தோடு என் பதிவுகள் தொடர இருக்கின்றது...//

நல்லது அபூ...காத்திருக்கிறோம்...

ஹேமா சொன்னது…

அபூ சுகம்தானே !

நல்ல சமையல் குறிப்பு.
அவசரத்துக்கு உதவும்.
வெள்ளையரிசி சூப்.

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

Jaleela கூறியது...

கொத்து பரோட்டா கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

//// புரூட் சாலட் ஏற்கனவே செப்டம்பர் நோன்பு சமயத்தில் கொடுத்துளேன். அதுவும் பாலூதாவும், ஈசியாக தான் இருக்கும் பாருஙக்ள்.////

ஓகே அக்கா..... முயற்சி பன்றேன்.....

ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்......

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

seemangani கூறியது...

சலாம் அபூ ....
டி.வி யா நான் கொஞ்சம்.. தள்ளியே நிக்குறேன்...

///இங்கு ஜித்தாவில் ஒரே மழை அபூ...///

இங்கு Dammam இலும் மழை அதிகமாக இருக்கிறது அண்ணா.....


//இனி அடிக்கடி எதிர் பாருங்கள்...... வித்தியாசத்தோடு என் பதிவுகள் தொடர இருக்கின்றது...//

//// நல்லது அபூ...காத்திருக்கிறோம்...///

விரைவில்.....



ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்......

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

ஹேமா கூறியது...

/////அபூ சுகம்தானே !

நல்ல சமையல் குறிப்பு.
அவசரத்துக்கு உதவும்.
வெள்ளையரிசி சூப்.////

நல்ல சுகமா இருக்கேன் அக்கா!.... தாங்களும் சுகம் தானே.....

என்ன தான் இருந்தாலும் உங்க கவிதைகள் ரொம்பப் பிரமாதம் அக்கா.....

ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.....

Jaleela Kamal சொன்னது…

http://allinalljaleela.blogspot.com/2009/09/blog-post_1294.html


fruit salad

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

Jaleela கூறியது...

http://allinalljaleela.blogspot.com/2009/09/blog-post_1294.html


/// fruit salad///

Lot of Thanks Akka....