வெள்ளி, 12 ஜூன், 2009

பிரியமான தோழிகள்


பகுதி - 1

அப்பாடா...... நீண்ட நாளா பதிவிடலாம் என எண்ணி இருந்த பதிவை இன்று பதிவிடக் கிடைத்ததில் (அதாங்க, கொஞ்சம் ஓய்வு கிடைத்தது ) ரொம்ப சந்தோசம்.

ஒவ்வொருவரினதும் வாழ்வில் மறக்க முடியாத வாழ்க்கை ஒன்று இருக்கிறதென்றால் அது பள்ளியில் கழித்த பசுமையான பொழுதுகளாகத் தான் இருக்கலாம். ஐந்தாம் தரம், சா/தரம், உயர் தரம்னு சொல்லி பாடசாலை வாழ்க்கை தொடரும். இதிலும் குறிப்பா உ/தரத்தில் கழித்த காலங்களை ......... (ஆஹா..... எண்ணி பார்க்கும் பொழுதே எவ்வளவோ சந்தோசம்) பொன்னெழுத்துக்களால் பதியலாம். (இப்போ என்னால அத செய்ய முடியல, ஏன்னா அந்தளவு பொன் இப்போ என்கிட்ட இல்லையே.....)

சாதரண தரம் வரை கெகுனகொல்ல தேசிய பாடசாலையில் படித்து விட்டு உயர் தரத்திற்காக மதீனா தேசிய பாடசாலைக்கு புது முக மாணவனாக அறிமுகமானேன். என் போல நிறைய புது முகங்கள். ஆரம்ப 3 மாத காலத்துக்கும் நம்ம புது முகங்கள் பெற்ற ராகினுக்கு அளவே இல்லாமல் போய் விட்டது. (என்னைத் தவிர எல்லோருமே ராகின் பெற்றார்கள். யாருகிட்ட??? நம்ம கிட்டேவா??..எத்தன பேருக்கு ராகின் கொடுத்திருப்போம்? அட...மனச்சாட்சி தனியாகப் பேசிக் கொல்லுது... ) இந்த பையன்களும், பொண்ணுகளும் என்ன மாதிரி ராகின் பண்றாங்க தெரியுமா?

உண்மையில் இந்த ராகினின் போது இன்னும் அன்பு தான் அதிகரிக்கின்றது என்பதை காலப் போக்கில் நமக்குள் நாம் நிரூபித்து விட்டோம். ஒருவரை ஒருவர் நல்ல நண்பர்களாக அறிமுகமாக்கிக் கொண்டோம். தொடரும் அன்புப் பயணத்தில் விதி விளையாடுவது என்றால் அது உயர் தரம் எழுத நெருங்கும் அந்த 3 மாத கால இடை வெளியில் தான். துள்ளித் திரியும் மாணாக்கரின் கையிலெல்லாம் அந்த நேரத்தில் பண்பாக பரிமாறிக் கொள்ளப் படுவது இந்த Autographs மட்டும் தான். (ஒரு மாதிரி விடயத்துக்கு வந்துட்டேன் ) அப்போ இன்றைய பதிவு Autographs பற்றியது தான். (சேரனுடையது இல்லீங்க.... என்னுடையது.....)

பொதுவாக ஆண் நண்பர்களுக்கு ஆட்டோகிராப் எழுதுவதில் கொஞ்சம் விருப்பம் குறைவு அல்லது தயக்கம். (நீங்க எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் )அதையும் மீறி கொடுக்கும் ஆட்டோகிராப்பை நோட் புக்காக மாற்றிக் கொள்ளும் ஒரு சில நல்ல ஆண் நண்பர்கள் அங்கங்க இருக்கிறாங்க. இல்லன்னா ஒரே வரியில் "I wish you all the best for your A/L exam ". (எனக்கெல்லாம் சிறந்த வரி. அட...எல்லோருக்கும் இதே படத்த தான் ஓட்டுறது. நாங்க அப்போ இருந்த நிலமையில கவிதை எல்லாம் எங்களுக்கு வரல்ல....இப்போ கூட என்னவோ வந்து தொலைக்கிற மாதிரி??? )

ஆனால் நண்பிகளைப் பொறுத்த வரையில் கொடுத்த ஆட்டோகிராப்பை பத்திரமாக பதிவிட்டுத் தருவதில் அவர்களுக்கு நிகர் அவர்கள் தான். அப்படியான நண்பிகளுக்கு கொடுக்கப் பட்ட என் ஆட்டோகிராப் பற்றித் தான் இன்றைய பதிவு.

ஆட்டோகிராப்பில் சில கேள்விகளைக் கேட்டு இதற்கு நீங்கள் கட்டாயம் பதில் எழுதுங்கன்னு சொல்லியிருந்தேன். அவர்களுக்கு கொடுத்த ஒரு சில கேள்விகளையும், அவர்கள் எழுதிய பதில்களையும் தொடர்ந்தும் வாசிப்போமா??? (ரொம்ப intresting.......பொண்ணுகலாச்சே......)

தோழிகளினுடைய பெயர்கள் மட்டும் கற்பனைங்கோ.......

(இது தோழிகள் இல்லீங்க..... தோழிகள் மாதிரி....)


கே : 1 - உங்களுடைய பொழுது போக்கு?????

நண்பி A - Safras, எனக்கு என் பொழுது போக்கிற்கு டைம் போதாது. (அப்படி என்னதான் பிஸி???)
* சோகப் பாடல் பாடுவது.. (உங்க வாழ்வில் இவ்வளவு சோகமா??)
* என் நண்பர்கள் கூட அரட்டை அடிப்பது... (ஆள விட்டால் போதும்கோ.... )
* நடித்தல் & கவிதை எழுதுதல்...
* பக்கத்து வீட்டு & என் family குழந்தைகளை பராமரிப்பது...... (பிறர் குழந்தையை ஊட்டி வளர்த்தால் தன் குழந்தை தானாய் வளருமாம்கோ....)
* சமைத்தல் & வீட்டுத் தோட்டத்தை பராமரித்தல்....

நண்பி B - எனது பொழுதே போக்காகத் தான் உள்ளது...(அப்படி எண்ணக???)
* ரேடியோ கேட்டுக் கொண்டு டான்ஸ் பண்றது.....
* பிள்ளைகளுடன் கொஞ்சி விளையாடுவது.... (எல்லோருக்கும் உள்ள ஆச தான் இல்லையா???)
* ஆ....மறந்தே போயிட்டேன், முக்கியமான பாயிண்ட். எதிர் வீட்டு யன்னலை அடிக்கடி எட்டிப் பார்ப்பது. எங்க அம்மா கிட்ட சொல்லிராதீங்க.....(சொன்னா ஒரு கல்லுல 2 மாங்கா சாப்பிடலாம்கோ......)

நண்பி C - Saf, சில நேரம் எதையாவது செய்வேன். செய்வதெல்லாம் எனது பொழுது போக்குத்தான் (அட... அததானே கேட்கிறேன்....இன்னும் சின்ன புள்ள தனமாவே.....)
* முக்கியமா சக்தி FM உடன், அல்லது சூரியன் FM உடன் இருப்பேன். இனி நீ எங்க போறியோ அதோடு தான் இருப்பேன். உன் ஆசை நிறைவேறிட இறைவனைப் பிரார்த்திக்கிறேன்...(நன்றி தோழியே...கனவு நனவாகி விட்டது....)

நண்பி D - பொழுது போக்கென்று ஒன்று இல்லை. வழமையானது தான். (மிகவும் சுருக்கமா ஆட்டோகிராப் எழுதிய அன்புத் தோழி இவங்கதான்.........)

நண்பி E -
* கதைப் புத்தகம் வாசித்தல் & கவிதை எழுதுதல்
* பிள்ளைகளுடன் கொஞ்சி விளையாடுதல்.. (அட... இங்கயுமா????? முடியல....)
* என் செல்லத் தம்பியுடன் விளையாட்டுக்காக சண்டை பிடிப்பது.. (இப்படியும் ஒரு பொழுது போக்கா??? பாவம் உங்க தம்பி...)

கே : 2 - கோபமடைந்த சந்தர்ப்பம்?????

நண்பி - A
* அடுத்தவர்களை இழிவாக மட்டம் தட்டி பேசும் போது.... (யார் தான் பொருப்பாங்க இல்லையா?????? )
* பெண்கள் ஆண்களையோ, ஆண்கள் பெண்களையோ கை நீட்டி அடிக்கும் போது...(இது நியாயமா??????)
* குழந்தைகளை யாராவது திட்டும் போது.....

நண்பி - B
* எனக்கு கோபம் கொள்பவர்களைக் கண்டாலே கோபம் வரும். (அதிகம் கோபம் கொள்வது பெண்மைக்கு அழகில்லையாம்...மறந்துட்டீங்களா தோழியே????)


நண்பி - C
* நான் அதிகம் கோபம் கொள்வதில்லை. ஆனால் என்னைப் பற்றி, என் குடும்பத்தைப் பற்றி, நண்பர்களைப் பற்றி யாராவது தப்பாய் பேசினால் கோபம் கோபமாய் வரும்...( இங்க தாங்க பாசம் பொதிந்து கிடக்குது.......)

நண்பி - D
* வீணாக சந்தேகப் பட்டால்.....(ஒருவேள வாழ்கையின் பாதிப்போ....யாரறிவார்....)
* எனக்கு பிடிக்காத செயல்களை யாராவது செய்யும் பொழுது..... (ஏற்றுக் கொள்கிறேன்....)

நண்பி - E
* என் தந்தை என்னை விட வேறு யாருடனாவது அன்பாய் பேசினால் வருமே ஒரு கோபம்... அதை என்னால் கட்டுப் படுத்த முடியாதுடா நண்பா!! (சுய நலத்தையும், தந்தை அன்பையும் இங்க தான் பார்கிறேன் தோழியே.....)

வாசித்து முடித்திட்டீங்களா??

அப்பாடா.....இன்னக்கி ஒரு பதிவு ஒகே


இன்னும் சில கேள்விகளும் 5 பிரியமான தோழிகளினது பதில்களும் அடுத்த பதிவில்.......

அப்போ நான் வரட்டா!!!
(என்னது? முகவரிய தந்து விட்டு போகவா? எங்க ஏரியால தான் தபாலகம் எல்லாம் இல்லையே....பின்ன எதுக்கு முகவரியெல்லாம்??....அதனால கருத்த மட்டும் சொல்லிட்டு போங்க....OK)


உங்கள் நண்பன்
அபூ.....




செவ்வாய், 9 ஜூன், 2009

புகழின் உச்சத்தில் இசைப் புயல்


அதிஷ்டம் ஒரு முறை தான் வாழ்வில் கதவைத் தட்டும்னு நிறைய மூதாதையர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் அது பொய்யான செய்தியோ என்பதை ரகுமான் பெற்றுக் கொள்ளும் தொடர் வெற்றிகளைக் கண்டு சிந்திக்கத் தோன்றுகிறது. எது எப்படியோ "ஸ்லம் டாக் மிள்ளியனர் " படத்திற்கு இசை அமைத்ததற்காகவும், அதில் இடம் பெற்ற "ஜே ஹோ " பாடலுக்கு அற்புதமாக இசையமைத்து பாடியதற்காகவும் அவருக்கு ஒஸ்கார் விருது வழங்கப் பட்டது யாவரும் அறிந்த சங்கதியே.... (அப்போ..... அதைப் பற்றி ஏன் இன்னும் சொல்லிட்டு இருக்கேன்னு கேட்கிறீங்களா???? அட..... இனித் தானே சங்கதியே இருக்கு......)

இந்திய சினிமாவின் தரத்தை சர்வதேச தரத்துக்கு உயர்த்திய ரகுமானுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தினை கடந்த ஞாயிறன்று அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழகம் வழங்கி கௌரவித்தது.

நிகழ்வு முடிந்ததும் ரகுமான் கூறியதாவது .........

சர்வதேச அளவில் சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கும் ஹாலிவூடில் இசை அமைக்க எனக்கு சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. "கப்புள்ஸ் ரிட்ரீட் " இது தான் திரைப் படத்தினுடைய பெயர். இந்தப் படத்தில் இசை அமைப்பதில் வேறு யாருடைய குறுக்கீடும் எனக்கு கிடையாது. ஏனெனில் எனது முழுமையான திறமையின் வெளிப்பாடாக இந்த திரைப் படம் எனக்கு அமைய இருக்கிறது. (இனி என்ன????? கலக்குங்க ......கலக்குங்க.......... பார்க்கவும், கேட்கவும் தானே போறோம்....)






அவர் இந்த திரைப் படத்தைப் பற்றி சொன்னதெல்லாம்.......

இது ஒரு காதல், காமடி கொண்ட படம். ஒரு தீவுக்கு நான்கு காதல் ஜோடிகள் சுற்றுலா செல்கிறார்கள். அங்கு நடக்கும் காதல் வெளிப்பாடுகள் காமடி கலந்து படமாக்கப் படுகிறது. இந்தப் படம் இந்த ஆண்டின் இறுதிக்குள் திரைக்கு வரும் எனத் தெரிவித்தார்.

பீட்டேர் பில்லிங்க்ச்லே இயக்கும் இந்தப் படத்தில் ரகுமானைத் தவிர வேறு இந்தியர் யாரும் பங்கு கொள்வதில்லை என்பது இன்னுமொரு முக்கியமான விஷயம்.

(ஐயா ... நீங்க எங்க போனாலும், எந்த உயரத்தை தொட்டாலும் அடிக்கடி தமிழ் உலகத்திற்குள்ளும் வந்து எங்களுடைய செவிகளுக்கும் விருந்து ஊட்டிட்டு போங்க......அப்பப்போ...... போற பாதையில..... இது நான் சொல்லலீங்க.... உங்க ரசிகர்களாகிய நாங்க சொன்னதுங்க......)

ரகுமானின் வெற்றிப் பயணத்துக்கு வாழ்த்துக்கள் பல கோடி.......

வரட்டா!...........

(வந்ததும் தான் வந்தீங்க....... மனதுல உள்ளத சொல்லிட்டு போங்க, நான் ஏற்றுக் கொள்கிறேன்....எதையும் ஏற்றுக் கொல்ற பக்குவம் என்கிட்ட இருக்குதாம்.... இது நண்பர்கள் அடிக்கடி சொல்ற வார்த்த..... )

உங்கள் நண்பன்
அபூ.......

புதன், 3 ஜூன், 2009

Dream Girl

தலைப்பை பார்த்ததும் யாருடைய Dream Girl என்றெல்லாம் கேட்கக் கூடாது. ஏன்னா அது சத்தியமா என்னோடது இல்ல. இலங்கையில் பிரபல்யம் பெற்று வரும் ஒரு இசை அல்பத்தினுடைய பெயர்.


DJ ராஜ் (பொதுவாக எல்லோருமே இவர DJ ன்னு தான் சொல்லுவாங்க.), பரணி, சந்ரு, மற்றும் பிரஷாந்தி ஆகியோர்களினது இசைப் பயணத்தில் உருவான இசை ஆல்பம் தான் Dream Girl. செவிக்கு இதமான பாடல். நெஞ்சமே.... என் கனவு தேவதை நினைவில் நிற்கிறாள்.........னு(கொஞ்சம் தெளிவா கேட்டுப் பாருங்க. எனக்கு கேட்டது அப்படி தான் . அட, நான் உண்மைய தான் சொல்றேங்க........ ) சொல்லி ஆரம்பமாகும் பாடல் . நம்மவர்களிலும் இவ்வளவு திறமை இருக்கிறதா???? என்று ஒரு கணம் வாய் பிளந்து இருக்க வேண்டி இருக்கிறது. (பிளந்த வாயை இப்பொழுது தான் மூடினேன். ஏன்னா ..... பாடல் 7 முறைக்கு மேல ஒலித்து ஓய்ந்து விட்டது. ஹி........ ஹி..........),


பாடலைக் கேட்ட பின் சொல்ல முடிந்ததெல்லாம்...........

அருமையான பாடல், அர்த்தமுள்ள வரிகள், இன்னும் குறிப்பா ஆரம்பத்துலையே வாரணம் ஆயிரம் சூரியாவ ஏதோ புகழ்ந்து ஆரம்பிப்பது சூரியா ரசிகர்களுக்கு இன்னும் இப்பாடலில் ஈர்ப்பைக் கொடுக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்குது. வாழ்த்துக்கள் கலைஞர்களே....... (ரொம்ப அருமையா இருந்திச்சு, இன்னும் நிறைய படைங்க, இசையில் ஒரு புரட்சியை இலங்கையிலும் ஏற்படுத்துங்க....)

வலையுலக நண்பர்களே..... நீங்களும் ஒருமுறை கேட்டு தான் பாருங்களேன் அந்த பாடலை. (கேட்டால் மட்டும் போதாது, கருத்தையும் சொல்லிட்டு போங்க.....ஏன்னா உங்க கருத்த அவங்களுக்கு மேலும் ஆர்வத்த கொடுக்கலாம் இல்லையா ??????)

பாடலை கேட்க கீழுள்ள Dream Girl ல் சொடுக்குங்கள். (அதெல்லாம் சொல்லவா வேண்டும் என்ன???)

Dream Girl

வரட்டா.........

உங்கள் நண்பன்

அபூ........

செவ்வாய், 2 ஜூன், 2009

இசையில் ஒரு கலவை.... கடந்தது 66 வது வயதை!!!


"அன்னக் கிளி" திரைப்படம் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இதுவரையில் நான்காயிரத்துக்கு மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்து, 750 ற்கும் மேற்பட்ட திரைப் படங்களுக்கு பின்னணி இசையமைத்து இசையில் ஞானம் கண்ட (கொண்ட ) அந்த "இசைஞானி " இன்று தன்னோட பிறந்த நாளை கொண்டாடுகின்றார்.

(இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் )

1943 ம் ஆண்டு "ராசய்யா " எனும் இயற் பெயரோடு பிறந்த இவர் இந்தியாவின் மிகச் சிறந்த இசை அமைப்பாளர்களுள் ஒருவராவார். ஹார்மோனியம், கிடார் வாசிப்பதில் கொல்லைப் பிரியம் கொண்ட இவர் 1970 களின் பின்னர் சினிமாவிற்குள் நுழைந்தார். தமிழக நாட்டுப் புற இசை, கருநாடக இசை, மற்றும் மேற்கத்தேய இசையில் பயிற்சி பெற்றிருக்கிறார். (இந்திய திரைப் படங்களில் மேற்கத்தேய இசையைப் புகுத்தியவர்களில் இவருக்கு முக்கிய பங்குண்டு)

"மச்சானப் பார்த்தீங்களா ??" பாடலின் வெற்றி அவரையும் வெற்றியின் உச்ச கட்டத்திற்கே இழுத்துச் சென்றது. அதனால் தான் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை 3 தடவை பெற்றுள்ளார்.
1985 - சாகர சங்கமம் (தெலுங்கு )
*************************************
1987 - சிந்து பைரவி (தமிழ் ) - நானொரு சிந்து...... பாடல் நினைப்பிருக்கா??
***********************************
1989 - ருத்ர வீணை ( தெலுங்கு )
***********************************
(தொடர்ந்து வரும் இரண்டு வருடங்களில் தேசிய விருது பெறுதல் என்பது உண்மையிலேயே போற்றத் தக்க ஒரு விடயம் தானே!.......)

இவரது பயணத்தை மட்டும் இசையோடு நிறுத்தி விடாமல் தனது குடும்பத்திற்கும் ஆகாரமாய் ஊட்டி விட்டுள்ளார். மகன்மார் "கார்த்திக் ராஜா , யுவன் ஷங்கர் ராஜா, மற்றும் மகள் பவதாரிணி " ஆகியோரையும் இசை உலகிற்கு அறிமுகப் படுத்தி வைத்தார். குடும்பமே இசை உலகில் மிதந்து கொண்டிருக்கும் வேலையில் இவர்கள் அனைவரினதும் படைப்பு மேலும் எங்களுக்கு இனிமையை தரும் நம்பிக்கையில், இசையமைப்பாளர் மட்டுமல்ல, இன்பமான பாடல்கள் பலதையும் தந்த அந்த ஞானிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மணிரத்னம்

"பகல் நிலவு ", "இதயக் கோயில் " என ஆரம்பமாகி இயக்கத்தில் நிலவு கண்ட அந்த மணியும் இன்றைய தினம் பிறந்த தினத்தைக் கொண்டாடுகின்றார்.

(இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் )

1956 ல் பிறந்த இவர் 1988 ம் ஆண்டு நடிகை சுஹாசினியை திருமணம் செய்து கொண்டார்.

"மௌன ராகம் ", " அஞ்சலி " , "பாம்பே ", "ரோஜா " என வெற்றிப் படங்களைத் தந்த இவர் இப்படங்களுக்காக தேசிய விருதினையும் பெற்றுக் கொண்டார். (இன்னும் ஏராளம் இருக்குது...........)

தொடர்ந்தும் நிறைய படைப்புக்களை படைக்க வேண்டும் என இப் பிறந்த நாளில் இவரிடம் கேட்டுக் கொண்டு இவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை நாம் மீண்டும் தெரிவித்துக் கொள்வோமா?????

சந்ரு

நம் வலைப் பூ நண்பனும், வானொலி நண்பனும், "எங்கேயும் எப்போதும் " நாயகனுமான சந்ரு இன்று தன்னோட (எத்தனயாவதோ????????) பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறார்.

(இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் )

தாளம் FM , சூரியன் FM, வெற்றி FM என தன் அறிவிப்புப் பயணத்தைத் தொடர்ந்த இவர் வெற்றியில் இப்போது படைக்கும் நிகழ்ச்சி "எங்கேயும் எப்போதும் ". சுவாரஷ்யமான நிகழ்ச்சி.

இன்று முழுக்க முழுக்க வெற்றி வானொலியை தான் கேட்க சந்தர்ப்பம் கிடைத்தது. சந்ருக்கு வாழ்த்துக்கள் வந்து குவிந்து கொண்டே இருந்தது. இதில் எல்லாத்தையும் விட சுவாரஷ்யமான சம்பவம் அவருடைய நேயர்கள் அவருக்கு சூட்டியிருந்த புனைப் பெயர்கள். (சந்ரு! நீங்க ரொம்ப மோ......, நிறைய பெண்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டீங்க...........)
அறிவிப்புத் துறையில் மாத்திரமல்ல, எழுத்துத் துறையிலும் ஆர்வம் உள்ள சந்ரு,........ உங்கள் பணியும், சேவையும் தொடர உங்களுக்கு வாழ்த்துக்கள்.

(உங்களுக்காக......மீசைக் கார நண்பா!... உனக்கு புகழ் அதிகம்டா....ன்னு சொல்லி ஒரு பாடல் எழுதி, அதற்கு தானே இசையமைத்து , தானே பாடப் போவதாக இன்றைய தினம் பிறந்த நாளைக் கொண்டாடும் பலர் பேசிக் கொள்வது என் காதில் இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கிறது......)

சந்ரு, லேட்டா சொன்னாலும் லேட்டஸ்ட்ஆ சொல்லிட்டேன் இல்லையா????
(மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள், வெற்றியோடு உங்கள் வெற்றிப் பயணம் தொடர்வதற்கு......)

மீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம்!
அதுவரையில் நல்லதையே சிந்திப்போம்!......

வரட்டா!..............

உங்கள் நண்பன்
அபூ........

திங்கள், 1 ஜூன், 2009

ஆண்டொன்றுக்கு இவ்வளவு பலியா???

அன்றாடம் பூமியில் அதிகரிக்கும் மாசுக்களினால் பூமி வேகமாக வெப்பமயமாகி வருகிறது. இந்த வேகத்தினால் ஏராளமான இயற்கை அழிவுகள் பூமியில் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது. ( இதற்கு முக்கிய காரணிகளாக இருக்கின்ற தொழிற்சாலைகளும், வாகனங்களும் இல்லையென்றால் நம் கதி, அதோ கதி தான்!....)

வெப்ப மயம் பற்றி ஐ. நா. அமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் "கொபிய் அனான் " தலைமையில் உருவான "மனித நேய அமைப்பு " இது தொடர்பாக ஆய்வொன்றை நடாத்தி அறிக்கையினை வெளியிட்டுள்ளது. (அறிக்கைய என் கையில தந்தாங்க இல்ல ..... )

அறிக்கை தொடர்பாக "கொபிய் அனான் " அளித்த பேட்டியில் பருவ நிலை மாற்றத்தால் மனித இனத்துக்கு ஏற்படும் அளிவுகளினதும், ஆபத்துக்களினதும் உச்ச கட்டத்தில் நாமிருக்கிறோம், இது தொடர்பாக உலகளவில் விவாதித்து மனித இனத்தைக் காப்பாற்ற முக்கிய முடிவு எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். (எடுப்போம் என்கிற சொல்லை நாம் மும்மொளிவோமா?...)

அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ள தகவலாவது "வெப்ப மயமாதல் மூலம் உண்டாகும் விளைவினால் ஆண்டொன்றுக்கு 3 இலட்சம் பேர் இறப்பதாகவும், 30 கோடிப் பேர் பாதிக்கப் படுவதாகவும் " அறிவிக்கப் பட்டுள்ளது. இதே நிலை தொடருமாயின் 2030 ஆம் ஆண்டுக்குப் பிற்பாடு ஆண்டொன்றுக்கு இறப்போரின் எண்ணிக்கை 5 இலட்சமாக அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடப் பட்டுள்ளது.


(இவற்றையெல்லாம் தடுப்பதற்கு நாம் என்ன முயற்சி எடுப்பது???)

(இப்படியே போனால் 2030 அல்ல, இன்னும் கொஞ்சம் நாள் தான்...........)

மற்றுமொரு பதிவில் சந்திப்போம்......
அதுவரையில் நல்லதையே சிந்திப்போம்!.........

வரட்டா!...........

உங்கள் நண்பன்
அபூ...........

வெள்ளி, 29 மே, 2009

ரொம்ப நன்றி!!!!!!

நேற்றைய தினம் ( மே 28) என்னோட பதிவுக்குள் வருபவர்களுக்காக ஒரு கேக் வைத்திருந்தேன். பதிவுக்குள் வந்து சாப்பிட்டு சென்றவர்களுக்கும், விடயம் அறியாமல் சாப்பிட மாட்டோம் என்று அடம் பிடித்தவர்களுக்கும் என்னோட இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சரி, மேட்டருக்கு வருவோமா?

ஏன் கேக் வைத்திருந்தீங்கன்னு சொல்லி நிறைய பேர் கேட்டாங்க. இது தான் விஷயம். நேற்றைய தினம் என்னோட பிறந்த நாள். (எத்தனயாவதா? ஏன்?............ ஏதாவது மேலதிக ஏற்பாடுகள் பண்ணப் போறிங்களோ? வேணாம்................ அது எல்லாம் கைவசம் இருக்குதுன்னு சொல்லி பின்னாடி இருந்து யாரோ சொல்வது போன்ற ஒரு எண்ணம்... சத்தம்...திரும்பி பார்தேனா!!! காதல் தோட்டத்தில் கனவு தேவதை. )

பிறந்த நாளுக்காக வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்ட நண்பர்கள், புதிதாக அறிமுகமாகிய வலையுலக நண்பர்கள், குடும்பத்தினர், என்னோட நேயர்கள் அனைவருக்கும் இன்றைய பதிவில் நன்றி சொல்கிறேன். (அட நன்றி சொல்வதற்கு தானே இன்றைய பதிவே............) SMS, E-mail , calls னு சொல்லி நிறைய வாழ்த்துக்கள். ரொம்ப சந்தோஷமாக இருந்தது. சென்ற வருடம் இதே நாள் தான் (மே 28 ) எனக்கு vasantham FM ல் முதலாவது நேர் முகத் தேர்வு இடம் பெற்றது. நேரடி ஒலிபரப்பில் தான் எனக்கு தேர்வு. அப்பொழுது நான் முதலாவது சொல்லிய வார்த்தை நேரம் 5 மணி 31 நிமிடம். கடந்த வருட பிறந்த நாள் பரிசாய் இறைவன் எனக்கு அளித்த அந்த பரிசை நினைத்து இன்று சில கனம் சந்தோசம் கொண்டேன். வந்த வாழ்த்துக்களை திரும்ப திரும்ப வாசித்தேன். (வேற வேல இல்லையா? ஹே..... அப்படியெல்லாம் கேட்கக் கூடாது......நான் என்ன வேல வெட்டி இல்லாதவனா? ஹி......ஹி............)

என்னோட நேயர்கள் நிறைய பேர் SMS மூலம் வாழ்த்துக்களை அனுப்பி இருந்தார்கள். அதில் இருந்த சந்தோசம் என்ன தெரியுமா? நான் நேயர்களோட மனசில இடம் பிடித்தேனோ? இல்லையோ? என்னோட நிகழ்ச்சி அவர்களுக்கு பெரிய திருப்பு முனையைக் கொடுத்திருந்தது. ஏன் தெரியுமா? "Fun Box நாயகனுக்கு இனிய பிறந்த்த நாள் வாழ்த்துக்கள் ", "சந்தோஷ Safras கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். " இது தான் அதிகமாக வந்திருந்த SMS. நான் கூடுதலாக பண்ணிய நிகழ்ச்சி "Fun Box ", "சந்தோஷச் சாரல் ". இரண்டு நிகழ்ச்சிகளையும் நேயர்களின் ரசனைக்கு அமைவாக கொடுத்திருக்கிறேன் என்கிற சந்தோசம் என்னில் அதிகமாகவே இன்று இருந்தது.

இனி இன்னக்கி கொஞ்சம் வித்தியாசமா என்னோட பக்கம் இருக்குதேன்னு சொல்லி நீங்க வித்தியாசமா பார்க்கிறது எனக்கு விளங்குது. என்னோட பிறந்த நாள் பரிசாய் எனக்கு கிடைத்த Design தான் அது. என்னோட Accomadation இருக்கும் றிஸ்மி, அரபாத் இருவருமே நேற்று விழித்திருந்து எனக்கு Surprise கொடுக்கிறதுக்கு அவங்க கொடுத்த நினைவுப் பரிசு தான் அது. (அப்போ .... நான் என்ன Treat கொடுத்தேனா? இப்போ சொல்ல மாட்டேனே.....!!!! ) ரொம்ப நன்றி நண்பர்களே......

மீண்டும் மீண்டும் சொல்றதுன்னா வாழ்த்துக்களைப் பரிமாறிய அத்தனை உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றிகள்....(நாங்க இனி தானே வாழ்த்து சொல்லப் போறோம். எங்களுக்கு?????....... உங்களுக்கு தானே முன்னைய பதிவில் கேக் வெச்சிருக்கேன். கேக்க சாப்பிட்டோமா......தண்ணியக் குடித்தொமானு சொல்லி அச்சா புள்ள........ஒரு சின்ன கடி தான்... வேற ஒன்னும் இல்லவே இல்லீங்கோ....) அனைவருக்குமே இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றிகள்....

மற்றுமொரு பதிவில் சந்திப்போம்......
அதுவரையில் நல்லதையே சிந்திப்போம்.....

வரட்டா.............

உங்கள் வார்த்தைக்குள் சிக்கும் இள ரத்தம்

அபூ.....



வியாழன், 28 மே, 2009

இதற்கு அர்த்தம் இருக்கு

பதிவுக்குள் வந்தவர்களுக்கு முக்கியமான அறிவித்தல்.

பதிவுக்குள் வந்ததும் தான் வந்தீங்க, மேல வெச்சிருக்கிற கேக் உங்களுக்காக வேண்டித் தான். (ஏன்? எதற்கு? என்கிற கேள்வியெல்லாம் வேண்டாம்.. ) பெரிய துண்டா வெட்டி சாப்பிட்டுட்டு போங்க . அப்புறமா..................... I mean அடுத்த பதிவில் அலசி விட்றேன் என்ன சங்கதி என்று.

பி. குறிப்பு:

கேக் சாப்பிட்டா கட்டாயம் தண்ணி குடிங்க..................

வரட்டா..............

உங்கள் வார்த்தைக்குள் சிக்கும் இள ரத்தம்

அபூ.............