வியாழன், 26 மார்ச், 2009

நான் எனும் தொடர் .......

ரொம்ப சின்ன வயசுங்க ! அதான் துள்ளித் திரியிற பருவம் . ரேடியோன்னு சொன்னா ரொம்ப ப்ரியம்க எனக்கு, எந்த நிகழ்ச்சி ஒலிபரப்பனாலும் நிகழ்ச்சியையும், அறிவிப்பாளர் குரலையும் நல்லா ரசிச்சிக்கிட்டே இருப்பேன். சரி எனக்கும் அறிவிப்பாளராக முடியுமா ?..... என்கிற கேள்வியோடு அந்தப் பேருந்தில் ஏறினேன். இறைவன் அருள் தொடர்ந்து பயணம் செய்துக்கிட்டு இருக்கேன் !

1996ல் பாடசாலையில் மேடையேறி முதல் நிகழ்ச்சியா ஒரு கவிதை சொன்னேங்கே! நிறைய்ய நண்பர்கள் வாழ்த்து சொன்னதுல பிறந்ததே உற்சாகம் அப்பா ....... ரொம்ப சந்தோஷமா இருந்தது. தன்னாலையும் முடியும் என்கிற நம்பிக்கையோடு தொடர்ந்து மேடையேறினேன் இளம் சிறிசு நான். காலங்கள் உருண்டோட நிகழ்ச்சிகளின் உருவாக்கமும் என்னில் அதிகரித்தது. சா / தரம் , / தரம் படிக்கும் பொழுதே படிப்பின் வேகத்தை விடவும் மேடை நிகழ்ச்சியின் வேகம் அதிகரித்தது. இதற்கு என்னுடைய நண்பர்கள், ஆசிரியர்கள், குடும்பம்னு சொல்லி எல்லோருமே நிறைய ஒத்துழைப்பு தந்தாங்க. நானும் அப்படியே தொடர்ந்து பயணம் செய்து கொண்டே இருந்தேன்.

2003 ல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபன முஸ்லீம் சேவையின் மாணவர் மன்றம் நிகழ்ச்சியில் குரல் கொடுக்க சந்தர்ப்பம் கிடைத்தது. நாட்கள் செல்லவே இழை இதயம், கவிதைக் களம், மாணவர் மன்றம் போன்ற நிகழ்ச்சிகளில் குரல் கொடுக்க சந்தர்ப்பம் கிடைத்தது. இப்படியே அறிவிப்பாளர் பயணம் தொடர்ந்தது.



அடுத்த பதிவில் தொடரும்..... நான் எனும் தொடர் !!!.....

( நான் எழுத ஆரம்பிச்சதும் முதலில் பின்னுட்டல் தந்த நண்பர் PARAPA வுக்கும் , இனி கருத்து வழங்கக் காத்திருக்கும் உங்களுக்கும் என்றும் நன்றி சொல்லக் காத்திருக்கிறேன். உங்களுடைய கருத்துக்களும், விமர்சனங்களும் எதிர் பார்க்கப் படுகின்றது. இனி என்ன? முடியும்னா உற்சாகப் படுத்துங்க ! )

தொடரும் பதிவில் தொடரும் வரை
வித்தியாசத்துடன்!!!!

அபூ ........


கருத்துகள் இல்லை: