சனி, 18 ஏப்ரல், 2009

தொடரும் நான் எனும் தொடர்!!!!!

முதல் பதிவில் விட்ட இடத்திலிரிந்து தொட்டுச் செல்கிறேன்.

உயர் தரம் படிக்கும் போதே வானொலியின் காற்றலையில் என் குரல் கலந்த போது நான் அடைந்த சந்தோசத்திற்கு அளவே இல்ல எனலாம். அந்த சந்தோசத்தோடு உயர் தரம் எழுதி விட்டு அறிவிப்பாளர் துறை சம்பந்தமான கற்கையை கற்க ஆரம்பித்தேன். கற்றுத் தந்த ஆசிரியர் ரமேஷ் அடிக்கடி சொல்லுவார் "உன்னில் நிறைய்ய திறமைகள் இருக்குது. கட்டாயம் உன் திறமைக்கு நல்ல களம் கிடைக்கும் " யப்பா......... யப்பா........ ஒரு ஆசானின் வார்த்தையில் எவ்வளவு வலிமை இருக்கிறது என்பதை அவர் கண் முன்னே காணக் கிடைத்தது. ஏனெனில் அங்கே படித்துக் கொண்டிருக்கும் போதே ஒரு தனியார் வானொலியில் அறிவிப்பளராய் இணைவதற்கு எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. ( முதலில் இறைவனுக்கு நன்றி ) அது தான் எல்லோரும் அறிந்த இணையத்தில் வெற்றி நடை போடும் உலகத் தமிழர் வானொலி (தாளம் FM)



தாளம் வானொலி எனக்கு சிறந்த பயிற்ச்சிக்கான கலைக் கூடமாக அமைந்தது. ஒரு அறிவிப்பாளன் கற்க வேண்டிய நிறைய்ய விடயங்களை நான் அங்கே கற்றுக் கொண்டேன். அது மட்டுமல்லாமல் அறிவிப்பாளர் பணி எவ்வளவு மகத்தான பணி என்பதையும் அங்கே தான் நான் கற்றுக் கொண்டேன். குறிப்பாக கலையகப் பயிற்சிக்கு சிறந்த ஒரு கலையகமாக தாளம் வானொலி எனக்கு அமைந்தது. இந்த வேலையில் அதன் பணிப்பாளர் இரா. தர்ஷன் உட்பட அங்கு என்கூட கடமை புரிந்த சக அறிவிப்பாளர்களுக்கும் நான் நன்றி சொல்ல கடமைப் படுகிறேன்.

காலங்கள் உருண்டோட நானும் தாளத்தில் தாளம் போட வருடமும் ஒன்று கழிய இன்னொரு வானொலியின் பிரவேச அதிஷ்டம் என்னைக் கொஞ்சம் தட்டி இழுத்தது. ஆமாம்................ கிழக்கின் விடியலாய் கிழக்கில் அபூ வசந்தம் (வசந்தம் FM) சுயாதீனத் தொலைக் காட்சியின் சகோதர வானொலியான (ITN) வசந்தம் வானொலியில் நான் அறிவிப்பாளரை இணைவதற்கு நிறைய்ய பேர் ஊக்கம் நல்கினர். குறிப்பாக மூத்த அறிவிப்பாளர்களான அபூ உபைதா மவ்ஜூது, சித்தீக் ஹனீபா, ஜீவகுமார் , யூனுஸ் கே. ரஹ்மான் மற்றும் புரவலர் உமர் ஹாஷிம் ஆகியோர்களுக்கு இந்த வேலையில் இதயம் திறந்து நான் நன்றி சொல்ல கடமைப் படுகிறேன்.

வானொலியின் பிரவேசத்தில் வசந்தத்திற்கு புதியவனாய் அறிமுகமான நான் விரைவாக நிறைய்ய விடயங்களைக் கற்றுக் கொண்டேன். நிகழ்ச்சி நிரலும் கையில் கிட்டியது. அதாங்க !! நிகழ்ச்சி செய்வதற்கு சந்தர்ப்பம் கிட்டியது. இனி என்ன? நம்ம அட்டகாசத்த நிகழ்ச்சியில காட்டிட்டோம் (புகுத்திட்டோம்) சொந்தமா தனக்கென ஒரு நிகழ்ச்சி (FUNBOX) . நேயர்கள (FUNNA) வைத்திருக்கிறது தான் இந்த நிகழ்ச்சி. நிறைய்ய வரவேற்பு எனக்கு கிட்டியது. குறிப்பாக என்னோட சக அறிவிப்பாளர்கள் நிறைய்யவே ஒத்துழைப்பு தந்தாங்க. நண்பன் அப்பாஸ், ஸுஹைல், பஸ்லி, அஸ்கர், ரைஸ். இவர்களுக்கும் என்னோட கோடான கோடி நன்றிகள்.

மற்றயது என்னோட நேயர்கள். ஒவ்வொரு நிகழ்ச்சி முடிந்ததும் என் கையடக்கத் தொலை பேசிக்கு தொடர்பு கொண்டு நிகழ்ச்சி பற்றிய விமர்சனங்களை அவ்வப்போது வழங்க அவர்கள் பின்வாங்கியதில்லை. வசந்தம் வானொலியில் காலை ஆரம்பிக்கும் உதய கீதம் நிகழ்ச்சி முதல் இரவு நிறைவு பெரும் ஜீவராகம் வரை அத்தனை நிகழ்ச்சியிலும் நான் குரல் கொடுத்திருப்பது எனக்கு மட்டும் சந்தோசமில்ல ( உங்க எல்லோருக்கும் சந்தோசம்னு நினைக்கிறேன் ) குறிப்பாக குறுகிய இடைவெளியில் இவ்வளவு முன்னேற்றத்திற்கு என்னுடைய நேயர்களும் காரணம்.

அடுத்து சின்ன வயசிலே அப்பாவை இழந்த எனக்கு அப்பாவாய் உதவிகள் செய்தவர் என் தாய் மாமன் கலாநிதி மஹ்ருப். அவர் மலேசியாவில் இருக்கிறார். இணையத்தில் என்னுடைய நிகழ்ச்சி கேட்டு விட்டு கருத்து வழங்க அவரும் பின் நின்றதில்லை. பாராட்டுக்கள் மாமா.

இனி யாரு? தோளோடு தோல் கொடுப்பவர்கள். என்னோட நண்பர்கள். நான் ஏதாவது நிகழ்ச்சி செய்யப் போவதற்கு முதல் அவர்களிடம் தான் ஒத்திகை பார்க்க வேண்டும். ( அத நான் கட்டாயம் பண்ண வேண்டும்க . இல்லேன்னா ஏடாகுடம் தான் ) நண்பன் ஷப்வான், சிராஜ் முனீர், சல்கான், முத்து , ராபின்னு சொல்லி நிறைய்ய நண்பர்கள். என்னோட நிகழ்ச்சி முதல் பாடல் தெரிவு!!! ஏன் ???? உடைத் தெரிவு கூட என் நண்பர்கள் தாங்க .அத்தனை நண்பர்களுக்கும் இதயத்தின் ஆழத்திலிருந்து உதிக்கும் நன்றிகள். (கடைசி வரைக்கும் இப்படியே இருங்கடா நண்பர்களே.....)

ஆனால் ஒரு சின்ன கவலை. என்னோட குடும்பத்தினர் நான் அறிவிப்பாளனாய் வருவதற்கு நிறைய்யவே கனாக் கண்டனர். ஆனால் அவர்களுக்கு வானொலியில் என்னோட நிகழ்ச்சிகள கேட்பதற்கு சந்தர்ப்பம் கிட்டியது குறைவு. முஸ்லீம் சேவையின் கவிதைக் களம் நிகழ்ச்சியை ஆரம்பத்தில் கேட்டிரிந்தாலும் கூட அட்டகாசமா நிகழ்ச்சி பண்ணுவதைக் கேட்க அவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆனா இன்னும் எதிர் பார்த்துட்டே இருக்காங்க. என்ன கொடும ? நான் இப்போ இலங்கையில் இல்லையே.

ஒரு நல்ல தொழில் வாய்ப்பைப் பெற்று இப்போ வெளிநாட்டில் இருக்கிறேன். நிச்சயம் இறைவன் நாடினால் மீண்டும் இலங்கை சென்று ஒரு அறிவிப்பாளனாய் என் குடும்பத்தையும் , என் நேயர்களையும் , ஏன்? உங்களையும் நிச்சயம் சந்தோஷப் படுத்துவேன். அது வரையில் அடிக்கடி சில பதிவுகளோடு உங்களை இணையத்தில் சந்திக்கிறேன்.



(அப்பா !!!!! வாசித்து முடிச்சிட்டீங்களா? ரொம்ப இன்றச்டா இருந்திருக்குமே. ) கட்டாயம் உங்க பின்னூட்டல தாங்க . இன்னும் நிறைய்ய எதிர் பாருங்க.

இவன்
உங்கள் வார்த்தைக்குள் சிக்கவிருக்கும்
abuu.






2 கருத்துகள்:

Tech Shankar சொன்னது…

இந்தப் பதிவை உங்கள் குரலில் எம்பி3 ஆகக் கேட்பதற்கு ஆவல். செய்ய இயலுமா.

அறிவிப்பாளரின் குரலில் ஒரு கணீர் என்கிற தன்மை இருக்கும்

உங்கள் எழுத்தில் உங்கள் அனுபவம் தெரிகிறது. முடிந்தால் எனக்காக ஒரு எம்பி3 ஆக இந்த பதிவை உங்கள் குரலில் பதிந்து அனுப்ப இயலுமா?

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

ரொம்ப நன்றிங்க. நிச்சயமா அதற்கான ஏற்பாட பண்ணி விட்டு நான் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். அப்பப்போ பின்னூட்டல் வழங்குங்க.