திங்கள், 20 ஏப்ரல், 2009

என்னோட காதலிக்கு இன்னக்கி வயது ஒன்று




(தலைப்ப பார்த்து நிறைய யோசிச்சீங்களா ? பரவா இல்ல...... யாரு? நீங்க தானே.. நல்லா யோசிங்க என்றெல்லாம் சொல்ல நான் விரும்பல்ல. மேட்டருக்கு வரேன்.)
கிழக்கில் வானலைப் புரட்சி படைத்த "ஒலிக்கும் வானொலிகளில் ஜொலிக்கும் வானொலி " வசந்தம் வானொலி இன்னக்கி 21 தன்னோட முதலாவது பிறந்த தினத்த வெகு விமர்சையாக சுயாதீன தொலைக் காட்சி வளாகத்தில் அமைந்துள்ள தனது கலையகத்தில் வெகு விமர்சையாக கொண்டாடுகிறது.


இனிய வாழ்த்துக்கள் வசந்தமே.....

தத்தெடுத்து தரணியிலே தந்த புரவலர் உமர் ஹாஷிம் தான் இதன் ஆணி வேர்.

ஒரு வருடத்தில் கடந்த பாதைகளும், பெற்ற அனுபவங்களும் ஏராளம். அதை எல்லாம் இன்னொரு பதிவில் பதிவிடுவேன்.

இனி வசந்த வளர்ச்சிக்கு துணை நின்ற அந்த உறவுகளை நினவு படுத்துகிறேன்.

புரவலர் உமர் ஹாஷிம்

இவர் தான் இதனுடைய ஆணி வேர். உலகறிந்த ஒரு புரவலர். என்னை விட நீங்கள் நிறைய்யவே இவரைப் பற்றி அறிந்திருப்பீர்கள்.

ஜீவகுமார் (முகாமையாளர் )

சக அறிவிப்பாளர்களோடு தோளோடு தோல் நின்று நண்பனாய் பழகும் இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபன ஆரம்ப கால அறிவிப்பாளர். அறிவிப்புத் துறையில் நிறைய தத்துவங்களை அறிந்தவர். பாடல் தெரிவு செய்வதில் குறிப்பாக நடிகர் திலகத்தினுடய்ய பாடல் தெரிவு செய்வதில் வல்லவன். இப்பொழுது அடிக்கடி பிரதான செய்திகளில் குரல் கொடுக்கிறார்.

சித்தீக் ஹனீபா (உதவி முகாமையாளர் )
கலையகம் வரும் போதே புன்னகை பூத்த முகத்தோடு வரும் இவரும் ஆரம்ப கால இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபன அறிவிப்பாளர். தற்போது சுயாதீனத் தொலைக் காட்ச்சியிலும் , வசந்தத்தினுடைய உதவி முகாமையாளராகவும் கடமை புரிகிறார். இவருடைய குரலையும் அடிக்கடி பிரதான செய்திகளில் நீங்கள் கேட்கலாம்.

(இனி வாங்க நம்ம அட்டகாச நண்பர்கள பற்றி சொல்லறேன். "நான் சொல்வெதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை.")

அப்பாஸ் (அபா....)



பெயரிலேயே ஒரு கலக்கல். இவரிடம் முன் ஜாக்ரதை கட்டாயம் தேவை. ஏன்னு யோசிக்காதீங்க. இவர் ஒரு செய்தியாளரும் கூட. செய்தி கிடைக்கலன்னா எங்களப் பற்றி எல்லாம் ஏடா குடமா போட்டுக் கொடுத்துருவார். ஒரு சின்னப் புன்னகையில் நேயர்களைப் பூரிக்கச் செய்யும் அவரு.............. இவரு......... இப்போ FUNBOX நிகழ்ச்சி பண்ணிட்டு இருக்காரு. இருந்தாலும் செய்தி தேடுவத விடல்ல. (அத விட்டா அம்மாடியப் புடிக்கிறது கஷ்டம்னு சொல்லி என்கிட்டே அடிக்கடி சொல்லுவாரு. அம்மாடி யாருன்னு எல்லாம் நீங்க கேட்கிறீங்களா ? ஹீ....ஹீ...... சொல்ல மாட்டேனே.....)

பஸ்லி


அப்பா..... (அய்யோ.... இவர் அப்பா இல்லீங்க. ஒரு பேரு மூச்சு விட்டேன்.) சனி, ஞாயிறு மட்டும் கலையகம் வந்து போனாலும் கலையகத்தெய் கலை கட்டி விடச் செய்வார். ( மாற்ற நாளெல்லாம் எங்க போறார்னு கேட்காதீங்க? ஏன்னா இவர் ஒரு ஆசிரியரும் கூட.....) ரொம்ப நல்லா கதை பேசுவார் எங்க கிட்ட. (என்ன கதையா? ஷ்......ஷ்..............அத எல்லாம் இப்போ சொல்ல முடியாது. அப்புறமா.....)

ஸுஹைல் (6.2")


எல்லோரும் சொல்றாங்களேன்னு நானும் இவர 6.2 ன்னு சொல்லுவேன். ஆனா உயரம் ரொம்ப கம்மி தான். என்ன தான் இருந்தாலும் சொல்லிட்டு போவம் இல்லையா? ஆனா ஒரு முக்கியமான விஷயம். யாராவது டஜ் பண்றதா பார்த்தால் கட்டாயம் இவரைத் தான் நினைவு வரும். ஏன்னா நிகழ்ச்சி நேரத்துல துள்ளிசைப் பாடல்கள போட்டுன்னு ஆட்டம் போட்றதே இவரோட வேல. படத்தில் பாருங்க எப்படி இருக்காரென்று . ஒரு ந்சின்ன பய்யன். இருந்தாலும் என்னை விட 2 வயது முதுமை இவருக்கு. (பெண்கள் நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் வெள்ளை மாதவர் இவர் தானாம்கோ.....)

அஸ்கர்


ஆரம்ப காலத்தில் என்னோடு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் என்கூட குரல் கொடுத்த இவர் நான் வசந்தத்தில் நுழையும் போது அங்கே அறிவிப்பாளரை இவரிக் கண்டதும் சந்தோசம் கொண்டேன். ஒரு நல்ல அறிவிப்பாளர். நிறைய்யவே சொந்தங்கள் சேர்த்திருக்கிறார். (என்ன சொந்தமா? அதான் நேயர்களைத் தான் சொன்னேன். )

ரைஸ்


எனக்கும் இவருக்கும் உள்ள ஒற்றுமை இருவரும் ஒரே நாளில் நியமனம் பெற்றது தான். நான் அறிந்த வரையில் நிதானம் மிக்க ஒரு நண்பன்.

(இந்த அட்டகாசக் குழுவோடு நானும் அட்டகாசம் பண்ணி விட்டு இன்னக்கி இங்க தனிய ஒரு கேக்க தின்னு விட்டு கொண்டாடுறேன். பிறந்தநாள. ....... நேயர்கள் அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும். தொடர்ந்தும் வசந்தத்தோடு இணைந்திருங்கள்.)

மற்றுமொரு பதிவில் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை விடை பெரும் உங்கள் அன்பு அறிவிப்பாளன் ...

சப்ராஸ் அபூ பக்கர்.

(என்னை வளர்த்த என் வசந்தத்திற்கு இந்த வருடம் என்னால் செய்ய முடிந்தது இவ்வளவு தான். நான் செய்தது போதுமா?



4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

ellam nallam yaar adhu karuppu kottu potta kuran..........?
machan sattapadi un pani thadarattum.

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

உங்கள் பெயரோடு பின்னூட்டல் இட்டிருந்தால் சந்தோஷப் பட்டிருப்பேன். இருந்தாலும் பதிவுக்குள் வந்தமைக்கு நன்றி.

Tech Shankar சொன்னது…

happy b'day

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

வாழ்த்துக்கு நன்றி. அப்பப்போ வலைப் பூக்குள் வந்து போங்க.