வெள்ளி, 12 ஜூன், 2009

பிரியமான தோழிகள்


பகுதி - 1

அப்பாடா...... நீண்ட நாளா பதிவிடலாம் என எண்ணி இருந்த பதிவை இன்று பதிவிடக் கிடைத்ததில் (அதாங்க, கொஞ்சம் ஓய்வு கிடைத்தது ) ரொம்ப சந்தோசம்.

ஒவ்வொருவரினதும் வாழ்வில் மறக்க முடியாத வாழ்க்கை ஒன்று இருக்கிறதென்றால் அது பள்ளியில் கழித்த பசுமையான பொழுதுகளாகத் தான் இருக்கலாம். ஐந்தாம் தரம், சா/தரம், உயர் தரம்னு சொல்லி பாடசாலை வாழ்க்கை தொடரும். இதிலும் குறிப்பா உ/தரத்தில் கழித்த காலங்களை ......... (ஆஹா..... எண்ணி பார்க்கும் பொழுதே எவ்வளவோ சந்தோசம்) பொன்னெழுத்துக்களால் பதியலாம். (இப்போ என்னால அத செய்ய முடியல, ஏன்னா அந்தளவு பொன் இப்போ என்கிட்ட இல்லையே.....)

சாதரண தரம் வரை கெகுனகொல்ல தேசிய பாடசாலையில் படித்து விட்டு உயர் தரத்திற்காக மதீனா தேசிய பாடசாலைக்கு புது முக மாணவனாக அறிமுகமானேன். என் போல நிறைய புது முகங்கள். ஆரம்ப 3 மாத காலத்துக்கும் நம்ம புது முகங்கள் பெற்ற ராகினுக்கு அளவே இல்லாமல் போய் விட்டது. (என்னைத் தவிர எல்லோருமே ராகின் பெற்றார்கள். யாருகிட்ட??? நம்ம கிட்டேவா??..எத்தன பேருக்கு ராகின் கொடுத்திருப்போம்? அட...மனச்சாட்சி தனியாகப் பேசிக் கொல்லுது... ) இந்த பையன்களும், பொண்ணுகளும் என்ன மாதிரி ராகின் பண்றாங்க தெரியுமா?

உண்மையில் இந்த ராகினின் போது இன்னும் அன்பு தான் அதிகரிக்கின்றது என்பதை காலப் போக்கில் நமக்குள் நாம் நிரூபித்து விட்டோம். ஒருவரை ஒருவர் நல்ல நண்பர்களாக அறிமுகமாக்கிக் கொண்டோம். தொடரும் அன்புப் பயணத்தில் விதி விளையாடுவது என்றால் அது உயர் தரம் எழுத நெருங்கும் அந்த 3 மாத கால இடை வெளியில் தான். துள்ளித் திரியும் மாணாக்கரின் கையிலெல்லாம் அந்த நேரத்தில் பண்பாக பரிமாறிக் கொள்ளப் படுவது இந்த Autographs மட்டும் தான். (ஒரு மாதிரி விடயத்துக்கு வந்துட்டேன் ) அப்போ இன்றைய பதிவு Autographs பற்றியது தான். (சேரனுடையது இல்லீங்க.... என்னுடையது.....)

பொதுவாக ஆண் நண்பர்களுக்கு ஆட்டோகிராப் எழுதுவதில் கொஞ்சம் விருப்பம் குறைவு அல்லது தயக்கம். (நீங்க எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் )அதையும் மீறி கொடுக்கும் ஆட்டோகிராப்பை நோட் புக்காக மாற்றிக் கொள்ளும் ஒரு சில நல்ல ஆண் நண்பர்கள் அங்கங்க இருக்கிறாங்க. இல்லன்னா ஒரே வரியில் "I wish you all the best for your A/L exam ". (எனக்கெல்லாம் சிறந்த வரி. அட...எல்லோருக்கும் இதே படத்த தான் ஓட்டுறது. நாங்க அப்போ இருந்த நிலமையில கவிதை எல்லாம் எங்களுக்கு வரல்ல....இப்போ கூட என்னவோ வந்து தொலைக்கிற மாதிரி??? )

ஆனால் நண்பிகளைப் பொறுத்த வரையில் கொடுத்த ஆட்டோகிராப்பை பத்திரமாக பதிவிட்டுத் தருவதில் அவர்களுக்கு நிகர் அவர்கள் தான். அப்படியான நண்பிகளுக்கு கொடுக்கப் பட்ட என் ஆட்டோகிராப் பற்றித் தான் இன்றைய பதிவு.

ஆட்டோகிராப்பில் சில கேள்விகளைக் கேட்டு இதற்கு நீங்கள் கட்டாயம் பதில் எழுதுங்கன்னு சொல்லியிருந்தேன். அவர்களுக்கு கொடுத்த ஒரு சில கேள்விகளையும், அவர்கள் எழுதிய பதில்களையும் தொடர்ந்தும் வாசிப்போமா??? (ரொம்ப intresting.......பொண்ணுகலாச்சே......)

தோழிகளினுடைய பெயர்கள் மட்டும் கற்பனைங்கோ.......

(இது தோழிகள் இல்லீங்க..... தோழிகள் மாதிரி....)


கே : 1 - உங்களுடைய பொழுது போக்கு?????

நண்பி A - Safras, எனக்கு என் பொழுது போக்கிற்கு டைம் போதாது. (அப்படி என்னதான் பிஸி???)
* சோகப் பாடல் பாடுவது.. (உங்க வாழ்வில் இவ்வளவு சோகமா??)
* என் நண்பர்கள் கூட அரட்டை அடிப்பது... (ஆள விட்டால் போதும்கோ.... )
* நடித்தல் & கவிதை எழுதுதல்...
* பக்கத்து வீட்டு & என் family குழந்தைகளை பராமரிப்பது...... (பிறர் குழந்தையை ஊட்டி வளர்த்தால் தன் குழந்தை தானாய் வளருமாம்கோ....)
* சமைத்தல் & வீட்டுத் தோட்டத்தை பராமரித்தல்....

நண்பி B - எனது பொழுதே போக்காகத் தான் உள்ளது...(அப்படி எண்ணக???)
* ரேடியோ கேட்டுக் கொண்டு டான்ஸ் பண்றது.....
* பிள்ளைகளுடன் கொஞ்சி விளையாடுவது.... (எல்லோருக்கும் உள்ள ஆச தான் இல்லையா???)
* ஆ....மறந்தே போயிட்டேன், முக்கியமான பாயிண்ட். எதிர் வீட்டு யன்னலை அடிக்கடி எட்டிப் பார்ப்பது. எங்க அம்மா கிட்ட சொல்லிராதீங்க.....(சொன்னா ஒரு கல்லுல 2 மாங்கா சாப்பிடலாம்கோ......)

நண்பி C - Saf, சில நேரம் எதையாவது செய்வேன். செய்வதெல்லாம் எனது பொழுது போக்குத்தான் (அட... அததானே கேட்கிறேன்....இன்னும் சின்ன புள்ள தனமாவே.....)
* முக்கியமா சக்தி FM உடன், அல்லது சூரியன் FM உடன் இருப்பேன். இனி நீ எங்க போறியோ அதோடு தான் இருப்பேன். உன் ஆசை நிறைவேறிட இறைவனைப் பிரார்த்திக்கிறேன்...(நன்றி தோழியே...கனவு நனவாகி விட்டது....)

நண்பி D - பொழுது போக்கென்று ஒன்று இல்லை. வழமையானது தான். (மிகவும் சுருக்கமா ஆட்டோகிராப் எழுதிய அன்புத் தோழி இவங்கதான்.........)

நண்பி E -
* கதைப் புத்தகம் வாசித்தல் & கவிதை எழுதுதல்
* பிள்ளைகளுடன் கொஞ்சி விளையாடுதல்.. (அட... இங்கயுமா????? முடியல....)
* என் செல்லத் தம்பியுடன் விளையாட்டுக்காக சண்டை பிடிப்பது.. (இப்படியும் ஒரு பொழுது போக்கா??? பாவம் உங்க தம்பி...)

கே : 2 - கோபமடைந்த சந்தர்ப்பம்?????

நண்பி - A
* அடுத்தவர்களை இழிவாக மட்டம் தட்டி பேசும் போது.... (யார் தான் பொருப்பாங்க இல்லையா?????? )
* பெண்கள் ஆண்களையோ, ஆண்கள் பெண்களையோ கை நீட்டி அடிக்கும் போது...(இது நியாயமா??????)
* குழந்தைகளை யாராவது திட்டும் போது.....

நண்பி - B
* எனக்கு கோபம் கொள்பவர்களைக் கண்டாலே கோபம் வரும். (அதிகம் கோபம் கொள்வது பெண்மைக்கு அழகில்லையாம்...மறந்துட்டீங்களா தோழியே????)


நண்பி - C
* நான் அதிகம் கோபம் கொள்வதில்லை. ஆனால் என்னைப் பற்றி, என் குடும்பத்தைப் பற்றி, நண்பர்களைப் பற்றி யாராவது தப்பாய் பேசினால் கோபம் கோபமாய் வரும்...( இங்க தாங்க பாசம் பொதிந்து கிடக்குது.......)

நண்பி - D
* வீணாக சந்தேகப் பட்டால்.....(ஒருவேள வாழ்கையின் பாதிப்போ....யாரறிவார்....)
* எனக்கு பிடிக்காத செயல்களை யாராவது செய்யும் பொழுது..... (ஏற்றுக் கொள்கிறேன்....)

நண்பி - E
* என் தந்தை என்னை விட வேறு யாருடனாவது அன்பாய் பேசினால் வருமே ஒரு கோபம்... அதை என்னால் கட்டுப் படுத்த முடியாதுடா நண்பா!! (சுய நலத்தையும், தந்தை அன்பையும் இங்க தான் பார்கிறேன் தோழியே.....)

வாசித்து முடித்திட்டீங்களா??

அப்பாடா.....இன்னக்கி ஒரு பதிவு ஒகே


இன்னும் சில கேள்விகளும் 5 பிரியமான தோழிகளினது பதில்களும் அடுத்த பதிவில்.......

அப்போ நான் வரட்டா!!!
(என்னது? முகவரிய தந்து விட்டு போகவா? எங்க ஏரியால தான் தபாலகம் எல்லாம் இல்லையே....பின்ன எதுக்கு முகவரியெல்லாம்??....அதனால கருத்த மட்டும் சொல்லிட்டு போங்க....OK)


உங்கள் நண்பன்
அபூ.....




2 கருத்துகள்:

'THEME of GIRLS' சொன்னது…

sIR,,,,,,,,,,,,,,,,,,antha ragin enral enna sir......................................... nice page.....interesting......

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

THEME of GIRLS'

ரொம்ப நன்றி வலைக்குள் வந்தமைக்கு,

/// sIR,,,,,,,,,,,,,,,,,,antha ragin enral enna ///

ஆஹா..., என்கிட்டயே ராகின பற்றி கேட்கிறீங்களா?? அதுவா, அது.... பகுடிவதை..பகுடிவதை...(நடிகர் விஜய் ஸ்டைல்ல சொல்லிப் பாருங்க.....)

///sir............ nice page.....interesting....../////


இன்னும் தொடரா வர இருக்குது. அதனால அடிக்கடி வந்து போங்க....OK