திங்கள், 15 ஜூன், 2009

பிரியமான தோழிகள் தொடர்கிறது!!!

முதல் பதிவில் பள்ளி வாழ்வின் பசுமையான நினைவுகளாய் எனது பள்ளித் தோழிகள் பகிர்ந்து கொண்ட கேள்வி பதில்களை உங்களோடு பகிர்ந்து கொண்டேன். அதன் தொடர்ச்சி இதோ..........

கே : 3 - பிடித்த பாடல்????

நண்பி - A
* நிறைய இருக்கு........ but உங்களுக்காக சில....(அப்பா...ஆட்டோகிராப்பை பக்கம் பக்கமா முடித்த தோழியே....பாடுங்கள் உங்கள் பல்லவியை.....)
*ஓ நெஞ்சே... சோகம் எந்தன் முகவரியா?? (அதப் போய் என்கிட்ட கேட்டுட்டு இருக்கீங்களே??? )
* நானொரு சிந்து, காவடிச் சிந்து......
* காணக் கருங்குயிலே.... காதல் ஒரு பாவமடி.....
* பூமாலை ஆகாமல் பூக்கள் ரெண்டு வேகுது... (வெந்ததும் குழம்பு வெச்சி கூப்பிடுங்க தோழியே......)
*என் ஜீவன் பாடுது........
* மண்ணில் இந்த காதல் அன்றி......

(நன்றாக இருந்தது உங்கள் தெரிவு......)

நண்பி - B
எனக்கு துள்ளிசைப் பாடல்கள் தான் பிடிக்கும்.... So,
* வெச்சிக்க வெச்சிக்கவா??? (ரொம்ப கவனமா....)
* போட்டுத் தாக்கு....
* ஆத்தவறாயா...... (ரொம்பத் தான்........)
* மன்மதராசா....
* கும்பிடப் போன தெய்வம்......
* அப்படிப் போடு.... (நல்லாத் தான் போட்டீங்க....போங்க.....)

நண்பி - C
எனக்கு சிறு வயதிலிருந்தே மாதவனைப் பிடிக்கும், தப்பாய் நினைக்க வேண்டாம்..என்னவனக்கு அடுத்த படியாக மாதவன் தான் என் இதயத்தில் (அப்போ.... நான்????? நண்பன் மட்டும் தானா??? பரவாஇல்ல.. எவ்வளவோ பொருத்துட்டோம்....இத மட்டும் பொறுக்க மாட்டோமா என்ன??) அந்த வகையில்....
* வெண்மதி வெண்மதியே நில்லு......
* காற்றே....பூங்காற்றே.....
* மற்றப்படி சோகப் பாடல்கள் பிடிக்கும்...

நண்பி - D
* ஞாபகம் வருதே..... (என்ன ஞாபகமோ...)
* கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை.... (புரியாம இருக்கும் வரையில எங்களுக்கு நல்லது தான்....)
* மனசே மனசே மனசில் பாரம்.... (இறக்கி வச்சிட்டாப் போச்சு.... இதைஎல்லாம் போய் சொல்லித் தரணுமா???)

நண்பி - E
* காதல் வளர்த்தேன்....(யார் மேலயோ...யாரறிவார் ???)
* அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க.....(கொடுத்துட்டீங்க இல்லையா??? அப்போ.. அடங்குங்க....)
* ஏதோ மின்னல்...... (அது வானத்து மின்னலுங்க.... ஐயோ....ஐயோ....)


கே : 4 - பிடித்த கவிஞர் & கவிவரி????

நண்பி - A
வைரமுத்து & மூ.மேத்தா

என்னிதய நாளேட்டின்
எல்லாப் பக்கங்களையும்
மீட்டிப் பார்க்கிறேன் என் கணவனுடன்
அங்கு.....என்னுடன் சேர்ந்து
செல்லரித்த உன் நினைவுகளும்.... (ஆப்பு வைக்கிறதுக்குன்னு சொல்லி அப்போதிலிருந்தே நீங்க தயார் இல்லையா?? பாவம் உங்க........ அவரு....)

நண்பி - B
வைரமுத்து

எனக்கென ஒருவன் பிறப்பான்...
அவன் என்னுடனே இருப்பான்..
நான் இறந்த பின்னே .....
எனக்கென பிறந்த அவன் இறப்பான்..... (இங்கயுமா??? என்ன கொடும சார்???)

நண்பி - C
வைரமுத்து

நீ எழுதும் எல்லாக் கவிதையும் பிடிக்கும். (இடம் பார்த்து போட்டுக் கொடுக்கிறியே தோழி....) அதனால பெருமை கொள்ளாதே....உண்மையிலே பொறாமையாக இருக்கிறது..(அந்த தொழில விட்டு ரொம்ப நாலாச்சுங்கோ...) உன் கவிவரிகள் ரொம்ப பிடிக்கும்....பிடிக்கும்....(அப்போ...என்..........???? ஹி......ஹி....)

நண்பி - D
வைரமுத்து

உங்கள் கவிவரிகள் ரொம்ப பிடிக்கும்.....ஆனா சொல்லத் தெரியல்ல Saf, (தப்பினேன்....பிளைத்தேன்.....)

நண்பி - E
வைரமுத்து, குறிஞ்சித் தென்னவன்

உன்னை விட்டு உடலால் பிரிந்து
கண் காணா தூரத்தில் காலத்தால் வாடுகிறேன்...
உன் மனதில் நிச்சயம் நான்
மிகவும் நெருக்கத்தில் இருக்கிறேன்
என்பதை நானறிவேன்.... (இப்போ Success ...... )

கே : 5 - பிடித்த திரைப் படம் & காரணம்?????

நண்பி - A
* பிரியாத வரம் வேண்டும் - நெருங்கிய நண்பர்களுக்கிடையில் காதல் வந்தால் எப்படிச் சொல்வது??? (சத்தியமா தெரியலையே.....வாயால சொல்லிட்டாப் போச்சு..... அல்லது... நீங்களே சொல்லுங்க?.....)
* வசீகரா - அவள் வேண்டும் அவனுக்கு.... ஆனால் ஏற்க முடியாத நிலை...
* முகவரி - அவனுக்கென்று ஒரு இலட்சியம்... அது நிறைவேறும் வரை அவள் அவன் மீது கொண்ட காதலின் காத்திருப்பு.....
* காதல் அழிவதில்லை - தலைப்புக்கேற்ற முடிவு.. தடைகளை உடைத்து காதலில் வென்றான் சிம்பு...
* மூன்றாம் பிறை & பொம்மைக் குட்டி அம்மா - நீங்களும் பாருங்க புரியும்.... (நன்றாகவே புரிந்தது......)

நண்பி - B
* நினைத்தேன் வந்தாய் - தேவயாணி விஜயின் மீது அதிக காதல் வைத்திருப்பது, எனினும் விஜய் ரம்பாவை காதல் பண்ணி பின் இருவரும் விட்டுக் கொடுத்த பிறகு முடிவை பல குழப்பங்களுக்கு மத்தியில் தெளிவாக முடித்திருக்கின்றார் இயக்குனர்... (உங்க விமர்சனம் என்னைக் குழப்புதுங்க.....)

நண்பி - C
* தேவதையைக் கண்டேன் - அவனின் ஆழமான காதல், அதை புரிந்து கொள்ளாத அவள், (பெண்கள் எப்பவுமே இப்படின்னு சொல்லி தெரியல போல???) இரண்டிற்கும் இடையில் நடக்கும் போராட்டம்....
* மின்னலே - ஆள்மாறாட்டம் செய்து காதல் கொள்கிறான் அவள் மீது. உண்மை தெரிந்தும் கடைசியில் இருவரும் காதலித்து சேர்வது. உண்மையான காதலை மறக்க முடியாத நிலை.... (ஆண்களின் வலி இப்போ தெரியுது இல்லையா????)

நண்பி - D
* பிரியாத வரம் வேண்டும் - என்றும் பிரியாத நட்பு...

நண்பி - E
* அலை பாயுதே.....
* லேசா லேசா....
* கில்லி - காரணம் சொல்லத் தெரியவில்லை. (அது தெரிந்த விடயம் தானே தோழி.....)

கே : 6 - என்னில் உங்களுக்கு (A) பிடித்தது......& (B) பிடிக்காதது....???

நண்பி - A
A- வெளிப்படையாகப் பேசுவது...(அட...அப்படி என்னதான் பேசுறேன்??)
சத்தம் போட்டுச் சிரிப்பது.... (ஆஜர்...)

B- சிலரை சில விடயங்களுக்காக பழைய கோபங்களை வைத்துக் கொண்டு உதாசீனப் படுத்துவது........(பிறகு.....நமக்கு கிடக்காதத இன்னொருவருக்கு கிடைக்க விடுவோமா?? இது அப்போ இருந்த எண்ணம்.... ஆனா இப்போ அது இல்ல...)

நண்பி - B
A-நீங்கள் அனைவரோடும் அன்பாகப் பழகுவது, நண்பருக்காக உங்களையே சில இடங்களில் விட்டுக் கொடுப்பது....இது ரொம்ப பிடிக்கும்டா..... (ரொம்ப நன்றி தோழியே.... அந்தப் பழக்கம் இன்னும் இருக்குது....)

B- நீ புதிதாக மாட்டியுள்ள கண்ணாடி... (ஆஹா....அத மாட்டினா தான் மாட்டக் கூடிய figure மாட்டும் அப்போ.... )

நண்பி - C
A- உன் அருமையான சிரிப்பு.... (ஆஹா....மேல சொல்லுங்க..)
* உன் இன்ப துன்பங்களை என்னிடம் கூறுவது...(ரொம்ப நெருக்கம் இல்லையா??? அதனால தான்.......)
* மற்றவர்களுக்கு உதவி பண்ணுவது......

B- உன்னிடம் நிறைய திறமைகள் இருக்கிறது.... அதை நீ உதாசீனப் படுத்திக் கொண்டிருக்கிறாய். தயவு செய்து அதை மற்றவங்களுக்காக நீ பயன் படுத்து.... (ஓகே.....கிளம்பிட்டேன்.......)

நண்பி - D
A* உங்கள் மனசு.....
* பிறருக்கு உதவி செய்யும் குணம்.....
* உங்கள் திறமைகள்......
* முக்கியமா உங்கள் கவிதை... (என் கவிதையால உங்க காதல் வெற்றி பெற்றத மறக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்.... )

B- சின்ன விடயங்களுக்காக கோபம் கொள்வது.....(அது பிறந்ததிலிருந்து கூட வருது....அதுவா வருது...... என்ன தான் பண்ணலாம்????)

நண்பி - E
A- வெளிப்படையாக பேசுவது......
* உங்கள் அறிவிப்புக்கள் பிடிக்கும்....
* எல்லோரையும் விரும்பி அன்பை ஏற்றுக் கொள்வீங்களே.... அது ரொம்பவே பிடிக்கும்... (அதான் நம்ம வழி....)

B-சொன்னால் கோபிக்க வேண்டாம். (இதுக்கெல்லாம் போய் கோபப் படுவேனா??? சொல்லுங்க.....)
சிலரை சில இடங்களில் கிண்டல் செய்வீர்களே..... அது சுத்தமா பிடிக்கல... (மாத்திட்டாப் போச்சு.....இப்போ மாறிட்டோம் இல்ல......)

இனி கடைசிக் கேள்விக்கு வருவோமா????

கே : 7 - நட்பு & காதல் பற்றி?????

நண்பி - A
நட்பு-
அன்புக் கடலில் ஆழ்ந்து எடுத்த விலை மதிக்க முடியாத சொத்து...
இது சில இதயங்களின் அழியாச் சொத்து - இதை அறிந்தவர்களிடம் ஏற்படுவதே நட்பு... (கலக்கிட்ட மச்சி.....)நட்பு என்பது கொஞ்சம் கொஞ்சமாக அன்பைத் தந்து உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும். நட்பு எல்லோருக்கும் வராது. வந்திச்சி.... அப்புறம் போ...காது........ (புரிஞ்சது.......)
காதல் -
இது எல்லாம் எனக்கு தெரியாது... (அப்புறம் எப்படி சொல்லப் போறீங்க????)காதல் என்பது தீப்பெட்டி மாதிரி. கண்களினால் உரசினால் போதும். தீப்பிடித்துக் கொள்ளும். காதல் என்பது எங்க ஏரியா பாதை மாதிரி.... மேடு, பள்ளம், குழி, சேறு, பசுமையான வயல் இவை எல்லாம் தாண்டித் தான் வர வேண்டும் காதலுக்கும்... (அனுபவம் எப்படியெல்லாம் பேசுது...... சாரி......) இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு ஜீவ ராசிக்கும் பொதுவான விடயம்னா அது காதல் மட்டும் தான், இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு உயிரினமும் காதலிக்கின்றன....காதலிக்கப் படுகின்றன....அவ்வாறாயின் மனிதன் தவிர்ந்த மற்றவைகள் ஏன் இன்னும் தாஜ்மஹால் கட்டவில்லை? (ரொம்ப நல்லா இருக்கே?? அது சரி! இதப் போய் என்கிட்ட????? மேல வாசிங்க...) "சின்னங்கலிலெல்லாம் காதலில்லை....காதலில் சின்னங்களும் இல்லை....."(அடிச்சா பாருங்க போய்ண்டுல....)

நண்பி - B
நட்பு-
தன்னலம் இல்லாதது தான் நட்பு...... (எங்கயோ கேட்டது போல இருக்கு!!)
காதல்-
மாட்டருக்கு வந்துட்டீங்களா? காதல் வந்தால் என்னவன் நினைப்பைத் தவிர மற்றயவை அனைத்தும் குழப்பமாகவே தெரியும். (ஓஹோ...இதனால தானா ஒவ்வுறு நாளும் home work பண்ணாம திட்டு வாங்கிறது???? யாருக்கு தெரியும் இந்த பூனையும் பால் குடிக்குமான்னு சொல்லி....ஹி......ஹி.....)

நண்பி - C
நட்பு - எல்லையற்றது......(எதுவரைக்குனு தெரியலையா???)
காதல் - இரண்டு கண்கள் பார்த்துக் கொள்ளும் ஒற்றைக் கனவு......

நண்பி - D
நட்பு - உங்களைப் போல நண்பர்களிடம் இருக்கம் வரைக்கும் அது புனிதமானது.... (இதுக்கு மேல என்னால முடியலப்பா!!!!)
காதல் - என்னையும் விட இதில் உங்களுக்கு அனுபவம் ஜாஸ்தி.... (அங்க அரவணைத்து இங்க அடிக்கிறீங்க இல்லையா????)

நண்பி - E
நட்பு - நம்பிக்கை எனும் அத்திவாரத்த்ல் கட்டப் பட்டது......
காதல் - அனுபவம் குறைவு நண்பா.... (திருப்பதிக்கே அல்வாவா??????)

ஓகே..... கொஞ்சம் வேலைப் பழுக்களுக்கு மத்தியில் இரவோடு இரவாக விழித்திரிந்து ஒரு பதிவை இட்டிருக்கிறேன்... என் பதிவுக்குள் நுழையும் நீங்கள் ஏமாற்றத்தோடு திரும்பக் கூடாது என்பதற்காக......

So, அப்படியே உங்க கருத்த கொட்டிட்டு போங்க.....

அப்போ.... நான் வரட்டா????

உங்கள் நண்பன்

அபூ.....





9 கருத்துகள்:

ivingobi சொன்னது…

neenga nalla nanbara irunthu irukkinga unga friends ku.....
azhaippirku nandri..... aajar aagittom la....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

////aajar aagittom la....////
அட ஆமா இல்ல?? (ஆஜருக்கு சொன்னேன்...)

நன்றி பதிவுக்குள் வந்தமைக்கு....
அடிக்கடி வந்து போங்க என்ன?? அப்படியே....அப்படியே.....கொஞ்சம் மசாலா போட்டு காரம் கொடுத்துட்டு போங்க....

என்ன கொடும சார் சொன்னது…

உங்க நண்பிகள் நம்பர் இருந்தா கொடுங்க சார்

ivingobi சொன்னது…

ada enakku ithu thoanama poachae..... ?

Enjy pannunga koduma....

safras Aboobakker சொன்னது…

(நீங்கள் அழைத்த இலக்கம் தற்போது பாவனையில் இல்லை.....)

இந்த மாட்டரத் தான் சம்மதமே இல்லாத ஒரு aunty அடிக்கடி சொல்லிட்டு இருக்காங்க அந்த ஒவ்வொரு நம்பர்லையும்....

அதனால அந்த நம்பரெல்லாம் நமக்கு எதுக்கு???? (இது தெரிந்தே பயப்படாம தந்துட்டாங்க அவங்க...... )

என்ன கொடும சார்!!! நீங்க ஜெயிச்சிட்டீங்க..... (சுற்றி சுற்றி மாட்டருக்கு வந்துட்டீங்க இல்லையா???......)

ரொம்ப நன்றி பதிவுக்குள் வந்தமைக்கு.....

safras Aboobakker சொன்னது…

ஆஹா.... எங்க தூக்கி விடுறீங்க கொடும சார?........
(ஒருவேள நண்பனுக்கு கிடச்சா உங்களுக்கு கிடச்ச மாதிரியோ????)

வலைக்குள் வந்தமைக்கு நன்றி.....
அடிக்கடி வந்து போங்க......

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

ஆஹா.... எங்க தூக்கி விடுறீங்க கொடும சார?........
(ஒருவேள நண்பனுக்கு கிடச்சா உங்களுக்கு கிடச்ச மாதிரியோ????)
வலைக்குள் வந்தமைக்கு நன்றி ivingobi.......
அடிக்கடி வந்து போங்க......

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

ஆஜர்

ஆஹா இவ்வளவு நண்பிகளா

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

என்ன வசந்த்???
இன்னும் நிறைய இருக்கே......(ஆனா ஒரு கவலை.... எல்லோர் கூடையும் அவங்க சரிபாதி ஒட்டிக்கு ஒட்டி, முட்டிக்கு முட்டி சரிபாதி என்பதை நிரூபித்துக் கொண்டே இருக்காங்க....நல்லா இருக்கட்டும் இல்லையா?? உயிர் தோழிகள் என்பதால.....)

பதிவுக்குள் வந்தமைக்கு நன்றி வசந்த்....
அப்பப்போ வந்து போங்க.....