வெள்ளி, 19 ஜூன், 2009

புரியாத புதிர்!!!....

ஏனோ தெரியவில்லை... இப்போதெல்லாம் கணனிக்கு முன்னாள் அமரும் போது விடை தெரியாத கேள்விகளும், மனதை சஞ்சலப் படுத்தும் சிந்தனைகளும் தான் தடம் புரள்கிறது.சில வேளை சொந்தங்களை விட்டு கடல் கடந்து இருப்பதனால் என்னவோ யாரறிவார்? (ஆக....கவிதை எழுத ஆரம்பித்து விட்டேன் இல்லையா???.....)

இது கவிதையா??? வார்த்தைகளா?? அல்லது என்ன சொல்றதுன்னு தெரியல்ல?....... வாசிக்கிற நீங்க தான் சொல்லணும் எப்படி இருக்கிறது?... என்ன உணர்கிறீர்கள் என்பதை?.....

அப்போ........தொடங்குங்க........

மலரும் விடியல்கள் ஏனோ?..
மனதை சஞ்சலப் படுத்துகிறது......
மலரும் மொட்டிடம் கேட்கிறேன்....
மடி சாயும் தோழனிடம் கேட்கிறேன்.....
மஞ்சள் வெயிலிடம் கேட்கிறேன்....
மர நிழலிடம் கேட்கிறேன்....
மருங்குகளில் கிடக்கும் இலைகளிடம் கேட்கிறேன்...
மனதை வருடும் தென்றலிடம் கேட்கிறேன்.....
மன்னிக்கவும் என்கிறது அத்தனையும்....
மன்றாடுகிறேன்...காரணம் அறிவதற்கு......

மனங்களே!!!... அப்படி மனதை சஞ்சலப் படுத்தும்
மர்மம் என்னவாக இருக்கும்?????
மனம் திறந்து உங்கள் பதிலை சொல்லுங்கள்.......
மன வேதனைப் படும் இவனுக்கு.........என்ன சொல்லப் போறீங்க???

தாராளமா சொல்லிட்டு போங்க....(அட... கருத்து சொல்லுங்கன்னு சொன்னேன்....)

வரட்டா!!!!

உங்கள் நண்பன்,
அபூ......

16 கருத்துகள்:

♫சோம்பேறி♫ சொன்னது…

:-)

♫சோம்பேறி♫ சொன்னது…

Go to settings --> comments --> and dis able word verification.

G3 சொன்னது…

Ippadi kavithai ezhudhi ivan pala pera padikka veikkara paavatha seiya poranaennu modhallayae varuththa pattuducho manasu ;))))))

லவ்டேல் மேடி சொன்னது…

// இது கவிதையா??? வார்த்தைகளா?? அல்லது என்ன சொல்றதுன்னு தெரியல்ல? //


இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல......!!! நல்ல சிந்தனை .....!!! இது குணா படத்துல வர " கண்மணி அன்போடு " பாட்டு மாதிரி இருக்கு..... ஏதாவது பிகர் இருந்த கவிதையா மாத்திக்கலாம்.....!!!! வாழ்த்துக்கள்....!!!!// மலரும் விடியல்கள் ஏனோ?........ ///


கவிதை மிகவும் அருமை..... எனக்கென்னமோ இது வீட்டு நெனப்பு இல்லைன்னு தோனுது.....!!! ஏனுங் தம்ப்பி ... ஏதாவது ... லவ் .. கிவ்வ்..ன்னு இருக்குதுங்களா.....???
கோவிச்சுக்காம சொல்லிபோடுங்க....!!!


அதுக்கின்னு கீழ ஸ்கூல் படிக்கிற பையன் போட்டோவ போட்டு வயச கொரச்சுகிறது கொஞ்சம் குசும்பு.......!!!பதில் :

இதுக்கு பேருதான் காதல் வைரஸ்.........

அன்புடன் அருணா சொன்னது…

நிறைய எழுதுங்க...மனசஞ்சலம் குறையுதான்னு பார்க்கலாம்!

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

சோம்பேறி....

///Go to settings --> comments --> and dis able word verification.////

ஓகே.....பண்ணிட்டேன்......
பதிவுக்குள் வந்தமைக்கு நன்றி...(அப்பப்போ வந்து போங்க......)

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

G3 சொன்னது…

////Ippadi kavithai ezhudhi ivan pala pera padikka veikkara paavatha seiya poranaennu modhallayae varuththa pattuducho manasu ;))))))///

வேணாம்..... அழுதுருவேன்.... வலிக்குது....

நன்றி G3 வலைக்குள் வந்தமைக்கு....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

லவ்டேல் மேடி சொன்னது…

///ஏதாவது ... லவ் .. கிவ்வ்..ன்னு இருக்குதுங்களா.....???
கோவிச்சுக்காம சொல்லிபோடுங்க....!!!////

சொல்லவும் முடியல்ல, மெல்லவும் முடியல்ல எனக்குள்ள ஏதோ ஆகிப் போச்சு.... (ஐயோ...ரேடியோல பாடல் கேட்டுட்டு இருக்கேன்....)

///ஸ்கூல் படிக்கிற பையன் போட்டோவ போட்டு வயச கொரச்சுகிறது கொஞ்சம் குசும்பு.......!!!////

அட.... நம்புங்கப்பா.... என்னோட வயது.......அட...அதானுங்க என்னோட வயது.....
(அப்படியே இருந்திருக்கணும் என்கிறது தான் என்னோட ஆச....) - முடியலையா??? நிறுத்திக் கொள்றேன்...

நன்றி லவ்டேல் மேடி....

அப்பப்போ வந்து போங்க என்ன?..

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

அன்புடன் அருணா சொன்னது…

////நிறைய எழுதுங்க...மனசஞ்சலம் குறையுதான்னு பார்க்கலாம்!////

ஆரம்பிச்சிட்டாப் போச்சு இல்லையா????

அப்பப்போ வந்து கருத்து சொல்லிட்டு போங்க... ஒகேவா???

நன்றி அன்புடன் அருணா.....

லோகு சொன்னது…

**எத்தனை 'ம'... அருமைங்க.. தமிழ் விளையாடுது..

** மடி சாயும் தோழிதானே வரணும்.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

லோகு சொன்னது…

///மடி சாயும் தோழிதானே வரணும்.....////

தோழி போட்டால்
தோழர்கள் தோலில்
தோரணம் போடுவார்கள்
தோழி அவளை அறிவதற்கு....

(வேண்டாமடா வம்பு....அதனால தான் இந்த லொள்ளு....)

நன்றி லோகு....

அடிக்கடி வந்து போங்க.....

என்ன கொடும சார் சொன்னது…

Cant paste a comment here.. I have to paste it as cant type tamil dirrectly na. am Using Mozilla.. Any Problem?

Read http://eksaar.blogspot.com

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

////Cant paste a comment here.. I have to paste it as cant type tamil dirrectly na. am Using Mozilla.. Any Problem? ///

யாராவது இதுக்கு என்ன பண்ணலாம்னு சொல்லிட்டுப் போங்கப்பா..... அதோட என்னோட வலைல Followers லின்க்கும் தோணுதில்ல.. (கட்டாயம் தெரிஞ்சவங்க சொல்லிடுங்க....)

நன்றி கொடும சார்.....
அடிக்கடி வந்து போங்க......

என்ன கொடும சார் சொன்னது…

Adjust the comment settings.. Embaded comments always gives problem.. go for other options. Check your layout if it doesn't show followers..

There is a mistake in that calender. Find it and win a prize..

"ஷ‌ஃபி" உங்களில் ஒருவன் சொன்னது…

இப்படி ஒரு பெரிய லிஸ்ட் எடுத்து அவுங்க, இவுங்கன்னு சொல்லிப்புட்டீங்க அபூ, ஆனால் ஒருவர் மட்டும் 'மிஸ்' ஆகிராங்க!! அவங்களை கேளுங்க எல்லாம் சரியாக ஆகிவிடும்.

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

ஷ‌ஃபி" உங்களில் ஒருவன் சொன்னது…...
////ஆனால் ஒருவர் மட்டும் 'மிஸ்' ஆகிராங்க!! அவங்களை கேளுங்க எல்லாம் சரியாக ஆகிவிடும்.///

பக்கத்து வீட்டு aunty ய தானே சொல்றீங்க..... அவங்களிடமும் கேட்டு புட்டேன்.... அவங்களுக்கும் தெரியாதுன்னு சொல்லிட்டாங்க......ஹி..........ஹி........

அப்புறம் அடிக்கடி வந்து போங்க.....

நன்றி Shaafi......