திங்கள், 22 ஜூன், 2009

புது வரவு...

குறைந்த விலையில் கணணி வாங்க வேண்டும் என்று சொல்லி ஐடியா இருக்கிறதா உங்களிடம்? (சவர்க்காரம் கூட இப்போ ஓசில கிடைக்க மாட்டாதாம் இல்ல.....ஹி......ஹி....)
அப்போ இன்னக்கி உங்களுக்கு என் தேடலில் சிக்கிய ஒரு தகவலை அறியத் தருகிறேன்.இந்தியாவின் மிகப் பெரிய செல்போன் நிறுவனங்களில் ஒன்றான பாரதி ஏர்டெல் நிறுவனம் நெட் பிசி என்ற புதிய வகை கணணி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

இந்த கணணியை Windows XP மூலம் தான் இயக்க முடியுமாம். இதன் பெறுமதி சும்மா....(அதாங்க நீங்க எல்லோரும் சேர்ந்து ஒரு நேர பகல் சாப்பாட்டுக்கு செலவு செய்வீங்களே..... ) 5000 இந்தியா ரூபாய் தானாம். (இவ்வளவு தானா??? வாங்கிட்டாப் போச்சு.... இருங்க.... மேல வாசிச்சிட்டு போங்கய்யா.....)

இந்த குட்டி கணணியை இயக்க முதலில் USB Modem அல்லது Broadband கேபளுடன் இந்த நெட் PC ஐ இணைக்க வேண்டுமாம். (அவ்வளவு தான். அதற்கு பிறகு ஜால்லியோ ஜாலி தான்......)

இதன் எடை 0.5 Kg தானாம். நீங்க எங்க வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு போகலாம். அட உங்களோட பையில் கூட போடலாம் என்றால் கட்டாயம் ஒரு சபாஷ் போடத் தான் வேண்டும்.

இன்னுமொரு சுவாரஷ்யமான செய்தி என்ன தெரியுமா? இன்டர்நெட் வசதி இல்லாமல் கூட நீங்க இதில் மேயலாம்னு (சாரி, சருக்கிடுச்சு...) உலா வரலாம்னா கட்டாயம் இதை பாவித்து பார்க்கத் தான் வேண்டும்.

ஆனால், இந்த கணனியில் நீங்கள் Internet Explorer மட்டும் தான் பயன் படுத்த முடியுமாம். அங்க Firefox, Google Chrome ஆகியவற்றுக்கு டாடா சொல்லிட்டாங்க என்கிறது கொஞ்சம் கஷ்டமான விடயம்.

இனி மாட்டருக்கு வருவோமா? (அதாங்க பில்.......) இதற்கான குறைந்த மாத வாடகை 700 ரூபாய் தானாம். இதில் 500 ரூபாய் broadband இணைப்புக்கும், 200 ரூபாய் Software ருக்குமான கட்டணமாம்.

இனி என்ன? வாங்கிட்டாப் போச்சு!!!.....

( இன்னக்கி உலா வரும் நேரம் கிடைத்த தொழில் நுட்ப தகவல் ஒன்று இது . நேரம் கிடைத்த நேரம் பதிவிட்டிருக்கிறேன். எனக்கு முதல் தொழில் நுட்ப பதிவிடும் ஏராளமான பதிவர்கள் இருக்கிறார்கள். எனவே நான் முந்திக் கொண்டிருந்தாள் வாழ்த்தி விடுங்கள். பிந்தி விட்டேனா சந்தோஷப் படாமல் கருத்த சொல்லி உற்சாகப் படுத்தி விடுங்கள். )

அப்போ நான் வரட்டா!!! (ஐயோ..... கருத்து???? அத comments ல சொடுக்கி அதுல வரும் அந்த பெட்டிக்குள் எழுதி விட்டுட்டு போங்க..... ஹி......ஹி.....)

உங்கள் நண்பன்

அபூ......

6 கருத்துகள்:

G3 சொன்னது…

:))) Enakku oru 4 computer vaangi kuduthudunga.. kaasa?? ada ennanga.. unga 4 naal pagal saapattu selavu dhaanae.. neengalae kuduthudunga :P

பூச்சரம் சொன்னது…

பூச்சரம் வெள்ளி மலர்..
இருவாரங்களுக்கு ஒரு முறை பூச்சரம் தரும் தலைப்பின் கீழ் எழுதப்படும் சிறந்த பூச்சரம் அங்கத்தவர் பதிவுக்கு பூச்சரம் வெள்ளி மலர் அந்தஸ்த்து வழங்கப்படும். எதிர்வரும் வெளிக்கிழமை (26.06.2009) தலைப்பும் விபரங்களும் பூச்சரத்தில்..

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

G3 சொன்னது…

///:))) Enakku oru 4 computer vaangi kuduthudunga.. kaasa?? ada ennanga.. unga 4 naal pagal saapattu selavu dhaanae.. neengalae kuduthudunga :P/////

G3 இது உங்களுக்கே நியாயமா??? (4 நாட்கள் சாப்பிட வில்லை என்று சொன்னா 40 நாட்கள் சாப்பிடாத மாதிரி இருக்கும் எனக்கு.....) - பச்சப் புள்ள வயிற்றுல மண் அள்ளிப் போடக் கூடாது G3....

(அது சரி, நேற்று யாரோ இலவசக் கணணி வழங்கியாத சொல்லி இருந்தாங்க.... சிலவேளை இது அதுவோ???..... யாரிடமும் சொல்லிராதீங்கோ.....)

நன்றி G3, பதிவுக்குள் வந்தமைக்கு.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

நன்றி பூச்சரம்,

உங்கள் வலைப் பதிவுக்காகத் தான் ஓடிட்டு இருக்கேன்.....

ivingobi சொன்னது…

Wow romba useful post ithu.... keep it up.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

ivingobi சொன்னது…

///Wow romba useful post ithu.... keep it up.....///

நன்றி கோபி....

அடிக்கடி வந்து போங்க....