ஞாயிறு, 28 ஜூன், 2009

நான் எனும் நண்பன்

சிறிய இடை வேளைக்குப் பிறகு மீண்டும் ஒரு கவிதையோடு வலை உலக நண்பர்களை சந்திப்பதில் சந்தோஷம். (உங்களுக்கும் சந்தோஷம் தானே....வந்துட்டான்யான்னு சொல்லி நிறையப் பேர் திட்டித் தீர்ப்பதாக நம்பகமில்லாத் தகவல் சொல்லிக் கொண்டிருக்க......) அட....நமக்குள் நாம் தானேன்னு சொல்லி இன்றும் ஒரு பதிவு எழுதுகிறேன். கட்டாயம் பார்த்து விட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க...

இனி மாட்டருக்கு வருவோமா? ஒவ்வொருவருக்கும் வலது கையாய் இருப்பது அவர்களுடைய நண்பர்கள். இன்பம், துன்பம், எது வேண்டுமானாலும் முதலில் பகிர்ந்து கொள்வது உயிர் நண்பனோடு தான். அதன் பிறகு தான் அம்மா, அப்பா, குடும்பம்னு சொல்லி ஆரம்பிப்போம். (இது என்னைப் பொறுத்த வரை....) வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடங்களையும் வெற்றியாய் மாற்றித் தருவது ஒரு நல்ல நண்பன் தான். (கூடவே இருந்து எங்க கழுத்தையே வெட்டி எங்க கையில கொடுக்கிற நல்ல நையாண்டிகளும் இருக்கிறாங்க..)

என் வெற்றி, தோல்வி, இன்பம், துன்பம் இப்படி பல சந்தர்ப்பங்களில் என்கூடவே இருந்து எனக்கு கை கொடுத்த என் உயிர் தோழன் மாதம்ப - ஹிஜ்ரா மாவத்த - முஹம்மத் ஷப்வான் இன்னக்கி (28 ம் திகதி ) தன்னோட பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.



அவருக்காகவும், மற்றைய என்னோட நண்பர்களுக்காகவும் இன்றைய பதிவில் ஒரு கவிதையை கிறுக்குகிறேன். கிறுக்கலை சித்திரமாக மாற்றுங்கள். (அதாங்க..... பின்னூட்டம் இடுங்கன்னு சொல்றேன்.....)

நான் எனும் நண்பன்

****************************



பள்ளி
வாழ்வில்
பாசங்களைப் பரப்பிய
பசுமைப் பூக்கள்!!........
பண்பினைப் பகிர்ந்த
பச்சிளங் குழந்தைகள்!!.....

துன்பத்தின் போதெல்லாம்
கண்ணீர் துடைத்த கைக்குட்டைகள்!!...
இன்பத்தின் போதெல்லாம்
இல்லறம் கலந்து கொண்ட விருந்தாளிகள்!!....

மழை நாட்களில்
எனை பாதுகாத்த குடைகள்!!....
வெயில் காலங்களில்
கூடவே இருந்த நிழல்கள்!!!......

உண்ணுகையில் உண்டியான
கற்கண்டுகள்!!!......
பருகுகையில் பாத்திரத்தில் வந்த
தண்ணீர் துளிகள்!!......

என் சோகங்களை
சுகங்களாய் மாற்றிய கற்பனைகள்!!....
என் வெற்றிகளின் போது
சந்தோஷமடைந்த ரசிகர்கள்!!....
என் தவறு கண்டு
என்னைத் தட்டிக் கொடுத்த என் வலக் கரங்கள்!!....

ஒளியாய் எனை முத்தமிடும்
நட்சத்திரங்கள்!!!.....
என் வாழ்க்கைக்கு அர்த்தமூட்டிய
ஆருயிர்கள்!!!.....

மொத்தத்தில் இவைகள் தான்
நான் எனும் என் நண்பனின்
அடையாளங்கள்!.........

(அட... கவிதை நன்றாக இல்லன்னு சொல்லக் கூடாது. ஏன்னா உங்களுக்கே தெரியும்.... நான் இப்போது தான் அங்கங்க கிறுக்க ஆரம்பித்திருக்கேன்... அவைகள் நல்ல கவிதைகளாக மாற வேண்டும் என்பது தான் என்னோட ஆசையும் கூட. நிச்சயம் மாற்றம் அடையலாம் எப்போதுன்னு சொன்னா அப்போது தான்.... அதாங்க எப்போ பின்னூட்டல் கிடைக்குமோ அப்ப தாங்க...... ஹி............ஹி....... )

அப்போ கட்டாயம் பின்னூட்டல் இடுங்க....... ஓகேவா????

அப்போ நான் வரட்டா!!......

உங்கள் நண்பன்

அபூ......


9 கருத்துகள்:

SUFFIX சொன்னது…

நன்பர் முஹம்மத் ஷப்வான் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். பள்ளிப்பருவ நன்பர்களின் நட்பிர்க்கு இனை வேறு எந்த பருவத்திலும் கிடைக்காது நன்பரே!!

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

ஷ‌ஃபிக்ஸ் சொன்னது…

////நன்பர் முஹம்மத் ஷப்வான் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். பள்ளிப்பருவ நன்பர்களின் நட்பிர்க்கு இனை வேறு எந்த பருவத்திலும் கிடைக்காது நன்பரே!!///

நன்றி ஷ‌ஃபிக்ஸ்......

உங்களுடைய வாழ்த்து நண்பரை சென்றடைந்து விட்டது.

அடிக்கடி வந்து போங்க......

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

ஷ‌ஃபிக்ஸ் சொன்னது…

///பள்ளிப்பருவ நன்பர்களின் நட்பிர்க்கு இனை வேறு எந்த பருவத்திலும் கிடைக்காது நன்பரே!!///

மீறிக் கிடைத்தாலும் அதில் கிடைத்த சந்தோசம், திருப்தி, ......................கிடைக்காது இல்லையா???

நன்றி ஷ‌ஃபிக்ஸ்...

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

"ஆயில்யன்" சொன்னது…......

//என் சோகங்களை
சுகங்களாய் மாற்றிய கற்பனைகள்!!....
என் வெற்றிகளின் போது
சந்தோஷமடைந்த ரசிகர்கள்!!....
என் தவறு கண்டு
என்னைத் தட்டிக் கொடுத்த என் வலக் கரங்கள்!!...//

அருமையாக விவரித்திருக்கிறீர்கள் நட்பு பற்றி!

நண்பர்களில் தவறுகளை சொல்லி திருத்துப்பவர்களை நாம் அடையாளம் கண்டு அவர்களுடைய கருத்துக்களுக்கேற்ப நம்மை திருத்திக்கொள்வது என்பது நம்மை கண்டிப்பாக நல்லதொரு உயர்வுக்கு கொண்டு செல்லும்!

வாழ்த்துக்கள் :)//

நன்றி ஆயில்யன்.....

எங்களுக்குள்ளும் உள்ள நட்பு தொடர இறைவனைப் பிரார்த்திக்கிறேன்..
அடிக்கடி வந்து போங்க...

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

"ஆயில்யன்" சொன்னது…......
///கமெண்ட் போடறது கொஞ்சம் கஷ்டமா இருக்கு அனேகமாகமெண்ட் பாக்ஸ் இருக்கறதாலோயே என்னவோ சரியா தெரியல அதான் மெயிலிட்டினே நன்றி/////

தயவு செய்து இதற்கு என்ன பண்ணலாம்னு யாரவது ஒரு ஐடியா கொடுங்க......

நன்றி ஆயில்யன் சுட்டிக் காட்டியமைக்கு.....

சிநேகிதன் அக்பர் சொன்னது…

// மழை நாட்களில்
எனை பாதுகாத்த குடைகள்!!....
வெயில் காலங்களில்
கூடவே இருந்த நிழல்கள்!!!......//

நல்ல வரிகள். அருமையான க‌விதை.

உங்க‌ளை தொட‌ர்ப‌திவுக்கு அழைத்துள்ளேன்.
வ‌ந்து தொட‌ர‌வும். ந‌ன்றி
http://sinekithan.blogspot.com/2009/06/blog-post_27.html

Admin சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Admin சொன்னது…

//துன்பத்தின் போதெல்லாம்
கண்ணீர் துடைத்த கைக்குட்டைகள்!!...
இன்பத்தின் போதெல்லாம்
இல்லறம் கலந்து கொண்ட விருந்தாளிகள்!!....//
பிடித்த வரிகள்

உன்மையிலேயே உங்கள் கவிதைகள் அருமை தொடர்ந்தும் எழுதுங்கள்...
வாழ்த்துக்கள்...

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

நன்றி சந்ரு.....

அது சரி, உங்களைத் தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன். தொடருங்க சந்ரு......
விதிமுறை :
* ஆரம்ப பள்ளி வாழ்க்கை....
* ஆசிரியர்கள் பற்றி.....
* தொடர்ந்து மூவரை அழைக்க...தொடர் பதிவிற்காய்.......