தலைப்பை பார்த்ததும் யாருடைய Dream Girl என்றெல்லாம் கேட்கக் கூடாது. ஏன்னா அது சத்தியமா என்னோடது இல்ல. இலங்கையில் பிரபல்யம் பெற்று வரும் ஒரு இசை அல்பத்தினுடைய பெயர்.
DJ ராஜ் (பொதுவாக எல்லோருமே இவர DJ ன்னு தான் சொல்லுவாங்க.), பரணி, சந்ரு, மற்றும் பிரஷாந்தி ஆகியோர்களினது இசைப் பயணத்தில் உருவான இசை ஆல்பம் தான் Dream Girl. செவிக்கு இதமான பாடல். நெஞ்சமே.... என் கனவு தேவதை நினைவில் நிற்கிறாள்.........னு(கொஞ்சம் தெளிவா கேட்டுப் பாருங்க. எனக்கு கேட்டது அப்படி தான் . அட, நான் உண்மைய தான் சொல்றேங்க........ ) சொல்லி ஆரம்பமாகும் பாடல் . நம்மவர்களிலும் இவ்வளவு திறமை இருக்கிறதா???? என்று ஒரு கணம் வாய் பிளந்து இருக்க வேண்டி இருக்கிறது. (பிளந்த வாயை இப்பொழுது தான் மூடினேன். ஏன்னா ..... பாடல் 7 முறைக்கு மேல ஒலித்து ஓய்ந்து விட்டது. ஹி........ ஹி..........),
பாடலைக் கேட்ட பின் சொல்ல முடிந்ததெல்லாம்...........
அருமையான பாடல், அர்த்தமுள்ள வரிகள், இன்னும் குறிப்பா ஆரம்பத்துலையே வாரணம் ஆயிரம் சூரியாவ ஏதோ புகழ்ந்து ஆரம்பிப்பது சூரியா ரசிகர்களுக்கு இன்னும் இப்பாடலில் ஈர்ப்பைக் கொடுக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்குது. வாழ்த்துக்கள் கலைஞர்களே....... (ரொம்ப அருமையா இருந்திச்சு, இன்னும் நிறைய படைங்க, இசையில் ஒரு புரட்சியை இலங்கையிலும் ஏற்படுத்துங்க....)
வலையுலக நண்பர்களே..... நீங்களும் ஒருமுறை கேட்டு தான் பாருங்களேன் அந்த பாடலை. (கேட்டால் மட்டும் போதாது, கருத்தையும் சொல்லிட்டு போங்க.....ஏன்னா உங்க கருத்த அவங்களுக்கு மேலும் ஆர்வத்த கொடுக்கலாம் இல்லையா ??????)
பாடலை கேட்க கீழுள்ள Dream Girl ல் சொடுக்குங்கள். (அதெல்லாம் சொல்லவா வேண்டும் என்ன???)
Dream Girl
வரட்டா.........
உங்கள் நண்பன்
அபூ........
புதன், 3 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
4 கருத்துகள்:
some problem with your comment box! cant copy and past!
read http://eksaar.blogspot.com
பெயரில்லா சொன்னது…
/// some problem with your comment box! cant copy and past!///
வருகைக்கு நன்றி...
ஒருமுறை Page ஐ Refresh பண்ணுக. ஒகேயாகி விடும். எனக்கும் அந்த பிரச்சினை வந்தது. மீண்டும் முயற்சி பண்ணுக நண்பரே........
////என்ன கொடும சார் சொன்னது…
read http://eksaar.blogspot.com/////
உண்மையிலே கொடும பண்றீங்க நண்பா........
////இனி இந்த BBC RADIOஐ என்ன செய்வது என்று யோசித்த போதுதான்......////
வாங்கிய ரேடியோ வ இப்படியெல்லாம் விற்பன பண்றீங்களா???? எப்படி உங்களால மட்டும் இப்படி???
அருமையாக இருந்தது BBC கொடுத்து செய்திகள் பற்றிய உங்கள் செய்தி.
வாழ்த்துக்கள் நண்பா.... தொடருங்கள்......
கருத்துரையிடுக