சனி, 1 ஆகஸ்ட், 2009

ஐயோ.... தீ !.... தீ !....

இளைய தளபதி, நம் கன்னியர்களின் கனவு நாயகன், இப்படியெல்லாம் அவரை வர்ணித்தாலும் தொடர்ந்து சில தோல்விகளை சந்தித்த எனக்கும், உங்களுக்கும் மிகப் பிடித்த நடிகர் விஜயின் அடுத்த திரைப் படமான வேட்டைக்காரன் படப் பிடிப்பு வேலைகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கிற நிலையில் வேட்டைக்காரன் படப் பாடல்களின் நடனக் காட்சிகளின் ஒளிப் பதிவு வேலைகள் ஏ.வி.எம். ஸ்டுடியோவில் ஏழாவது தளத்தில் இடம் பெற்று வருகின்றது. படத்திற்காக வேண்டி இரவு பகல் கண் விழித்திருந்து பாடு பட்டு உழைக்கிறாராம் நம் இளைய தளபதி. (தொடர்ந்து எத்தனை தோல்விகளை தான் சந்திப்பது இல்லையா?...)


இதனால்நேற்று முன் தினம் அதிகாலை மூன்று மணி வரை ஸ்டுடியோவில் இருந்து நடித்துக் கொடுத்துவிட்டு விஜய் புறப் பட்டு சற்று நேரத்தின் பின்னால் ஸ்டுடியோவில் தீப் பற்றிக் கொண்டதாம். ( “நல்லவேளை... படப்பிடிப்பு முடிந்து அங்கிருந்து விஜய் வெளியேறிய பின் இந்த சம்பவம் நடந்தது நடந்தது. இல்லையென்றால்?” விஜய் ரசிகர்களை கண்ணீர் வடிக்க வைத்திருக்கும் அந்த சம்பவம்.)

சம்பவத்தினால் நிலையத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் , சுமார் மூன்று கோடிக்கு மேற்பட்ட பொருட்கள் நாசமாகியிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இருந்தாலும் படப் பிடிப்பு வேலைகள் தொடர வேண்டி இருப்பதால் அந்த செலவையெல்லாம் ஏற்றுக் கொண்டு படப் பிடிப்பு வேலைகளைமீண்டும் ஆரம்பித்திருக்கிறதாம் வேட்டைக் காரன் படக் குழு.

(சோதனை மேல் சோதனை போதுமடா சாமி.... சோதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி......) - அட விஜயும் தாங்க மாட்டார் இல்லையா?.... மறந்தே போய்ட்டேங்கோ....

அப்போ நான் வரட்டா....

உங்கள் நண்பன்

அபூ......

10 கருத்துகள்:

குறை ஒன்றும் இல்லை !!! சொன்னது…

//(சோதனை மேல் சோதனை போதுமடா சாமி.... சோதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி......)//

இது நாங்க அவன் படத்த பாத்து பாட வேண்டியது..

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

குறை ஒன்றும் இல்லை !!! கூறியது...

//(சோதனை மேல் சோதனை போதுமடா சாமி.... சோதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி......)//

////இது நாங்க அவன் படத்த பாத்து பாட வேண்டியது..///

உங்களைக் கஷ்டப் படுத்தக் கூடாதுன்னு சொல்லித்தான் நானே பாடலைப் பாடி முடித்துக் கொண்டேன்..... (இது தான் நண்பா நமக்குள் உள்ள நட்பின் உச்ச கட்ட புரிந்துணர்வு..... ஐ..... ஐ... ஜும்சுகட்ட ..... லொள்.......)

நன்றி நண்பா உங்கள் வருகைக்கு......

Unknown சொன்னது…

நம்ம தளபதி படம் வெற்றிகரமா வெளி வந்தால் சரிதான்...

நிலாமதி சொன்னது…

உங்க தளத்தை இன்று தான் கண்டு கொண்டேன். அழகாய் இருகிறது ,கவி வரிகள் மேலும் அழகு . தொடர்வேன். வாழ்த்துக்களும் பாராடுக்களும். நட்புடன் நிலாமதி

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

சந்ரு கூறியது...

///நம்ம தளபதி படம் வெற்றிகரமா வெளி வந்தால் சரிதான்...////

வரும்..... வரும்.... (எதிர் பார்த்துக் கொண்டே இருப்போம் இல்லையா?.....)

நன்றி நண்பா உங்கள் வருகைக்கு.......

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

நிலாமதி கூறியது...

//உங்க தளத்தை இன்று தான் கண்டு கொண்டேன். அழகாய் இருகிறது ,கவி வரிகள் மேலும் அழகு . தொடர்வேன். வாழ்த்துக்களும் பாராடுக்களும். நட்புடன் நிலாமதி////

உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி நிலாமதி,

அடிக்கடி வந்து போங்க.....

Unknown சொன்னது…

சூப்பரு!

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

ஜெகநாதன் கூறியது...

///சூப்பரு!///

ரொம்ப நன்றி அண்ணா உங்கள் வருகைக்கு......

அடிக்கடி வந்து போங்க.......

Muruganandan M.K. சொன்னது…

"நான் அழுதால் தான்
நீங்கள் அரவணைப்பீர்கள்....
நான் அடங்கி விட்டால்
என் அழுகையின் அர்த்தம் உணர்வீர்கள்!...."

அர்த்தமுள்ள அழகிய வரிகள். ரசித்தேன்.

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

Dr.எம்.கே.முருகானந்தன் கூறியது...

"நான் அழுதால் தான்
நீங்கள் அரவணைப்பீர்கள்....
நான் அடங்கி விட்டால்
என் அழுகையின் அர்த்தம் உணர்வீர்கள்!...."

////அர்த்தமுள்ள அழகிய வரிகள். ரசித்தேன்.////

ரொம்ப நன்றி Dr. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்....

அடிக்கடி வந்து போங்க......