வியாழன், 30 ஜூலை, 2009

வலைப்பூ....
வரும் எண்ணங்களுக்கு
வர்ணம் தீட்டி
வடிவம் கொடுத்து
வரைந்திடும் பொழுதுகளில்
வளம் வருபவர்கள்
வஞ்சமில்லா நெஞ்சின்
வளமான கருத்துக்களை
வசந்தமாய் பதித்திடுகின்றனர்........

வரம் கேட்டு
வந்தார்ப் போல
வசீகரப் படுத்தி விடுகிறது
வந்தவர்களின் கருத்துக்கள்.......

வழுக்களில்லாமல்
வதக்கியும் விடுகின்றனர்,
வருத்தும் வைக்கின்றனர்,
வருத்தமும் கொடுக்கின்றனர்
வலையுலகம் தனில்.......

வண்டியின் சத்தமும்,
வண்டின் ரீங்காரமும்
வர்ணனையாகும்
வலையுலகம் தனில்......

வண்ணத்துப் பூச்சி விருது,
வலைப்பூ விருது,
வழங்கி கெளரவிப்பதால்
வன்முறைகளும் இல்லை இங்கு.....

வலக்கரம் கொடுத்து
வளரும் கலைஞர்களை
வரவேற்கும் வலைப்பூ
வருடங்கள் பல கழிந்தாலும்
வரட்சியில்லாமல்
வசீகரம் பெற வேண்டும்
வணங்கி நிற்கிறேன் இறைவனை.....


உங்கள் நண்பன்

அபூ.....

6 கருத்துகள்:

குறை ஒன்றும் இல்லை !!! சொன்னது…

அருமை நண்பா..

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

நண்பா உங்களுக்கு விருது வழங்கி உள்ளேன் . என் தளத்துக்கு வந்து பெற்றுக் கொள்ளவும் ....

சந்ரு சொன்னது…

//குறை ஒன்றும் இல்லை !!! கூறியது...
அருமை நண்பா..//

ம்ம்ம்ம்

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

குறை ஒன்றும் இல்லை !!! கூறியது...

//அருமை நண்பா..////

ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கு........

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...

// நண்பா உங்களுக்கு விருது வழங்கி உள்ளேன் . என் தளத்துக்கு வந்து பெற்றுக் கொள்ளவும் ....////

அளவில்லா மகிழ்ச்சியோடு உங்கள் தளத்திற்கு சென்று உங்கள் விருதைப் பெற்றுக் கொன்றேன். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ரொம்ப நன்றி அண்ணா......

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

சந்ரு கூறியது...

//குறை ஒன்றும் இல்லை !!! கூறியது...
அருமை நண்பா..//
//ம்ம்ம்ம்///

ஆ.............ஆ........ லொள்..... ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கு........