செவ்வாய், 14 ஜூலை, 2009

செல்லாக் காசு...
செந்தமிழும் நாப் பழக்கம்
செருப்படியும் கை வழக்கம்
செக்கச் சிவந்த பெண் ஒழுக்கம்..

செதுக்கிய சிலையாய் இருந்தவனை
செல்லாக் காசாக்கி விட்டாள்...
செம்பருத்தியாய் இதழ் விரித்தவனை
செருப்படியில் பதம் பார்த்தாள்....

செவிகளுக்கே விருந்தூட்டியவனை
செக்கனடிப்படையில்
செல்லில் பேசியே
செவிடனாக்கி விட்டாள்.....

செல்வத்தோடு வாழ்ந்த போது
செல்லமே என்று நெருங்கினாள்
செழிப்பு இழந்த போது
செந்திலே என்று ஒதுங்கி விட்டாள்.....

(இன்றைய சின்ன கிறுக்கல் இது.... பிடித்திருந்தா கருத்து சொல்லிட்டு போங்க... அப்போ பிடிக்கலைன்னா?...... அதையும் சொல்லிட்டுப் போங்க.... ஏற்றுக் கொள்கிறேன்...)

உங்கள் நண்பன்

அபூ....

12 கருத்துகள்:

Unknown சொன்னது…

பிடிக்கவில்லை....

Unknown சொன்னது…

என்ன யோசிக்கிறிங்க.....

செருப்படி வாங்கியது பிடிக்கவில்லை......

இது உங்க அனுபவம் எண்டு எங்களுக்கு தெரியுமில்ல.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

சந்ரு கூறியது...

///பிடிக்கவில்லை....///

எத சொல்றீங்க சந்ரு?......

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

சந்ரு கூறியது...

என்ன யோசிக்கிறிங்க.....

///செருப்படி வாங்கியது பிடிக்கவில்லை......

இது உங்க அனுபவம் எண்டு எங்களுக்கு தெரியுமில்ல.....///

உங்களுக்கே தெரியும் தானே நான் இது வரையில என்னோட அனுபவங்கள எழுதியதில்லன்னு சொல்லி... எல்லாம் பாவப் பட்ட என் நண்பர்களோட ஏக்கம் தாங்க... (நண்பர்களுக்காக எவ்வளவு ஏங்கி உருகிறேன் பார்த்தீங்களா சந்ரு.... ஒரு வகையில பெருமையா இருக்குது நீங்களும் என்னோட நண்பர் பட்டியல்ல இருக்கிறது.... அதுக்காக நீங்க வாங்கிக் கட்டிய அந்த .......................... எல்லாம் சொல்லுவீங்கன்னு நினைச்சீங்களா?... அது நமக்குள் மட்டும் தான்....)

ரொம்ப நன்றி சந்ரு.....

பெயரில்லா சொன்னது…

ம்ம்ம்ம்ம்.....பிடிச்சிருக்கு.... எல்லாமே பிடிச்சிருக்கு..........

இது உங்கட அனுபவம் இல்லன்னா யாரோட அனுபவம்???? சொல்லியே ஆகணும்...

அதுக்காக என்ர அனுபவம் என்று சொல்லக்கூடாதுங்கோ....

எது எப்படியோ நல்லாயிருக்குதுங்கோ...

அன்புடன்-மயில்வாகனம் செந்தூரன், தாளம் வானொலி.

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

பெயரில்லா கூறியது...

ம்ம்ம்ம்ம்.....பிடிச்சிருக்கு.... எல்லாமே பிடிச்சிருக்கு..........

//இது உங்கட அனுபவம் இல்லன்னா யாரோட அனுபவம்???? சொல்லியே ஆகணும்...///

அனுபவப் பட்டுத் தானா கவிதை எழுதனும்... (சும்மா எழுதலாம் தானே... பாருங்க என் நண்பர்களைப் பார்த்து நான் எப்படியெல்லாம் எழுதுறேன்னு சொல்லி.... லொள்.....)

நன்றி செந்தூ....

அடிக்கடி வந்து போங்க....

tamilmoviecenter சொன்னது…

நன்றி நண்பரே

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

tamilmoviecenter கூறியது...

//நன்றி நண்பரே///

அடிக்கடி வந்து போங்க நண்பரே.....

ஆப்பு சொன்னது…

அடங்கி போறவன் இல்ல..
அடிச்சிட்டு போறவன்!!

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

ஆப்பு கூறியது...

//அடங்கி போறவன் இல்ல..
அடிச்சிட்டு போறவன்!!///

என்னங்க?.... ஆப்பு வெக்கிறதா வெளிக்கிட்டு வந்துட்டீங்களோ?.... (லொள்.....)

உங்களது முதல் வருகைக்கு ரொம்ப நன்றி ஆப்பு......... (முதல் பின்னூட்டலுக்கும்.......)

அடிக்கடி வந்து போங்க.....

சுசி சொன்னது…

//செந்தமிழும் நாப் பழக்கம்

செருப்படியும் கை வழக்கம்//
செல்வனேஅபூநான்இதுவரை
செவி வழியாய்கேட்டதில்லை
செமையாத்தான்எழுதிஇருக்கீங்க...

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

சுசி கூறியது...

//செந்தமிழும் நாப் பழக்கம்

செருப்படியும் கை வழக்கம்//
செல்வனேஅபூநான்இதுவரை
செவி வழியாய்கேட்டதில்லை
செமையாத்தான்எழுதிஇருக்கீங்க...///

நன்றி சுசி.....