சனி, 18 ஜூலை, 2009

ஏழையின் வாழ்வினிலே....புண் முறுவல் பூத்ததில்லை
புது யுகம் காண முடியாததால்!...

புது வருடம் கொண்டாடியதில்லை
புரட்சிகள் எதுவும் படைக்க முடியாததால்!....

புத்தாடை அணிந்ததில்லை
புகையோடே தினமும் பொசுங்கிப் போவதால்!....

புது முகங்கள் அறிமுகமாகியதில்லை
புதுமை முகத்தில் இல்லாததினால்!.....

புல்லாங் குழல் வாசித்ததில்லை
புரிந்து கொள்ள முடியாததினால்!...

புல் வெளியில் கிடந்து உருண்டதில்லை
புயலோடே அனுதினமும் முட்டி மோதுவதால்!....

புத்தி கூட எனக்கில்லை
புத்தகங்கள் புரட்டாததினால்!.....

புரட்டிப் பார்க்க முடியவில்லை
புண்ணியம் செய்து கொண்டிருக்கிறேன்
புது மனை புகும் - என் எஜமான் வீட்டு
புது மனத் தம்பதியினருக்காய்.....

புரிந்து கொள்ளவே மாட்டார்களா?.....
புயலாய் மாறி,
புருவம் விரித்து,
புன்னகை இழந்து - பணி
புரிவதெல்லாம்
புற்றுக்குள் அடை பட்டு
புது விடிவு காண
புழுவாய் துடிக்கும் என் உறவுகளுக்காய் என்பதை!......

(எப்படி இருந்தது கவிக் கிறுக்கு?... உங்கள் கருத்துக்களை கொட்டி விட்டு போங்க. தவறை தவறாய் சொல்லுங்க. நிறைவை நிறைவாய் சொல்லுங்க....)

அப்போ நான் வரட்டா!....

உங்கள் நண்பன்

அபூ........

14 கருத்துகள்:

ivingobi சொன்னது…

புரிந்து கொள்ளவே மாட்டார்களா?.....
புயலாய் மாறி,
புருவம் விரித்து,
புன்னகை இழந்து - பணி
புரிவதெல்லாம்
புற்றுக்குள் அடை பட்டு
புது விடிவு காண
புழுவாய் துடிக்கும் என் உறவுகளுக்காய் என்பதை!......
Dear friend.... Dont worry purinthum kolvargal ungal kanavunm niraiverum... all the best....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

ivingobi கூறியது...

புரிந்து கொள்ளவே மாட்டார்களா?.....
புயலாய் மாறி,
புருவம் விரித்து,
புன்னகை இழந்து - பணி
புரிவதெல்லாம்
புற்றுக்குள் அடை பட்டு
புது விடிவு காண
புழுவாய் துடிக்கும் என் உறவுகளுக்காய் என்பதை!......
///Dear friend.... Dont worry purinthum kolvargal ungal kanavunm niraiverum... all the best....///


நன்றி நண்பா உங்கள் வருகைக்கு.....

அடிக்கடி வந்து போங்க......

ivingobi சொன்னது…

Kandippaga varuven....

பெயரில்லா சொன்னது…

இது நான் வழங்கும் முதலாவது கருத்துரை...

அது புண் முறுவல் இல்லை, புன் முறுவல். இது உங்கள் வலைப்பூவில் நான் கண்டுகொள்ளும் முதலாவது எழுத்து பிழை.

ஏழையின் துயரம்... இவர்களுக்கு எப்போ விடிவு???? எதிர்பார்க்கின்றேன்...

நல்ல வரிகள். தொடர்ந்தும் வருவேன்... உங்கள் பதிவுகளையும் எதிர்பார்க்கின்றேன்..

நன்றி.
நட்புடன்-Rihana Farwin Sanoon.

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

பெயரில்லா கூறியது...

இது நான் வழங்கும் முதலாவது கருத்துரை...

///அது புண் முறுவல் இல்லை, புன் முறுவல். இது உங்கள் வலைப்பூவில் நான் கண்டுகொள்ளும் முதலாவது எழுத்து பிழை. ///

தவறுக்கு வருந்துகிறேன்.... சுட்டிக் காட்டியமைக்கு நன்றி தோழியே.....

///நல்ல வரிகள். தொடர்ந்தும் வருவேன்... உங்கள் பதிவுகளையும் எதிர்பார்க்கின்றேன்..////

ரொம்ப நன்றி, தொடர்ந்தும் எதிர் பாருங்கள்.

அடிக்கடி வந்து போங்க... ஓகேவா?...

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

ivingobi கூறியது...

///Kandippaga varuven....///

எதிர் பார்த்துக் கொண்டே இருப்பேன்

Muruganandan M.K. சொன்னது…

"புற்றுக்குள் அடை பட்டு
புது விடிவு காண
புழுவாய் துடிக்கும் என் உறவுகளுக்காய் என்பதை!" ரசித்த வரிகள்.

"புது மனத் தம்பதியின்" அல்லது "புதுமணத் தம்பதியா"

யாழினி சொன்னது…

புதுமையான கவிதை ஒன்றை
புரட்டிப் போட்டுள்ளீர்கள் தோழா,
புண்ணகையுடன் வலம் வர‌
புகழ்ந்து நிற்கின்றேன் நான் இங்கு!

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் கூறியது...

"புற்றுக்குள் அடை பட்டு
புது விடிவு காண
புழுவாய் துடிக்கும் என் உறவுகளுக்காய் என்பதை!" ரசித்த வரிகள்.

// "புது மனத் தம்பதியின்" அல்லது "புதுமணத் தம்பதியா"///

நன்றி டாக்டர்.....

புதுமணத் தம்பதியினர்..... (தவறுக்கு வருந்துகிறேன்......)

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

யாழினி கூறியது...

///புதுமையான கவிதை ஒன்றை
புரட்டிப் போட்டுள்ளீர்கள் தோழா,
புண்ணகையுடன் வலம் வர‌
புகழ்ந்து நிற்கின்றேன் நான் இங்கு!///

நன்றி யாழினி உங்கள் வருகைக்கு....

அடிக்கடி வந்து போங்க....

Unknown சொன்னது…

என்ன கவிதை கவிதையா வருது...

சுசி சொன்னது…

நல்ல கவிதை அபூ.
//புரிந்து கொள்ளவே மாட்டார்களா?.....
புயலாய் மாறி,
புருவம் விரித்து,
புன்னகை இழந்து - பணி
புரிவதெல்லாம்
புற்றுக்குள் அடை பட்டு
புது விடிவு காண
புழுவாய் துடிக்கும் என் உறவுகளுக்காய் என்பதை!......//
இந்த இடம் நல்லா இருக்கு.

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

சந்ரு கூறியது...

///என்ன கவிதை கவிதையா வருது...///

என்ன சந்ரு?.... கவிதை கவிதையாத் தானே வரணும்..... (இது எப்படி?...)

நன்றி சந்ரு உங்கள் வருகைக்கு.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

சுசி கூறியது...

நல்ல கவிதை அபூ.
//புரிந்து கொள்ளவே மாட்டார்களா?.....
புயலாய் மாறி,
புருவம் விரித்து,
புன்னகை இழந்து - பணி
புரிவதெல்லாம்
புற்றுக்குள் அடை பட்டு
புது விடிவு காண
புழுவாய் துடிக்கும் என் உறவுகளுக்காய் என்பதை!......//
///இந்த இடம் நல்லா இருக்கு.//

ரொம்ப நன்றி சுசி உங்கள் வருகைக்கு.....

அடிக்கடி வந்து போங்க....