ஞாயிறு, 12 ஜூலை, 2009

சிம்புவின் ஏக்கம்!....


போனால் போகட்டும் போடிங்கிற முடிவுக்கு வந்திருக்கிறார் சிம்பு. (ஏன் இதுன்னு யோசிக்கிறீங்களா?.....) இது போடா போடி பற்றிய முடிவுதான். இந்தத் திரைப் படத்தில் முதலில் நடிக்க ஒப்புக் கொண்ட வரலட்சுமி, இப்போது வராத லட்சுமியாகி விட்டாராம். ஏன்னா, இந்த படத்திலிருந்து அவர் விலகிக் கொண்டாராம். மம்மா மியா ஷோவுக்கு கிடைத்த வரவேற்பு, அவரை முற்றிலும் அந்த திசைக்கு திருப்பிவிட்டது. அதுமட்டுமல்ல, போடா போடி பற்றிய ஒரு தெளிவான முடிவு சிம்புவுக்கு இல்லாததும், எதை நம்பி, எப்போது கால்ஷீட் கொடுப்பது என்ற குழப்பமும் தான் வரலட்சுமியின் இந்த அதிரடிக்கு காரணமாம். (அட... அப்போ படம் கூட தெளிவில்லாமல் வரப் போகுதுன்னு சொல்லுங்க...)

இதற்கிடையில் அப்பா சரத்குமாரும், வரலட்சுமியின் சுதந்திரத்தில் குறுக்கே நிற்க விரும்பாததால், தைரியமாகவும், வெளிப்படையாகவும் சிம்புவிடம் சொல்லிவிட்டாராம் வரலட்சுமி. (ஓகோ..... அப்பா support போல....) இதற்கிடையில், சிம்புவின் பார்வை ஷாம்லி மீது விழுந்திருக்கிறது. போடா போடியில் வரலட்சுமிக்கு பதிலாக ஷாம்லியை நடிக்க வைக்கலாமே என்று நினைக்கிறாராம். (அப்போ... வாடி வா... ன்னு படத்துட பெயர மாற்ற சொல்லுங்க.... )

ஆனால் அவரோ சிம்பு படத்தில் மட்டுமல்ல, எந்தப் படத்தில் நடிக்கவும் இப்போது ஆர்வம் காட்டுவது குறைவாம். (ஒருவேள சம்பளப் பிரச்சினையோ யாரறிவார் இல்லையா?....) தெலுங்கில் இவர் நடித்த ஓய் ரிலீஸ் ஆகிவிட்டது. அங்கிருந்தே ஏராளமான அழைப்புகள் வருகிறதாம் ஷாம்லிக்கு. ஆனால், தெலுங்கு பட இயக்குனர்களுக்கும் உடனே ஓ.கே சொல்லாமல், தமிழ் பட இயக்குனர்களுக்கும் ஒரு முடிவை சொல்லாமல் காலம் கடத்துகிறார் ஷாம்லி. (பெண்ணானவள் இல்லையா? எப்போதுமே கொஞ்சம் யோசித்து, காக்க வைத்து தான் முடிவு சொல்லுவாங்க.... (அவங்க மட்டுமல்ல.... நம்ம பெண்கள் திலகமே அப்படி தானே.... லொள்.... )அவருக்கு நடிப்பின் மீதே ஆசை இல்லை என்றும் சொல்கிறார்கள். (இதை யாரு நம்பினாலும் நான் நம்பவே மாட்டேங்க..... நீங்களும் நம்பாதீங்க..... அபாண்டம்.... பொய்... )

விரும்பி கேட்பவர்களுக்கு ஷாம்லி தரப்போவது வரமா? துறவரமா? இது தான் இப்போது எல்லோருடைய ஏக்கமும்.... (முக்கியமா சிம்புவோட..... )

அப்போ நான் வரட்டா....

உங்கள் நண்பன்

அபூ....

(வந்ததும் தான் வந்தீங்க.... கட்டாயம் உங்க கருத்த சொல்லிட்டு போங்க. பக்குவமா அதனை ஏற்றுக் கொள்கிறேன். )

23 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

சப்ராஸ் ரொம்ப நாளா உங்க பதிவுகளுக்கு கருத்து பதிய விரும்பியதுண்டு.. ஆனால் நேரம் தடுத்துவிட்டது.. இன்று பதிகிறேன்.

உண்மையில் எனக்கு காதல் அழிவதில்லை படத்தில் சிம்புவை பிடித்த அளவுக்கு அதற்கு பின்னர் வந்த படங்களில் அவ்வளவாக பிடிக்கவில்லை.
நான் நினைக்கிறேன் இன்னுமொரு வல்லவனாகத்தான் போடா போடி இருக்குமென்று...

உங்கள் பதிவுகள் தொடரட்டும். வாழ்த்துக்கள் சப்ராஸ்..(அபூ அப்பிடீன்னு சொன்னாதான் உங்களுக்கு அதிகமாய் பிடிக்குமாமே!)

அன்புடன்-மயில்வாகனம் செந்தூரன். அறிவிப்பாளர், தாளம் வானொலி.

சந்ரு சொன்னது…

wait பண்ணுங்கோ வாசித்துட்டு வாறன்...

சந்ரு சொன்னது…

சப்ராஸ் நீங்க followers இல்லை என்பதற்காக புதிய வலைத்தளம் ஆரம்பிப்பது நல்லதல்ல நான் சொன்ன முறையை பின்பற்றி பாருங்க சரி வரலேன்னா புதிய temlete மாற்றி பாருங்க.
உங்களுக்காக நான் முயற்சி செய்கிறேன் wait பண்ணுங்க.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

பெயரில்லா கூறியது...

///சப்ராஸ் ரொம்ப நாளா உங்க பதிவுகளுக்கு கருத்து பதிய விரும்பியதுண்டு.. ஆனால் நேரம் தடுத்துவிட்டது.. இன்று பதிகிறேன்.///

முதல் முறையா பின்னூட்டல் இருக்கீங்க.... ரொம்ப நன்றி செந்தூ.....

///உண்மையில் எனக்கு காதல் அழிவதில்லை படத்தில் சிம்புவை பிடித்த அளவுக்கு அதற்கு பின்னர் வந்த படங்களில் அவ்வளவாக பிடிக்கவில்லை.
நான் நினைக்கிறேன் இன்னுமொரு வல்லவனாகத்தான் போடா போடி இருக்குமென்று... ///


என்னுடைய எதிர் பார்ப்பும் அப்படித்தான் இருக்கிறது....

////உங்கள் பதிவுகள் தொடரட்டும். வாழ்த்துக்கள் சப்ராஸ்..(அபூ அப்பிடீன்னு சொன்னாதான் உங்களுக்கு அதிகமாய் பிடிக்குமாமே!)///

நன்றி, எப்ப அப்பாவ இழந்தேனோ அப்போதிலிருந்தே அப்பாவின் பெயரை எல்லா இடத்திலயும் நிலை நாட்டனும் என்கிறது என்னோட தனிப்பட்ட ஆசை செந்தூ....

///அன்புடன்-மயில்வாகனம் செந்தூரன். அறிவிப்பாளர், தாளம் வானொலி.///


உங்கள் கலைப் பயணம் தொடர வாழ்த்துக்கள் செந்தூரன்....அடிக்கடி வந்து போங்க....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

சந்ரு கூறியது...

///wait பண்ணுங்கோ வாசித்துட்டு வாறன்...///

வெயிட் பண்ணிட்டே இருக்கேன்....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

சந்ரு கூறியது...

சப்ராஸ் நீங்க followers இல்லை என்பதற்காக புதிய வலைத்தளம் ஆரம்பிப்பது நல்லதல்ல நான் சொன்ன முறையை பின்பற்றி பாருங்க சரி வரலேன்னா புதிய temlete மாற்றி பாருங்க.
///உங்களுக்காக நான் முயற்சி செய்கிறேன் wait பண்ணுங்க....///

சந்ரு, நான் எல்லா முரயிலையும் ட்ரை பண்ணினேன்..., முடியாமல் இருக்குது. உங்க தகவலையும் பார்த்து விட்டு செய்து பாத்தேன். Error காட்டுது. please சந்ரு எனக்காக நீங்க ட்ரை பண்ணி கட்டாயம் ஏதாவது தகவல் சொல்லுங்க

சந்ரு சொன்னது…

சப்ராஸ் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறேன். பாருங்கள். அதிலே followers தொடர்பான பல விடயங்களை அனுப்பி இருக்கிறேன்...

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

சந்ரு கூறியது...

////சப்ராஸ் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறேன். பாருங்கள். அதிலே followers தொடர்பான பல விடயங்களை அனுப்பி இருக்கிறேன்...///

ரொம்ப நன்றி சந்ரு.... நீண்ட தேடுதலுக்கு மத்தியில, அதே போல கடும் கஷ்டத்துக்கு மத்தியில followers Gadget சேர்த்து விட்டாச்சு.... ரொம்ப சந்தோஷமா இருக்கு... (இனி என்ன... என்கூட நண்பர்களா இணைந்து கொள்ளுங்க....)

சந்ரு, மீண்டும் மீண்டும் நன்றிங்கோ....

சந்ரு சொன்னது…

பார்த்திங்களா சப்ராஸ் இதுக்கு போய் புதிய வலைப்பதிவு ஆரம்பிக்க போகிறேன் என்று சொல்லிடிங்களே...... சின்ன பிள்ள தனமா இல்ல.... (லொள்ளு)

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

ரொம்ப ரொம்ப நன்றி சந்ரு...

ஆ.ஞானசேகரன் சொன்னது…

வணக்கம் தொடர்ந்து எழுதுங்கள்

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

ஆ.ஞானசேகரன் கூறியது...

//வணக்கம் தொடர்ந்து எழுதுங்கள்///

வணக்கம்...

ரொம்ப நன்றி அண்ணா....

அடிக்கடி வந்து போங்க.....

குறை ஒன்றும் இல்லை !!! சொன்னது…

ஹ்ம்ம் இன்னுமா இவன நம்புரீங்க? என்னமோ போங்க.. இவன் ஒரு நடிகன் ..

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

குறை ஒன்றும் இல்லை !!! கூறியது...

//ஹ்ம்ம் இன்னுமா இவன நம்புரீங்க? என்னமோ போங்க.. இவன் ஒரு நடிகன் ..///

அதனால தான் மாத்தி மாத்தி.... சாரி.... மாறி, மாறி நடிக்கிறான்.... லொள்......

நன்றி நண்பரே உங்கள் வருகைக்கு......

பிரபா சொன்னது…

நடக்கிறதெல்லாம் நடக்கட்டும்....... அவரு "பிரிச்சு மேயாமல்" விட்டால் சரி.

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

பிரபா கூறியது...

///நடக்கிறதெல்லாம் நடக்கட்டும்....... அவரு "பிரிச்சு மேயாமல்" விட்டால் சரி.///

அவரைப் பற்றி இவ்வளவெல்லாம் தெரிஞ்சு வெச்சிருக்கீங்களா பிரபா?.... (ஆஹா.... எங்கயோ இடிக்குது......)

ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கு....

அடிக்கடி வந்து போங்க......

சுசி சொன்னது…

//பெண்ணானவள் இல்லையா? எப்போதுமே கொஞ்சம் யோசித்து, காக்க வைத்து தான் முடிவு சொல்லுவாங்க.... //
சிம்புவோடத விட உங்க ஏக்கம் பேரேக்கமா இருக்கும் போல இருக்கே...
நல்லா இருக்கு.
ஷாம்லி பத்தி இவ்ளோ சொல்லிட்டு அவங்க படத்த போடலையேன்னு பசங்க திட்ட போறாங்க.

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

Test

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

அதானே... தப்பு பண்ணிட்டேனே.... நம்ம பசங்க இதத் தான் எதிர் பார்ப்பாங்களோ?... நல்ல பசங்க நம்ம பசங்க....

நன்றி சுசி உங்கள் வருகைக்கு....

அடிக்கடி வந்து போங்க.....

கடைக்குட்டி சொன்னது…

this is the first time m coming to ur blog... (NHM not thr in this sys so only eng)

nice info..

keep writing..

but

write carefully my friend...
(cos.. m following u... )

செந்தழல் ரவி சொன்னது…

நல்லா எழுதறீங்க அபு. கலக்கல்..

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

கடைக்குட்டி கூறியது...

/// this is the first time m coming to ur blog... (NHM not thr in this sys so only eng)///

நன்றி உங்கள் முதல் வருகைக்கும், பின்னூட்டளுக்கும்.....

////keep writing..

but

write carefully my friend...
(cos.. m following u... )//

சொல்லிட்டீங்க.... அது மட்டுமல்ல... follow வேற பண்றீங்களா?... கட்டாயம் ரொம்ப கவனமா எழுதுவேங்க....

அடிக்கடி வந்து போங்க.....

நன்றி வந்தமைக்கும், follow பண்றதுக்கும்.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

செந்தழல் ரவி கூறியது...

//நல்லா எழுதறீங்க அபு. கலக்கல்..///

ரொம்ப நன்றி செந்தழல் அண்ணா....

அடிக்கடி வந்து போங்க.....