புதன், 1 ஜூலை, 2009

மைக்கெல் ஜாக்சன் கனவுகள்..

ஸ்லம்டாக் மில்லியனர் படத்தி்ல் ரஹ்மானின் இசையை பார்த்து பிரமித்துப் போன ஜாக்சன் ரஹ்மானுடன் இணைய ஆர்வம் கொண்டாராம்.

இது தொடர்பாக A. R. ரஹ்மானின் நண்பர் ஒருவர் கூறுகையில், லாஸ் ஏஞ்சலெஸில் நடந்த ஆஸ்கர் விருது விழாவின்போது ஜாக்சனை சந்தித்தார் ரஹ்மான். அப்போது ரஹ்மானிடம் தனது அடுத்த ஆல்பத்திற்கு இசையமைக்க வேண்டும் என ஜாக்சன் கோரிக்கை விடுத்தார்.

இந்த ஆல்பத்தில் இந்திய உணர்வுகளை அதிகம் இடம் பெறச் செய்யவும் ஜாக்சன் திட்டமிட்டிருந்தார். இந்த ஆல்பம் தொடர்பாக அட்னான் சமியுடனும் ஆலோசனையில் ஈடுபட்டிருந்ததாகவும், இந்திய இசைக் கருவிகளான டொலக்கு, தபேலா, சாரங்கி ஆகியவற்றைப் பயன்படுத்தவும் ஜாக்சன் திட்டமிட்டிருந்தார்.

யுனிட்டி அன்தம் (unity anthem) என இந்த ஆல்பத்திற்கு பெயரிட்டிருந்தார் ஜாக்சன். ஏற்கனவே ஜாக்சனும், ரஹ்மானும் ஏகம் சத்யம் என்ற பெயரிலான இசை வடிவத்திற்காக இணைந்திருந்தார்கள்.இந்திய இசைப் பக்கம் ஜாக்சனின் கவனத்தை திருப்பியவர்களில் முக்கியமானவர் ஜாக்சனின் அண்ணனான ஜெர்மைன் ஜாக்சன்தான்.

அது அப்படி இருக்க தனது வாழ் நாளில் ஒரு முறையாவது அன்னை தெரேசாவை சந்திக்க வேண்டும் என ஆசை வைத்திருந்தார் ஜாக்சன். ஆனால் அதுவும் கை கூடாமல் போய் விட்டது.

இதை விட முக்கியமான விடயம் தான் கடந்த சில ஆண்டுகளாக இந்து மதம் குறித்து ஆர்வம் கொண்டு அது தொடர்பான நூல்களை எல்லாம் தேடிக் கற்க ஆரம்பித்தாராம் ஜாக்சன்.

இதுகுறித்து சர்வதேச இந்து கழகம் என்ற அமைப்பின் தலைவர் ராஜன் செத் கூறுகையில், தியானம் செய்வது எப்படி என்பது குறித்து ஜாக்சன் படித்து வந்தார். மேலும் ஒரு சுத்த சைவமாகவும் ஜாக்சன் இருந்து வந்தார் எனத் தெரிவித்தார்.

தனது வாழ்நாளின் கடைசி நாட்களி்ல் ரவீந்திரநாத் தாகூரின் படைப்புகளை விரும்பிப் படித்து வந்தாராம் ஜாக்சன். தாகூரின் படைப்புகள் ஜாக்சனை வெகுவாக கவர்ந்து விட்டதாம். இதன் மூலம் இந்தியாவுடனான தொடர்பை மேலும் வலுப்படுத்திக் கொள்ள அவர் ஆர்வம் காட்டி வந்தாராம்.

ஆனால் இயற்கை அன்னை அவரது வாழ் நாளை தனதாக்கிக் கொண்டது.

(ஜாக்சன் குடும்பத்திற்கு இசைக் குடும்பம் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்கள்.....)

அப்போ நான் வரட்டா.......

உங்கள் நண்பன்
அபூ......

19 கருத்துகள்:

அக்பர் சொன்னது…

இசை உலகின் முடி சூடா மன்னன்.

உடல் ஆரோக்கியத்தையும் கவனித்திருக்கலாம்.

அக்பர் சொன்னது…

உங்கள் ப்ளாக்கில் அடிக்கடி error ‍வருகிறது சரிபார்க்கவும்.( நான் ie 6 ‍உபயோகிக்கிறேன்.)

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

நன்றி அக்பர்.....

தயவு செய்து இந்த ப்ளாகர் பற்றி நன்கு தெரிந்தவர்கள் என் வலையில் அடிக்கடி ஏற்படும் பிரச்சினைக்கு நல்ல ஒரு பதில் சொல்லி விடுங்கள். ஏராளமானவர்கள் சொல்கிறார்கள் பின்னூட்டல் எழுத முடியாமல் error வருவதாக.....எனக்கு அவ்வளவாக இந்த ப்ளாகர் பற்றி தெரியாது. அதனால் வலையுலக நண்பர்கள், நல்ல உள்ளங்கள் ஏதாவது ஐடியா கொடுங்க.

அல்லது நான் புதிய வலைப் பதிவொன்றை உருவாக்கலாமா???

பெயரில்லா சொன்னது…

no need to go for for another template. Just try to understand basics of blogger. that is more than enaugh. for comment you make it open in another window
AND NOW I EXPERIANCED CANT ENTER URL NAME TOO!
IRSHATH

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

நன்றி இர்ஷாத்....

கட்டாயம் முயற்சி பண்றேன்....

(ஆனால் நான் Comments எழுதும் போதெல்லாம் இந்தப் பிரச்சினை வருவதில்லை இர்ஷாத்....)

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

பெயரில்லா சொன்னது…
///for comment you make it open in another window///

பின்னூட்டல் எழுத புதிய விண்டோ திறந்திருக்கிறேன் இர்ஷாத். இப்போ ஓகேவா???

சந்ரு சொன்னது…

என்றும் மக்கள் மனதில் இருப்பார் என்பது மட்டும் உண்மை...

எப்போது சரி என்று நினைக்கிறேன்...
என்னையும் தொடர் பதிவுக்கு அழைத்தமைக்கு நன்றிகள்... விரைவில் எதிர் பாருங்கள்... நினைவுகளை மீட்டுக்கொண்டிருக்கிறேன்...

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

சந்ரு கூறியது...
///என்னையும் தொடர் பதிவுக்கு அழைத்தமைக்கு நன்றிகள்... விரைவில் எதிர் பாருங்கள்... நினைவுகளை மீட்டுக்கொண்டிருக்கிறேன்...///

நன்றி சந்ரு பதிவுக்குள் வந்தமைக்கு.....

அது சரி, இவ்வளவு நினைவுகள் இருக்குதா உங்களுக்குள்ள?.... வாசிக்கத் தானே போறோம்....பார்க்கலாம்......

சூரியன் சொன்னது…

தனது வாழ்நாளின் கடைசி நாட்களி்ல் ரவீந்திரநாத் தாகூரின் படைப்புகளை விரும்பிப் படித்து வந்தாராம் ஜாக்சன். தாகூரின் படைப்புகள் ஜாக்சனை வெகுவாக கவர்ந்து விட்டதாம்.

கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன் ..

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

நன்றி சூரியன் உங்கள் வருகைக்கு...

சூரியன் கூறியது...

///கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன் ..////

அதானே............

அடிக்கடி வந்து போங்க....

அபுஅஃப்ஸர் சொன்னது…

//கடந்த சில ஆண்டுகளாக இந்து மதம் குறித்து ஆர்வம் கொண்டு அது தொடர்பான நூல்களை எல்லாம் தேடிக் கற்க ஆரம்பித்தாராம் ஜாக்சன்.
//

அவர் முஸ்லீமாகவே மதம் மாறிவிட்டார் என்றும் அவர் இப்போது முஸ்லீமாகவே இறந்தார் என்றும் ஒரு வதந்தி(?) இருந்தது தாங்களுக்கு தெரியுமா

ஜெட்லி சொன்னது…

அபூபக்கர் உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளன,
நம்ம ரஹ்மான், ஜாக்சன் பத்தி எனக்கு தெரியாத
நியூஸ் இது. மிக்க நன்றி.
தொடர்ந்து எழுதுங்கள்.

உங்கள்
ஜெட்லி

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

அபுஅஃப்ஸர் கூறியது...

/////அவர் முஸ்லீமாகவே மதம் மாறிவிட்டார் என்றும் அவர் இப்போது முஸ்லீமாகவே இறந்தார் என்றும் ஒரு வதந்தி(?) இருந்தது தாங்களுக்கு தெரியுமா////

நன்றி அபு அப்சர்.....

நானும் அந்த செய்தியை கேள்விப் பட்டேன். ஆனால் அது நம்பகமில்லாத் தகவலாகத் தான் இன்று வரையும் இருக்கின்றது....

அடிக்கடி வந்து போங்க.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

ஜெட்லி கூறியது...

////அபூபக்கர் உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளன, நம்ம ரஹ்மான், ஜாக்சன் பத்தி எனக்கு தெரியாத நியூஸ் இது. மிக்க நன்றி./////

நன்றி ஜெட்லி பதிவுக்குள் வந்தமைக்கு....

அடிக்கடி வந்து போங்க......

தீப்பெட்டி சொன்னது…

எனக்கு இவை புதிய தகவல்கள்..
பகிர்தலுக்கு நன்றி..

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

தீப்பெட்டி கூறியது...

////எனக்கு இவை புதிய தகவல்கள்.. பகிர்தலுக்கு நன்றி..////

நன்றி தீப்பெட்டி உங்கள் வருகைக்கு....

அடிக்கடி வந்து போங்க.....

என்ன கொடும சார் சொன்னது…

“என்ன கொடும சார்” இன் வளர்ச்சிப்படிகளில் ஒரு கட்டமாக இன்றுமுதல்என்ன கொடும சார்” இன் Mobile Friendly Version “Eksaar Mobile” “

http://meksaar.blogspot.com

என்ற முகவரியூடாக அறிமுகப்படுத்தப்படுகிறது

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

என்ன கொடும சார் கூறியது...

////“என்ன கொடும சார்” இன் வளர்ச்சிப்படிகளில் ஒரு கட்டமாக இன்றுமுதல்என்ன கொடும சார்” இன் Mobile Friendly Version “Eksaar Mobile” “/////

தொடருங்கள் நண்பா உங்கள் பயணத்தை.....

தொடர்ந்தும் ஆதரவு வழங்கிக் கொண்டே இருப்போம்......
நன்றி வலைக்குள் வந்தமைக்கு.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

Test