திங்கள், 1 ஜூன், 2009

ஆண்டொன்றுக்கு இவ்வளவு பலியா???

அன்றாடம் பூமியில் அதிகரிக்கும் மாசுக்களினால் பூமி வேகமாக வெப்பமயமாகி வருகிறது. இந்த வேகத்தினால் ஏராளமான இயற்கை அழிவுகள் பூமியில் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது. ( இதற்கு முக்கிய காரணிகளாக இருக்கின்ற தொழிற்சாலைகளும், வாகனங்களும் இல்லையென்றால் நம் கதி, அதோ கதி தான்!....)

வெப்ப மயம் பற்றி ஐ. நா. அமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் "கொபிய் அனான் " தலைமையில் உருவான "மனித நேய அமைப்பு " இது தொடர்பாக ஆய்வொன்றை நடாத்தி அறிக்கையினை வெளியிட்டுள்ளது. (அறிக்கைய என் கையில தந்தாங்க இல்ல ..... )

அறிக்கை தொடர்பாக "கொபிய் அனான் " அளித்த பேட்டியில் பருவ நிலை மாற்றத்தால் மனித இனத்துக்கு ஏற்படும் அளிவுகளினதும், ஆபத்துக்களினதும் உச்ச கட்டத்தில் நாமிருக்கிறோம், இது தொடர்பாக உலகளவில் விவாதித்து மனித இனத்தைக் காப்பாற்ற முக்கிய முடிவு எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். (எடுப்போம் என்கிற சொல்லை நாம் மும்மொளிவோமா?...)

அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ள தகவலாவது "வெப்ப மயமாதல் மூலம் உண்டாகும் விளைவினால் ஆண்டொன்றுக்கு 3 இலட்சம் பேர் இறப்பதாகவும், 30 கோடிப் பேர் பாதிக்கப் படுவதாகவும் " அறிவிக்கப் பட்டுள்ளது. இதே நிலை தொடருமாயின் 2030 ஆம் ஆண்டுக்குப் பிற்பாடு ஆண்டொன்றுக்கு இறப்போரின் எண்ணிக்கை 5 இலட்சமாக அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடப் பட்டுள்ளது.


(இவற்றையெல்லாம் தடுப்பதற்கு நாம் என்ன முயற்சி எடுப்பது???)

(இப்படியே போனால் 2030 அல்ல, இன்னும் கொஞ்சம் நாள் தான்...........)

மற்றுமொரு பதிவில் சந்திப்போம்......
அதுவரையில் நல்லதையே சிந்திப்போம்!.........

வரட்டா!...........

உங்கள் நண்பன்
அபூ...........

6 கருத்துகள்:

sakthi சொன்னது…

அருமையான பதிவு

தொடர்ந்து எழுதுங்கள்

வாழ்த்துக்கள்

sakthi சொன்னது…

அளித்த பேட்டியில் பருவ நிலை மாற்றத்தால் மனித இனத்துக்கு ஏற்படும் அளிவுகளினதும், ஆபத்துக்களினதும் உச்ச கட்டத்தில் நாமிருக்கிறோம், இது தொடர்பாக உலகளவில் விவாதித்து மனித இனத்தைக் காப்பாற்ற முக்கிய முடிவு எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். (எடுப்போம் என்கிற சொல்லை நாம் மும்மொளிவோமா?..

கண்டிப்பாக நண்பா

sakthi சொன்னது…

அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ள தகவலாவது "வெப்ப மயமாதல் மூலம் உண்டாகும் விளைவினால் ஆண்டொன்றுக்கு 3 இலட்சம் பேர் இறப்பதாகவும், 30 கோடிப் பேர் பாதிக்கப் படுவதாகவும் " அறிவிக்கப் பட்டுள்ளது. இதே நிலை தொடருமாயின் 2030 ஆம் ஆண்டுக்குப் பிற்பாடு ஆண்டொன்றுக்கு இறப்போரின் எண்ணிக்கை 5 இலட்சமாக அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடப் பட்டுள்ளது.

எண்ணிப்பார்த்து திருந்த வேண்டும் நாம்

என்ன கொடும சார் சொன்னது…

“காலை நேர FM நிகழ்ச்சி” JUICEசெய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
இன்றைய பத்திரிகை – 4
இந்த நாளில் – 10
Jingles – 25
விளம்பரம் – 25
தலைப்பு – 1
பாடல்கள் - 30
நட்ஷத்திர பலன் - விரும்பினால்

செய்முறை...

மேலும் வாசிக்க கிளிக்குங்க

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

Sakthi, உங்கள் வருகைக்கு ரொம்ப நன்றி.....நன்றி........நன்றி........

//எண்ணிப்பார்த்து திருந்த வேண்டும் நாம்//

ஒவ்வொருவொரும் கற்பனை பண்ணினால்!!!!!........ (ரொம்ப நல்லா இருக்கும் இல்லையா??)

சக்தி, அடிக்கடி வந்து போங்க........

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

"என்ன கொடும சார் " ரொம்ப நன்றி, ........

போனேன், பார்த்தேன், ரசித்தேன், எழுதினேன்.....

//யாரவது கேட்டால் ஆனானப்பட்ட கவிப்பேரரசு கூட “சீனா தானா” எழுதவில்லயா என்று உதாரணம் காட்டி நியாயம் கற்பிக்கலாம்.//

ரொம்ப நல்லா ஐடியா கொடுத்தீங்க....

நியாயத்த ஏற்றுக் கொண்டால் "நாக்கு மூக்கா தான்......." இல்லன்னா "டும் டும் பி... பி... தான்...."

அருமையான பதிவு வாழ்த்துக்கள். (அங்கங்கே யாருக்கோ அடித்தது போல் கனவு கண்டேன்... "கனவா? நிஜமா? நான் கண்ட காட்சி.....")