செவ்வாய், 12 மே, 2009

நான் காதல் கொண்ட அறிவிப்பாளர்கள்

பகுதி 2


நேற்றைய பதிவில் என்னைக் கவர்ந்த, நான் நேசிக்கின்ற அறிவிப்பாளர்களைப் பற்றி பதிந்திருந்தேன். அங்கே விட்ட இடத்திலிருந்து இங்கே தொட்டுச் செல்கிறேன்.

R. P. அபர்ணா சுதன்.

நான் இவர் குரலை முதலில் கேட்டதும் ரசித்ததும் முதல்வன் சூரியனில் தான். நல்ல குரல் வலம் மிக்க ஒரு அறிவிப்பாளன். இவர் கடந்து வந்த பாதைகளை அடியேன் அறியேன். ஆனால் இவர் நடந்த பாதைகளில் அடியேனும் நடந்ததுண்டு. மேடை நிகழ்ச்சிகளுக்கு பொருத்தமான குரல் வளம். இவர் மேடை ஏறி ஒலிவாங்கியை கையில் பிடிக்கும் போது கிடைக்கும் கரகோசமே இவர் சேர்த்துக்கொண்ட சொந்தங்களுக்கு உதாரணம். ஒரு 31st night ல் கொழும்பு Town Hall ல் இடம் பெற்ற மேடை நிகழ்வொன்றில் நம் தென்னிந்திய பாடகர்களான அனுராதா ஸ்ரீராம், திப்பு இவரைப் புகழ்ந்து பேசிய போதெல்லாம் இவரை விட நான் அதிகமாக சந்தோசப் பட்டேன். மேடையில் "எங்கே உங்களுடைய கரகோஷம்" அந்த சொல்லுக்கு இவர் தான் உரித்துடையவர் போல என்னுடைய கற்பனை. ( என்னோட கற்பனை மட்டும் தான் ) சூரியன் FM, சக்தி FM னு சொல்லி இவர் பணி புரிந்தாலும் இவர் நிகழ்ச்சிகளை கேட்க நான் தவறியதில்லை. சக்தியில் " வணக்கம் தாயகம் " பண்ணிட்டு இருந்தார். ஆனால் இப்போது வெளிநாட்டில் இருப்பாதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறது. அண்ணா எங்கிருந்தாலும் உங்கள் அறிவிப்பாளர் பணி தொடர வாழ்த்துக்கள்.

கஜமுகன்

தென்றல் வானொலியின் ஆரம்ப கால அறிவிப்பாளர். இப்போது சக்தி FM ல் பணி புரிகிறார். உண்மையில் நான் விரும்பும் எல்லா அறிவிப்பாளர்களிலும் எதோ ஒரு ஈர்ப்பு இருக்கிறது. கஜாவைப் பொறுத்த வரையில் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தக் கூடிய குரல் வளம் இவரிடம் இருக்கிறது. SMS Show, இசை இளவரசர்கள், Good Morning Sri Lanka, னு சொல்லி ரொம்பவே பொருத்தமான குரல். வாழ்த்துக்கள் கஜா அண்ணா.....

R. தர்ஷன்

தாளம் FM பணிப்பாளரான இவரது குரலிலும் ஏராளம் ஈர்ப்பு. "கேளுங்கள் தாளம் , குதூகலம் ஏராளம் " சொல்லும் போதே ஒரு மழலைக் குரல் கேட்பது போன்ற உணர்வு. "இதய தாளம் " நிகழ்ச்சி மூலம் நேயர்கள் சேர்த்துக் கொண்டதில் இவருக்கு நிகர் இவர் தான். நேத்ரா டிவியில் M 9.30 நிகழ்ச்சி பண்ணுவார். நிகழ்ச்சிக்காய் இவர் கொண்டு வரும் கடிக் கேள்விகள் ரொம்பப் பிரமாதம். அருமையான படைப்புக்களுக்கு நிச்சயம் இலங்கை மண்ணில் களம் இருக்கிறது. வாழ்த்துக்கள் தர்ஷன் அண்ணா.


(யப்பாடி!........எப்படியோ இன்னக்கி ஒரு பதிவு போட்டாச்சு... ஹி......ஹி.......ஹி....)

அடுத்த அறிவிப்பாளர்கள் பற்றி அடுத்த பதிவில் எதிர் பாருங்கோவன்........

ஆபீஸ்ல உட்கார்ந்துகிட்டு வேல பண்றதுன்னா ரொம்ப boring. அதான் வேலைப் பலுக்கலுக்கு மத்தியிலும் அடிக்கடி பதிவுக்குள் வந்து போகிறேன். எப்படியோ முடிந்ததைப் பண்றோம். முடியாதத தேடுறோம்....உங்க கருத்துக்களில் தான் நான் தொடர்ந்து எழுதுவேனா ? இல்லையா ? என்பது இருக்கு.

(வந்ததும் தான் வந்தீங்க....... கருத்த கொட்டிட்டு போங்க......)

உங்கள் வார்த்தைக்குள் சிக்கும் இள ரத்தம்
அபூ..........


வரட்டா...............




கருத்துகள் இல்லை: