சனி, 9 மே, 2009

அன்னை என்னும் தங்கப் பெண்


சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஒரு பதிவில் உங்களோடு இணைவதில் மகிழ்ச்சி.

மே 10 அன்னையர் தினத்தைக் கொண்டாட இருக்கும் அத்தனை அன்னைக்கும் அன்னையர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

"நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்"

சரி அன்னையர் தினத்துக்காய் ஏதாவது பதிவு போடலாம்னு நினைத்தா .... என்னோட அன்னையைப் பற்றி எழுதிய கவிதைகளையே இங்கே சமர்ப்பணம் செய்கிறேன் என் தாய்க்கும் ..... எம் தாய்க்கும். (எம் தாயா? யாரா?...... என்னங்க இப்படி எல்லாம் கேட்கிறீங்க? நீங்க யாரு? நான் யாரு? அண்ணனும் தம்பியும் இல்லையா? நிறைய அக்கா மார்களும் இருக்கிறார்கள். அது ஒரு புறம். எனவே எம் தாய்க்கும் இக கவிதை சமர்ப்பணம் )

சிதறிய இரத்தத் துளியால்
சில்லென மகிழ்ந்தாள் என் அன்னை -
சிசுவாய் கருத்தரிக்கும் என் நிலை கண்டு!......

சின்ன சின்ன வேதனை
கொடுக்கத் தொடங்கினேன்
சிறு பிஞ்சு நான்!....

வேதனைகள் பொறுத்திட்டாள்
வேரூன்றி நான் வளர வேண்டி.....

சுமைகள் தாங்கிட்டாள்
சுக வாழ்வு நான் பெற வேண்டி......

சொல்லொணாத் துயர் அடைந்தாள்
சொற்பனமாய் நான் மிளிர வேண்டி.....

பத்து மாதம்
பட்டினியாய் அவள் இருந்தால்
பாலகன் இவனை ஈன்றிட வேண்டி.....

உணர்வுகளின் உச்சத்தில்
அவள் துடிக்க -
அந்தோ அவனியில் அவதரித்த
என் முகம் பார்த்து
அகமகிழ்ந்த தங்கப் பெண்
என் அன்னை...........

(சிந்தனையில் சிறகடித்த வரிகளை சிந்தியிருக்கின்றேன். உங்கள் கருத்துக்களோடு சந்தியுங்க........)

அன்னை அன்புஉலகில் நான் தோன்ற
உச்சமாய் உயிர் காத்த
உண்ணதத் தாயே......

ஈரைந்து மாதங்கள்
கருவறையில் எனை ஈன்ற
உன் சுமையை நான்
எப்படி புகழ்வதம்மா? ......

நற்கல்வி மானாய்
நல்லுலகில் நான் மிளிர
நற்பண்பு புகட்டிய
உன் ஆசிரியச் சேவையை
எப்படி வர்ணிப்பதம்மா?.....

கெட்ட செயல்கள் எனை விட்டகழ
அன்பால் அரவணைத்து
கண்டித்த உன் தண்டனைகளை
எப்படி மறப்பதம்மா?.....

அனுதினமும் ஐவேளை தொழுதிடவே
அண்ணல் சுன்னா சொல்லிய
உன் வார்த்தைகளை
எப்படி அழைப்பதம்மா? ......

தந்தையின் மரணத்தின் பின்
தட்டிக் கொடுத்த உன் தோழமையை
எப்படி புகழ்வதம்மா? .........

இவைகளை எல்லாம் வர்ணிக்க
என்னிடம் வார்த்தைகள் இல்லையம்மா!.....
ஏனெனில்.......
உன் அன்புக்கு முன்னாள் இல்லையம்மா
எனக்கு வேறு அன்பு.........


இவன்

உங்கள் வார்த்தைக்குள் சிக்கும் இள ரத்தம்

அபூ..........

(வந்ததும் தான் வந்தீங்க ...... கொஞ்சம் கருத்து சொல்லிட்டு போங்க ......)

மற்றுமொரு பதிவில் சந்திப்போம்...... அது வரையில்
நல்லதையே சிந்திப்போம்........

வரட்டா............கருத்துகள் இல்லை: