திங்கள், 25 மே, 2009

நான் காதல் கொண்ட அறிவிப்பாளர்கள்

பகுதி 3

சிவானுஜா சிவநாதன் (இப்போ.....?????????)

சூரியன் FM ன் ஆரம்ப கால அறிவிப்பாளரான இவரது குரல் ஒரு மழலைக் குரல். சூரியனின் "பட்டு வண்ணச் சிட்டுக்கள் " சிறுவர் நிகழ்ச்சியை இவர் தான் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தார். இப்போ வெளிநாட்டில் இருப்பதாகத் தகவல்.
எங்கிருந்தாலும் நலமாக வாழ வாழ்த்துக்கள் அக்கா.

ரிகாசா ஜமால் ( இப்போ..... ரிகாசா வசீமாம்.....)

இவரும் சூரியனின் ஆரம்ப கால அறிவிப்பாளர். இவர் சூரியனில் அறிமுகமாவதற்கு முதல் "சுவர்ண ஒலி " வானொலியிலும் அறிவிப்பாளராக கடமை புரிந்தவர். சூரியனில் இவருக்கான தனி நிகழ்ச்சியாக இடம் பிடித்திருந்தது "சூரியனின் மங்கையர் மாளிகை". இவர் வந்தாலே மங்கையர் மாளிகை கலை கட்டும். (ஏங்க? இப்படியெல்லாம் திட்டுறீங்க? மங்கையர் மாளிகை மங்கைகள் மாத்திரம் தான் கேட்க முடியும்னு யாரு சொன்னது? இருந்தாலும் நான் அப்போ ரொம்ப சின்ன பய்யனுக.....அதனால எல்லா நிகழ்ச்சிகளையும் கேட்கிற வழக்கமிருந்தது. இப்ப தான் தெளிவு வந்தது. மங்கையர் மாளிகை மங்கைகளுக்கு மாத்திரம் என்பது...... )
அக்கா.................... வாழ்த்துக்கள் உங்களுக்கு......

S. நவநீதன் (புன்னகை மன்னன்னு நிறையப் பேர் சொல்லுவாங்க....)

சூரியனின் அறிவிப்பாளராக இருந்த இவர் இப்போது பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றிருக்கிறார். இவரது உயர்வுக்கு உறுதுனையாய் இருந்த அத்தனை பேருக்கும் நவா சார்பில் என்னோட வாழ்த்துக்கள். (குறிப்பாக சூரியனின் நேயர்களுக்கு ) சூரியனில் இவர் இப்பொழுது தொகுக்கும் நிகழ்ச்சி "என்றென்றும் புன்னகை " படு intresting ஆன நிகழ்ச்சி. இவருடைய புனைப் பெயருக்கு ஏற்ற நிகழ்ச்சி இல்லையா? இனி என்ன? கலக்குறது தான் இவரோட வேலையே....... வாழ்த்துக்கள் நவா அண்ணா.... உங்களது பணியும் சேவையும் தொடர.....


ஹிஷாம் முஹம்மத் (பதிவுலகத்துல வலம் வர்ற ஒருவர் )

நான் ரசித்த சின்ன வயது அறிவிப்பாலர்னா அது ஹிஷாம் தான். (அப்போ.. மத்தவங்க எல்லாம்? .............. அவங்க எல்லாம் ஒரு காலத்துல சின்ன வயது அறிவிப்பாளரா இருந்தவங்க....... இத எல்லாம் போய் கேட்டுட்டு இருக்கீங்க? சரி..சரி....... மாட்டெருக்கு வாங்க.....). ஆரம்ப கால தென்றல் வானொலியின் அறிவிப்பாளரான இவர் தென்றலில் நிறைய நிகழ்ச்சிகள் படைத்திருந்தாலும் அறிவிப்பாளினி "நிரோஷா பாருக் " உடன் இணைந்து சிறுவர்களுக்கான சிறுவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கலந்து கொண்டு உரையாடும் சிறுவர்களினுடைய முயற்சிகளையும் விட இவர்கள் இருவரும் கலக்கும் விதமே போதுமாக இருந்தது அந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு. பின்னாளில் நேத்ரா டிவியில் "இனிமை இதோ " என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முற்று முழுதாக எம்மவரின் படைப்புக்கு களம் அமைக்கக் கூடியதாக அந்நிகழ்ச்சி இருந்தது. பின்னர் சூரியன் FM ல் ஒலிபரப்பாகிய "அரங்கம் " நிகழ்ச்சியில் இவர் குரல் கொடுத்திருந்தார். குறிப்பாக M. C. ரஸ்மிநுடய்ய நாடகங்களுக்கு சிறப்பாக குரல் கொடுத்திருந்தார். பின்னர் அப்படியே இவரது பிரவேசம் ITN தொலைக் காட்சி நோக்கி நகர்ந்தது. மாலை இடம் பெரும் பிரதான செய்தியில் இவர் ஒளிபரப்பாளராக (செய்தி வாசிப்பாளராக ) இன்னும் கடமையாற்றிக் கொண்டிருக்கிறார். மறு புறத்தில் வெற்றி FM ல் "ஹிஷாமுடன் கற்றது கையளவு " என்கிற நிகழ்ச்சியை சிறப்பாகத் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.

(இவர் தென்றல் வானொலியில் இல்லா விட்டாலும் இவரது குரலில் இடம் பெற்ற சில நிலையக் குரியிசைகள் இன்னும் அந்த வானொலியில் ஒலிபரப்பாகிக் கொண்டிருப்பது எம் போன்ற இவரது நேயர்களுக்கு மிக்க மகிழ்ச்சி. குறிப்பாக தென்றல் வானொலியின் பிரதான செய்தியில் "வெளி நாட்டுச் செய்திகள் " என்கிற Jingle இவரது குரலில் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.) வாழ்த்துக்கள் ஹிஷாம் வெற்றியோடு உங்கள் வெற்றிப் பயணமும் தொடர.........

(ஒரு சந்தோஷமான செய்தி என்னதுன்னா நான் முதன் முதலில் . . கூ. தாபன முஸ்லீம் நிகழ்ச்சியின் கவிதைக் களம் நிகழ்ச்சிக்கு குரல் கொடுக்க சென்றிருந்த போது ஹிஷாமும் அன்றைய அந்நிகழ்ச்சியில் குரல் கொடுத்தார். சின்ன வயதில் பிரபல்யம் வாய்ந்த அறிவிப்பாளராகியும் தலைக்கனம் இல்லாமல் அவர் நடந்து கொள்கிற விதம் தான் எனக்கு அவரில் ஈர்ப்பு வரக் காரணம். நிதானம், பொறுமை என்கிற 2 சொல்லையும் ஹிஷாமிடம் தான் கற்றுக் கொண்டது போல் ஒரு பெருமிதம் இன்னும் என்னில் இருக்கிறது )

இவர்கள் தான் நான் நேசித்த அறிவிப்பாளர்களும், நான் அறிவிப்பாளர் துறை பற்றிக் கற்றுக் கொண்ட ஆசான்களும்.

அறிவிப்பாளர்கள் பற்றிய பதிவை இன்றோடு முடித்துக் கொள்கிறேன். ஏனெனில் நிறைய விடயங்களைத் தேடலாம்னு புறப்பட்டாச்சு. "தேடல் என்பது உள்ள வரை வாழ்வில் ருசி இருக்கும் ". அதனால தேடப் போறேன். ஆனா....... தேடப் போற விசயத்தக் கொட்டப் போறது எங்க தெரியுமா? உங்க கிட்ட தான்....(ஹி........ஹி...............ஹி................)

மற்றுமொரு பதிவில் சந்திப்போம்.....
அதுவரையில் நல்லதய்யே சிந்திப்போம்!........

உங்கள் வார்த்தைக்குள் சிக்கும் இள ரத்தம்
அபூ.........

வரட்டா........

(கட்டாயம் கருத்த கொட்டிட்டு போங்க........... நான் சொன்னது கேட்டிச்சா?.... பார்க்கலாம்......பார்க்கலாம்....... எத்தன பேரு கருத்து சொல்லப் போறிங்கன்னு சொல்லி.......)










10 கருத்துகள்:

இர்ஷாத் சொன்னது…

சுவர்ண ஒலி யை மறக்காமல் இருப்பவர்களில் நானும் ஒருவன்.. அதன் அறிவிப்பாளர்கள் அந்த style இல் திறமைசாலிகள். ஏறத்தாள அதில் எல்லா நிகழ்ச்சிகளும் பிடித்திருந்தன.. அதன் styleஐ பலர் அன்று விமர்சித்தாலும் அதன் தாக்கம் எல்லா வானொலியிலும் இன்று இருக்கிறது..

பெயரில்லா சொன்னது…

please take more care on spellings.. we expect an standrd from you

Hisham Mohamed - هشام சொன்னது…

நன்றி சப்ராஸ்,
அவ்வப்போது தங்கள் தளத்திற்கு நான் வந்து போவதுண்டு...
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்...
வெற்றிக்கு வாழ்த்துக்கள்....
Hisham Mohamed

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

நன்றி இர்ஷாத் பதிவுக்குள் வந்தமைக்கு.

தனியார் வானொலிகளின் ஆரம்பமே சுவர்ணஒலி என்று சொன்னால் அது பிழையில்லை. அதில் உதித்த அறிவிப்பாளர்கள் தான் பிற்காலத்தில் பல்வேறு தனியார் வானொலிகளில் பணி புரிந்தனர். புரிந்து கொண்டும் இருக்கின்றனர். எங்க பாசையில சொல்றதுன்னா "காய்க்கிற காய்க்கி எல்லா புறத்தாளையும் கல்லடி, சொல்லடி வருமாம். "

சுவர்ணஒலி நேயர்களில் நானும் ஒருவன் என்பதில் எனக்கும் கொஞ்சம் பெருமை.

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

பெயரில்லா சொன்னது…

// please take more care on spellings.. we expect an standrd from you ///

நிச்சயமாக இனி கூடிய கவனம் எடுப்பேன்.

பதிவுக்குள் வந்தமைக்கு ரொம்ப நன்றி, பெயரோடு கருத்து சொல்லிட்டு போயிருந்தா கொஞ்சம் அதிகமா சந்தோஷப் பட்டிருப்பேன். "அடிக்கடி வந்து போங்கோவன்......."

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

நன்றி ஹிஷாம் பதிவுக்குள் வந்தமைக்கு,

உண்மையில் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஏனெனில் உங்களுடைய 5 வருட அறிவிப்பாளர் பயணத்தில் நீங்கள் கற்றதை விட உங்களிடமிருந்து நான் கற்றுக் கொண்ட விடயங்கள் அதிகம்..... நிறைய நிகழ்ச்சிகளில் உங்களை குருவாய் நான் பார்த்துள்ளேன்.... (என்னுடைய நிகழ்ச்சிகளிலும் உங்களிடம் கற்ற நிறைய விடயங்களை என்னுடைய நேயர்களோடு பகிர்ந்துள்ளேன்...)

குருவே........இனி பதிவுக்குள் வந்தால் மட்டும் போதாது. கருத்தையும் கொட்டிட்டுப் போங்க........... ஓகேயா?.......

Admin சொன்னது…

உங்கள் பதிவுகள் அருமை நண்பா தொடருங்கள் வாழ்த்துக்கள்...

Admin சொன்னது…

எனது வலைப்பக்கம் வந்ததுக்கு நன்றிகள் தொடருங்கள்...

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

நன்றி........நன்றி........ சந்ரு. (2 முறை பின்னூட்டல் இட்டிருக்கீங்க இல்லையா? அதனால தான் 2 நன்றி.....)

என்னோட மூத்த அறிவிப்பாளராக (senior Announcer ) இருந்து Recording Room ல பயிற்சி தந்த நீங்க........... இப்போ பதிவுலகத்துல ஆர்வம் + ஒத்துழைப்பு தருவதுல ரொம்ப சந்தோசம் சந்ரு.

(பழைய நினைவுகளும் Maradana Beam மும் மறக்குமா என்ன? அல்லது மறக்கத் தான் முடியுமா?.......................மறக்க தான் நீ சொன்னாய்.. மிடியல......(டி / டா )இது அப்போ நிறையப் பேர் முணுமுணுத்த பாட்டு )

பிறகு.... இஞ்ச..... அண்ணே.......... அடிக்கடி வந்து போருமேன் என்ன.....

Admin சொன்னது…

பழைய நினைவுகளை மீட்டதுக்கு நன்றிகள் சப்ராஸ்... வானொலி நினைவுகள் என்றால் அதுக்கென்று ஒரு வலைப்பதிவு தொடங்கலாம் எல்லையா சப்ராஸ் நிறையவே நினைவுகள் மனதில்.....