சனி, 4 ஜூலை, 2009

விம்மும் விடியல்கள்....

மீண்டும் ஒரு காகிதக் கிறுக்களோடு வலையுலக நண்பர்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இப்போதெல்லாம் அதிகம் ஆசை கொள்கிறேன் வலையில் எழுதுவதற்கு. அத்தனைக்கும் நீங்கள் கொடுத்த உற்சாகம் தான் காரணம். உற்சாகம் கொடுத்த அனைவருக்கும் இதயம் திறந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்தும் பின்னூட்டல் இடுங்க. உற்சாகப் படுத்துங்க...

வழமை போல இன்றும் ஒரு சின்ன கிறுக்கலை கிறுக்கி வைக்கிறேன். சித்திரமாக அதை மாற்றிக் கொடுங்கள் அடியேனுக்கு. (அதாங்க பின்னூட்டல்......)

விரல்கள் வீணானதால்
விடியல்களும் விம்மத் தொடங்கின....
விருதுகளும் கை நழுவின......
விழுமியம் பெற நினைத்த
விடயங்களும் வினா குறியாகின......
விடை தெரியாத விடுகதைகளும்
விரக்தியளிக்கின்றன......
விழி மூடினால்
விலாசம் கேட்கின்றன - இத்தனையையும்
விட்டுக் கொடுக்க முடியவில்லை......
விடுதலை பெற்ற என் காதலைப் போல......
விரட்டியடிக்கவும் முடியவில்லை
விரட்டப் பட்ட என் காதலைப் போல.....
விடை பெற்றுக் கொள்கிறேன்.....
வில்லாய் மாறிய
விரல்களோடு........
விட்டு வைக்க நினைக்காதீர்கள்
விளையாட நினைக்கும் காதலையும்
விளையாட்டாய் நினைக்கும் காதலர்களையும்.....

(வாசித்து முடிச்சிட்டீங்க இல்லையா?.... பிடித்திருந்தாலும், பிடிக்கவில்லையானாலும் கருத்த சொல்லிட்டு போங்க தாராள மனப் பாங்கோடு..... ஏற்றுக் கொள்கிறேன்...)

அப்போ நான் வரட்டா!!....

உங்கள் நண்பன்

அபூ.....

11 கருத்துகள்:

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் சொன்னது…

"விரல்கள் வீணானதால்
விடியல்களும் விம்மத் தொடங்கின...." ஆரம்பமே அருமையாக இருக்கிறது.

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் கூறியது...

llll"விரல்கள் வீணானதால் விடியல்களும் விம்மத் தொடங்கின...." ஆரம்பமே அருமையாக இருக்கிறது./////

ரொம்ப நன்றி டொக்டர்.எம்.கே.முருகானந்தன் வலைக்குள் வந்தமைக்கு......

அடிக்கடி வந்து போங்க.....

சந்ரு சொன்னது…

சொல்லவே இல்ல....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

சந்ரு கூறியது...

////சொல்லவே இல்ல....////

அதான் இப்போ சொல்லிட்டோமில்ல......(இது எப்படி?......ஹி......ஹி......)

நன்றி சந்ரு வலைக்குள் வந்தமைக்கு.....

சுசி சொன்னது…

//விட்டு வைக்க நினைக்காதீர்கள்
விளையாட நினைக்கும் காதலையும்
விளையாட்டாய் நினைக்கும் காதலர்களையும்.....//
இங்கதான் சும்மா நச்னு இருக்கு. நல்ல முயற்சி அபூ...

சுசி சொன்னது…

உங்களுக்கு அருவீன்னா ரொம்ப பிடிக்குமோ??? ஸ்லைட பாத்திட்டோம்ல...

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

சுசி கூறியது...

//விட்டு வைக்க நினைக்காதீர்கள்
விளையாட நினைக்கும் காதலையும்
விளையாட்டாய் நினைக்கும் காதலர்களையும்.....//
///இங்கதான் சும்மா நச்னு இருக்கு. நல்ல முயற்சி அபூ...////

நன்றி சுசி வலைக்குள் வந்தமைக்கு.....

அடிக்கடி வந்து போங்க......

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

சுசி கூறியது...

///உங்களுக்கு அருவீன்னா ரொம்ப பிடிக்குமோ??? ஸ்லைட பாத்திட்டோம்ல...////

அருவி கொஞ்சம் பிடிக்கும். அறுவல் ரொம்ப ரொம்பப் பிடிகும்கோ......

நன்றி சுசி......

சுசி சொன்னது…

//அறுவல் ரொம்ப ரொம்பப் பிடிகும்கோ......//

அவல் தெரியும், அகவல் தெரியும். அது என்னாங்க அறுவல்???

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

சுசி கூறியது...

//அறுவல் ரொம்ப ரொம்பப் பிடிகும்கோ......//

[[[அவல் தெரியும், அகவல் தெரியும். அது என்னாங்க அறுவல்???/]]]

ஐயோ.....அது சும்மாங்க......

நிலாமதி சொன்னது…

வீணை பேசும் அது மோதும் விரல்களை கண்டு ..........வீணையின் நாதம் உங்கள் வாழ்வில் இசைக்க என் வாழ்த்துக்கள். வீ ........ வரிக்கவிதை நன்று இன்னும் எழுதியிருக்கலாம்