மீண்டும் ஒரு கவிக் கிறுக்களோடு வலையுலக நண்பர்களை எல்லாம் சந்திப்பதில் ரொம்ப சந்தோஷம்க. அது ஏனோ தெரியவில்லை. இப்போதெல்லாம் கிறுக்குவதற்கு ஆரம்பித்தாலே நினைவுக்கு வருவதெல்லாம் என் நண்பர்களின் காதல் தோல்விகளும், அவர்கள் படும் வேதனைகளும். (நல்ல வேளை....நான் இவற்றிலெல்லாம் மாட்டிக் கொண்டு காலத்தை வீணாக்கவில்லை.....) இந்தக் காதல் இருக்குதே ரொம்ப பொல்லாததுங்க.....நெருக்கமா அரவணைக்கும்....எங்கேயோ கொண்டு போய் செம சாத்து சாத்தும்க....(வேணாம்.....இதற்கு மேல நான் எதுவுமே சொல்லல்ல...) கிறுக்கல வாசிப்போமா?.........
என் ஜன்னல் கம்பிகளின் ஓரம்
நிலவு வந்த நேரம்
என் மனதில் ஏதோ பாரம்.......
நிலவோடு நீண்ட கதையாய்
நின் கதையை நான் கூற
நிலாக் கூட கண்ணீர் வடிக்கிறது
நிசப்த இரவுகளில்
நிதானமாய்.....
உன் நினைவுகள்
உள்ளத்தைக் குடைகையில் தான்
உளறி விட்டேன் உளக் குமுறல்களை
உறங்க மறுக்கும் தோழன் நிலவிடம்......
விடுதியின் வரலாற்றில்
விடியா இரவாய்
விருட்சம் பெறுகின்றனவாம்
விழி சிந்திய என் கண்ணீர் துளிகளும்
விட்டுக் கொடுக்கப் பட்ட என் காதல் நினைவுகளும்....
இரு ஜோடிப் புறாக்களாய்
இளம் தென்றலின் வேட்டையில்
இவனும், நீயும்
இடம் மாறிப் பறந்தது
இதயத்தை விட்டு இன்னும் மறையவில்லை......
ஒற்றையடிப் பாதையில்
ஒருவரை ஒருவர் கலாய்க்கும் போது
ஒளி கொடுத்த நட்சத்திரம் கூட
ஒப்பாரி வைக்கிறதாம் இப்போது......
முந்தானையை முறுக்கி
முடியை பின்னி
முகத்தை அலசி
முதுகைக் கிள்ளி - என்னை
முடுச்சுப் போட்டது எதற்காக? - உன்னை
முக்காடாய் போட்டுக் கொள்வதற்காகவா??
அறியாப் பாலகனாய்
அவரவரைப் போல வாழலாமென
அடம் பிடித்து வாழ்ந்தவனை
அடக்கி வைக்க வந்தாய்.....
அறியவில்லை இவ்வளவு
அவசரமாய் அடக்கி ஒடுக்கி வைப்பாய் என்று...
அறிந்து விட்டேன் இப்போது
அடங்காப் பிடாரி
அவணியிலும் இருப்பதை....
அழகு படுத்தி விட்டேன்
அசிங்கப் பட்ட என் காதலையும்
அழ நினைத்த என் அக நினைவுகளையும்.....
வாசித்து முடிச்சிட்டீங்களா? எப்படி இருந்தது என் நண்பர்களுக்கான என்னுடைய ஏக்கம்?...(இவருடைய அனுபவங்கள நண்பர்கள்ட மேல சாட்டி விட்டு தப்பிக்க பாக்குரார்னு தப்புக் கணக்கு மட்டும் போட்டுறாதீங்க நண்பர்களே....) கட்டாயம் கருத்து சொல்லிட்டுப் போங்க.... உங்க கருத்துக்கள் நிச்சயம் என் கற்பனையை இன்னும் தட்டி எழுப்பும்.....
(இதுவரை காலமும் பின்னூட்டல் இட்டவர்களுக்கு இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி சொல்றேங்கோ....நீங்க கொடுத்த ஆர்வம் தான் கொஞ்சம் கொஞ்சமாய் உணர்வை தட்டி எழுப்புகிறது. தொடர்ந்தும் பின்னூட்டல் இடுங்க. குறையை குறையாய் சொல்லுங்க. நிறையை நிறைவாய் சொல்லுங்க..... ஏற்றுக் கொள்கிறேன்....)
அப்போ நான் வரட்டா
உங்கள் நண்பன்
அபூ......
புதன், 8 ஜூலை, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
14 கருத்துகள்:
//உன் நினைவுகள்
உள்ளத்தைக் குடைகையில் தான்
உளறி விட்டேன் உளக் குமுறல்களை
உறங்க மறுக்கும் தோழன் நிலவிடம்......//
எங்களிடம் உழறாதது நல்லதே....
நிறையவே இருக்குமோ?????
வணக்கம் சப்ராஸ்....
நீங்கள் ஆவலோடு எதிர் பார்த்திருந்த தொடர் பதிவு இதோ உங்களுக்காக......
சந்ரு கூறியது...
///எங்களிடம் உழறாதது நல்லதே....///
சந்ரு........ அவ்வளவு கொடுமையா இருக்குதோ?........ (கொடுமையாக இருந்தாலும் பரவா இல்ல. ஏன் தெரியுமா? நண்பர்களுடைய ஏக்கம் தானே.... நீங்களும் என்னுடைய நண்பன் என்கிறத யார் தான் மறைப்பாங்க இல்லையா?........ லொள்.....)
நன்றி சந்ரு உங்கள் வருகைக்கு.......
சந்ரு கூறியது...
///நீங்கள் ஆவலோடு எதிர் பார்த்திருந்த தொடர் பதிவு இதோ உங்களுக்காக......////
அப்பாடா........
நன்றி சந்ரு......
நல்ல கவிதை அபூ. நிலவை தோழனாக அழைத்துப் பேசியது வித்தியாசமா இருந்தது. நாங்க போடுறது தப்பு கணக்கோ இல்ல பால் கணக்கோ. எனகென்னமோ இது உங்க சொந்த கணக்கு மாதிரிதான் தெரியுது.
சுசி கூறியது...
///நல்ல கவிதை அபூ. நிலவை தோழனாக அழைத்துப் பேசியது வித்தியாசமா இருந்தது. நாங்க போடுறது தப்பு கணக்கோ இல்ல பால் கணக்கோ. எனகென்னமோ இது உங்க சொந்த கணக்கு மாதிரிதான் தெரியுது.///
என்ன சசி??...... பச்சப் புள்ள நான் போய் இதெல்லாம்???.....
சரி....சரி.... உங்களுடைய கற்பனை தானே ........ (ஏற்றுக் கொள்கிறேன்.... ஆனாலும் சொல்றேங்க..... என் நண்பர்கள் பாவம்க......... லொள்......)
நன்றி சசி நீங்கள் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவுக்கு.......
அடிக்கடி வந்து போங்க.....
kathailna appadi than pa
konjam serikka vaikkum neraya aza vaikkum ithu than kathalukke azaku
ennamo ponga ithu unga kathal thanu othukonga pa
gayathri கூறியது...
///kathailna appadi than pa
konjam serikka vaikkum neraya aza vaikkum ithu than kathalukke azaku///
////ennamo ponga ithu unga kathal thanu othukonga pa////
என்ன காயா....... வம்புல மாட்டி விடப் பார்க்கிறீங்க?.....
காதல் அனுபவத்த அழகா சொல்லி இருக்கீங்க போங்க...... (அனுபவம் எப்படி எல்லாம் பேசுது பாருங்க.....)
நன்றி காயத்ரி உங்கள் வருகைக்கு......
"நிலாக் கூட கண்ணீர் வடிக்கிறது
நிசப்த இரவுகளில்
நிதானமாய்....."
அழகாக விழுந்திருக்கிறது வரிகள்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன் கூறியது...
///"நிலாக் கூட கண்ணீர் வடிக்கிறது
நிசப்த இரவுகளில்
நிதானமாய்....."
அழகாக விழுந்திருக்கிறது வரிகள்./////
நன்றி டொக்டர் உங்கள் வருக்கைக்கு.....
அடிக்க்கடி வந்து போங்க......
சப்ராஸ் அபூ பக்கர் கூறியது...
gayathri கூறியது...
///kathailna appadi than pa
konjam serikka vaikkum neraya aza vaikkum ithu than kathalukke azaku///
////ennamo ponga ithu unga kathal thanu othukonga pa////
என்ன காயா....... வம்புல மாட்டி விடப் பார்க்கிறீங்க?.....
காதல் அனுபவத்த அழகா சொல்லி இருக்கீங்க போங்க...... (அனுபவம் எப்படி எல்லாம் பேசுது பாருங்க.....)
நன்றி காயத்ரி உங்கள் வருகைக்கு......
ada engalukeva irukattum irukattum
\\அறிந்து விட்டேன் இப்போது
அடங்காப் பிடாரி
அவணியிலும் இருப்பதை....
அழகு படுத்தி விட்டேன்
அசிங்கப் பட்ட என் காதலையும்
அழ நினைத்த என் அக நினைவுகளையும்.....\\
Fentastic..
A good effort
vaazhthukkal
nalla kavithai...!
நன்றி Logu....
நன்றி Nesamithran.....
கருத்துரையிடுக