புதன், 22 ஜூலை, 2009

நான்கு வார்த்தை..




நாக்குத் தட்டித் தட்டி
நான்கு வார்த்தை பேசப் பழகியதெல்லாம்
நாணல் கொள்ளும்
நாயகிக்காகத் தான்!.....

நாடக மேடை ஏறாமல்
நாற்று மேடை வைக்காமல்
நாதஸ்வரம் இசைக்காமல்
நான்கே வார்த்தையில்
நாவடக்கி
நான் ரசிக்க வைத்தேனே!.....

நாராய் உரித்து,
நான்காய் கிழித்து,
நான்கே வார்த்தையில்
நாதியில்லாமல் அடக்கி வைத்தேனே!.....

நாளேடு தேடி,
நாற்காட்டி பார்த்து,
நாள் எண்ணி,
நாடியில் கை வைத்து
நான் வருவேனா என எதிர் பார்த்ததும்
நான்கே நான்கு வார்த்தைக்குத் தான்!.....

நாயகன் அறிய நினைப்பதெல்லாம்
நாணல் கொள்ளும் நங்கையை
நாக்குத் தட்டியே
நாசமாக மாற்றி வைத்த
நான்கே நான்கு வார்த்தையை!.....

நாளை ஒன்று இருந்தால்
நாடும் கடந்து சென்றால்
நாள் பார்த்து
நான்கு வார்த்தையும் வரும்...
நாவடக்கிக் காத்திருங்கள்
நான் சென்று வருகிறேன்!.....

(கவிக் கிறுக்கு பிடித்திருந்தாலும், பிடிக்கலைன்னாலும் கருத்து சொல்லிட்டு போங்க.... பிடிக்கிற மாதிரி என்ன.... இல்ல இல்ல கவி வரிய மாற்றிக் கொள்கிறேன்... ஓகே....)

வரட்டா....

உங்கள் நண்பன்

அபூ.....

22 கருத்துகள்:

Admin சொன்னது…

உங்கள் கவிதைகள் நன்றாக இருக்கிறது.....
நான்கு வார்த்தையில் சொன்னேன் போதுமா

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

சந்ரு கூறியது...

///உங்கள் கவிதைகள் நன்றாக இருக்கிறது.....
நான்கு வார்த்தையில் சொன்னேன் போதுமா////

போதுமா இல்ல?... போதும்.....

ரொம்ப நன்றி சந்ரு...
அடிக்கடி வந்து போங்க.....

சிநேகிதன் அக்பர் சொன்னது…

அது என்ன அந்த நாலு வார்த்தை. அதையும் சொல்லிடுங்க.

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

அக்பர் கூறியது...

/// அது என்ன அந்த நாலு வார்த்தை. அதையும் சொல்லிடுங்க.///

நாளை ஒன்று இருந்தால்
நாடும் கடந்து சென்றால்
நாள் பார்த்து
நான்கு வார்த்தையும் வரும்...
நாவடக்கிக் காத்திருங்கள்
நான் சென்று வருகிறேன்!.....

இங்க தாங்க இருக்கு பதில்.....

ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கு.....

அடிக்கடி வந்து போங்க......

Prapa சொன்னது…

ஐயோ நான்கா எனக்கு தெரியுமே.....
(சரியா கணக்கிடுங்கள் நான்கு வார்த்தைகள் இருக்கும்)

குறை ஒன்றும் இல்லை !!! சொன்னது…

ஏங்க இந்த நாக்க புடுங்கிக்கிற மாதிரி நாலு வார்த்தைனு சொல்றாங்களே அது என்னாங்க ?

சுசி சொன்னது…

ஓஹோ அந்த நாலு வார்த்தையா. சுபம்.

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

நானும் வந்து போனேன் :)

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

பிரபா கூறியது...

///ஐயோ நான்கா எனக்கு தெரியுமே.....
(சரியா கணக்கிடுங்கள் நான்கு வார்த்தைகள் இருக்கும்)////

நீங்க கணக்குல பாஸ்......

ரொம்ப நன்றி பிரபா உங்கள் வருகைக்கு......

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

குறை ஒன்றும் இல்லை !!! கூறியது...

//ஏங்க இந்த நாக்க புடுங்கிக்கிற மாதிரி நாலு வார்த்தைனு சொல்றாங்களே அது என்னாங்க ?////

இப்போ உங்களுக்கு ரொம்ப முக்கியம் அது?.... (அதுசரி, எந்த அண்ணியப் பார்த்து நாக்கப் புடுங்குற மாதிரி கேட்கப் போறீங்க?..... )

நன்றி அண்ணா உங்கள் வருகைக்கு.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

சுசி கூறியது...

///ஓஹோ அந்த நாலு வார்த்தையா. சுபம்.////

ஆமா.... அதே தான்.... (எப்புடி?..... கலக்குறீங்க போங்க....)

நன்றி சுசி உங்கள் வருகைக்கு.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

எம்.எம்.அப்துல்லா கூறியது...

///நானும் வந்து போனேன் :)///

ஆஹா..... இது Copy & paste இல்ல?.... (லொள்.....)

ரொம்ப நன்றி அண்ணா உங்கள் வருகைக்கு.....

குறை ஒன்றும் இல்லை !!! சொன்னது…

//அதுசரி, எந்த அண்ணியப் பார்த்து நாக்கப் புடுங்குற மாதிரி கேட்கப் போறீங்க?..... //


கவுண்டர் : யோவ் என்னய்யா இது பையன் எந்த அண்ணி கிட்டேன்னு கேட்குறான் ? அப்படி எத்தனை அண்ணி இருக்காங்க ?

M.Rishan Shareef சொன்னது…

நாணல் இல்லை நண்பரே..அது நாணம்..திருத்தி விடுங்கள் !

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

எம்.ரிஷான் ஷெரீப் கூறியது...

///நாணல் இல்லை நண்பரே..அது நாணம்..திருத்தி விடுங்கள் !///

தவறுக்கு வருந்துகிறேன்.....

ஒரு முக்கியமான விடயம் யாதெனில் நான் அனுபவம் தெரிந்த நாள் முதல் உங்களுடைய நிறைய படைப்புக்களைப் படித்திருக்கிறேன், ரசித்திருக்கிறேன்.. ஆனால் இன்று முதல் முறையா என் வலைப் பூவில் பின்னூட்டல் இட்டிருக்கீங்க. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. (நானும் அடிக்கடி உங்கள் வலைக்குள் வந்து போவதுண்டு. ஆனால் நான் உங்கள் படைப்புக்களின் தீவிர ரசிகன் என்பது உண்மை...)


ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கு....

அடிக்கடி வந்து போங்க.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

குறை ஒன்றும் இல்லை !!! கூறியது...

//அதுசரி, எந்த அண்ணியப் பார்த்து நாக்கப் புடுங்குற மாதிரி கேட்கப் போறீங்க?..... //


//// கவுண்டர் : யோவ் என்னய்யா இது பையன் எந்த அண்ணி கிட்டேன்னு கேட்குறான் ? அப்படி எத்தனை அண்ணி இருக்காங்க ?///

யோவ்..... என்ன முழிக்கிற.... நம்ம பையனுக்கு எத்தன அண்ணி இருக்காங்கன்னு எண்ணி தவறாம கணக்கு காட்டுங்க..... (இது எப்புடி.....)

குறை ஒன்றும் இல்லை !!! சொன்னது…

//யோவ்..... என்ன முழிக்கிற.... நம்ம பையனுக்கு எத்தன அண்ணி இருக்காங்கன்னு எண்ணி தவறாம கணக்கு காட்டுங்க..... (இது எப்புடி.....)//

ஹி ஹி ஹி... அப்படியா.. சீக்கிரமா எண்ணுங்கப்பா..

Suresh Kumar சொன்னது…

உங்கள் கவிதை அருமையாக உள்ளது

Suresh Kumar சொன்னது…

உங்கள் கவிதை அருமையாக உள்ளது

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

Suresh Kumar கூறியது...

//உங்கள் கவிதை அருமையாக உள்ளது///

ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கு.....

அடிக்கடி வந்து போங்க.......v

முனைவர் கல்பனாசேக்கிழார் சொன்னது…

கவிதைகள் அருமை வாழ்த்துக்கள்.

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

முனைவர் சே.கல்பனா கூறியது...
///கவிதைகள் அருமை வாழ்த்துக்கள்.///

ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கு....

அடிக்கடி வந்து போங்க....