சனி, 25 ஜூலை, 2009

பஞ்சமில்லா வாழ்வு




வஞ்சமில்லா பிஞ்சு நெஞ்சு
அஞ்சி, அஞ்சி செஞ்சுவதெல்லாம்
பஞ்சமில்லாமல் வாழத்தான்.....

இஞ்சென்ன, கஞ்சென்ன
நெஞ்சமதில் பாசத்தோடு
லஞ்சமில்லாமல் பகிர்ந்தால்
பஞ்சு மெத்தையில்
ஊஞ்சல் கட்டி தாலாட்டுவோம்.......

மஞ்சமதை விஞ்சி நின்றால்
தஞ்சம் புகுந்து
கெஞ்சக் கூட
அங்கமில்லாமல் அலைய விடுவோம்!......

(ஒரு சின்ன கவிக் கிறுக்கு. சித்திரமாக மாற்றித் தாருங்கள். அதாங்க பின்னூட்டல் இடுங்கன்னு சொல்றேன்..... தவறை தவறென சுட்டிக் காட்டுங்கள். நிறைவை நிறைவாக சொல்லுங்கள்......)

அப்போ நான் வரட்டா!.....

உங்கள் நண்பன்
அபூ.......

6 கருத்துகள்:

குறை ஒன்றும் இல்லை !!! சொன்னது…

நன்றாக தான் உள்ளது நண்பரே!!

Admin சொன்னது…

அப்படி என்று சொல்றிங்க...

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

குறை ஒன்றும் இல்லை !!! கூறியது...

///நன்றாக தான் உள்ளது நண்பரே!!///

ரொம்ப நன்றி நண்பரே உங்கள் வருகைக்கு....

அடிக்கடி வந்து போங்கன்னு சொல்லாமல் சொல்லிக் கொள்கிறேன்....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

சந்ரு கூறியது...

/// அப்படி என்று சொல்றிங்க...///

அட ஆமா சந்ரு.....

ரொம்ப நன்றி, அடிக்கடி வந்து போங்க தோழரே......

சுசி சொன்னது…

நல்ல கவிதை அபூ...
செஞ்சுவதெல்லாம் இது கெஞ்சுவதெல்லாம் னு வரணுமோ???

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

சுசி கூறியது...

//நல்ல கவிதை அபூ...
செஞ்சுவதெல்லாம் இது கெஞ்சுவதெல்லாம் னு வரணுமோ???///

ஆமாம் சுசி, தவறுக்கு வருந்துகிறேன். நன்றி சுட்டிக் காட்டியமைக்கு.....

நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்......