செவ்வாய், 28 ஜூலை, 2009
மைக்கேல் ஜாக்சனின் மகன்
அமெரிக்காவில் கடந்த மாதம் மரணம் அடைந்த பாப் இசைப் பாடகர் மைக்கேல் ஜாக்சனுக்கு 3 குழந்தைகள் இருப்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் தான். ஆனால் அவர் மரணத்தின் பின் அந்த தகவல் சற்றே விரிந்து அவருக்கு நோர்வே நாட்டில் உமர்பட்டி என்ற 25 வயது மகன் ஒருவரும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 8 ஆண்டுகளாக உமர்பட்டி அமெரிக்காவில் மைக்கேல் ஜாக்சனின் நெவர்லேண்ட் பண்ணை வீட்டில் வசித்து வந்தவராம். மைக்கேல் ஜாக்சன் இறுதிச் சடங்கிலும் அவர் தான் முதல் வரிசையில் அமர்ந்திருந்தாராம்.
உமர்பட்டி மைக்கேல் ஜாக்சனின் மகன் என்று அவரைப் பற்றி கடந்த வாரம் பத்திரிகைகளில் தகவல் வெளியானது. இருப்பினும் மரபணு பரிசோதனை மூலம் அவர் மைக்கேல் ஜாக்சனின் வாரிசாக நிரூபிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த நிலையில் லண்டனில் இருந்து வெளியாகும் ஒரு ஆங்கிலப் பத்திரிகைக்கு உமர் பட்டி தான் மைக்கேல் ஜாக்சனின் மகன் இல்லை என்று அறிவித்துள்ளார். மைக்கேல் ஜாக்சன் என் தந்தை அல்ல. நானும் அவரும் நெருக்கமாக, ஆத்மார்த்த நட்புடன் பழகினேன்.அவர் எனக்கு ஒரு நண்பராக இருந்தார்.மைக்கேல் ஜாக்சன் அடிக்கடி என்னை பார்த்து மகன் போல நினைக்கிறேன் என்று சொல்வார். அது எனக்கு கிடைத்த பெருமை. ஆனால் தேவை இல்லாமல் நான் மைக்கேல் ஜாக்சனின் மகன் என வதந்தியை பரப்பிவிட்டனர் சிலர்.
உண்மையான என் பெற்றோர் நோர்வே நாட்டில் இருக்கிறார்கள். மைக்கேல் ஜாக்சனின் நெருங்கிய நண்பன் என்ற முறையில்தான் இறுதி சடங்கு நிகழ்ச்சிகளில் நான் முதல் வரிசையில் இருந்தேன். அதில் வேறு எந்த முக்கியத்துவமும் இல்லை என உமர்பட்டி தெரிவித்துள்ளாராம்.
(சிலர் வாழும் போது பிரபல்யம் அடைகின்றனர், சிலர் இறந்தால் மட்டும் பேசப்படுவர், ஆனால் வேறு சிலரோ வாழும் போது போற்றப் பட்டு இறந்த பின் வெகுவாகப் பேசப் படுவர். பொறுத்திருந்து பார்ப்போம் உமர்பட்டி யாருடைய புதல்வர் என்கிற விடயத்தை. மரபணு பரிசோனை பண்ணத் தானே போறாங்க. பிறகென்ன.... உண்மை தானா தெரிய வருமில்லையா?...... )
அப்போ நான் வரட்டா.....
உங்கள் நண்பன்
அபூ......
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
7 கருத்துகள்:
hmmmmmmmmmmmm... nothing to say about this..
ok..... thanksungo......
சர்ச்சைகளுக்கு குறைவில்லை.
அக்பர் கூறியது...
///சர்ச்சைகளுக்கு குறைவில்லை.///
ரொம்ப நன்றி அக்பர் உங்கள் வருகைக்கு.....
ஓகே..... போயாச்சு.....
எப்படி எல்லாம் நடக்குது... ஒண்ணுமே புரியல்ல..
சந்ரு கூறியது...
///எப்படி எல்லாம் நடக்குது... ஒண்ணுமே புரியல்ல..////
நன்றி சந்ரு உங்கள் வருகைக்கு.....
கருத்துரையிடுக