திங்கள், 13 ஜூலை, 2009

நடிகர் சங்கத் தலைவரின் நம்பிக்கை


ஒவ்வொரு முறை நடிகர் சங்கம் தொடர்பான எந்த விழா அறிவிப்பாக இருந்தாலும், ரஜினி கலந்து கொள்வாரா என்ற கேள்வி பரவலாக பேசப் படுவது வழக்கம். அதே போல் தானாம் இம்முறையும் கேள்விகள் எழுந்த வண்ணமே இருக்கிறதாம் பத்திரிகையாளர்களிடமிருந்து. அவர்களது கேள்விகளுக்கு மழுப்பல் பதில் எதுவும் கொடுக்காமல் அழுத்தலாக ரஜினி கலந்து கொள்வார் என பதில் கொடுத்து ஆர்வத்தைக் கூட்டியிருக்கிறாராம் நடிகர் சங்க தலைவர் சரத்குமார்.

நடிகர் சங்க வரலாற்றிலேயே முதன்முறையாக போட்டியின்றி நிர்வாகிகள் தேர்வு செய்யப் படுவது இதுவே முதல்முறை. இந்த தகவலை நிருபர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார் நடிகர் சங்கத் தலைவர் சரத் குமார். நீண்டகாலமாக இழுபறியாக இருந்த பல விஷயங்கள் குறித்து ஆணித்தரமாக பதில் அளித்தார் அவர். நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டும் பணி இம்முறை முழுமையாக நிறைவேற்றப்படும். சினிமாவுக்கு நாடகம்தான் அடிப்படை. தெருக்கூத்திலிருந்து நாடகம், நாடகத்திலிருந்து சினிமா. சினிமாவிலிருந்து டி.வி. இப்போது மீண்டும் நாடகம் என்று சுழற்சி நடைபெறுகிறது. அதை வலியுறுத்தும் வகையில் ஆகஸ்ட் 15 ந் தேதி முதல், 23 ந் தேதி வரை நாடக விழா நடைபெற உள்ளது என்றார் நடிகர் சங்க தலைவர்.



இந்த நாடக விழாவிற்கு தலைமை ஏற்கிறாராம் சூப்பர் ஸ்டார் ரஜினி. (நல்ல சிறப்பா அமையும் என்கிறது என்னோட நம்பிக்கை... )

அப்போ நான் வரட்டா!.....

உங்கள் நண்பன்

அபூ......

(வந்ததும் தான் வந்தீங்க.... மனதைத் திறந்து உங்க கருத்த சொல்லிட்டுப் போங்க.....)

8 கருத்துகள்:

Admin சொன்னது…

நான் இந்த விழாவுக்கு போறதில்லேன்னு எப்பவோ முடிவு பண்ணிட்டன்...

சுசி சொன்னது…

நானும் சந்ருவை வழி மொழிகிறேன் (ஆனா விஜய் வருவார்னா மீ த பர்ஸ்ட்டேய்)
தெருக்கூத்தெல்லாம் போடறாங்களாம் என் வீட்டு கூத்தையும் போடுவாங்களான்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன்...

Admin சொன்னது…

சுசி விஜய் வருவார்ணா நானும் வருவேன்... நானும் ok . அவர் நம்ம தளபதியாச்சே...

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

சந்ரு கூறியது...

///நான் இந்த விழாவுக்கு போறதில்லேன்னு எப்பவோ முடிவு பண்ணிட்டன்...////

அப்ப உங்களுக்குக் கொடுத்த invitation சுத்த வேஸ்டா?.... (இருங்க ரஜினி சார்கிட்ட போட்டு கொடுக்கிறேன்....)

நன்றி சந்ரு உங்கள் வருகைக்கு....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

சுசி கூறியது...

//நானும் சந்ருவை வழி மொழிகிறேன் (ஆனா விஜய் வருவார்னா மீ த பர்ஸ்ட்டேய்)///

விஜய் வருவார்னா நானும் ஓகேன்னு யாரோ பின்னாடி இருந்து சொல்வது போல கேட்குதுங்க... ( ஆகட்டும் ..... ஆகட்டும்.....)

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

சுசி கூறியது...

////தெருக்கூத்தெல்லாம் போடறாங்களாம் என் வீட்டு கூத்தையும் போடுவாங்களான்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன்.../////

அப்படி என்ன தாங்க நடக்குது அங்க?... (என் வீட்டு கண்ணுக் குட்டி என்னோட மல்லுக்கட்டி என் மார்பில் முட்டுதடி கண்மணி.... ரேடியோல இப்படியெல்லாம் பாடல் போட்றாங்க இந்த நேரம் பார்த்து..... லொள்..... )

ரொம்ப நன்றி சுசி

சுசி சொன்னது…

அந்த சாங்க்ல வர்ற கூத்து எங்க வீட்ல நடக்க ரெம்ப காலம் இருக்குங்க. அப்போ குணாவ ரஜனி சார் கெட்டப்பில பாட வச்சிர்லாம். சிச்சுவேஷன் சாங் கேக்கறீகளோ???

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

சுசி கூறியது...

//அந்த சாங்க்ல வர்ற கூத்து எங்க வீட்ல நடக்க ரெம்ப காலம் இருக்குங்க.///

இப்பவே ஐடியா பண்ணி இருக்கீங்க.....

///சிச்சுவேஷன் சாங் கேக்கறீகளோ???///

இன்னகின்னு பார்த்து tune பண்ணி இருக்கிற ரேடியோல அப்படியான பாடல்கள தான் play பண்றாங்க.... (யார் செய்த சதியோ....)